மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்
பிறப்பு: 07-02-1902 இறப்பு: 15.01.1981
பெற்றோர்: ஞானமுத்து தேவேந்தரனார், பரிபூரணம் அம்மையார்
பாவாணர் 1902 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஞானமுத்து தேவேந்தரனார் என்னும் கணக்காயருக்கும், பரிபூரணம் அம்மையார் என்னும் கணக்காய்ச்சியருக்கும் பத்தாவது மகவாகவும் நான்காவது மகனாகவும் பிறந்ததாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கர நயினார் கோவிலில் (சங்கரன்கோவில்) பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவநேயரின் தந்தையார் ஞானமுத்து தோக்கசுவை (Stokes)கிறித்தவமத குருவானவர் ஒருவர் எடுத்து வளர்த்து வந்துள்ளார் . ஞானமுத்து தோக்கசுவின் பெற்றோர் முத்துசாமி , திருவாட்டி. வள்ளியம்மாள் இருவரும் தோக்கசு அவர்களின் மாளிகையில் காவலர்களாக பணியாற்றி வந்துள்ளனர். அவர்களை கிறித்துவர்களாக்கி தம் பெயரையும் சூட்டி உள்ளார். முத்துசாமி தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்தவர். 1906 - பாவாணரின் தந்தையாரும் அன்னையாரும் அடுத்தடுத்து இயற்கை எய்தினர். சங்கரநயினார் கோயில் வட்டம் வட எல்லையாகிய சீயோன்மலை என்னும் முறம்பில் 'யங்' துரை என்பார் காப்பில் தேவநேயப் பாவாணர் தொடக்கக் கல்வி பயின்றார்.
அவர் மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப்பட்டார்.
தமிழ் உலக மொழிகளில் மூத்ததும் மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழியென வாதிட்டவர். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது என்று நிறுவியவர் பாவாணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்து இயம்பினார்.
படிப்பும் பணிகளும்
· 1912 - தம் ஐந்தாம் அகவையில் பெற்றோரை இழந்தப் பாவாணர், வட ஆர்க்காடு மாவட்டம், ஆம்பூரில் மூத்த அக்காளான பாக்கியத்தாயின் பேணலில் வளர்ந்தார். சோழபுரம் விடையூழியப் பள்ளியில் தொடக்கக் கல்வியும், ஆம்பூரில் உள்ள மிசௌரி உலுத்தரின் விடையூழிய (M.E.L.M.) நடுநிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு வரை படிப்பைத் தொடர்ந்தார்.
· 1916 - பாளையங்கோட்டைத் திருச்சபை விடையூழியக் கழக உயர்நிலைப்பள்ளியில்(C.M.S.) IV, V, VI ஆம் படிவங்கள் (இந்நாளில் 9, 10, 11 ஆகிய வகுப்புகள்) பயின்றார்.
· 1919 - இராமநாதபுரம் மாவட்டம் முறம்பு என்னும் சீயோன் மலையில் உயர்தரப்பள்ளி ஒன்றை உருவாக்கி அதன் தாளாளராக இருந்த) யங் என்பவர் பணவுதவி செய்தார்; பின்பு தன் 17ம் அகவையில், 1919 ஆண்டு தாம் பயின்ற சீயோன் மலை உயர்தரப்பள்ளியிலேயே முதல் படிவ(ஆறாம் வகுப்பு) ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்..
· 1924 - மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதத்தேர்வில் அவ் ஆண்டு தேர்ச்சி பெற்ற ஒரேயொருவர் தேவநேயர் என்ற சிறப்பும் பெற்றார்.'ஞா.தேவநேசக் கவிவாணன், மிசன் உயர்தரப் பாடசாலை, ஆம்பூர்,வடார்க்காடு ஜில்லா(மாவட்டம்)' என்பது தேர்ச்சிக் குறிப்பு (செந்தமிழ் தொகுதி 22)
· திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச்சங்கத் தனித்தமிழ்ப் புலவர் தேர்வில் அவ்வாண்டு தேர்ச்சியடைந்த ஒரேயொருவர் தேவநேயரே.(செந்.செல்.4:336);
· சென்னைப் பல்கலைக்கழக வித்துவான், கீ.க. தேர்வு (B.O.L) என்னும் இளநிலைத் தேர்விலும் வெற்றி பெற்றார்;
· எசுந்தர் அம்மையார் திருமணம்.ஈராண்டில் இயற்கை. ஒரு குழந்தை மணவாளன்;தத்தாகத் தரப்படுதல்.
· 1929 மன்னார்குடிப் பின்லேக் கல்லூரி உயர்நிலைப்பள்ளியில் ஆறாண்டு பணி; இக்காலகட்டத்தில், இராசகோபாலர் என்பவரிடம் முறையாக இசை பயின்றார்.
· 1931 'மொழியாராய்ச்சி' - ஒப்பியன் மொழி நூல்' என்னும் மொழியாய்வுக் கட்டுரை செந்தமிழ்ச் செல்வியில் வெளிவருதல்.
· 1935 - திரவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே என்னும் தலைப்பில் கீ.க.மு.(M.O.L.) பட்டத்திற்காக இடுநூல் சென்னைப் பல்கலைக்கழகத்தில்வழங்குதல்.
· 1936 - இடுநூல் சென்னைப் பல்கலைக்கழகத்தால் தள்ளப்படுதல். 'இனி எனது நூல்களையெல்லாம் ஒவ்வொன்றாக வெளியிடுவேன்' என உறுதிக் கொள்ளல்.
· 1940 - ஒப்பியன் மொழிநூலை வெளியிட்டார்.[2]
· 1943 - சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி(ஓராண்டு). தமிழ் உணர்ச்சி மாநாட்டில் பங்கேற்பு(21.10.43). தொல்காப்பியக் குறிப்புரை வரைவு.
· 05.01.1981 - மதுரை உலகத் தமிழ் மாநாட்டுப் பொதுநிலைக் கருத்தரங்கில், 'மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்' என்னும் பொழிவு. நெஞ்சாங்குலைத் தாக்குண்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுதல்.
இறுதி நாட்கள்
மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்று, "மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும்" எனும் பொருளில் 75 நிமிடங்கள் உரையாற்றினார். அன்று (5.1.1981) இரவே உடல் நலங்கெட்டு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். நோயிலிருந்து மீளாமலேயே 1981 சனவரி 16 பின்னிரவு (அதிகாலை) ஒரு மணிக்கு இயற்கை எய்தினார்.
பாவாணரின் குழந்தைகள்
1. நச்சினார்க்கினிய நம்பி
2. சிலுவையை வென்ற செல்வராசன்
3. அருங்கலை வல்லான் அடியார்க்கு நல்லான்
4. மடந்தவிர்த்த மங்கையர்க்கரசி
5. மணிமன்ற வாணன்
திரட்டு நூல்கள் - 12
1. இலக்கணக் கட்டுரைகள்
1. தொல்காப்பியச் சூத்திரக் குறிப்புரை
2. இலக்கணவுரை வழுக்கள்
3. உரிச்சொல் விளக்கம்
4. ஙம் முதல்
5. தழுவு தொடரும் தழாத் தொடரும்
6. நிகழ்கால வினை
7. படர்கை 'இ' விகுதி
8. காரம்,காரன்,காரி
9. .குற்றியலுகரம் உயிரீறே (1)
10. .குற்றியலுகரம் உயிரீறே (2)
11. .ஒலியழுத்தம்
12. .தமிழெழுத்துத் தோற்றம்
13. .நெடுங்கணக்கு (அரிவரி)
14. .தமிழ் எழுத்து மாற்றம்
15. .தமிழ் நெடுங்கணக்கு
16. .'ஐ,ஔ' 'அய்,அவ்' தானா?
17. .எகர ஒகர இயற்கை
18. .உயிர்மெய் வரிவடிவுகளின் ஒரியலின்மை
2. தமிழியற் கட்டுரைகள்
1. செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு
2. தென்மொழி
3. தமிழுக்கு ஆங்கில நட்பும் வடமொழிப் பகையும்
4. தமிழ் தனித்தியங்குமா?
5. தமிழும் திரவிடமும் சமமா?
6. திராவிடம் என்பதே தீது
7. மொழி பெயர்முறை
8. நிகழ்கால வினைவடிவம்
9. நிகழ்கால வினை எச்சம் எது?
10. கால்டுவெல் கண்காணியாரின் சறுக்கல்கள்?
11. ஆய்தம்
12. மூவிடப் பதிற் பெயர்களின் முதற்கால எண்ணீறுகள்
13. பாயிரப் பெயர்கள்
14. திருக்குறட் சிறப்புச் சொற்களும் சொல்லாட்சியும்
15. சிந்தாமணியின் செவ்விய வனப்பியல்
16. ஆவுந் தமிழரும்
17. கற்புடை மனைவியின் கண்ணியம்
18. அசுரர் யார்?
19. கோசர் யார்?
20. முருகு முதன்மை
21. மாந்தன் செருக்கடக்கம்
22. தற்றுடுத்தல்
23. தலைமைக் குடிமகன்
24. மாராயம்
25. முக்குற்றம்
26. திருவள்ளுவர் காலம்
27. வள்ளுவர் கோட்டக் கால்கோள்விழா வாழ்த்துரை விளக்கம்
3. மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்
1. உலக மொழிகளின் தொடர்பு
2. முதற்றாய் மொழியின் இயல்புகள்
3. வாய்ச் செய்கை யொலிச் சொற்கள்
4. சொற்குலமும் குடும்பமும்
5. சொற்பொருளாராய்ச்சி
6. சொல்வேர்காண் வழிகள்
7. ககர சகரப் பரிமாற்றம்
8. மொழியாராய்ச்சியும் மொழியகழ்வராய்ச்சியும் ஒன்றே
9. மேலை மொழிநூலாரின் மேலோட்டக் கொள்கைகள்
10. சேயும் சேய்மையும்
11. ஆலமரப் பெயர் மூலம்
12. கருப்பும் கறுப்பும்
13. தெளிதேனும் களிமதுவும்
14. கலைச்சொல்லாக்க நெறிமுறைகள்
4. மொழிநூற் கட்டுரைகள்
1. ஒப்பியல் இலக்கணம்
2. சொற்பொருள் வரிசை
3. வண்ணனை மொழிநூல்
4. பொருட்பாகுபாடு
5. உலக வழக்கு கொச்சை வழக்கன்று
6. எல்லாராய்ச்சியும் சொல்லாராய்ச்சியும்
7. வடசொல் தென்சொல் காணும் வழிகள்
8. பாவை என்னுஞ் சொல் வரலாறு
9. திரு என்னும் சொல் தென்சொல்லா, வடசொல்லா?
10. 'உத்தரம்', 'தக்கணம்' எம்மொழிச் சொற்கள்?
11. 'மதி' விளக்கம்
12. 'உவமை' தென்சொல்லே
13. திரவிடம் தென்சொல்லின் திரிபே
14. தமிழ் முகம்
15. வள்ளுவன் என்னும் பெயர்
16. கழகமெல்லாம் சூதாடுமிடமா?
17. இந்திப் பயிற்சி
5.பண்பாட்டுக் கட்டுரைகள்
1. புறநானூறும் மொழியும்
2. வனப்புச் சொல்வளம்
3. அவியுணவும் செவியுணவும்
4. 501 ஆம் குறள் விளக்கம்
5. அரசுறுப்பு
6. பாவினம்
7. அகத்தியர் ஆரியரா? தமிழரா?
8. தமிழ்மன்னர் பெயர்
9. வேளாளர் பெயர்கள்
10. பாணர்
11. குலப்பட்ட வரலாறு
12. கல்வி (Culture)
13. நாகரிகம்
14. வெடிமருந்து
15. பண்டைத் தமிழர் காலக் கணக்குமுறை
6. தென்சொற் கட்டுரைகள்
1. வடமொழிச் சென்ற தென்சொற்கள்
2. வடமொழித் தென்சொற்கள்
3. வடசொல்லென மயங்குந் தொல்காப்பியத் தென்சொற்கள்
4. 'இலக்கியம்', 'இலக்கணம்'
5. 'இலக்கணம்', 'இலக்கியம்' எம்மொழிச் சொற்கள்?
6. திருவென்னும் சொல் தென்சொல்லே
7. 'காலம்' என்னுஞ் சொல் எம்மொழிக்குரியது?
8. 'மாணவன்' தென்சொல்லா? வடசொல்லா?
9. என் பெயர் என்சொல்?
10. சிலை என்னுஞ் சொல் வரலாறு
11. .கருமம் தமிழ்ச் சொல்லே!
12. எது தேவமொழி?
13. சமற்கிருதவாக்கம்சொற்கள்
14. சமற்கிருதவாக்கம்-எழுத்து
15. சமற்கிருதவாக்கம் - இலக்கணம்
16. ஆரியப் பூதம் அடக்கம் எழும்புதல்
7.செந்தமிழ் சிறப்பு
1. மதிப்படைச் சொற்கள்
2. தமிழின் தனிப்பெருந்தன்மைகள்
3. தமிழின் தனியியல்புகள்
4. தமிழ் பற்றிய அடிப்படை உண்மைகள்
5. தமிழின் தொன்மையும் முன்மையும்
6. தமிழும் திராவிடமும் தென்மொழியும்
7. தமிழ் வேறு திரவிடம் வேறு
8. செந்தமிழும் கொடுந்தமிழும்
9. திசைச்சொல் எவை?
10. மலையாளமும் தமிழும்
11. இசைத்தமிழ்
12. 'கடிசொல் இல்லை காலத்துப்படினே'
13. புதுமணிப் பவளப் புன்மையும் புரைமையும்
14. போலித் தமிழ்ப்பற்று
15. மதுரைத் தமிழ்க் கழகம்
16. உலகத் தமிழ்க் கருத்தரங்க மாநாடு
17. தமிழனின் பிறந்தகம்
18. தமிழன் உரிமை வேட்கை
19. உரிமைப் பேறு
8.தலைமைத் தமிழ்
1. தனிச் சொற்கள்
2. தொகுதிச் சொற்கள் (பூனைப் பெயர்கள், நெருப்புப் பற்றிச் 'சுள்' அடிச் சொற்கள்)
9.மறுப்புரை மாண்பு
1. குரலே சட்சம்
2. குரல் சட்சமே; மத்திமமன்று
3. நன்னூல் நன்னூலா?
4. நன்னூல் நன்னூலா - மறுப்பறுப்பு
5. சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் படைகட்கே
6. பேரா. தெ.பொ.மீ. தமிழுக் கதிகாரியா?
7. தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி
8. `பாணர் கைவழி` மதிப்புரை (மறுப்பு)
9. சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் மதிப்புரை மறுப்பு
10.தமிழ் வளம்
1. வேர்ச்சொற் சுவடி
2. போலிகை யுருப்படிகள்
3. அகரமுதலிப் பணிநிலை
4. தமிழ் அகரமுதலித் தொகுப்பாளர் தகுதி
5. உலகத் தமிழ்க் கழகக் கொள்கை
6. பதவி விடுகையும் புத்தமர்த்தமும்
7. உ.த.க. உறுப்பினர்க்கு அறிவிப்பு
8. உ.த.க. உறுப்பினர் உடனடியாய்க் கவனிக்க
9. உ.த.க. மாவட்ட அமைப்பாளர்க்கு உடனடி வியங்கோள்
10. பாவாணரின் மூன்று அறிக்கைகள்
11. தமிழா விழித்தெழு!
12. தமிழ் ஆரியப் போராட்டம்
13. கோலாலம்பூரில் கொண்டான்மார் கூத்து
14. தமிழ்ப் பேராசிரியரின் தவறான மொழிக் கொள்கை
15. பல்குழுவும் உட்பகையும் கொல்குறும்பும்
16. உண்மைத் தமிழர் அனைவர்க்கும் உரைத்த எச்சரிக்கை
17. அந்தோ! வெங்காலூர்த் தமிழர் படும்பாடு
18. தி.மு.க அரசிற்குப் பாராட்டு
19. மனோன்மணிய ஆசிரியர் சுந்தரனார் தமிழ்வார்த்தை இனிப்பாட வேண்டிய முறை
20. தனித் தமிழ் இதழாசிரியர் தவறு
21. வாழ்நாட் பல்லாண்டு வரம்பு விழாக்கள்
22. மறைமலையடிகள் நூல்நிலைய மாண்பு
23. ஆங்கிலத்தை அகற்றுவது அறிவுடைமையா?
24. தேசியப் படை மாணவர் பயிற்சி ஏவல்கள்
25. திருக்கோவில்களில் தமிழ்ச் சொற்கள்
26. மதிப்புரைமாலை
27. கேள்விச் செல்வம்
28. ஈ.வே.இரா. பெரியாருக்கு விடுத்த வெளிப்படை வேண்டுகோள்
29. பிறந்த நாட்செய்தி
11.பாவாணர் நோக்கில் பெருமக்கள்
1. மறைமலை யடிகளின் மும்மொழிப் புலமை
2. நாவலர் பாரதியார் நற்றமிழ்த் தொண்டு
3. நாவலர் சோமசுந்தர பாரதியாரின் நற்றமிழ்த் தொண்டு
4. பழந்தமிழ் புதுக்கும் பாரதிதாசன்
5. தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் தவப்பெருஞ் சிறப்பியல்புகள்
6. தமிழ் எழுத்து மாற்றம் தன்மானத் தந்தையார் கொள்கையா?
7. தமிழ்நாடு ஆளுநர் உயர்திரு.கே.கே.சா அவர்கட்குப் பாராட்டு
8. என் தமிழ்த் தொண்டு இயன்றது எங்ஙனம்?
9. ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு அடிப்படை எவர் பட்ட அரும்பாடு?
10. செந்தமிழ்ச் செல்விக்கு உட்கரணம் கெட்டதா?
11. வரிசை யறிதல்
12. மகிழ்ச்சிச் செய்தி
13. துரைமாணிக்கத்தின் உரைமாணிக்கம்!
14. வல்லான் வகுத்த வழி
15. தீர்ப்பாளர் மகாராசனார் திருவள்ளுவர்
16. திருவள்ளுவரும் பிராமணீயமும் - மதிப்புரை
12.பாவாணர் உரைகள்
1. மொழித் துறையில் தமிழின் நிலை
2. இயல்புடைய மூவர்
3. தமிழ்மொழியின் கலைச்சொல்லாக்கம்
4. தமிழ் வரலாற்றுத் தமிழ்க் கழக அமைப்பு - மாநாட்டுத் தலைமையுரை
5. பாவாணர் சொற்பொழிவு
6. தமிழின் தொன்மை
7. தமிழன் பிறந்தகம்
8. வ.சு. பவளவிழா
9. தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவை விழா
10. கலைஞர் நூல் வெளியீட்டு விழா
11. பாவாணர் இறுதிப் பேருரை
13. தேவநேயர் ஆக்கிய நூல்கள்
27. தமிழின் தலைமை நாட்டும் தனிச்சொற்கள் (1977) செந்தமிழ்ச் செல்வியில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு (தனி நூல் அல்ல)
28. திராவிடத்தாய் (1944, 1956) 112 பக்கங்கள்#. முன்னுரை, மலையாளம், கன்னடம், துளு, முடிவு ஆகிய 6 பாகமுடையது#.
30. தொல்#. எழுத்து - குறிப்புரை (1946)
31. தொல்#. சொல் - குறிப்புரை (1949)
34. பாவாணர் பாடல்கள், பாவாணர் பல்வேறு காலங்களில் இயற்றிய 320க்கும் மேலான பாடல்களை தொகுப்பசிரியர் இரா#. இளங்குமரன் தொகுத்து#.
35. பாவாணர் மடல்கள், பாவாணரின் கடிதங்கள் சுமார் 600ஐத் தொகுத்து 1988ல் வெளியானது#. தொகுப்பு#. இரா#. இளங்குமரன்#.#.
37. முதல்தாய்மொழி அல்லது தமிழாக்கவிளக்கம் (1953) 344 பக்கங்கள்#. குறிப்பொலிக் காண்டம், சுட்டெலிக் காண்டம் என இரு பகுதிகள் கொண்டது
43. The Lemurian Language and its Ramifications
பன்மொழிப் புலவர் மு.கு.ஜகந்நாதராஜா
பிறப்பு: 26.7.1933 இறப்பு: 2. 12. 2008
18.06.64 ஆம் ஆண்டு இராஜபாளையம் காந்தி கலைமன்றத்தில் தவத்திரு. குன்றக்குடி அடிகளாரால் பன்மொழிப்புலவர் என்னும் பட்டம் அளித்துச் சிறப்பிக்கப் பட்டவரே மு.கு.ஜகந்நாதராஜா. அக்காலத்தில் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்டவர். தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்க எத்தனையோ நல்லறிஞர்கள் பல்வேறு வகையிலும் தொண்டு செய்துள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகத் திகழ்ந்தார் மு.கு.ஜகந்நாதராஜா.
இவர் தானாகவே தெலுங்கு, மலையாளம், கன்னடம்,சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம், ஹிந்தி, ஆங்கிலம் முதலிய மொழிகளைக் கற்று அனைத்திலும் இலக்கிய, இலக்கணப் புலமை பெற்று கவி எழுதும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார்.
திருக்குறள், புறநானூறு, குறிஞ்சிப்பாட்டு முதலிய தமிழ் இலக்கியங்களைத் தெலுங்கிலும் (இவர் மொழிபெயர்த்த திருக்குறளையும், புறநானூற்றையும் தெலுங்கு பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கிறது), முத்தொள்ளாயிரம் நூலைத் தெலுங்கு,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஆக்கம் செய்து அவரே வெளியிட்டுள்ளார்.
பிராக்கிருத மொழிப் பேரிலக்கியம் "காதாசப்தசதி". இவ்விலக்கியத்தைக் குறுந்தொகை போலவே பாடல்களாக மொழியாக்கம் செய்துள்ளார். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்காக "தமிழும் பிராகிருதமும்" என்ற ஆய்வு நூல் எழுதினார்.
இவரைப் போல ஒரு பன்மொழி ஆய்வாளர், இலக்கிய அறிஞர்,தத்துவ மேதை, தென்னிந்தியாவிலேயே இல்லை என்று பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர். படைப்புலகப் பிதாமகன், பல எழுத்தாளர்களின் செவிலித்தாய், பலரையும் உருவாக்கிய பண்பாளர் என்றெல்லாம் பலவாறு பாராட்டப்பட்டவர்.
"ஆதர்ஸ் கில்ட் ஆப் இந்தியா" என்ற அமைப்பின் மாநாடுகள்,புதுதில்லி, லக்னெள, ஐதராபாத்து போன்ற நகரங்களில் நடந்தபோது,அங்கிருந்த தமிழ்ச் சங்கங்களில் பங்கேற்று பல ஆய்வுரைகளை நிகழ்த்தினார். இதனால் பல்கலைக் கழகங்கள் ஜகந்நாதராஜாவை அழைத்துச் சிறப்பித்தன.
இச்சிறப்புமிகு பன்மொழிப்புலவர் 1958ஆம் ஆண்டு, பூவம்மா என்பவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றார். அவர்களுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
"ஜகந்நாதராஜா இலக்கியத் தத்துவ ஆய்வு நூலகம்" என்ற பெயரில் இன்றும் அந்நூலகம் அவரது மருமகனார் டாக்டர் இராதாகிருஷ்ண ராஜாவால் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்நூலகத்தில் அனைத்து நூல்களும் இடம்பெற்றிருக்கும். இராமாயணம் எத்தனை மொழிகளில் வெளிவந்ததோ அவை அனைத்தையும் இந்நூலகத்தில் காணலாம். இந்நூலகத்தின் மூலம் தொடர்ந்து பல ஆய்வறிஞர்கள் பலன் பெற்றுச் செல்கின்றனர். 80க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி, குடியரசுத் தலைவர் பரிசு மற்றும் மலேசிய பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் போன்றவற்றைப் பெற்றுள்ளார் என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.
பன்மொழிப் புலவரின் படைப்புகளில் சில வருமாறு:
1. கற்பனைப் பொய்கை(கவிதைத் தொகுப்பு), 1972, விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்.
2. தரிசனம்(வசன கவிதை),1972, விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்.
3. காவிய மஞ்சரி(குறுங்காவியங்கள்), 1986, விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்.
4. சிலம்பில் சிறுபிழை(இலக்கியத் திறனாய்வு), 1968, விசுவசாந்தி பதிப்பகம்,
இராஜபாளையம்.
5. வான் கலந்த வாசகங்கள்(வானொலி உரை), 1980, மணிமேகலை மன்றம்,
இராஜபாளையம்.
6. தமிழும் பிராகிருதமும், 1992, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.
7. மணிமேகலை ( இவர் இராஜபாளையத்தின் மணிமேகலை மன்றத் தலைவர்), மணிமேகலைமன்றம், இராஜபாளையம்.
8. இந்திய மொழிகளின் ஒப்பிலக்கியம், 1994, நர்மதா பதிப்பகம்,
சென்னை.
9. வடமொழி வளத்துக்குத் தமிழரின் பங்கு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை .
10. தமிழக ஆந்திர வைணவத் தொடர்புகள், 2005, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
11. ஆபுத்திர காவியம்
12. தெரு புதுக் காவியம்
13. பிஞ்சுக் கரங்கள்
14. ராஜுக்கள் சரித்திரம்
15. திராவிட மொழிகளில் யாப்பியல்
16. கவித்தொகை
17. அறிவுக் கதம்பம் (வானொலி உரை), 1993, மணிமேகலை மன்றம், இராஜபாளையம்
மொழிபெயர்ப்புகள்
1. கன்யா சுல்கம், 1963, பாரி நிலையம், சென்னை.
2. சேரி , 1984, சாஹித்ய அகாடமி, டெல்லி
3. ஆமுக்த மால்யத, தெலுங்குப் பல்கலைக்கழகம், ஹைதராபாத்
4. வேமனா, 1992, பாரி நிலையம், சென்னை
5. களாபூரணோதயம் (தெலுங்கு காவியம்), தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு
6. சுமதி சதகம்
7. தேய்பிறை
8. கந்துகூரி வீரேசலிங்கம் கட்டுரைகள்
9. காதா சப்த சதி , 1981, விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்
10. வஜ்ஜாலக்கம் (பிராகிருத மொழி அறநூல்)2005, தமிழினி, சென்னை 14
11. கர்பூர மஞ்சரி (பிராகிருத மொழி நாடகம்)
12. சன்மதி சூத்திரம் (சமண தத்துவம்)
13. தீகநிகாயம் (பௌத்த தத்துவம்), சுந்தர நிலையம், சென்னை
14. உதானம் (பௌத்த தத்துவம்)
15. மிலிந்தா பண்ஹா (பௌத்த தத்துவம்) (மினாந்தரின் கேள்வி)
16. விக்ஞப்தி மாத்ரதா சித்தி (பௌத்த தத்துவம்)
17. ஔசித்ய விசாரசர்ச்சா வடமொழித் திறனாய்வு நூல், 1989, விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்
18. நாகானந்தம் - வடமொழி நாடகம் (1992, பீக்காக் பதிப்பகம், சென்னை
19. குந்தமாலா - வடமொழி நாடகம்
20. சாணக்ய நீதி வடமொழி நீதிநூல் 1986, விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்
21. சாருசர்யா வடமொழி நீதிநூல்
22. சாதன ரகசியம் - வேதாந்த நூல்அனுபவானந்த கிரந்தமாலா, பாபட்லா (ஆந்திரா)
23. சிவசரணர் வசனங்கள்
24. பம்ப்ப பாரதம் (கன்னட காவியம்)
25. பிரேம கீதம் - மலையாளக் கவிதை
26. மகாயான மஞ்சரி, 2007, பவுத்தக் கல்வி மையம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி
தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் வருமாறு:
1. சைல கீதமு (குறிஞ்சிப்பாட்டு), விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்
2. முத்யால ஹாரமு (முத்தொள்ளாயிரம்), விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்
3. பாரதி - சமகாலீன பாவமுலு, சாகித்ய அகாதமி
4. புண்யக்ஷேத்ராலு 1989, திருமுறைத்தலங்கள் வெளியீட்டுக்குழு, பெங்களூர்
5. திருக்குறள் தேடகீதுலு
6. தமிழ காவியாம்ருதம்
7. வெலி நாணூறு (புற நானூறு)
8. முத்தொள்ளாயிரம் (மலையாளம்)
9. முக்த ஹார (கன்னடம்)
பார்வை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன