வ.
நதியா
முனைவர்
பட்ட ஆய்வாளர்
அயல்நாட்டுத்
தமிழ்க்கல்வித் துறை
தமிழ்ப்
பல்கலைக் கழகம்
தஞ்சாவூர்
- 10
முன்னுரை
மனித
சமுதாயத்தின் வாழ்க்கைமுறை, செயல்பாடு, பண்பாடு போன்றவற்றைப் பதிவுசெய்யும் கருவியாக விளங்குவது இலக்கியமாகும். ‘இலக்கியம் கண்டு இலக்கணம் இயம்பல்’ என்னும் பாடல் வரி
இலக்கியத்திலிருந்து இலக்கணம் முகிழ்த்தது என்பதை உணர்த்துகின்றது. இலக்கியம் அகராதித் தொகுப்பிற்குரியச் சொற்களை வழங்கும் கருவூலமாகத் திகழ்கின்றது. அகராதிகள் இலக்கணத்தின் பின்னிணைப்பாக
கருதப்பெறுகின்றன.
மொழி
அமைப்பைக் கற்றல் என்ற நிலையில் கூடுதலாகச் சொற்பொருளையும் தெரிந்துக்கொள்ள
வேண்டும் என்ற நோக்கம் மரபு இலக்கணங்களிடையே நிலவி வந்துள்ளது. மொழியைக்
கற்பதிலும், கற்பித்தலிலும் இலக்கணம்,
இலக்கியம், அகராதி என்பன கருவி நூல்களாக
விளங்குகின்றன.
இலக்கணங்களிலும்,
நிகண்டுகளிலும் கற்றல் மற்றும் கற்பித்தலின் கூறுகள்
ஒழுங்குபடுத்தபட்டவையாக அமையவில்லை. அவற்றை எளிமைப்படுத்தும் நோக்கில்
உருவாக்கப்பெற்றவை அகராதிகளாகும். அகராதிகள் மொழியில் பயன்படுத்தப்பெறும்
சொற்களைப் பாதுகாத்து வைப்பதில் காப்பகமாகவும், மொழியைப்
பயன்படுத்துவோருக்கு ஏற்படும் ஐயங்களை நீக்குவதில் தீh;ப்பகமாகவும்
இலக்கணம், பொருள் மற்றும் பயன்பாடு தொடர;பான சிக்கல்களைத் தீர்த்து வைப்பதில்
நீதிமன்றமாகவும் செயல்படுகின்றன.