பிரித்து எழுதுதல் (Word Splitting) ஒரு சொல்லாக்க நடைமுறை ஆகும்:
பொருள் (அர்த்தம்):
ஒரு சொல்லை அதன் அடிப்படைத் தகுதிகளாகப் பிரிப்பது
இரண்டு அல்லது மேற்பட்ட வார்த்தைகள் சேர்ந்து உருவாகும் சொற்றொடரைப் பகுப்பாய்வு செய்தல்
நோக்கம்:
சொல்லின் மூல இடம், உள்ளடக்கத்தைப் புரிந்துக்கொள்ளல்
சொல்லின் தோற்றத்தை அறிதல்
சொல் உருவாக்கத்தின் இயல்பைப் புரிந்துக்கொள்ளல்
முறைகள்:
சொல்லை இரண்டு அல்லது மேற்பட்ட சொற்களாகப் பிரித்தல்
ஒவ்வொரு பகுதியின் அர்த்தத்தையும் தனித்தனியே கண்டறிதல்
அடிப்படைச் சொற்கள், இணைப்புக் கூறுகளைக் கண்டறிதல்
தமிழ்மொழிச் சொற்களைப் பிரித்து எழுதும்பொழுது கவனிக்க வேண்டிய குறிப்புகள் வருமாறு;-
உயிர் + உயிர்
உயிர் + மெய்
மெய் + உயிர் (பெருமை + அழகு)
மெய் + மெய் (தேன் + துளி )
பிரித்து எழுதும் முறைக்குரிய சான்றுகள்.பெயர் + பெயர்
பெயர் + வேற்றுமை உருபு
பெயர் + பிற உருபு
பெயர் + வினை
வினை + வினை
வினை + பெயர்
பெயர் + க், ச், த், ப் + பெயர் (முல்லைக்கொடி)
தேன்துளி = தேன் + துளி
பேரழகு = பெருமை + அழகு
முல்லைக்கொடி = முல்லை + கொடி
பன்னிரண்டு = பத்து + இரண்டு
ஆற்றுநீர் = ஆறு + நீர்
வெண்சங்கு = வெண்மை + சங்கு
பிறப்பிறப்பு = பிறப்பு + இறப்பு
வாழைப்பழம் = வாழை + பழம்
உழுதுண்டு = உழுது + உண்டு
பொருட்காட்சி = பொருள் + காட்சி
செந்தமிழ் = செம்மை + தமிழ்
வளநாடு = வளமை + நாடு
கற்கோவில் = கல் + கோவில்
நூற்றாண்டு = நூறு + ஆண்டு
பொற்கோவில் = பொன் + கோவில்
மாட்டுவண்டி = மாடு + வண்டி
கற்றூண் = கல் + தூண்
ஓட்டுவீடு = ஓடு + வீடு
நான்கிலக்கம் = நான்கு + இலக்கம்
மரக்கிளை = மரம் + கிளை
மரப்பலகை = மரம் + பலகை
மூவாயிரம் = மூன்று +ஆயிரம்
நவதானியங்கள் = நவம் + தானியங்கள்
நீலக்கடல் = நீலம் + கடல்
முத்துப்பல் = முத்து + பல்
கைக்கடிகாரம் = கை + கடிகாரம்
பூச்செடி = பூ + செடி
கரும்புத்தோட்டம் = கரும்பு + தோட்டம்
முத்தமிழ் = மூன்று + தமிழ்
படைத்தலைவன் = படை + தலைவன்
முழுப்பக்கம் = முழுமை + பக்கம்
அறியாப்பிள்ளை = அறியா + பிள்ளை
தீப்புகை = தீ + புகை
பாடநூல் = பாடம் + நூல்
ஐந்நிலம் = ஐந்து + நிலம்
வாழைத்தண்டு = வாழை + தண்டு
மனமுவந்து = மனம் + உவந்து
இளவரசன் = இளமை + அரசன்
அன்புள்ளம் = அன்பு + உள்ளம்
நன்னெறி = நன்மை + நெறி
தேமதுரம் = தேன் + மதுரம்
நல்லேடு = நன்மை + ஏடு
கனியமுதம் = கனி + அமுதம்
புற்பயிர் = புல் + பயிர்
மேற்பக்கம் = மேல் + பக்கம்
செஞ்சுடர் = செம்மை + சுடர்
காதணி = காது + அணி
பட்டாடை = பட்டு +ஆடை
கால்கொலுசு = கால் + கொலுசு
குயிலாட்டம் = குயில் + ஆட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன