📜 தொல்காப்பியம்
தமிழின் முதல் இலக்கண நூல் | முழுமையான பாயிரமும் அதிகாரங்களும்

✨ சிறப்புப்பாயிரம் ✨

வட வேங்கடம் தென் குமரி
ஆயிடைத்
தமிழ் கூறும் நல் உலகத்து
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத்தோனே போக்கு அறு பனுவல்
நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி
மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்
பல் புகழ் நிறுத்த படிமையோனே.
📖 மூன்று அதிகாரங்கள்
📝 எழுத்ததிகாரம்
எழுத்தின் பிறப்பு, புணர்ச்சி, மயக்கம்
🗣️ சொல்லதிகாரம்
பெயர், வினை, இடை, உரி, வேற்றுமை
🌿 பொருளதிகாரம்
அகம், புறம், களவு, கற்பு, உவமம், செய்யுள்
▎எழுத்ததிகாரம்
நூல் மரபுமொழி மரபுபிறப்பியல்புணரியல் தொகை மரபுஉருபியல்உயிர் மயங்கியல்புள்ளி மயங்கியல் குற்றியலுகரப் புணரியல்
▎சொல்லதிகாரம்
கிளவியாக்கம்வேற்றுமையியல்வேற்றுமை மயங்கியல்விளி மரபு பெயரியல்வினையியல்இடையியல்உரியியல் எச்சவியல்
▎பொருளதிகாரம்
அகத்திணையியல்புறத்திணையியல்களவியல்கற்பியல் பொருளியல்மெய்ப்பாட்டியல்உவமயியல்செய்யுளியல் மரபியல்

⚜️ “தொல்காப்பியம் — தமிழின் தொன்மை வேரும், இலக்கணக் காவலும்” ⚜️