வல்லின மிகா இடங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வல்லின மிகா இடங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 பிப்ரவரி, 2025

வல்லின எழுத்துகள் மிகா இடங்கள்

 வல்லின எழுத்துகளாகிய க், ச், த், ப் என்பன மிக்கு வரக்கூடிய இடங்கள் எவையென முன்பகுதியில் படித்தீர்கள். அல்லவா? இனி, இப்பதியில் அவ்வெழுத்துகள் மிகா இடங்கள் எவை என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் காண்போம்.

அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு’ - என்னும் சுட்டு, வினாச் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகாது.
  • அவ்வளவு   +  பெரிது  =  அவ்வளவுபெரிது

  • இவ்வளவு  +  கனிவா  =  இவ்வளவு கனிவா?

  • எவ்வளவு  +  தொலைவு  =  எவ்வளவு தொலைவு?