முனைவர் மு.முனீஸ் மூர்த்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முனைவர் மு.முனீஸ் மூர்த்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 அக்டோபர், 2014

திருவாவடுதுறைஆதினமடம் X தருமபுரஆதினமடம் = இலக்கியக்கொடை


முனைவர் மு.முனீஸ் மூர்த்தி
உதவிப் பேராசிரியர்
தமிழாய்வுத்துறை
பிஷப் ஹீபர் கல்லூரி
திருச்சிராப்பள்ளி.



சைவத்திருமடங்கள் 14. சமயப் பரப்புகையை முழுமுதல் நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட இம்மடங்கள் சமயத்தோடு தமிழை வளர்க்கவும் தலைப்பட்டன. இம்மடங்களைச் சேர்ந்தோர் வளர்த்த தமிழ் சைவத்தமிழானது. தத்தம் சமயக் கடவுளை முன்னிறுத்திப் பல புராணங்களையும் சிற்றிலக்கியங்களையும் படைத்துச் சைவத் தமிழ்த்தொண்டாற்றினர். திருமடங்களைச் சார்ந்தோரின் சைவத்தமிழ்ப்பணி ஒருபுறம் இவ்வாறிருக்க மறுபுறம் புறச்சமயக் காழ்ப்புணர்வு மனநிலையும் அரங்கேறியது. சைவர்கள் சைவ இலக்கியங்களைத் தவிர சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி போன்ற இலக்கியங்களைப் படிக்கவே கூடாது என்றுவெளிப்படையாகப் பிரச்சாரம் செய்துதங்கள் மனநிலையை வெளிப்படுத்தினர் மடங்களைச் சார்ந்தோர். இந்நிலைப்பாடுகி.பி.18ஆம் நூற்றாண்டுவரை நிலவியது கவனத்திற்குரியது. இக்காலகட்டத்தில் திருமடங்களுக்கிடையே நிலவிய உயர்வு தாழ்வுப் போராட்டத்தின் விளைவாக ஒரேசமயத்தைச் சேர்ந்த இருவேறுமடங்களைச் சேர்ந்தோரின் புலமை வெளிப்பாட்டை இருபிரிவினரும் எதிரெதிர் திசை நின்று விமர்சிக்கும் செயல்பாடு உச்சம் பெற்றது.