வருங்கால மனிதன் வருக!
புத்தர் நடந்த திசையிலே - அருள்
பொங்கி வழிந்த திசையிலே
சித்தம் மகிழ்ந்து நடந்திட - ஒரு
தெய்வ மனிதன் வருகிறான்!
விண்ணிற் பிறந்தவன் என்றிட - முகம்
விண்சுட ராகப் பொலிவுற
மண்ணிற் பிறந்த மனிதருள் - புது
மைந்தன் பிறந்து வருகிறான்!
மன்னன் அசோகனும் காந்தியும் - திரு
வள்ளுவன் என்றவே தாந்தியும்
சொன்ன படிக்கு நடந்திடப் - பரி
சுத்த மனிதன் வருகிறான்!
சொல்லும் செயலும் ஒருதொழில் - எனும்
தொன்மை நெறியைத் தொடர்ந்திடக்
கல்லும் உருகும் கருணையை - இரு
கண்ணெனக் கொண்டு நடந்திட,
நல்ல மனிதன் வருகிறான் - தமிழ்
நாட்டு மனிதன் வருகிறான்!
வல்லமை கொண்டு வளர்ந்திடப் - புவி
வாழ்ந்திடச் செய்ய வருகிறான்!
‘மண்மிசை அன்பை விதைத்திடில் - அது
மாமர மாகிக் கனிதரும்!
உண்ண மரணம் ஒழிந்திடும்’ - என
ஓதும் மனிதன் வருகிறான்!
காணொலி
பார்வை
தமிழ் ஒளி - வருங்கால மனிதன் வருக
http://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=141&pno=46
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன