- இரா. நித்யா
1.0 முன்னுரை
தெலுங்கு இலக்கிய உலகில் குறிபிடத்தக்கவர் பிங்களிசூரனார். இவர் களாபூரணோதயம் எனும் கற்பனைக் காவியத்தைப் படைத்துள்ளார். இப்படைப்பில் பாத்திரங்களை அறிமுகப்படுத்துமிடத்தும், அப்பாத்திரங்களின் தன்மைகளைக் குறிக்குமிடத்தும், இயற்கைச் சார்ந்த காட்சிகளை வருணிக்குமிடத்தும் உவமைகளைப் பயன்படுத்தியுள்ளார். அவ்வுமைக் குறித்து விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
2.0 பிங்களிசூரனாரும் களாபூரணோதயமும்
தெலுங்கு இலக்கிய பிரபந்தங்களின் வளர்ச்சிக்கு அடிகோலியவர்களுள் ஒருவர் பிங்களிசூரனார். இவர் பதினாறாம் நூற்றாண்டைச் சார்ந்த கிருட்டிணத்தேவராயர் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தவரும், இங்கிலாந்தைச் சார்ந்த சேச்சுப்பியருக்குச் சமகாலத்தவரும் ஆவார். அவர் சைவ சமயத்தைச் சார்ந்தவரானாலும் வைணவக் கருத்துகள் மிகுந்த களாபூரணோதயத்தை (திருமாலை வழிபடக்கூடிய கிருட்டிணத்தேவராயரின் வேண்டுகோளுக்கிணங்க எழுதப்பட்டது) எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் தெலுங்கில் பிரபலமாக இருந்த கவிதைப்போக்கு பிரபந்தம் இயற்றுவதாகும். இது இலக்கியத்தின் உயிர்நாடி போன்றது. இதனை இயற்றுவதில் அட்டதிக்கசங்கள் (எண்திசைப் புலவர்கள்) என்றழைக்கப்பட்ட புலவர்களே சிறந்து விளங்கினர். அவ்வட்டதிக்கசங்களுள் ஒருவர் பிங்களிசூரனார். இவர் இராகவபாண்டவியம் (சிலேடைக் காவியம்), பிரபாவதி பிரத்தியுமனம், களாபூரணோதயம் ஆகிய பிரபந்தங்களை இயற்றியுள்ளார்.
மேலும் வாசிக்க: http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1840:2013-11-23-05-28-07&catid=2:2011-02-25-12-52-49&Itemid=19 (பதிவுகள் இதழில் வெளியிடப்பெற்ற கட்டுரை)