வாரம் 6: தொல்காப்பியம் - நூன்மரபு (பைத்தான்வழி உரை-6)
முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி
தமிழ் உதவிப்பேராசிரியர், முதன்மைப் பதிப்பாசிரியர், விக்கிமீடியர்
ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 641042.
முந்தைய வகுப்பில் தொல்காப்பிய நூன்மரபின் 10 முதல் 16 வரைக்கும் உள்ள நூற்பாக்களுக்கு தீப்சீக் செய்யறிவுக் கருவியின் (AI Tool) மூலம் நிரல் எழுதி இயக்கும் முறை விளக்கப்பட்டது. அதன் அடுத்த படிநிலைகளை இங்குக் காணலாம்.
இயற்கை மொழி ஆய்வு
- உரைப் பகுப்பாய்வு
- தகவல்களைப் பிரித்தெடுத்தல்
- மொழிபெயர்ப்பு
- ஆவணச்சுருக்கம்
- உரை உருவாக்கம்
- உரையாடல் (Chatbots)
- மெய்நிகர் உதவியாளர்கள்
படம், காணொலிகள் பகுப்பாய்வு
- பொருள்களை அடையாளம் காணுதல்
- முக அடையாளம் காணுதல்
- உணர்ச்சிப் பகுப்பாய்வு
- காட்சித் தரவுகளிலிருந்து தகவல்களைப் பிரித்தெடுத்தல்
தரவுப் பகுப்பாய்வும் கணிப்புகளும்
- பெரிய தரவுத் தொகுப்புகளைப் பகுப்பாய்வு செய்தல்
- வணிகம், நிதித் தரவுகளின் அடிப்படையில் கணிப்புகள்
- மாதிரிகள், போக்குகளை அடையாளம் காணுதல்
இயந்திரக் கருவியியல்
- தரவுகளிலிருந்து மாதிரிகளை உருவாக்குதல்
- பயிற்றுவித்தல் & வகைப்படுத்தல்
- குழுப்படுத்தல்
- பின்னடைவுப் பகுப்பாய்வு
தன்னியக்க முடிவெடுத்தல்
- தொழில்துறைச் செயல்முறைகளைத் தன்னியக்கமாக்குதல்
- இயந்திரக் கருவியியல் (ரோபோக்கள்)
- தன்னியக்க வாகனங்களைக் கட்டுப்படுத்துதல்
பாதுகாப்பும் கண்காணிப்பும்
- இணையப் (சைபர்) பாதுகாப்பு
- தரவுப் பாதுகாப்பு
- கண்காணிப்பு அமைப்புகள்
- பாதுகாப்பு இன்மை அறிவிப்புகள்
உடல்நலமும் மருத்துவமும்
- மருத்துவப் படங்களைப் பகுப்பாய்வு செய்தல்
- நோய் கண்டறிதல்
- சிகிச்சை பரிந்துரைகள்
- உடல்நல மேலாண்மை & கண்காணிப்பு
தனிப்பயனாக்கம், பரிந்துரைகள்
- பயனர் விருப்பங்கள் & நடத்தை பகுப்பாய்வு
- தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகள்
- பொழுதுபோக்கு, வணிகம், கல்வித் துறைகளில் பரிந்துரை அமைப்புகள்
ஆராய்ச்சியும் மேம்பாடும்
- புதிய செய்யறிவு (AI) மாதிரிகள்
- ஆணைத்தொடர்களை உருவாக்குதல்
- தரவு அறிவியல்
- செய்யறிவு (AI) தொடர்பான ஆராய்ச்சி
என இதன் பட்டியல் நீளுகின்றது பார் அன்பா!
ஆம். செய்யறிவுக் கருவியின் துணையின்றி இனி வருங்காலம் எந்தத் துறையும் இயங்காது என்பதே உண்மை அன்பா!
சரி அன்பா! நாம் முந்தைய வகுப்பில் விட்ட பகுதியிலிருந்து தொடங்குவோமா?
அது வேறொன்றும் வினா - விடை வகை படித்திருப்பாய் அல்லவா? அதேயேதான் இங்கு வினவல், பதில் என்கின்றனர். நாம் கேட்கும் கேள்வி சரியாகிருந்தால், அதற்கு ஏற்ற விடை கிடைக்கும் அல்லவா? அதுபோல்தான் இதுவும். சரி… இனி, தீப்சீக் செய்யறிவுக் (DeepSeek) கருவியிடம் தொல்காப்பிய எழுத்ததிகார நூன்மரபு 10-16 நூற்பாக்கள், அதன் உரைகள் ஆகியவற்றைத் தந்து ஒரு விளையாட்டுப் பைத்தான் நிரல் எழுதித் தரவும் என்று கேட்போமா?
சரி… இப்பொழுது வினவலாகக் கேட்டதற்கு அது எழுதித் தந்துள்ள பைத்தான் நிரலைப் பார்.
தமிழ் எழுத்து விளையாட்டுக்கள்
import random
# தமிழ் எழுத்துகள், மாத்திரைகள்
uyirmei_letters = ["க", "கா", "கி", "கீ", "கு", "கூ", "கெ", "கே", "கை", "கொ", "கோ", "கௌ"]
mei_letters = ["க்", "ங்", "ச்", "ஞ்", "ட்", "ண்", "த்", "ந்", "ப்", "ம்", "ய்", "ர்", "ல்", "வ்", "ழ்", "ள்", "ற்", "ன்"]
mathirai_info = {
"க": 1, "கா": 2, "கி": 1, "கீ": 2, "கு": 1, "கூ": 2, "கெ": 1, "கே": 2, "கை": 2, "கொ": 2, "கோ": 2, "கௌ": 2,
"க்": 0.5, "ங்": 0.5, "ச்": 0.5, "ஞ்": 0.5, "ட்": 0.5, "ண்": 0.5, "த்": 0.5, "ந்": 0.5, "ப்": 0.5, "ம்": 0.5,
"ய்": 0.5, "ர்": 0.5, "ல்": 0.5, "வ்": 0.5, "ழ்": 0.5, "ள்": 0.5, "ற்": 0.5, "ன்": 0.5
}
# எழுத்து யோசனை விளையாட்டு
def guess_letter_game():
print("விளையாட்டு 1: எழுத்து யோசனை")
print("நீங்கள் ஒரு தமிழ் எழுத்தை யோசிக்க வேண்டும். நான் அதைக் கண்டுபிடிப்பேன்!")
input("யோசித்து முடிந்ததும் Enter அழுத்தவும்...")
letter = random.choice(uyirmei_letters + mei_letters)
print(f"நான் யோசித்த எழுத்து: {letter}")
print()
# மாத்திரைக் கணக்கு விளையாட்டு
def mathirai_count_game():
print("விளையாட்டு 2: மாத்திரைக் கணக்கு")
letter = random.choice(list(mathirai_info.keys()))
print(f"எழுத்து: {letter}")
answer = input("இந்த எழுத்தின் மாத்திரை எவ்வளவு? (எண்ணாக உள்ளிடவும்): ")
if float(answer) == mathirai_info[letter]:
print("சரியான பதில்! வாழ்த்துக்கள்!")
else:
print(f"தவறான பதில். சரியான பதில்: {mathirai_info[letter]}")
print()
# உயிர்மெய் கண்டுபிடி விளையாட்டு
def uyirmei_find_game():
print("விளையாட்டு 3: உயிர்மெய் கண்டுபிடி")
letter = random.choice(uyirmei_letters)
print(f"எழுத்து: {letter}")
answer = input("இது உயிர்மெய் எழுத்தா? (ஆம்/இல்லை): ").strip().lower()
if answer == "ஆம்":
print("சரியான பதில்! வாழ்த்துக்கள்!")
else:
print("தவறான பதில். இது உயிர்மெய் எழுத்து.")
print()
# முதன்மை நிரல்
def main():
print("தமிழ் எழுத்து விளையாட்டுக்களுக்கு வரவேற்கிறோம்!")
while True:
print("1. எழுத்து யோசனை")
print("2. மாத்திரை கணக்கு")
print("3. உயிர்மெய் கண்டுபிடி")
print("4. வெளியேறு")
choice = input("உங்கள் தேர்வு (1-4): ").strip()
if choice == "1":
guess_letter_game()
elif choice == "2":
mathirai_count_game()
elif choice == "3":
uyirmei_find_game()
elif choice == "4":
print("விளையாட்டை முடித்துவிட்டு வெளியேறுகிறீர்கள். நன்றி!")
break
else:
print("தவறான தேர்வு. மீண்டும் முயற்சிக்கவும்.")
print()
# நிரலை இயக்குதல்
if __name__ == "__main__":
main()
1. எழுத்து யோசனை
2. மாத்திரை கணக்கு
3. உயிர்மெய் கண்டுபிடி
4. வெளியேறு
உங்கள் தேர்வு (1-4): 2
விளையாட்டு 2: மாத்திரைக் கணக்கு
எழுத்து: ட்
இந்த எழுத்தின் மாத்திரை எவ்வளவு? (எண்ணாக உள்ளிடவும்): 0.5
சரியான பதில்! வாழ்த்துக்கள்!
1. எழுத்து யோசனை
2. மாத்திரை கணக்கு
3. உயிர்மெய் கண்டுபிடி
4. வெளியேறு
உங்கள் தேர்வு (1-4): 1
விளையாட்டு 1: எழுத்து யோசனை
நீங்கள் ஒரு தமிழ் எழுத்தை யோசிக்க வேண்டும். நான் அதைக் கண்டுபிடிப்பேன்!
யோசித்து முடிந்ததும் Enter அழுத்தவும்...
நான் யோசித்த எழுத்து: கொ
அது இருக்கட்டும் உன் கற்பனைக்கு ஏற்ப இந்தச் செய்யறிவுக் கருவியிடம் வினவலாகக் கேட்டுப் புதிய புதிய விளையாட்டுக்களை உருவாக்கலாம்.
சரி… இதற்குரிய நிரலை என்னுடைய கித்துப்பில் [6] தருகின்றேன்; இதனை நீயும் இயக்கிப் பார் அன்பா…
புதிய குறிச்சொற்கள் விளக்கம்:
random random.choice() f"{variable}" main() .strip() while if __name__ == "__main__"
இவை ஒவ்வொன்றையும் அடுத்த வகுப்பில் விளக்கமாக அறிந்துகொள்வோம்.
முனைவர் அ.வினோத், கோ.பூவேந்திரன், முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி (2023, அக்டோபர் 15, 16). தொல்காப்பியக் குறுஞ்செயலி உருவாக்கம், தொழில்நுட்ப மாநாடு, குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி, கோயமுத்தூர்.
Vinoth, A., Thangasamy, S., Nithya, R., Poovandran, G., Mounash, V., Subalalitha, C. N., ... & Jafer, K. S. (2023, December). Automatic Identification of Meimayakkam in Tamil Words Using Rule-Based and Transfer Learning Approaches. In International Conference on Speech and Language Technologies for Low-resource Languages (pp. 443-458). Cham: Springer Nature Switzerland.
தெய்வசுந்தரம் ந., மொழியியலும் கணினிமொழியியலும் (தொகுதி இரண்டு), அமுத நிலையம், சென்னை. (2021)
Thangasamy, S., A, V., A, J. P. B., S, S., S, S. S., & Rathinavel, L. (2024). பைத்தான் தானியக்கம்வழி விக்கிமூல மேலடி - கீழடி மேம்பாடு : Python-based Automation for Header-footer Improvement in Wikisource. PULAM: INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES, 37–46. https://doi.org/10.5281/zenodo.10991314
https://pypi.org/project/Open-Tamil/
Tholkaappiyar_Nuunmarapu, https://github.com/neyakkoot/Tholkaappiyar_Nuunmarapu
பைத்தான்– https://ta.wikipedia.org/s/112
https://kaniyam.com/category/let-us-learn-learn-python/
தொல்காப்பியம்/எழுத்ததிகாரம்/நூல் மரபு https://ta.wikisource.org/s/238
சத்தியராஜ் தங்கச்சாமி (2024). தொல்காப்பியம் - நூன்மரபு (பைத்தான்வழி உரை-1) (Tholkaappiyam - Nunmarabu (Python Text-1)), இலக்கணம்-காலாண்டுச் சஞ்சிகை - 6, பூ 2 இதழ் 2, இலங்கை. ISSN: 2961-5712
சத்தியராஜ் தங்கச்சாமி (2024). தொல்காப்பியம் - நூன்மரபு (பைத்தான்வழி உரை-2) (Tholkaappiyam - Nunmarabu (Python Text-2)), இலக்கணம்-காலாண்டுச் சஞ்சிகை - 7, பூ 2 இதழ் 3, இலங்கை, ISSN: 2961-5712
சத்தியராஜ் தங்கச்சாமி (2024). தொல்காப்பியம் - நூன்மரபு (பைத்தான்வழி உரை-3) (Tholkaappiyam - Nunmarabu (Python Text-3)), இலக்கணம்-காலாண்டுச் சஞ்சிகை - 8, பூ 2 இதழ் 4, இலங்கை, ISSN: 2961-571
சத்தியராஜ் தங்கச்சாமி (2025). தொல்காப்பியம் - நூன்மரபு (பைத்தான்வழி உரை-4) (Tholkaappiyam - Nunmarabu (Python Text-4)), இலக்கணம்-காலாண்டுச் சஞ்சிகை - 9, பூ 3 இதழ் 1, இலங்கை, ISSN: 2961-571
சத்தியராஜ் தங்கச்சாமி (2025). தொல்காப்பியம் - நூன்மரபு (பைத்தான்வழி உரை-5) (Tholkaappiyam - Nunmarabu (Python Text-5)), இலக்கணம்-காலாண்டுச் சஞ்சிகை - 10, பூ 3 இதழ் 2, இலங்கை, ISSN: 2961-571
Chowdhury, Naem & Wei, Li & Min, Zhang. (2025). Redefining Scalability in AI: The Innovations Behind DeepSeek-V3's MoE and Multi-Token Prediction. 1. 10.5281/zenodo.14742743
deepseek-ai, https://github.com/deepseek-ai/DeepSeek-V3/tree/main/inference
வாரம் 6 - தொல்காப்பியம் நூன்மரபு & AI விளையாட்டு நிரல்கள் நிறைவு
விளையாட்டு நிரல்கள் - random, while, main()
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன