வாரம் 8: தொல்காப்பியம் - நூன்மரபு (பைத்தான்வழி உரை-8)
சத்தியராஜ் தங்கச்சாமி
தமிழ் உதவிப்பேராசிரியர், முதன்மைப் பதிப்பாசிரியர், விக்கிமீடியர்
ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 641042.
முந்தைய வகுப்பில் 17 முதல் 21 வரையுள்ள நூற்பாக்களுக்கும் தீப்சீக் செய்யறிவுக் கருவியின் (AI Tool) மூலம் நிரல் எழுதி இயக்கும் முறை விளக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 22 முதல் 33 வரையுள்ள நூற்பாக்களுக்கு அதே கருவியைப் பயன்படுத்தி ஒரு விளையாட்டுச் செயலியை உருவாக்கும் முறையையும், அது இயங்கும் முறையையும் இங்குக் காணலாம். முந்தைய வகுப்பில் குறிப்பிட்டது போல், இப்பகுதி நூற்பாக்கள் மெய்ம்மயக்கம் (மெய்யெழுத்துகள் சேர்வது) பற்றிய விதிகளை விரிவாக எடுத்துரைக்கின்றன. இவ்விதிகளை அடிப்படையாகக் கொண்டு மெய்ம்மயக்க விளையாட்டுச் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.
முப்பத்து மூன்று நூற்பாக்கள் கொண்ட நூன்மரபு இயலின் இறுதிப் பகுதியாக 22 முதல் 33 வரையுள்ள நூற்பாக்கள் அமைந்துள்ளன. இவை மெய்ம்மயக்கம், சுட்டு, வினா ஆகியவற்றின் இலக்கணங்களை விளக்குகின்றன.
முந்தைய வகுப்பில் நாம் random, random.choice, f, else, main(), input, .strip(), while, __name__ == "__main__" ஆகிய குறியாக்கங்களின் விளக்கங்களைக் கண்டோம். இம்முறை, மெய்ம்மயக்க விதிகளைக் கணினியில் செயற்படுத்தும் போது கூடுதலாகச் சில பைத்தான் கூறுகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.
புதிய பைத்தான் குறியீடுகள் விளக்கம்
பைத்தானில் சொற்களஞ்சியம் (Dictionary) என்பது ஒரு தகவலை அதன் அடையாளத்தோடு (Key) சேமிக்க உதவும். ஒரு அகராதியில் ஒரு சொல்லைத் தேடினால் அதன் பொருள் கிடைப்பது போல, இங்கே 'திறவுகோலை' கொடுத்தால் அதன் 'மதிப்பு' (Value) கிடைக்கும்.
மெய்ம்மயக்கப் பயன்பாடு: மெய்ம்மயக்கத்தில் ஒரு மெய்யெழுத்தைத் தொடர்ந்து வரும் எழுத்துகளைக் கண்டறிய இது மிகச்சிறந்த வழி.
கடைப்பிடிக்க வேண்டிய முக்கியப் பண்புகள்:
• இது சதுர அடைப்புக்குறிக்குள் வராது, நெளிவு அடைப்புக்குறிக்குள் {} வரும்.
• திறவுகோல்கள் (Keys) தனித்துவமானவை; அவை மீண்டும் வரக்கூடாது.
பட்டியல் (List) என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட தகவல்களை ஒரே பெயரில் சேமிக்கப் பயன்படும். மெய்ம்மயக்க விதிகளில் வரும் எழுத்துத் தொகுப்புகளைச் சேமிக்க இது பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மெய்ம்மயக்கப் பயன்பாடு: நூற்பா 26-இல் குறிப்பிடப்படும் வேற்றுநிலை மெய்ம்மயக்க எழுத்துகளை (ய, ர, ல, வ, ழ, ள, ற) ஒரு பட்டியலில் சேமிக்கலாம்.
பட்டியலின் வசதிகள்:
• .append() மூலம் புதிய எழுத்துகளைச் சேர்க்கலாம்.
• len() மூலம் பட்டியலில் எத்தனை எழுத்துகள் உள்ளன என அறியலாம்.
நிரலை இயக்கும்போது எதிர்பாராத பிழைகள் (சான்றாக: பயனர் தவறான உள்ளீடு தருவது அல்லது அகராதியில் இல்லாத ஒரு மெய்யெழுத்தைத் தேடுவது) ஏற்பட்டால், நிரல் அப்படியே "Crash" ஆகிவிடும். அதைத் தவிர்க்க பிழை கையாளுதல் (Try-Except) நுட்பம் பயன்படுகிறது.
மெய்ம்மயக்கப் பயன்பாடு: பயனர் உள்ளீடு செய்யும் எழுத்து நமது அகராதியில் (Dictionary) இல்லை என்றால், நிரல் நின்றுவிடாமல் "இந்த எழுத்திற்கு விதிமுறை இல்லை" எனத் தெரிவிக்கலாம்.
இவை அனைத்தையும் இணைத்து ஒரு சிறிய மெய்ம்மயக்கச் சரிபார்ப்பு நிரல் இதோ:
தொல்காப்பிய மெய்ம்மயக்க விளையாட்டுச் செயலி
"""
தொல்காப்பிய மெய்ம்மயக்க விதிகள் - விளையாட்டுச் செயலி
நூற்பாக்கள் 22-33
"""
import random
# நூற்பா 19-21: மெய்யெழுத்து வகைகள்
valli = ['க', 'ச', 'ட', 'த', 'ப', 'ற'] # வல்லெழுத்துகள்
melli = ['ங', 'ஞ', 'ண', 'ந', 'ம', 'ன'] # மெல்லெழுத்துகள்
idai = ['ய', 'ர', 'ல', 'வ', 'ழ', 'ள'] # இடையெழுத்துகள்
# நூற்பா 31-32: சுட்டு, வினா எழுத்துகள்
chuttu = ['அ', 'இ', 'உ'] # சுட்டெழுத்துகள்
vinaa = ['ஆ', 'ஏ', 'ஓ'] # வினாவெழுத்துகள்
# நூற்பா 23-29: மெய்ம்மயக்க விதிகள்
# dictionary - திறவுகோல்: முன்னர் வரும் எழுத்து, மதிப்பு: அதனுடன் மயங்கும் எழுத்துகளின் பட்டியல்
meymayakku_rules = {
# நூற்பா 23: ட ற ல ள முன்னர் க ச ப உரிய
'ட': ['க', 'ச', 'ப'],
'ற': ['க', 'ச', 'ப'],
'ல': ['க', 'ச', 'ப'], # அடிப்படை விதி
'ள': ['க', 'ச', 'ப'], # அடிப்படை விதி
# நூற்பா 25: மெல்லெழுத்துகள் தமக்கு ஒத்த இசையுடன் மயங்கும்
'ங': ['ங', 'க்'], # ங-ங, ங-க் மயக்கம்
'ஞ': ['ஞ', 'ச்'], # ஞ-ஞ, ஞ-ச் மயக்கம்
'ண': ['ண', 'ட்'], # ண-ண, ண-ட் மயக்கம்
'ந': ['ந', 'த்'], # ந-ந, ந-த் மயக்கம்
'ம': ['ம', 'ப்'], # ம-ம, ம-ப் மயக்கம்
'ன': ['ன', 'ற்'], # ன-ன, ன-ற் மயக்கம்
}
# நூற்பா 24: ல ள முன்னர் ய வவும் தோன்றும்
meymayakku_rules['ல'].extend(['ய', 'வ'])
meymayakku_rules['ள'].extend(['ய', 'வ'])
# நூற்பா 26: ண ன முன்னர் க ச ஞ ப ம ய வ ஏழும் உரிய
meymayakku_rules['ண'] = ['க', 'ச', 'ஞ', 'ப', 'ம', 'ய', 'வ']
meymayakku_rules['ன'] = ['க', 'ச', 'ஞ', 'ப', 'ம', 'ய', 'வ']
# நூற்பா 27: ஞ ந ம வ முன்னர் ய மட்டும்
meymayakku_rules['ஞ'] = ['ய']
meymayakku_rules['ந'] = ['ய']
meymayakku_rules['ம'] = ['ய']
meymayakku_rules['வ'] = ['ய']
# நூற்பா 28: ம முன் வவும் தோன்றும்
meymayakku_rules['ம'].append('வ')
# நூற்பா 29: ய ர ழ முன்னர் ஙகரம்
meymayakku_rules['ய'] = ['ங']
meymayakku_rules['ர'] = ['ங']
meymayakku_rules['ழ'] = ['ங']
# நூற்பா 30: இரட்டித்தல் விதி (ர, ழ தவிர)
all_letters = valli + melli + idai
double_exceptions = ['ர', 'ழ'] # இரட்டிக்காத எழுத்துகள்
double_letters = [l for l in all_letters if l not in double_exceptions]
def main():
"""main() - முதன்மைச் செயல்பாடு"""
print("=" * 70)
print(" தொல்காப்பிய மெய்ம்மயக்க விளையாட்டு (நூற்பா 22-33)")
print("=" * 70)
while True:
print("\n" + "=" * 60)
print("முதன்மைப் பட்டியல்:")
print("1. தொல்காப்பிய நூற்பாக்களைக் காண (22-33)")
print("2. மெய்ம்மயக்க விதிகளைப் பயில")
print("3. விளையாட்டு - மெய்ம்மயக்கத்தை அடையாளம் காண")
print("4. சுட்டு/வினா எழுத்துகளை அறிய")
print("5. இரட்டித்தல் விதியை அறிய")
print("6. வெளியேறு")
print("=" * 60)
choice = input("உங்கள் தேர்வு (1-6): ").strip()
if choice == '1':
show_noorpaakkal()
elif choice == '2':
practice_rules()
elif choice == '3':
play_game()
elif choice == '4':
show_chuttu_vinaa()
elif choice == '5':
show_double_rule()
elif choice == '6':
print("\nநன்றி! மீண்டும் வருக!")
break
else:
print("தவறான தேர்வு. மீண்டும் முயற்சி செய்க.")
def show_noorpaakkal():
"""நூற்பா 22-33-ஐக் காட்டும் செயல்பாடு"""
print("\n" + "=" * 70)
print(" தொல்காப்பிய நூற்பாக்கள் (22-33)")
print("=" * 70)
noorpaakkal = [
f"22. அம் மூ ஆறும் வழங்கு இயல் மருங்கின்\n மெய்ம்மயக்கு உடனிலை தெரியும் காலை.",
f"23. ட ற ல ள என்னும் புள்ளி முன்னர்\n க ச ப என்னும் மூ எழுத்து உரிய.",
f"24. அவற்றுள், ல ளஃகான் முன்னர் ய வவும் தோன்றும்.",
f"25. ங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர்\n தம்தம் இசைகள் ஒத்தன நிலையே.",
f"26. அவற்றுள், ண னஃகான் முன்னர்\n க ச ஞ ப ம ய வ ஏழும் உரிய.",
f"27. ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர்\n யஃகான் நிற்றல் மெய் பெற்றன்றே.",
f"28. மஃகான் புள்ளி முன் வவ்வும் தோன்றும்.",
f"29. ய ர ழ என்னும் புள்ளி முன்னர்\n முதல் ஆகு எழுத்து ஙகரமொடு தோன்றும்.",
f"30. மெய்ந் நிலை சுட்டின் எல்லா எழுத்தும்\n தம் முன் தாம் வரூஉம் ர ழ அலங்கடையே.",
f"31. அ இ உ அம் மூன்றும் சுட்டு.",
f"32. ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா.",
f"33. அளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும்\n உள என மொழிப இசையொடு சிவணிய\n நரம்பின் மறைய என்மனார் புலவர்."
]
for i, nool in enumerate(noorpaakkal, 22):
print(f"\n{nool}")
input("\n[தொடர Enter அழுத்துக] ")
def practice_rules():
"""மெய்ம்மயக்க விதிகளைப் பயிற்சி செய்ய"""
print("\n" + "=" * 70)
print(" மெய்ம்மயக்க விதிகள் - பயிற்சி")
print("=" * 70)
rules_summary = {
'ட/ற': "ட, ற முன்னர் க, ச, ப மட்டுமே",
'ல/ள': "ல, ள முன்னர் க, ச, ப, ய, வ",
'ண/ன': "ண, ன முன்னர் க, ச, ஞ, ப, ம, ய, வ",
'ஞ/ந/வ': "ஞ, ந, வ முன்னர் ய மட்டுமே",
'ம': "ம முன்னர் ய, வ",
'ய/ர/ழ': "ய, ர, ழ முன்னர் ங மட்டுமே"
}
for key, value in rules_summary.items():
print(f"\n• {key}: {value}")
# random.choice - சீரற்ற விதியைக் காட்டுதல்
print("\n" + "-" * 50)
print("சீரற்ற மெய்ம்மயக்க உதாரணம்:")
mey = random.choice(list(meymayakku_rules.keys()))
allowed = ', '.join(meymayakku_rules[mey])
print(f" '{mey}' முன்னர் வரக்கூடிய எழுத்துகள்: {allowed}")
input("\n[தொடர Enter அழுத்துக] ")
def play_game():
"""மெய்ம்மயக்க விளையாட்டு"""
print("\n" + "=" * 70)
print(" மெய்ம்மயக்க அடையாளம் காணும் விளையாட்டு")
print("=" * 70)
score = 0
total_questions = 5
question_num = 0
while question_num < total_questions:
question_num += 1
# சீரற்ற முன்னெழுத்தைத் தேர்வு செய்தல்
first_letter = random.choice(list(meymayakku_rules.keys()))
allowed_letters = meymayakku_rules[first_letter]
# 50% வாய்ப்பு சரியான கூட்டுக்கும், 50% வாய்ப்பு தவறான கூட்டுக்கும்
if random.choice([True, False]):
# சரியான கூட்டு
second_letter = random.choice(allowed_letters)
is_correct = True
else:
# தவறான கூட்டு - அனுமதிக்கப்பட்ட எழுத்துகள் இல்லாத ஒன்றைத் தேர்வு செய்தல்
all_possible = valli + melli + idai
# அனுமதிக்கப்பட்டவை தவிர மற்றவற்றிலிருந்து தேர்வு
not_allowed = [l for l in all_possible if l not in allowed_letters]
if not_allowed: # ஏதேனும் அனுமதிக்கப்படாத எழுத்துகள் இருந்தால்
second_letter = random.choice(not_allowed)
is_correct = False
else:
# அனுமதிக்கப்படாத எழுத்துகள் இல்லை என்றால் (அரிதாக), சரியானதையே தேர்வு செய்
second_letter = random.choice(allowed_letters)
is_correct = True
print(f"\nகேள்வி {question_num}/{total_questions}:")
print(f" '{first_letter}{second_letter}' - இது மெய்ம்மயக்க விதிப்படி சரியானதா?")
print(" 1. சரி")
print(" 2. தவறு")
answer = input(" உங்கள் விடை (1/2): ").strip()
if (answer == '1' and is_correct) or (answer == '2' and not is_correct):
print(f" ✓ சரி! {'சரியான மெய்ம்மயக்கம்' if is_correct else 'தவறான மெய்ம்மயக்கம்'}")
score += 1
else:
correct_answer = "சரி" if is_correct else "தவறு"
print(f" ✗ தவறு. இது {correct_answer}.")
if is_correct:
print(f" ஏனெனில் '{first_letter}' முன்னர் {', '.join(allowed_letters)} மட்டுமே வரும்.")
else:
print(f" '{first_letter}' முன்னர் {', '.join(allowed_letters)} மட்டுமே வரும்.")
# f-strings - இறுதி மதிப்பெண்ணைக் காட்டுதல்
print(f"\n" + "=" * 50)
print(f" விளையாட்டு முடிந்தது!")
print(f" உங்கள் மதிப்பெண்: {score}/{total_questions}")
percentage = (score / total_questions) * 100
print(f" விழுக்காடு: {percentage:.1f}%")
if percentage >= 80:
print(" பாராட்டுகள்! மெய்ம்மயக்க விதிகளை நன்கு அறிந்துள்ளீர்கள்!")
elif percentage >= 50:
print(" நல்லது! மேலும் பயிற்சி எடுங்கள்!")
else:
print(" மீண்டும் முயற்சி செய்யுங்கள்!")
input("\n[தொடர Enter அழுத்துக] ")
def show_chuttu_vinaa():
"""சுட்டு மற்றும் வினா எழுத்துகளைக் காட்டும்"""
print("\n" + "=" * 70)
print(" சுட்டு மற்றும் வினா எழுத்துகள்")
print("=" * 70)
print(f"\nநூற்பா 31: சுட்டெழுத்துகள் - {', '.join(chuttu)}")
print(" 'அ' - அப்பொருள், அவன், அது")
print(" 'இ' - இப்பொருள், இவன், இது")
print(" 'உ' - உப்பொருள், உவன், உது (உயர்திணை/அஃறிணை)")
print(f"\nநூற்பா 32: வினாவெழுத்துகள் - {', '.join(vinaa)}")
print(" 'ஆ' - ஆங்கு? (எங்கே?), ஆர்? (யார்?)")
print(" 'ஏ' - ஏன்? (எதற்கு?)")
print(" 'ஓ' - ஓங்கு? (எங்கே?), ஓர்? (யார்?)")
print("\nநூற்பா 33: அளபெடை மற்றும் ஒற்று நீடல்")
print(" 'ஆஆஆ' என்று ஏழு மாத்திரை நீட்டித்தல்")
print(" ஒற்றெழுத்துகளை இரட்டித்தல் (இயற்கை, புல்லென)")
input("\n[தொடர Enter அழுத்துக] ")
def show_double_rule():
"""இரட்டித்தல் விதியைக் காட்டும் - நூற்பா 30"""
print("\n" + "=" * 70)
print(" இரட்டித்தல் விதி (நூற்பா 30)")
print("=" * 70)
print("\n'ர', 'ழ' தவிர மற்ற எல்லா எழுத்துகளும் தமக்கு முன் தாமே வரும்:")
print(f"\nஇரட்டிக்கும் எழுத்துகள்: {', '.join(double_letters[:10])} ...")
print("\nஎடுத்துக்காட்டுகள்:")
examples = [
("க்", "அக்கு", "அ(க்)கு"),
("ச்", "அச்சு", "அ(ச்)சு"),
("ட்", "அட்டம்", "அ(ட்)டம்"),
("த்", "அத்தை", "அ(த்)தை"),
("ப்", "அப்பம்", "அ(ப்)பம்")
]
for letter, word, split in examples:
print(f" {letter}: {word} - {split}")
print("\nவிதிவிலக்குகள் (இரட்டிக்கா எழுத்துகள்):")
print(f" ர, ழ - எ.கா: அரா, அழகு")
input("\n[தொடர Enter அழுத்துக] ")
if __name__ == "__main__":
main()
மேலே உள்ள நிரலை tholkaappiyam_nunmarapu_part8.py எனச் சேமித்து, பின்வருமாறு இயக்கலாம்:
வெளியீட்டுத் திரை:
திறவுகோல் (Key) மற்றும் மதிப்பு (Value) சேமிக்கும் அமைப்பு
தகவல்களை வரிசையாகச் சேமிக்கும் அமைப்பு
நிரலில் ஏற்படும் பிழைகளைச் சமாளிக்க
ஒரு மதிப்பு பட்டியலில்/அகராதியில் உள்ளதா சரிபார்க்க
பட்டியலில் புதிய உருப்படிகளைச் சேர்க்க
இந்தக் குறியாக்கங்கள் அனைத்தும் இணைந்துதான் ஒரு முழுமையான மெய்ம்மயக்க விளையாட்டுச் செயலியை உருவாக்க நமக்கு உதவின. ஆம் ஐயா!
முனைவர் அ.வினோத், கோ.பூவேந்திரன், முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி (2023, அக்டோபர் 15, 16). தொல்காப்பியக் குறுஞ்செயலி உருவாக்கம், தொழில்நுட்ப மாநாடு, குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி, கோயமுத்தூர்.
Vinoth, A., Thangasamy, S., Nithya, R., Poovandran, G., Mounash, V., Subalalitha, C. N., ... & Jafer, K. S. (2023, December). Automatic Identification of Meimayakkam in Tamil Words Using Rule-Based and Transfer Learning Approaches. In International Conference on Speech and Language Technologies for Low-resource Languages (pp. 443-458). Cham: Springer Nature Switzerland.
தெய்வசுந்தரம் ந., மொழியியலும் கணினிமொழியியலும் (தொகுதி இரண்டு), அமுத நிலையம், சென்னை. (2021)
Thangasamy, S., A, V., A, J. P. B., S, S., S, S. S., & Rathinavel, L. (2024). பைத்தான் தானியக்கம்வழி விக்கிமூல மேலடி - கீழடி மேம்பாடு : Python-based Automation for Header-footer Improvement in Wikisource. PULAM: INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES, 37–46. https://doi.org/10.5281/zenodo.10991314
https://pypi.org/project/Open-Tamil/
Tholkaappiyar_Nuunmarapu, https://github.com/neyakkoot/Tholkaappiyar_Nuunmarapu
பைத்தான்– https://ta.wikipedia.org/s/112
https://kaniyam.com/category/let-us-learn-learn-python/
தொல்காப்பியம்/எழுத்ததிகாரம்/நூல் மரபு https://ta.wikisource.org/s/238
சத்தியராஜ் தங்கச்சாமி (2024). தொல்காப்பியம் - நூன்மரபு (பைத்தான்வழி உரை-1) (Tholkaappiyam - Nunmarabu (Python Text-1)), இலக்கணம்-காலாண்டுச் சஞ்சிகை - 6, பூ 2 இதழ் 2, இலங்கை. ISSN: 2961-5712
சத்தியராஜ் தங்கச்சாமி (2024). தொல்காப்பியம் - நூன்மரபு (பைத்தான்வழி உரை-2) (Tholkaappiyam - Nunmarabu (Python Text-2)), இலக்கணம்-காலாண்டுச் சஞ்சிகை - 7, பூ 2 இதழ் 3, இலங்கை, ISSN: 2961-5712
சத்தியராஜ் தங்கச்சாமி (2024). தொல்காப்பியம் - நூன்மரபு (பைத்தான்வழி உரை-3) (Tholkaappiyam - Nunmarabu (Python Text-3)), இலக்கணம்-காலாண்டுச் சஞ்சிகை - 8, பூ 2 இதழ் 4, இலங்கை, ISSN: 2961-571
சத்தியராஜ் தங்கச்சாமி (2025). தொல்காப்பியம் - நூன்மரபு (பைத்தான்வழி உரை-4) (Tholkaappiyam - Nunmarabu (Python Text-4)), இலக்கணம்-காலாண்டுச் சஞ்சிகை - 9, பூ 3 இதழ் 1, இலங்கை, ISSN: 2961-571
சத்தியராஜ் தங்கச்சாமி (2025). தொல்காப்பியம் - நூன்மரபு (பைத்தான்வழி உரை-5) (Tholkaappiyam - Nunmarabu (Python Text-5)), இலக்கணம்-காலாண்டுச் சஞ்சிகை - 10, பூ 3 இதழ் 2, இலங்கை, ISSN: 2961-571
சத்தியராஜ் தங்கச்சாமி (2025). தொல்காப்பியம் - நூன்மரபு (பைத்தான்வழி உரை-6) (Tholkaappiyam - Nunmarabu (Python Text-6)), இலக்கணம்-காலாண்டுச் சஞ்சிகை - 11, பூ 3 இதழ் 3, இலங்கை, ISSN: 2961-571
சத்தியராஜ் தங்கச்சாமி (2025). தொல்காப்பியம் - நூன்மரபு (பைத்தான்வழி உரை-7) (Tholkaappiyam - Nunmarabu (Python Text-7)), இலக்கணம்-காலாண்டுச் சஞ்சிகை - 12, பூ 3 இதழ் 4, இலங்கை, ISSN: 2961-571
Chowdhury, Naem & Wei, Li & Min, Zhang. (2025). Redefining Scalability in AI: The Innovations Behind DeepSeek-V3's MoE and Multi-Token Prediction. 1. 10.5281/zenodo.14742743
deepseek-ai, https://github.com/deepseek-ai/DeepSeek-V3/tree/main/inference
வாரம் 8 - தொல்காப்பியம் நூன்மரபு & மெய்ம்மயக்க விளையாட்டுச் செயலி நிறைவு
நூற்பா 22-33 - மெய்ம்மயக்கம், சுட்டு, வினா, இரட்டித்தல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன