ஆய்வு அறிக்கை தயாரித்தல் (Preparing a Complete Research Report)
தலைப்புப் பக்கம் முதல் பின்னிணைப்புகள் வரை — அனைத்துப் பகுதிகளையும் ஒருங்கிணைத்து, நிலைத்தன்மையுடன் (Consistency) சர்வதேசத் தரத்தில் ஆய்வு அறிக்கையை வடிவமைத்தல்.
📘 55.0 அறிமுகம்
ஆய்வின் இறுதிப் படிநிலை, இதுவரை நாம் உருவாக்கிய அனைத்துப் பகுதிகளையும் ஒருங்கிணைத்து ஒரு முழுமையான ஆய்வு அறிக்கையை (Research Report) வடிவமைப்பதாகும். தலைப்புப் பக்கம், பொருளடக்கம், அலகுகள், அட்டவணைகள், விளக்கப்படங்கள், மேற்கோள்கள், பின்னிணைப்புகள் ஆகியவை முறையான வரிசையில் அமைக்கப்பட வேண்டும். செய்யறிவு (AI) இந்த இறுதிக் கட்டப் பணிகளிலும் ஒரு சிறந்த துணையாக அமைகிறது.
📊 55.1 ஆய்வு அறிக்கையின் (Research Report) கட்டமைப்பு
| பகுதி | விளக்கம் |
|---|---|
| 1. தலைப்புப் பக்கம் (Title Page) | ஆய்வின் தலைப்பு, ஆசிரியரின் பெயர், நிறுவனம், துறை, தேதி. |
| 2. சுருக்கம் (Abstract) | ஆய்வின் சுருக்கமான சாராம்சம் (200-250 வார்த்தைகள்). |
| 3. பொருளடக்கம் (Table of Contents) | அனைத்துப் பகுதிகள் மற்றும் உட்பிரிவுகளின் பட்டியலும், பக்க எண்களும். |
| 4. படங்கள், அட்டவணைகளின் பட்டியல் | அறிக்கையில் உள்ள அனைத்து விளக்கப்படங்கள், அட்டவணைகளின் பட்டியல். |
| 5. அறிமுகம் (Introduction) | ஆய்வின் பின்னணி, ஆய்வுச் சிக்கல், நோக்கங்கள், கேள்விகள். |
| 6. இலக்கியத் தேடல் (Literature Review) | முன்னைய ஆய்வுகளின் மதிப்பாய்வு. |
| 7. முறைமை (Methodology) | ஆய்வு முறை, தரவு சேகரிப்பு முறை, பகுப்பாய்வு முறை. |
| 8. முடிவுகள் (Results) | தரவுப் பகுப்பாய்வின் முடிவுகள் (அட்டவணைகள், விளக்கப்படங்கள்). |
| 9. விவாதம் (Discussion) | முடிவுகளின் விளக்கம், முன்னைய ஆய்வுகளுடன் ஒப்பீடு. |
| 10. முடிவு (Conclusion) | ஆய்வின் முக்கிய முடிவுகள், வரம்புகள், எதிர்கால ஆய்வுக்கான பரிந்துரைகள். |
| 11. மேற்கோள்கள் (References) | ஆய்வில் பயன்படுத்தப்பட்ட அனைத்து ஆதாரங்களின் பட்டியல். |
| 12. பின்னிணைப்புகள் (Appendices) | கூடுதல் தகவல்கள் (கணக்கெடுப்புப் படிவங்கள், தரவுத் தொகுப்புகள்). |
⚙️ 55.2 செய்யறிவு உதவியுடன் ஆய்வு அறிக்கையைச் செம்மையாக்குதல் (Refining) – 4 படிகள்
“நான் பதிவேற்றியுள்ள ஆய்வு அறிக்கையின் வரைவைப் பகுப்பாய்வு செய்து, பின்வரும் செய்திகளைச் சரிபார்த்துத் தருக:
• கட்டமைப்பு (Structure): Title, Abstract, Introduction, Methodology, Results, Discussion, Conclusion, References வரிசையில் உள்ளதா?
• நிலைத்தன்மை (Consistency): எழுத்துரு நடை, இடைவெளி, தலைப்பு நிலைகள் ஒரே மாதிரியாக உள்ளனவா?
• மொழி நடை (Language Tone): முழு அறிக்கையும் Academic Tone-இல் உள்ளதா?
• மேற்கோள்கள் (References): In-text citations அனைத்தும் References-இல் உள்ளனவா?
• படங்கள், அட்டவணைகள்: உரிய தலைப்புகளும் (Captions) எண்களும் வழங்கப்பட்டுள்ளனவா?
ஒவ்வொரு பகுதிக்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைக்கவும்.”
📌 55.3 செய்யறிவு உதவியுடன் பொருளடக்கம் (Table of Contents) உருவாக்குதல்
ஆய்வுச் சுருக்கம் ........................................................... i
1. அறிமுகம் ................................................................ 1
1.1. ஆய்வின் பின்னணி ............................................... 2
1.2. ஆய்வுச் சிக்கல் ...................................................... 4
2. இலக்கிய மீளாய்வு ................................................... 10
3. ஆய்வு முறைமை ....................................................... 25
4. தரவுப் பகுப்பாய்வு முடிவுகள் .................................... 40
5. கலந்துரையாடல், முடிவுரை ....................................... 60
6. மேற்கோள் பட்டியல் ................................................. 75
7. பின்னிணைப்புகள் ..................................................... 80
✍️ 55.4 பயிற்சி 35 – ஆய்வு அறிக்கையின் வரைவைச் செப்பனிடுதல்
📋 வழிமுறை:
- உங்கள் ஆய்வுக் கட்டுரையின் அனைத்துப் பகுதிகளையும் (அறிமுகம் முதல் மேற்கோள் பட்டியல் வரை) ஒருங்கமைத்து Word/PDF கோப்பாகத் தயார் செய்க.
- ChatGPT Plus / Claude-இல் அந்தக் கோப்பைப் பதிவேற்றுக.
- மேலே உள்ள Prompt Template-ஐப் பயன்படுத்தி AI-யிடம் கட்டமைப்பு, நிலைத்தன்மை, மொழி நடை, மேற்கோள்கள், படங்கள்/அட்டவணைகளைச் சரிபார்க்கக் கோருக.
- AI சுட்டிக்காட்டும் பரிந்துரைகளைப் பட்டியலிட்டு, Word கோப்பில் திருத்தங்களைச் செய்க.
- இறுதி அறிக்கையை PDF ஆகச் சேமிக்கவும்.
📌 55.5 இறுதியாக
ஆய்வு அறிக்கை என்பது கடின உழைப்பின் ஒட்டுமொத்தப் பிரதிபலிப்பாகும். செய்யறிவின் உதவியுடன் அதனைச் செப்பனிடுவது, ஒரு சிற்பத்தைச் செதுக்கி மெருகூட்டுவதைப் போன்றதாகும். செய்யறிவு ஓர் அறிவுசார் “தொகுப்பு உதவியாளராக” (Synthesis Assistant) செயல்பட்டு, எழுதப்பெறும் அறிக்கை எவ்விதக் குறைபாடுமின்றிச் சர்வதேசத் தரத்தில் அமைவதை உறுதி செய்கிறது.
🎯 இப்பாடத்தில் நாம் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்துகள்
- முழுமையான ஒருங்கிணைப்பு: ஆய்வின் பல்வேறு கூறுகளைத் தர்க்க அடிப்படை வரிசையில் கோத்து ஒரு முழுமையான ஆவணமாக மாற்றுதல்.
- நிலைத்தன்மை (Consistency): அறிக்கை முழுவதிலும் ஒரே மாதிரியான எழுத்து நடை, கலைச்சொல் பயன்பாடு, வடிவமைப்பைப் பேணுதல்.
- AI பகுப்பாய்வு: மனிதக் கண்களுக்குத் தப்பிக்கும் சிறிய பிழைகளையும் (In-text citations, Table captions) AI மூலம் கண்டறிந்து சரிசெய்தல்.
- தொகுப்புக் கலை: “எட்டுத்தொகை” முதல் நவீன ஆய்வு வரை செய்திகளை முறைப்படத் தொகுப்பதன் அவசியம்.
- இலக்கிய இணைப்பு: “தொகுப்பு மரபு” — சிதறிய அறிவைத் திரட்டிச் சமூகத்திற்குப் பயன்படும் வகையில் முழுமையான நூலாக (ஆய்வு அறிக்கையாக) மாற்றுதல்.
📋 வழிமுறை:
- உங்கள் ஆய்வுத் தலைப்பைத் தெளிவாக வரையறுக்கவும்.
- சுருக்கத்தை உருவாக்குதல் (நாள் 51): ஆய்வின் நோக்கம், முறைமை, முடிவுகள், தாக்கம் ஆகியவற்றைத் தொகுத்துச் செய்யறிவிடம் (ChatGPT/Gemini) 200-250 சொற்களுக்குள் ஒரு கல்விசார் ஆய்வுச் சுருக்கத்தை உருவாக்கக் கோரவும்.
- 5 நூல்களைத் தேர்வு செய்தல்: ஆய்வுத் தலைப்பிற்குத் தொடர்புடைய 5 முக்கிய கட்டுரைகளைத் தேர்வு செய்க (Elicit, Consensus, Research Rabbit மூலம்).
- மேற்கோள்களை உருவாக்குதல் (நாள் 53): ஒவ்வொரு நூலின் DOI அல்லது URL-ஐச் செய்யறிவிடம் வழங்கி, APA 7th edition வடிவமைப்பில் மேற்கோளை உருவாக்கச் சொல்லவும்.
நோக்கம், முறைமை, முடிவுகள், தாக்கம் — 200-250 சொற்கள்.
தமிழ் → ஆங்கிலம், கலைச்சொற்கள் பாதுகாப்பு, Academic Tone.
Zotero/Mendeley + AI, DOI→APA/BibTeX, இறக்குமதி.
சாதாரண நடை → கல்விசார் நடை, பொருள் மாறாமல்.
12 பகுதிகள் ஒருங்கிணைப்பு, Consistency, AI சரிபார்ப்பு.
“உரைச் சிறப்பு”, “தொகுப்பு மரபு”, “ஆன்றோர் மொழி”.
🎥 காணொளி வழிகாட்டி: ஆய்வு அறிக்கை தயாரித்தல் (Research Report)
12-பகுதி கட்டமைப்பு, AI-யுடன் செம்மையாக்கம், பொருளடக்கம், வாரத் தேர்வு விளக்கம்.