உடேமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உடேமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 2 மே, 2025

ஆய்வறிக்கை உருவாக்கமும் பொதுவாய்மொழித் தேர்வு வெளிப்பாடும் (Four Weeks Course on Creating Thesis and Public Viva-Voce Methods)

*இந்தப் பாடத்தை இன்றிலிருந்து 5 நாட்களுக்குள் தெரிவுசெய்து பதிவு செய்தால் இலவசமாகச் சான்றிதழுடன் கற்கலாம்.*

*முதலில் பதிவு செய்யும் 1000 பேருக்கே இந்த இலவச வாய்ப்பு.*

Course Title:

*ஆய்வறிக்கை உருவாக்கமும் பொதுவாய்மொழித் தேர்வு வெளிப்பாடும் (Four Weeks Course on Creating Thesis and Public Viva-Voce Methods)*

Course Description:

இந்த நான்கு வார இணையவழிக் கல்விப் பயிலில், "ஆய்வு" என்றால் என்ன?, அதன் அடிப்படை நோக்குகள், ஆய்வறிக்கையை எவ்வாறு தயாரிப்பது என்பதைக் கற்றுக்கொள்வீர்கள்.

ஆய்வு என்பது ஒரு அறிவியல் தேடலாகவும், புதிய அறிவுகளை உருவாக்கும் முறையாகவும் விளக்கப்படுகிறது. அறிவியல் முறைப்படி இயங்கும் இந்த ஆய்வுகளில், ஆராய்ச்சி முடிவுகள், விளக்கங்கள், புதிய நடைமுறைகள் ஆகியவை முக்கியப் பங்களிப்புகளைச் சேர்க்கின்றன.

இந்தப் பாடத்தில், ஆய்வு வடிவமைப்பு, ஆய்வறிக்கை எழுத்து, பொதுவாய்மொழித் தேர்வை எதிர்கொள்ளும் திறன்கள் ஆகியவை படிப்படியாகக் கற்பிக்கப்படுகின்றன.

Course Structure (Week-by-Week Breakdown):

முதல் வாரம்: ஆய்வேடு உருவாக்கம்

ஆய்வு என்றால் என்ன?

ஆய்வின் வகைகள்: அறிவியல், கலை, வரலாற்று

ஆய்வின் கட்டமைப்பு (அகம், புறம்)

ORCID, Scopus, Web of Science, Google Scholar, ResearchGate ஆகியவற்றின் முக்கியத்துவம்

இரண்டாம் வாரம்: பொதுவாய்மொழித் தேர்வு வெளிப்பாடு

ஆய்வறிமுகம், முன்னுரை, நோக்கம்

கருதுகோள், ஆய்வு எல்லை, இயல்பகுப்பின் அடிப்படை

மூன்றாம் வாரம்: முடிவுரை மற்றும் மேற்கோள்கள்

இயல்பகுப்பின் விளக்கம்

முடிவுரை எழுதும் முறை

துணைநூற்பட்டியல், பின்னிணைப்புகள், எதிர்கால ஆய்வுக் கருதுகோள்கள்

நான்காம் வாரம்: ஆய்வறிக்கை உருவாக்கம்

ஆய்வறிக்கை எழுதும் விதிகள் மற்றும் நோக்கம்

ஆய்வறிக்கையின் வகைகள்

தலைப்புத் தெரிவும் ஆய்வுக்களம் தேர்வும்

அணியமாதல் (Structuring the Thesis)

ஆய்வறிக்கையின் 

இந்தப் பாடத்தின்மூலம் நீங்கள் என்ன கற்றுக்கொள்வீர்கள்:

ஆராய்ச்சி என்றால் என்ன என்பதை தெளிவாகக் கவனித்தல்

அறிவியல் முறையில் ஆய்வறிக்கையை கட்டமைத்தல்

பொதுவாய்மொழித் தேர்வில் பேசும் திறன்கள்

தரமான துணைநூற்பட்டியல் தயாரித்தல்

சரியான ஆய்வுக்கொள்கைகளை வகுத்தல்

இந்தப்  பாடம் யாருக்காக?:

முதுநிலை (Postgraduate), முனைவர் பட்ட (M.Phil., Ph.D.) மாணவர்கள்

கல்வி, ஆய்வுத் துறையில் புதிதாகத் தடம் பதிப்பவர்கள்

மாணவர் ஆய்வுகளுக்கு வழிகாட்டும் ஆசிரியர்கள்

ஆய்வறிக்கையை முறையாக எழுத விரும்பும் ஆர்வலர்கள்

தனியாக அல்லது குழுவாக ஒரு திட்ட ஆய்வை மேற்கொள்ள விருப்பமுள்ளவர்கள்

ஆய்வறிக்கையை எழுதுவதற்கான வழிகாட்டலை நாடுபவர்கள்

*இலவசமாகத் தெரிவுசெய்ய*

Code :- 12D3775A4F88371E2DBA

உரலி :- https://www.udemy.com/course/researchreport/?couponCode=12D3775A4F88371E2DBA


ஞாயிறு, 13 ஜூன், 2021

சொந்த முயற்சியில் உடேமியைப் பயன்படுத்துதல்


உள்ளடக்கத்தையும் பயிற்றுநர்களையும் அதிகப்படுத்த எவரும் உடேமியைப் பயன்படுத்தலாம். மேலும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் மாணவர்களுக்கும் கற்பித்தல், கற்றலுக்காகத் தொடர்புகொள்ள உடேமி உதவுகிறது. மக்கள் உள்ளடக்கத்தை இடுகையிடவும் தொடர்பு கொள்ளவும் கூடிய பிற தளங்களைப் போலவே, சில விஷயங்களும் தவறாக நடக்கக்கூடும், மேலும் சொந்த முயற்சியில் உடேமியைப் பயன்படுத்துகிறீர்கள்.

ஞாயிறு, 23 மே, 2021

இடுகையிடும் உள்ளடக்கத்திற்கான உடேமியின் உரிமைகள்

 

உங்கள் படிப்புகள் உட்பட உடேமி தளத்தில் இடுகையிடும் உள்ளடக்கத்தின் உரிமையை நீங்கள் வைத்திருக்கிறீர்கள். பிற வலைத்தளங்களில் விளம்பரம் மூலம் விளம்பரப்படுத்துவது உட்பட எந்தவொரு ஊடகத்தின் மூலமும் உங்கள் உள்ளடக்கத்தை யாருடனும் பகிர்ந்து கொள்ள எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 9 மே, 2021

உடேமியின் உள்ளடக்க பதிவும் வாழ்நாள் அணுகலும்

நீங்கள் ஒரு பாடநெறி அல்லது பிற உள்ளடக்கத்தில் சேரும்போது, ​​உடேமி சேவைகள் வழியாக அதைப் பார்க்க உடேமியிடமிருந்து உரிமத்தைப் பெறுவீர்கள், வேறு எந்தப் பயனும் இல்லை. உள்ளடக்கத்தை எந்த வகையிலும் மாற்றவோ மறுவிற்பனை செய்யவோ முயற்சிக்க வேண்டாம். சட்டரீதியான அல்லது கொள்கை காரணங்களால் அல்லது சந்தா திட்டங்கள் வழியாகச் சேருவதால் உள்ளடக்கத்தை முடக்க வேண்டும் என்பதைத் தவிர, உடேமி பொதுவாக உங்களுக்கு வாழ்நாள் அணுகல் உரிமத்தை வழங்குகிறது.

ஞாயிறு, 2 மே, 2021

உடேமியின் பயன்பாட்டு நெறிகள் - கணக்கு

உடேமியில் இணைந்து செயல்பட ஒரு கணக்கு தேவை. அந்தக் கணக்கின் கடவுச்சொல்லைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். ஏனென்றால் உங்கள் கணக்குடன் தொடர்புடைய எல்லா செயல்பாடுகளுக்கும் நீங்கள்தான் பொறுப்பு. உங்கள் கணக்கை வேறு யாராவது பயன்படுத்துகிறார்கள் என்று நீங்கள் சந்தேகித்தால், எங்கள் ஆதரவு குழுவைத் தொடர்பு கொள்வதன் மூலம் தெரியப்படுத்தலாம். உடேமியைப் பயன்படுத்த உங்கள் நாட்டில் ஆன்லைன் சேவைகளுக்கான ஒப்புதல் வயதை நீங்கள் அடைந்திருக்க வேண்டும்.

சனி, 1 மே, 2021

உடேமியின் பயன்பாட்டு விதிமுறைகள்

 உடேமி பயன்பாட்டு விதிமுறைகளைக் கடைசியாக ஏப்ரல் 1, 2021 அன்று புதுப்பித்தது.

கற்றல் மூலம் வாழ்க்கையை மேம்படுத்துவதே உடேமியின் நோக்கம். கல்வி உள்ளடக்கத்தை (பயிற்றுநர்கள்) உருவாக்கவும் பகிரவும், அந்தக் கல்வி உள்ளடக்கத்தைக் (மாணவர்கள்) கற்றுக் கொள்ளவும் எங்கும் எவருக்கும் உதவுகிறது. இந்நிறுவனம் சந்தை மாதிரியை அதன் பயனர்களுக்கு மதிப்புமிக்க கல்வி உள்ளடக்கத்தை வழங்குவதற்கான சிறந்த வழியாகக் கருதுகிறது. அனைவரும் இந்தத் தளத்தின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் அதனைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் விதிகள் தேவை. ஆகவே, இந்த விதிமுறைகள் உடேமி வலைத்தளம், உடேமி மொபைல் பயன்பாடுகள், தொலைக்காட்சிப் பயன்பாடுகள், ஏபிஐகள், பிற தொடர்புடைய சேவைகள் ஆகியவற்றில் உள்ள உங்கள் எல்லாச் செயல்பாடுகளுக்கும் பொருந்தும்.

புதன், 28 ஏப்ரல், 2021

உடேமியில் தமிழ் மின்பாடங்கள் உருவாக்கும் முறைகள்

முனைவர் த. சத்தியராஜ்

தமிழ் உதவிப்பேராசிரியர்

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா

கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கோயமுத்தூர் - 641 042

9600370671, sathiyarajt@skacas.ac.in 

உடேமி கற்றல்/ கற்பித்தல் செயல்பாடுகளை வழங்கி வருகின்றது. இச்செயல்பாடு வரவேற்கத்தக்கது. இது போன்ற செயல்பாடுகளால் உலகின் எந்த மூலையிலிருந்தும் கற்றுக் கொள்ளவும் கற்பிக்கவும் எளிதாகின்றது. இந்த அமைப்பு, தமிழில் மின்பாடங்கள் உருவாக்க வழிவகை செய்து தந்துள்ளது. அதனைத் தமிழ் மட்டும் அறிந்தோருக்கு வழிகாட்டுகின்றது இக்கட்டுரை. 

வியாழன், 28 மே, 2020

உள்ளடக்கமும் நடத்தை விதிகளும் 1

நீங்கள் சட்டபூர்வமான நோக்கங்களுக்காக மட்டுமே உடேமியைப் பயன்படுத்த முடியும். உடேமி இணைய மேடையில் நீங்கள் இடுகையிடும் அனைத்து உள்ளடக்கங்களுக்கும் தாங்கள்தான் பொறுப்பு. உடேமி நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள், சட்டத்திற்கு ஏற்ப நீங்கள் பதிவேற்றும் மதிப்புரைகள், கேள்விகள், பதிவுகள், படிப்புகள் இன்னும் பிற உள்ளடக்கங்களை நீங்கள் வைத்திருக்க வேண்டும். மற்றவர்களின் அறிவுசார் சொத்துரிமைகளை மதிக்க வேண்டும். பெரிய குற்றங்களுக்காக உங்கள் கணக்கை உடேமி தடை செய்யலாம். உடேமி இணைய மேடையில் உங்கள் பதிப்புரிமையை யாராவது மீறுவதாக நீங்கள் நினைத்தால், எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.