அறிமுகம்
‘விக்கிமூலம் என்பது விக்கிமீடியா அறக்கட்டளையால் இயக்கப்படும் இலவச மின் உள்ளடக்க நூலகமாகும். விக்கிமூலத்திட்டத்தை அக்டோபர் 2022 நிலவரப்படி, 72 மொழிகள் பயன்படுத்திக் கொண்டு வருகின்றன. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைத்து வகையான மூலநூல்களையும், பல மொழிகளிலும், மொழிபெயர்ப்புக்களிலும் வழங்குவதே ஆகும். முதலில் இத்திட்டம் பயனுள்ள அல்லது முக்கியமான வரலாற்று நூல்களைச் சேமிப்பதற்கான காப்பகமாகக் கருதப்பட்டது. இது பின்பு ஒரு பொது உள்ளடக்க நூலகமாக விரிவடைந்தது. இந்தத் திட்டம் அதிகாரப்பூர்வமாக நவம்பர் 24, 2003 அன்று புராஜெக்ட் சோர்ஸ்பெர்க் (Project Source Berg) என்ற பெயரில் தொடங்கப்பட்டது. விக்கிமூலம் என்ற பெயர் அந்த ஆண்டின் பிற்பகுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அது பின்பு களப்பெயராகவும் (Domain name) உருப்பெற்றது.
இந்தத் திட்டம் பொதுக்கள உரிமம் (Creative Commons License) பெற்ற படைப்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. காப்புரிமையுடன் வெளியிடப்பட்ட படைப்புகள் அல்லது வரலாற்றுச் சான்று ஆவணங்கள், பதிப்பகங்களின் வெளியீடுகள் போன்றன இதில் அடங்குவதில்லை. பிற எண்ணிம நூலகங்களின் (Digital Library) நம்பகத்தன்மையை நம்பி சரிபார்ப்பு, தொடக்கத்தில் முடக்கலையில் (Offline) செய்யப்பட்டது. இப்போது பணிகள் மெய்ப்புச் சரிபார்ப்புப் பக்கம் (Proofread Page) நீட்டிப்பு வழியாக இணைய எழுத்துணரியாக்கம் (OCR) மூலம் ஆதரிக்கப்படுகின்றன. இது திட்டத்தின் உரைகளின் நம்பகத்தன்மையையும் துல்லியத்தையும் உறுதி செய்கின்றது.
சில தனிப்பட்ட விக்கிமூலங்கள், ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட மொழியைக் குறிக்கின்றன. சான்றாக ta-தமிழ், ml-மலையாளம், te-தெலுங்கு, ka-கன்னடம், en-ஆங்கிலம் ஆகியவற்றைக் கூறலாம். இப்போது எழுத்துணரியாக்கம் (ஸ்கேன்) மூலம் மேம்பாடு செய்யப்பெறும் படைப்புகள் பொதுக்கள உரிமத்தில் உள்ளனவா எனப் பார்த்து அனுமதிக்கப்படுகின்றன. அதன் சேகரிப்பில் பெரும்பகுதி நூல்களாக இருந்தாலும், காமிக்சு முதல் திரைப்படம் வரையிலும், ஒலிப் புத்தகங்கள் வரையிலும், மற்ற ஊடகங்களையும் விக்கிமூலம் வழங்குகிறது. விக்கிமூலத்தின் குறிப்பிட்ட கொள்கைகளுக்கு உட்பட்டு, சில விக்கிமூலங்கள் பயனர் உருவாக்கிய சிறு குறிப்புகளை அனுமதிக்கின்றன. ஆனால் தேசிய ஆவணக் காப்பகங்கள், பதிவுகள், நிர்வாகம் போன்ற நிறுவனங்களால் மேற்கோள் காட்டப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது’’ (https://en.wikipedia.org/wiki/Wikisource, பார்வை நாள்-03.09.2022).
இத்தகு வரலாறு உடைய விக்கிமூலத்தின் ஒரு திட்டமாகிய தமிழ் விக்கிமூலத்தில் தொல்காப்பிய நூலின் மேம்பாட்டிற்குப் பயன் நல்கும் முறைகளையும் அதனால் ஏற்படும் ஆய்வுமுயற்சிகளையும் அறியத் தருவதாய் இக்கட்டுரை அமைகின்றது.
தொல்காப்பிய நூல் அட்டவணை
தமிழ் விக்கிமூலத்தில் பொருள் அடிப்படையில் அட்டவணைகள் எனும் பகுப்பின்கீழ் மொத்தம் 33 துணைப்பகுப்புகள் உள்ளன. அப்பகுப்புகள் வருமாறு:-
அகரமுதலி அட்டவணைகள் (1 பகு, 87 பக்.)
அரசியல் அட்டவணைகள் (3 பக்.)
அறிவியல் அட்டவணைகள் (27 பக்.)
இலக்கண அட்டவணைகள் (22 பக்.)
உரைநடை அட்டவணைகள் (6 பக்.)
கட்டுரை அட்டவணைகள் (37 பக்.)
கலைக்களஞ்சிய அட்டவணைகள் (48 பக்.)
கவிதை (4 பக்.)
கவிதை அட்டவணைகள் (51 பக்.)
கேள்வி பதில் அட்டவணைகள் (9 பக்.)
கோயில் அட்டவணைகள் (26 பக்.)
சிறுகதைகளுள்ள அட்டவணைகள் (44 பக்.)
சிறுவர் இலக்கிய அட்டவணைகள் (4 பக்.)
செவ்விலக்கியங்கள் (3 பக்.)
சைவ அட்டவணைகள் (6 பக்.)
சொற்பிறப்பியல் அகரமுதலி (3 பக்.)
சொற்பொழிவு அட்டவணைகள் (1 பக்.)
தமிழ் இலக்கிய அட்டவணைகள் (8 பகு, 42 பக்.)
தொகுப்புநூல் அட்டவணைகள் (1 பக்.)
தொல்காப்பிய அட்டவணைகள் (24 பக்.)
நாட்டுப்புறவியல் அட்டவணைகள் (8 பக்.)
நாடக அட்டவணைகள் (25 பக்.)
நாடக ஆசிரியர் அட்டவணைகள் (காலி)
நாடக ஆசிரியர்கள் அட்டவணை (1 பக்.)
நாடக ஆசிரியர்கள் அட்டவணைகள் (1 பக்.)
பாரதிதாசன் அட்டவணைகள் (5 பக்.)
பாரதியார் அட்டவணைகள் (22 பக்.)
புதின அட்டவணைகள் (20 பக்.)
மரபுக்கவிதை (1 பகு, 7 பக்.)
மானுடவியல் அட்டவணைகள் (2 பக்.)
மொழிபெயர்ப்பு அட்டவணைகள் (18 பக்.)
வரலாற்று அட்டவணைகள் (1 பகு, 85 பக்.)
வரலாற்று நூல் அட்டவணைகள் (1 பக்.)
இப்பகுப்புகள், தமிழ்மொழியின் இலக்கண, இலக்கிய வகைமைகளை அறிந்தவர்களால் உருவாக்கப்பெறவில்லை. மாறாகத் தன்னார்வம் கொண்ட பிற துறைப் பங்களிப்பாளர்களால் உருவாக்கப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பகுப்புகளுள் "தொல்காப்பிய அட்டவணைகள்" எனும் பகுப்பின்கீழ்ப் பின்வரும் 24 நூல்கள் ‘த’வரிசை நூல்களாகவே உள்ளன. அந்நூல்களின் விவரம் வருமாறு:-
அட்டவணை:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf
அட்டவணை:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf
அட்டவணை:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf
அட்டவணை:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf
அட்டவணை:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf
அட்டவணை:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf
இது ஒரு வகையிலான பட்டியல் என்றால், பழந்தமிழ் இலக்கணங்கள் எனும் பகுப்பின்கீழ், தொல்காப்பியம் பகுப்பு அமைந்துள்ளது. அதில் பின்வரும் அட்டவணை இடம்பெறுகின்றது.
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் (9 பக்.)
தொல்காப்பியம் சொல்லதிகாரம் (9 பக்.)
தொல்காப்பியம் பொருளதிகாரம் (9 பக்.)
இவற்றின் தனித்தனிப் பகுப்பிற்குள் இடம்பெறுவனவற்றைப் பின்ருமாறு பார்க்கலாம்.
இவை இயல் அடிப்படையிலான பகுப்புகள் ஆகும்.
தொல்காப்பியம் சார்ந்து வெளிவந்த நூல்கள் இவை மட்டும்தானா என்றால் இல்லை என்பது விடையாகக் கிடைக்கும். ஏனெனில் ஓலைச்சுவடிகள் தொடங்கி அதன் தரவுகள் கிடைக்கப்பெறுகின்றன. பல்வேறு பொருண்மைகளில் அதன் ஆய்வு முயற்சிகள் உள்ளன. இவை பெரும்பாலும் அச்சு வடிவங்களில் முடங்கிக் கிடக்கின்றன. அவற்றை மின்னாக்க வடிவமாகக் கொண்டு வருவது காலத்தின் தேவையாகும்.
தொல்காப்பிய அட்டவணை மேம்பாடு
தொல்காப்பியம் தமிழில் கிடைக்கப்பெறுகின்ற முதல் இலக்கணப் பனுவல். அதன் சிறப்பை இன்று அனைத்துத்துறை வல்லுநர்களும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் சிறப்பினைப் பின்வரும் கருத்துக்கள் தெளிவுபடுத்தும்.
மொழியைப் பற்றித் தொல்காப்பியர் கொண்டிருந்த கருத்து உலகில் மற்ற அறிஞர்கள் கொண்டிருந்த கருத்திலிருந்து பெரிதும் வேறுபட்டுள்ளது. அதனால்தான் இவருடைய இலக்கண அமைப்பும் இலக்கணம் எழுதிய முறையும் வேறுபட்டிருக்கிறது. தொல்காப்பியருடைய இலக்கணக் கோட்பாட்டில் உரையாடல்கூட இடம்பெறுகிறது. வினா விடைகள் இடம் பெறுகின்றன. வினா எப்படி அமைய வேண்டும் விடை எப்படி அமைய வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் தொல்காப்பியர் பேசுகிறார். வினாவிலும் விடையிலும் பிழைவராமல் காக்க ஒரு நூற்பாவை அமைக்கிறார். விடை சொல்லும்போது விடைக்குரிய செய்தியை மட்டும் கொடுத்தால் போதாது. வினாவுக்கு ஏற்றபடி விடை அமைப்பு அமைந்திருக்க வேண்டும். அண்ணாமலை நகர் எங்கே இருக்கிறது? என்று கேட்டால் பதில் நேராக அமைதல் வேண்டும். சுற்றி வளைத்துப் பேசக் கூடாது. உங்கள் பெயர் என்ன என்று கேட்டால் நேராக அமைதல் வேண்டும். சுற்றிவளைத்துப் பேசக்கூடாது. சில நேரங்களில் சில விதிவிலக்குகள் உண்டு. பொன்னி அரிசி இருக்கிறதா என்று கேட்டால், சீரக சம்பா இருக்கிறது என்று சொல்லுவது பிழையில்லை. இனமான பொருளைச் சொல்லு வதால் பிழையில்லை. நன்னூல் காண்டிகை படித்திருக்கிறீர்களா என்று கேட்டால் விருத்தியுரை படித்திருக்கிறேன் என்று சொன்னால் பிழையில்லை. இப்படியெல்லாம் எப்படிக் கேள்வி கேட்க வேண்டும். எப்படிப் பதில் சொல்ல வேண்டும் என்றெல்லாம் தொல்காப்பியர் கற்பித்திருக்கிறார்.
மொழியில் இவருடைய ஆய்வு மிகவும் நுணுகி நுணுகிப் போயிருக்கிறது." (பொற்கோ, ப.xiv)
இயற்கையில் உருவான மானிட உடல், தாவரங்கள், விலங்குகள் போன்றவைகளும் மானிடரால் உருவாக்கப்பட்ட சமூக அமைப்புகளும் தமக்கென ஓர் ஒழுங்கமைவையும் (system), அவற்றிற்குரிய துணை ஒழுங்கமைவுகளையும் (sub systems) கொண்டு அமைந்துள்ளன. மொழியின் அமை வொழுங்கு என்ன, அதன் துணை ஒழுங்கமைவுகள் என்ன என்பதில் மொழியியலாரிடையே கருத்துவேறுபாடுகள் உள்ளன. பல்வகை மொழியியல் சிந்தனைக்குழுவினரும் (schools of thought) மொழியின் அமைப்பை விளக்கப் பல்வகைத் துணை ஒழுங்கமைவுகளைக் கொண்ட விளக்க மாதிரிப் படிவங்களை (descriptive models) உருவாக்கியுள்ளனர். அமைப்புமுறை மொழியியலார் (structural linguistics) மொழி. ஒலியமைப்பு (phonetic structure), ஒலியனமைப்பு (phonological structure) உருபொலியனமைப்பு (morphophonemic structure), சொல்லமைப்பு (morphological structure), தொடர் அல்லது வாக்கிய அமைப்பு (syntactic structure) இவ்விரண்டையும் உட்கொண்ட இலக்கண அமைப்பு (grammatical structure), பொருண்மை அமைப்பு (Semantic structure) ஆகிய துணை ஒழுங்கமைவு களைக் கொண்ட மாதிரிப்படிவத்தை வகுத்தனர் (ஒ.நோ. Hocke. 1958, ch. 16). ஆனால் சாம்ஸ்கியால் உருவாக்கப்பட்ட மாற்றிலக்கண மொழியியல் (Transformational Generative approach அணுகுமுறை மொழியின் இலக்கணத்தை மூன்று பகுதிகளை (components) உடையதாகக் காட்டியது. தொடரியல் (Syntactic) பகுதியே மொழியமைப்பிற்கு இன்றியமையாத மையப்பகுதி (central component). ஒலியனியல் பகுதி (phonological component), பொருண்மையியல் பகுதி (semantic component) ஆகியவை தொடரியல் பகுதிக்கு உரிய விளக்கப்பகுதிகள் (interpretive components) என விளக்கியது (Chomsky, 1965). அமைப்புமுறை மொழியியலின் ஒலியமைப்பு, ஒலியனமைப்பு, உருபொலிய னமைப்பு ஆகிய மூன்றும் மாற்றிலக்கண முறையின் ஒலியனியல் பகுதிக்குள் அடக்கப்பட்டன. சொல்லமைப்பு, தொடரமைப்பு வேறுபாடுகள் ஒதுக்கப்பட்டு அவ்விரண்டும் தொடரமைப்பின் பகுதியாக ஆராயப்பட்டன. பொருண்மையியல் பகுதி தனித்தன்மை உடையதாகக் கருதப்படாமல் தொடரியல் பகுதியின் விதிகளால் உருவான வாக்கியங்களுக்குப் பொருள் விளக்கம் கூறும் பகுதியாக மட்டுமே உருவாக்கப்பட்டது. சாம்ஸ்கியின் மொழியமைப்புக் கொள்கையும் அவர் தொடர்ந்து எழுதிய நூல்களில் பல்வகை மாற்றங்களை அடைந்தது. இது மொழியின் முற்றமைப்பு இன்னும் முழுவதுமாகப் புரிந்து கொள்ளப்படவில்லை; புதிய ஆய்வுச் சிந்தனைகளுக்கும் மாதிரிப் படிவங்களுக்கும் இடமளிக்கும் வகையில் உள்ளது என்பதைக் காட்டுகின்றது. இக்கண்ணோடத்தில் தொல்காப்பியம் காட்டும் மொழி யமைப்பின் மாதிரிப் படிவம் என்ன? அது இன்றைய மொழியியலார் வகுக்கும் மாதிரிப் படிவங்களோடு ஒத்திருக்கிறதா? வேறுபடுகிறதா? அப்படிவத்தின் சிறப்பு என்ன என ஆராய்வது தொல்காப்பியத்தின் சிறப்பையும் தொல்காப்பியம் காட்டும் தமிழ் மொழியியல் சிந்தனையின் பெருமையையும் உணர்ந்துகொள்ளத் துணைபுரியும்" (க. பாலசுப்பிரமணியன், பக்.177 - 179).
மேற்கூறிய கருத்துக்கள் தொல்காப்பியத்தை மொழியியல் அடிப்படையில் ஆய்வு செய்தவர்களாகிய பொற்கோ, க.பாலசுப்பிரமணியன் ஆகியோர் கூறியவை. இவைபோன்ற சிந்தனைகள் அச்சு நூல்களிலேயே முடங்கிவிடக் கூடாது என்பதற்காகவும், தொல்காப்பியப் பனுவலின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவும், தொடர்ந்து பல ஆய்வுகள் தொல்காப்பியப் பனுவலில் நிகழ்த்தவும், குறிப்பாக இயற்கை மொழி ஆய்வுகள் நிகழ்த்துவதற்கான தரவு மேம்பாட்டிற்காகவும் அக்கருத்துக்கள் வலிமை சேர்க்கும் என்பதால் வலியுறுத்தப்பெற்றன. தொல்காப்பிய அட்டவணை கொண்டிருக்க வேண்டிய உள்ளடக்கங்களைப் பின்வருமாறு கட்டமைக்கலாம். இந்தக் கட்டமைப்பு விக்கிமூலத்தில் பங்களிப்புச் செய்யும் பிற 72 மொழிகளுக்கும் பயன்படும் நோக்கிலும் எடுத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓலைச்சுவடிகளில் தொல்காப்பியம்
மூல நூற்சுவடிகள்
உரை நூற்சுவடிகள்
அச்சு நூல்களில் தொல்காப்பியம்
மூலநூல்
உரைநூல்
பழைய உரைகள்
உரைவளம்
தற்கால உரைகள்
ஆய்வுநூல்
இந்திய மொழி ஒப்பீடு-ஒப்பாய்வு
அயல்மொழிமொழி ஒப்பீடு - ஒப்பாய்வு
திராவிட மொழி ஒப்பீடு-ஒப்பாய்வு
தமிழ் இலக்கிய, இலக்கணங்களுக்கிடையே ஒப்பீடு-ஒப்பாய்வு
கோட்பாட்டாய்வு
எழுத்து
சொல்
பொருள்
இவ்வாறான வகைப்பாடு காலத்திற்கு ஏற்றதாகும். இருக்கக் கூடிய தொல்காப்பிய அட்டவணைகளை வகைப்படுத்திப் பார்க்கும்பொழுது பின்வருமாறு வகைப்பாடு அமைகின்றது.
இந்தப் பகுப்பில் மொத்தம் 3 துணைப்பகுப்புகள் இடம்பெறுகின்றன.
அச்சு நூல்களில் தொல்காப்பியம் (2 பகு)
உரைநூல் (1 பகு)
பழைய உரை (1 பகு, 7 பக்.)
அட்டவணை:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம் - நச்சினார்க்கினி - மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf
அட்டவணை:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf
அட்டவணை:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf
அட்டவணை:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf
அட்டவணை:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf
அட்டவணை:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf
அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf
பழைய உரை (1 பகு, 7 பக்.)
ஆய்வு நூல் (9 பக்.)
அட்டவணை:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf
அட்டவணை:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf
அட்டவணை:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf
அட்டவணை:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf
அட்டவணை:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf
அட்டவணை:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf
அட்டவணை:தொல்காப்பியம் வரலாறு.pdf
அட்டவணை:தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு.pdf
அட்டவணை:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf
உரைவளம் (8 பக்.)
அட்டவணை:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf
அட்டவணை:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf
அட்டவணை:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf
அட்டவணை:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf
அட்டவணை:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf
அட்டவணை:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf
அட்டவணை:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf
அட்டவணை:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf
தொல்காப்பிய நூல் மேம்பாட்டினால் ஏற்படும் விளைவுகள்
விக்கிமூலம் கல்விசார் வளங்களை மேம்படுத்தி வரும் கட்டற்ற தளமாக இருப்பதனால் தமிழில் இயற்கை மொழி சார்ந்த ஆய்வுகள் நிகழ்வதற்குப் பெருந்துணைநல்கும். அவ்வாய்வு மட்டுமின்றி உலகப் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் ஆய்வுகள் நிகழ்த்த இத்தளம் ஒரு நூலகமாகவும் செயல்படும். மேலும் இதனால் விளையும் பயன்களை,
தொல்காப்பிய ஆய்வுகள் தொடர்ந்து நிகழ
இந்திய மொழிகளின் இலக்கண ஆய்வுகள் எளிதில் நடைபெற
உலக மொழிகளின் இலக்கண ஆய்வுகள் எளிதில் நடைபெற
இயற்கை மொழி ஆய்வுகளுக்கான தரவுகள் கிடைத்திட
விக்சனரி திட்டங்களில் தொல்காப்பியச் சொற்களை ஏற்படுத்த
விக்கித்தரவில் சேர்க்க
விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் உருவாக்க
தொல்காப்பியத் தகவல் பெறுவி கருவியை உருவாக்க
தொல்காப்பியம் குறித்த மென்பொருள் உருவக்க
தொல்காப்பியக் கற்றல் கற்பித்தல் கருவிகளை வடிவமைக்க
என அறியலாம்.
நிறைவாக…
இதுவரை விளக்கப்பெற்றதின் அடிப்படையில் பார்க்கும் பொழுது ஆங்காங்கு நடைபெறும் தொல்காப்பிய ஆய்வுகளை ஓரிடத்தில் குவித்து வைக்கும் ஒரு கருவூல நூலகமாகத் தமிழ் விக்கிமூலம் அமையும் என்பதை உணர முடிகின்றது. இது நடக்கும்பொழுது 74 விக்கிமூலத் திட்டங்களுக்கெல்லாம் முன்னோடித் திட்டமாகத் தமிழ் விக்கிமூலத்திட்டம் அமையும்.
துணைநின்றவை
https://storage.googleapis.com/inamtamil-cdn/Articles/inamtamil-cdn-data/Issue%2025/Sathiyaraj.pdf
பைத்தான் - https://ta.wikipedia.org/s/112
hub.paws.wmcloud.org/user/Neyakkoo/lab
Hegde, S. U., Hande, A., Priyadharshini, R., Thavareesan, S., Sakuntharaj, R., Thangasamy, S., ... & Chakravarthi, B. R. (2021). Do Images really do the Talking? Analysing the significance of Images in Tamil Troll meme classification. arXiv preprint arXiv:2108.03886.
சத்தியராஜ் தங்கச்சாமி. (2021). மொழி, ஓர் அமைப்பொழுங்கு அணுகுமுறையில் தொல்காப்பிய எழுத்ததிகார நூன்மரபு: Ilakkaṇaviyal aṇukumuṟaiyil tolkāppiya eḻuttatikāra nūṉmarapu. இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies), 7(28), 58-71.
விக்கிமூலம் - பைவிக்கிமூலம் - https://ta.wikipedia.org/s/5ety
https://beginnersbook.com/2019/06/python-user-defined-functions/
எழில் நிரலாக்க மொழி - https://ta.wikipedia.org/s/27xm
ஸ்வரம் நிரலாக்க மொழி - https://ta.wikipedia.org/s/27v2
நிரலாக்கம் தலைப்புப் பட்டியல் - https://ta.wikipedia.org/s/6x3
கணினியில் தமிழ் - https://ta.wikipedia.org/s/5v8
வலைவாசல் - தமிழ்க்கணிமை - https://ta.wikipedia.org/s/3v8
விக்கிமூலம்:பைத்தான்3நிரல்கள்/இருபக்கங்களில் பிரிந்த சொல்லிணைப்பு
விக்கிமூலம்:பைத்தான்3நிரல்கள்/பொருளடக்கமில்லா நூலின் துணைபக்கங்களை உருவாக்குதல்
விக்கிமூலம்:பைத்தான்3நிரல்கள்/முயற்சி/பிரிந்த சொற்களை இணைத்தல்
விக்கிமூலம்:பைத்தான்3நிரல்கள்/API/பகுப்புப் பக்கங்களை எடுத்தல்
கட்டுரையாளர்கள்
சத்தியராஜ் தங்கச்சாமி | Sathiyaraj Thangasamy
முனைவர் தனலட்சுமி வ. | Dr. Dhanlakshmi V.
முனைவர் இரா. நித்யா | Dr. R. Nithya
தகவலுழவன் | Thagavaluzhavan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன