ஞாயிறு, 9 அக்டோபர், 2022

100 கிராமங்களில் 100 GLUG

*VGLUG's Next Milestone - Free Code Camp For Kids*

கணினி, தொழில்நுட்பம் போன்றவை கிராமப்புற மாணவர்களுக்கு இன்று வரையிலும் எட்டாக்கனியாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு தொழில்நுட்பத்தை பாதுகாப்பான முறையில் கொண்டு சேர்க்கும் பணியை VGLUG அமைப்பு 100 கிராமங்களில் 100 GLUGs என்கிற முன்னெடுப்பின் மூலம் தொடர்ச்சியாக செய்து வருகிறது. இதன் அடுத்த மைல்கல்லாக VGLUG அமைப்பு 'Free Code Camp For Kids' என்கிற முன்னெடுப்பை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக பானாம்பட்டு GLUG-ல் அடுத்த இரண்டு (அக்டோபர் 8 மற்றும் 9) நாட்களுக்கு கணினி பற்றிய அறிமுகத்தையும், கோடிங்-ஐ எளிய முறையிலும், விளையாட்டுகள் மற்றும் அனிமேஷன் மூலமாகவும் கற்றுதர இந்த கேம்ப்பை VGLUG நடத்துவுள்ளது.

இது போன்று, குழந்தைகளுக்கான இலவச கோடிங் வகுப்புகள்/கேம்ப் உங்களது கிராமத்திலோ அல்லது பள்ளியிலோ நடத்த விரும்பினால் எங்களை 9600789681 தொடர்பு கொள்ளவும். 

https://vglug.org

https://vglug.org/category/villupuram-glug/100-glugs-in-100-villages/

ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

தேவயானி - இயற்கைக்குத் திரும்புவோம்

 

  1. விஞ்ஞானிகள் - விடைகூறல்

  2. உவகை

  3. சாபக் கற்கள் - சந்தனம்

  4. சூரிய கிரகணம் - புற்றுநோய்

  5. சந்திர ஒளி - சர்க்கரை நோய்

  6. சுவாசப்பை - கரியமில வாயு

  7. அமுதம் - அமிலம்

  8. காற்று - கறுப்பு முக்காடு

  9. பூமி - ஓசோன் ஓட்டை

  10. தீ - நெஞ்சு

  11. பருகும் பானம் - நஞ்சு

  12. மருந்துகளே இறப்புக்குக் காரணம்

  13. மருத்துவமனைகள் அதிகமாக வளர்தல்

  14. நான்கடி நடை - கால் தேய்மானம், நாவறட்சி அடைதல்

  15. இளவட்டக்கல் தூக்கல்

  16. இயற்கை உணவு

பழநிபாரதி - காடு

 

  1. கவிதை எழுதுதல்

  2. காகிதம் எடுத்தல்

  3. காடுகளின் அழிப்பு

  4. காட்டிற்குள் பயணம் போதல்

  5. புலி - போராட்டப் பண்பு

  6. நாய் - நன்றிப் பண்பு

  7. கவரிமான் - தன்மானம்

  8. கழுதை - பிறர் சுமை ஏற்றல்

  9. ஒட்டகம் - முயற்சி செய்தல்

  10. பசு - வைக்கோல் கன்றுக்கும் பால் சுரத்தல்

  11. யானை - வாழ்த்து கூறல்

  12. பூனை - இரவுப் பார்வை

  13. குதிரை - போட்டி

  14. கங்காரு - வேறுபாடு பாராட்டாமை (ஆண்-பெண்)

  15. உயர்திணை - அஃறிணை

பச்சியப்பன் - காலம் பிரசவித்த மற்றொரு காலம்

 

  1. மொட்டை மாடி - குரோட்டன்சு செடி - வயல்

  2. கழிவுநீர்த் தொட்டி - கிணறு

  3. சுவற்று ஓரம் - கிணற்று மேடு

  4. வலதுபுறம் - மாமரம் 

  5. இடதுபுறம் - அரச மரம்

  6. கனியின் காலம் - பறவைகளின் பாடல்கள்

  7. தொலைக்காட்சிப் பெட்டி - பாடல்கள்

  8. தாய்மையின் உணர்வறியா - நகரம்

  9. நெற்பூக்கள் - கம்பம் பூக்கள்

  10. மின்விசிறி

  11. நாய் - அல்சேசன்

  12. மாடு

வைரமுத்து - இது வித்தியாசமான தாலாட்டு

 

  1. வழக்கமான தாலாட்டு

  2. மொழியின் ஆடம்பரங்கள்

  3. கனாக்கள்

  4. நிர்ப்பந்த உலகம்

  5. இசை-தூக்க மாத்திரைகள்

  6. விழிப்புணர்வு - பாடுபொருள்

  7. பெயரிடுதல்

  8. புரிதல்

  9. கயிறு கிடைத்ததே களி

  10. செல்வம் சேர்த்து வைத்தல்

  11. வியர்வையின் முக்கியத்துவம்

  12. எழுத்துக்களின் கட்டாயம் அறிமுகம்

  13. பூக்கள் - முட்கள் (குண்டூசி)

  14. நகரம் - நதிப்பெருக்கு

  15. அடிப்படை - இரசனை

கண்ணதாசன் - ஒரு கந்தல் துணியின் கதை

 

  1. பருத்திச் செடியின் தோற்றம்

  2. இலை வருகை

  3. மொட்டு வருதல்

  4. காய்த்தல்

  5. பஞ்சு வெடித்தல்

  6. ஆலை செல்லல்

  7. நூலாகுதல்

  8. துணியாகுதல்

  9. பயன்படுத்தப்படல்

  10. கந்தல் துணியாதல்

  11. வாழ்க்கைப் புரிதல்

தமிழ்ஒளி - வருங்கால மனிதனே வருக

 

  1. புத்தர் நடந்த திசை

  2. தெய்வ மனிதன்

  3. அசோகன்

  4. காந்தி

  5. வள்ளுவன்

  6. சொல் - செயல்

  7. தொன்மை நெறி

  8. கருணை

  9. நல்ல மனிதன்

  10. வல்லமை மனிதன்

  11. அன்புபிக்க மனிதன்

சிற்பி - ஓடு ஓடு சங்கிலி

 

  1. அழித்து எழுத முடியாத ஓவியம்

  2. ஆண்களின் பார்வை

  3. அம்மாவின் அர்ப்பணிப்பு

  4. பேரன் திருமணம், கொள்ளுப்பேத்தி வரவு

  5. அம்மா-வர்ணனை

  6. நேசிப்பு

  7. ஊர்ப்புறச் சமையல் சிறப்பு

  8. மரியாதை

  9. தன்னம்பிக்கை வார்த்தை

பாரதிதாசன் - தமிழின் இனிமை

 

  1. நாவின் சுவை

    • பலா

    • கரும்பு

    • பால்

    • பாகு

    • இளநீர்

    • தேன்

பாரதியார் - எங்கள் தாய்

 

  1. தேசப்பற்று

  2. இந்தியாவின் எல்கை

  3. இந்தியாவின் வயது

  4. இந்திய மக்கள் தொகை

  5. நல்லறம்

  6. இளமை

செவ்வாய், 12 ஜூலை, 2022

களப்பணி - ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வென்னல்கிரி வெங்கட்ரமணப் பெருமாள் திருக்கோயில், கோவை

 முன்னுரை

கல்வெட்டியல் என்பது தொல்லியலில் ஒரு பிரிவு என்பதாக புரிந்து கொள்ளலாம். கல்லில் வெட்டி வைக்கப்பட்டுள்ள களங்களை அறிவது கல்வெட்டியல் எனும் துறையின் படிப்பாகும். இத்துறையை முழுவதும் அறிந்திட அத்துறையில் தொடர்ந்து பயணம் தேவை. அதுமட்டுமின்றித் தொடர் பயிற்சியும் மிகத் தேவை. அப்பொழுதுதான் கல்லெழுத்துக்களை, அவை விளம்பும் தகவல்களை முழுமையும் அறிந்துகொள்ள இயலும். இத்துறை சார்ந்த புரிதல்களை இவ்வறிக்கை முன்வைக்க முயல்கின்றது.

வெள்ளி, 8 ஜூலை, 2022

மென் காற்று

மென்மைக் காற்று மென்தழைத் தடவ
மெல்லுடல் வணங்க மென்காற்று மெல்லிசை
நயம்பாட நந்தவனம் ஆட
நல்லாள் நாணமும் அறைக்குள் ஆர்க்குமே!

கனா

சன்னலைத் திறக்க
சட்டென்று உள்ளே வந்தாய்
புலுக்கமாய் இருந்த உடலுக்கு
பூப்போல் தடவிக் கொடுத்தாய்
காற்றே கட்டாந்தரையையும்
கவிப் பாட வைத்தாயே!
கவிச்சோலைக்குள் கனாக்காண வைத்தாயே!

கல்வெட்டில் கோவை மாவட்ட ஊர்ப் பெயர்கள் அன்றும் - இன்றும்

வெள்ளி, 24 ஜூன், 2022

நாட்டுப்புறப் பாடல்கள் - தாலாட்டுப்பாடல், தொழிற்பாடல்கள்

தாலாட்டுப் பாடல்

ஆராரோ ஆரிராரோ - என் கண்ணே 
ஆரிரரோ ஆராரோ
கண்ணே நவமணியே
கானலிலே பிறந்தாயோ 
என்னநான் சொல்வேனோ - கண்ணே நீ
இந்திரனோ சொல்லிவிடு

அறிவுமதி - ஹைக்கூ கவிதைகள்

 

• பள்ளிக்குப் போகாத சிறுமி 
செல்லமாய்க் குட்டும் 
ஆலங்கட்டி மழை

செல்வகுமாரி - இலக்கியத்தில் பெண்கள்

 

பெண்மைக்கு மென்மை பூசி
பேரிலக்கியம் படைத்திட்டார்.
பெண்மையை இரணமாக்கி
புராணங்கள் படைத்திட்டார்
பெண்மையைப் பேயென்றும்
இதிகாசங்கள் படைத்திட்டார்.

புதன், 22 ஜூன், 2022

தேவயானி - இயற்கைக்குத் திரும்புவோம்

விஞ்ஞானிகளே

விடை கூறுங்கள்.


உலகை வென்றுவிட்டதாய்

உவகை கொள்ளாதீர்!


சாபக்கற்களில்தான்

சந்தனம் அரைத்துப்

பூசிக் கொள்கிறீர்...

பழநிபாரதி - காடு

 கவிதை எழுத

காகிதம் எடுத்தேன்


உலகெங்கும்
காகிதத்திற்காக அழிக்கப்பட்ட
காடுகளின் மணம் 
துளைத்தது என் மூச்சை

செவ்வாய், 21 ஜூன், 2022

பச்சியப்பன் - காலம் பிரசவித்த மற்றொரு காலம்

 

மொட்டை மாடியெங்கும் 
குரோட்டன்ஸ் படர்ந்து கிடக்கும்
இதோ
இந்த வீடிருக்கும் இடத்தில்தான் 
என் வயல் இருந்தது. 

வைரமுத்து - இது வித்தியாசமான தாலாட்டு

 

மகனே
வழக்கமான தாலாட்டை 
உனக்கு நான் 
வாசிக்க முடியாது

அவை 
மொழியின் ஆடம்பரங்கள்
கைது செய்து வைத்த 
கனாக்கள் 

தமிழ் ஒளி - வருங்கால மனிதன் வருக

 

வருங்கால மனிதன் வருக!

புத்தர் நடந்த திசையிலே - அருள்
பொங்கி வழிந்த திசையிலே
சித்தம் மகிழ்ந்து நடந்திட - ஒரு
தெய்வ மனிதன் வருகிறான்!


விண்ணிற் பிறந்தவன் என்றிட - முகம்
விண்சுட ராகப் பொலிவுற
மண்ணிற் பிறந்த மனிதருள் - புது
மைந்தன் பிறந்து வருகிறான்!

சனி, 18 ஜூன், 2022

சிற்பி பாலசுப்பிரமணியம் - ஓடு ஓடு சங்கிலி

 அழித்து எழுதமுடியாத

அழித்து எழுதமுடியாத
சித்திரம் ஒன்றுண்டு
அம்மா

கண்ணதாசன் - ஒரு கந்தல் துணியின் கதை

 

‘‘கரிசல் காட்டுக் கழனியில் சில
கால்கள் உழுத உழவு –சில
கைகள் கனிந்த கனிவு –குடிசை
எரிக்கும் விளக்கின் ஒளியைப் போல
இலைகள் இரண்டு வரவு-அதில்
இயற்கை கலந்த அழகு
பருத்தி என்றொரு செடி வளர்ந்தது
பருவப் பெண்ணைப் போலே –அந்தக்
கரிசல் கழனிமேலே –அது
சிரித்த அழகில் காய் வெடித்தது
சின்னக் குழந்தை போலே –அந்த

பாரதிதாசன் - தமிழின் இனிமை

 கவிஞர் பாரதிதாசன்

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

பாரதியார் பல்கலைக் கழகப் பாடத்திட்டம் - முதலாம் ஆண்டு (2022-23)

 (2021-22ஆம் கல்வியாண்டு முதல் சேர்வோருக்குரியது)

அலகு - 1 

  1. பாரதியார் - எங்கள் தாய்

  2. பாரதிதாசன் - தமிழின் இனிமை

  3. கண்ணதாசன் - ஒரு கந்தல் துணியின் கதை

  4. சிற்பி பாலசுப்பிரமணியம் - ஓடு ஓடு சங்கிலி

  5. தமிழ் ஒளி - வருங்கால மனிதன் வருக

  6. வைரமுத்து - இது வித்தியாசமான தாலாட்டு

பாரதியார் - எங்கள் தாய்


தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்

சூழ்கலை வாணர்களும் - இவள்
என்று பிறந்தவள் என்றுணராத
இயல்பினளாம் எங்கள் தாய்!


(முற்காலத்தில் நிகழ்ந்தவை அனைத்தையும் நன்கு உணர்ந்தோரும் பல கல்வி கற்றவர்களும் இவள் எக்காலத்தில் தோன்றினாள் என்று சொல்ல இயலாத இயல்பை உடையவளாக விளங்குபவள் எங்கள் தாய்)

திங்கள், 30 மே, 2022

அகமே! புறம்… (இராஜ ராஜ சோழன் சரித்திர நாடகத்தின் தழுவல்)

 ஆக்கியோன் : நேயக்கோ (முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி)

கதைமாந்தர்கள்

  • இராசராசன் - சோழ மன்னன்

  • இராசேந்திரன் - இராசராசன் மகன்

  • விமலாதித்தன் - வேங்கி மன்னன்

  • குந்தவி - இராசராசன் மகள்

  • வீரமாதேவி - மதுராந்தகர் தங்கை

  • முத்துப்பல் கவிராயர் - நகைச்சுவைப் புலவர்

  • மேதினிராயர் - நகைச்சுவைப் புலவர்

  • பாலதேவர் - நடமாடும் இராசதந்திரி

  • பூங்கோதை - பணிப்பெண்

  • நாடக ஆசான் - நாடக எழுதியோன்

  • மதுராந்தகர் - அமைச்சர்

சனி, 7 மே, 2022

இராஜராஜசோழன் சரித்திர நாடகம் : நூல் அறிமுகம் Introduction to Raja Raja Chozhan HISTORICAL DRAMA (பகுதி 2)

 நூலாசிரியர் குறிப்பு

விக்கிப் பொதுவகம்
அரு. ராமநாதன், சூலை 7, 1924இல் சிவகங்கை மாவட்டம் கண்டனூரில் பிறந்தார். இவர் சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்துள்ளார். படிக்கும் காலங்களிலேயே ஆளுமையாக உருவானவர் என்பதை அவர் எழுதிய சம்சார சாகரம் எனும் படைப்பே சான்றாக அமைகின்றது. இப்படைப்பு அவர்தம் பதினெட்டாம் வயதில் எழுதப்பட்டதாகும். அதன்பின்பு அவர் தன்னை எழுத்தாளர், தொகுப்பாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர், திரைவசன ஆசிரியர் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இவர் ரதிப்ரியா, கு.நா.ராமையா ஆகிய பெயர்களிலும் எழுதி வந்துள்ளார். இவர் 1945இல் எழுதிய ’ராஜராஜ சோழன்’ நாடகம் ஆயிரம் முறை மேடையேறியது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகையை ஆளுமையின் சில படைப்புகளாக சிந்தனையாளர் பெஞ்சமின், பிராங்கிளின், அறுபது மூவர் கதைகள், குண்டு மல்லிகை, போதிசத்துவர் கதைகள், மதனகாமராஜன் கதைகள், விநாயகர் புராணம், காலத்தால் அழியாத காதல், அசோகன் காதலி, வீரபாண்டியன் மனைவி, அவ்வையார் பொன்மொழிகள், விக்ரமாதித்தன் கதைகள், கிளியோபாட்ரா, சுந்தரரின் பக்தியும் காதலும், வெற்றிவேல் வீரத்தேவன், வேதாளம் சொன்ன கதைகள், பழையனூர் நீலி, மகாகவி பாரதியார் பொன்மொழிகள் ஆகியன அமைந்துள்ளன (விக்கிப்பீடியா, பார்வை நாள் - 13.4.22, https://ta.wikipedia.org/s/75ua). 

வெள்ளி, 29 ஏப்ரல், 2022

இராஜராஜசோழன் சரித்திர நாடகம் : நூல் அறிமுகம் Introduction to Raja Raja Chozhan HISTORICAL DRAMA (பகுதி 1)

சுருக்கம்

அரு.ராமநாதனால் எழுதப்பெற்ற நூல் இராஜராஜசோழன் சரித்திர நாடகம் ஆகும். இன்னும் இருபத்து இரண்டு பதிப்புகளைக் கடந்துள்ளது. இந்நூலின் முதல் பதிப்பு செப்டம்பர் 1955 ஆகும். இந்நூல் சோழ மரபினருள் உதித்த பல்வேறு சிறப்புகளை உடைய இராஜராஜ சோழனின் அறிவையும், ஆட்சிச் சிறப்பையும், கூர்த்த மதியினையும், எளிமையையும், முற்போக்குத் திறனையும், சமஉரிமை பேணும் தன்மையையும், பெண்ணுரிமை, கருத்துரிமை என இன்னும் அளவிட முடியாத பல சிறப்புகளையும் வெளிக்காட்டி நிற்கின்றது. இக்கட்டுரை அவற்றையெல்லாம் அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Abstract

The book written by Aru Ramanathan is a historical drama by Rajaraja Chola. Twenty-two more editions have passed. The first edition of the book was published in September 1955. The book exemplifies Rajaraja Chola's knowledge, rule, sharpness, simplicity, progressiveness, egalitarianism, femininity and ideology, as well as many other immeasurable features of the Chola dynasty. This article aims to introduce them all.