தமிழ் ஒளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் ஒளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 ஜூன், 2022

தமிழ் ஒளி - வருங்கால மனிதன் வருக

 

வருங்கால மனிதன் வருக!

புத்தர் நடந்த திசையிலே - அருள்
பொங்கி வழிந்த திசையிலே
சித்தம் மகிழ்ந்து நடந்திட - ஒரு
தெய்வ மனிதன் வருகிறான்!


விண்ணிற் பிறந்தவன் என்றிட - முகம்
விண்சுட ராகப் பொலிவுற
மண்ணிற் பிறந்த மனிதருள் - புது
மைந்தன் பிறந்து வருகிறான்!

சிந்துப்பாவியல்

சிந்துப்பாவியல்: இசைத்தமிழ் இலக்கணக் கையேடு தமிழ் இலக்கியத்தில் இசைப்பாடல்களின் ஒரு வடிவமான சிந்து பாடல்களுக்குரி...