முல்லைப்பாட்டில் உளவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முல்லைப்பாட்டில் உளவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 ஏப்ரல், 2017

முல்லைப்பாட்டில் உளவியல்

                                          ஆ.அம்பிகா
முனைவர்பட்ட ஆய்வாளர்,
இந்தியமொழிகள் மற்றும் ஓப்பிலக்கியபள்ளி,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.
      சங்கஇலக்கியங்கள் தொன்மையும் பெருமையும் வாய்ந்த உயர்தனிச் செம்மொழியாம் தமிழ்மொழியாகும். சங்க இலக்கியங்கள் வாழ்வில் நிகழக் கூடியவற்றைக் கற்பனை நயத்துடன், நடப்பியல் சார்த்திக் கூறுவதாகும். ஆனால் உளவியல் என்பது வளரும் அன்புடன் வாழும் மக்களைப் பற்றியதும் அவர்தம் உள்ள நிகழ்வுகளையும், நடத்தை மாறுபாடுகளையும் ஆராய்வதாகும். மனிதனின் வாழ்க்கையில் நிகழும் உளநலத்தைச் சிதைக்கும் சிக்களிலிருந்து ஒருவன்தன் உள்ளத்தை எவ்வாறு தற்காத்துக்கொள்கின்றான் என்பதை முல்லைப்பாட்டில் இடம்பெறும் புறத்தேற்றம் என்னும் தற்காப்பு இயங்குமுறைகளைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.