சேர்த்து எழுதுதல் (Word Combining) ஒரு சொல்லாக்க நடைமுறை ஆகும்:
வரையறை:
பல்வேறு சொற்களை ஒன்றாகச் சேர்த்து புதிய சொல் உருவாக்கும் செயல்முறை
தனிப்பட்ட சொற்கள் இணைந்து ஒரே சொல்லாக மாறுதல்
நோக்கம்:
தமிழ்மொழிச் சொற்களைச் சேர்த்து எழுதும்பொழுது கவனிக்க வேண்டிய குறிப்புகள் வருமாறு;-
உயிர் + உயிர்
உயிர் + மெய்
மெய் + உயிர் (பெருமை + அழகு)
மெய் + மெய் (தேன் + துளி )
பெயர் + பெயர்
பெயர் + வினை
வினை + வினை
வினை + பெயர்
பெயர் + வேற்றுமை உருபு
பெயர் + பிற உருபு
விதி 1 - உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே (மெய் + உயிர் = உயிர்மெய்)
விதி 2 - உயிர் வரின் உக்குரல் மெய்விட்டோடும் (உயிர்மெய் = மெய் + உயிர், உயிர் கெடும்)
விதி 3 - வல்லினம் மிகுதல் (க், ச், த், ப்)
விதி 4 - தோன்றல் (மா + வ் + இலை = மாவிலை)
விதி 5 - திரிதல் (பக(ல்-ற்) + கனவு = பகற்கனவு)
ன் > ற், ற் > ன், ல் > ற், ஃ, ள் > ட், ஃ, ள் > ண், ழ் > ட், ண் > ட், ந் > ண், ன் > ந், த் > ற்
விதி 6 - கெடுதல் (மர(ம்) + கிளை = மரக்கிளை)
மகர ஈற்றுப் புணர்ச்சி
நிலைமொழியில் உள்ள மகர மெய் ஈற்றுச் சொற்கள், வருமொழியின் முதலில் வரும் உயிர், வல்லினம், மெல்லினம், இடையினம் என்னும் நாற்கணங்களோடு புணரும்போது, இறுதியில் உள்ள மகர மெய் கெட்டு (நீங்கி), உயிர் ஈறாய் நிற்கும். அவ்வாறு நிற்கும் உயிர் ஈற்றின் முன்னர், வருமொழி முதலில் உயிர்கள் வந்தால் அவை உடம்படுமெய் பெறும்; வல்லினம் வந்தால் வருகின்ற அவ்வல்லின எழுத்து மிகும்; மெல்லினமும் இடையினமும் வந்தால் அவை இயல்பாகும்.
வருமொழி முதலில் வல்லினம் வந்தால், ஈற்று மகரமெய் கெடாமல், வருகின்ற வல்லினத்திற்கு இனமான மெல்லெழுத்தாகத் திரியும். (நாம் + சிறியேம் = நாஞ்சிறியேம்)
விதி 1 - உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
விதி 2 - உயிர் வரின் உக்குரல் மெய்விட்டோடும்
ஈறு போதல் - வெண்மை + குடை = வெண்குடை
இடை உகரம் இய்யாதல் - பெருமை + அன் = பெரியன்
ஆதி நீடல் - பெருமை + ஊர் = பேரூர்
அடியகரம் ஐ ஆதல் - பசுமை + பொழில் = பைம்பொழில்
தன்னொற்று இரட்டல் - சிறுமை + ஊர் = சிற்றூர்
முன்னின்ற மெய் திரிதல் - வெம்மை + நீர் = வெந்நீர்
இனம் மிகல் - கருமை + கடல் = கருங்கடல்
சேர்த்து எழுதும் முறைக்குரிய சான்றுகள்.
நீர் + ஓட்டம் = நீரோட்டம்
நீர் - நிலைமொழி, ஓட்டம் - வருமொழி
காசு + ஓலை = காசோலை
ஏடு + கல்வி = ஏட்டுக்கல்வி
செம்மை + கதிர் = செங்கதிர்
நாடு + பற்று = நாட்டுப்பற்று
சமம் + வெளி = சமவெளி
தெற்கு + மேற்கு = தென்மேற்கு
பூ + சூடினாள் = பூச்சூடினாள்
ஈரம் + நிலம் = ஈரநிலம்
இளமை + வேனில் = இளவேனில்
இரண்டு + ஆயிரம் = இரண்டாயிரம்
பருவம் + மழை = பருவமழை
மா + இலை = மாவிலை
புறம் + நானூறு = புறநானூறு
மரம் + கிளை = மரக்கிளை
தமிழ் + சங்கம் = தமிழ்ச்சங்கம்
ஓடு + வீடு = ஓட்டுவீடு
பகல் + கனவு = பகற்கனவு
காற்று + ஓட்டம் = காற்றோட்டம்
மண் + குடம் = மட்குடம்
தொடக்கம் + உரை = தொடக்கவுரை
நன்மை + கொடை = நன்கொடை
மயில் + ஆட்டம் = மயிலாட்டம்
கருமை + கோழி = கருங்கோழி
பலா + சுளை = பலாச்சுளை
அவரை + காய் = அவரைக்காய்
நான்கு + மறை = நான்மறை
வான் + ஒலி = வானொலி
தங்கம் + வளையல் = தங்கவளையல்
குருவி + கூடு = குருவிக்கூடு
பட்டு +ஆடை = பட்டாடை
காது+அணி = காதணி
கால் + கொலுசு = கால்கொலுசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன