சங்க இலக்கியத் தகவல்கள்: ஒரு முழுமையான கையேடு
▼ மேலும் வாசிக்க
1. சங்க இலக்கிய அறிமுகம்
- சங்க இலக்கியத்திற்குப் பதினெண் மேற்கணக்கு என்ற பெயரும் உண்டு. 'கணக்கு' என்பதற்கு நூல் அல்லது அறம் என்று பொருள்.
- சங்க நூல்கள் என்று முதலில் சொன்னவர் களவியல் உரையாசிரியர் நக்கீரர்.
- சங்க இலக்கியத்தைச் 'சான்றோர் செய்யுட்கள்' என்று அழைத்தவர் தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியர்.
- சங்க காலத்தில் இருந்த எழுத்து முறைக்குத் 'தமிழி' (தமிழ்-பிராமி) என்று பெயர்.
2. எட்டுத்தொகை நூல்கள்
- எட்டுத்தொகையுள் அக நூல்கள் ஐந்து (நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு).
- புற நூல்கள் இரண்டு (பதிற்றுப்பத்து, புறநானூறு). அகமும் புறமும் கலந்த நூல் ஒன்று (பரிபாடல்).
- நற்றிணை: பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதியால் தொகுப்பிக்கப்பட்டது.
- பதிற்றுப்பத்து: சேர அரசர்கள் பத்துப் பேரைப் பற்றிப் பாடும் நூல். இதில் பாடலால் பெயர்பெற்ற புலவர்கள் அதிகம்.
- அகநானூறு: களிற்றியானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக் கோவை என மூன்று பிரிவுகளைக் கொண்டது.
3. பத்துப்பாட்டுத் தகவல்கள்
- பத்துப்பாட்டில் சிறிய நூல் முல்லைப்பாட்டு (103 அடிகள்), பெரிய நூல் மதுரைக்காஞ்சி (782 அடிகள்).
- திருமுருகாற்றுப்படை: நக்கீரரால் முருகப் பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது.
- குறிஞ்சிப்பாட்டு: ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழின் சிறப்பை உணர்த்தக் கபிலரால் பாடப்பட்டது. இதில் 99 பூக்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
- மலைபடுகடாம்: இதற்கு 'கூத்தராற்றுப்படை' என்ற வேறு பெயரும் உண்டு. இசைக் கருவிகள் பற்றி அதிகம் கூறுகிறது.
4. சங்க காலப் புலவர்கள்
- கபிலர்: குறிஞ்சி பாடுவதில் வல்லவர். பாரி வள்ளலின் நண்பர். 'புலன் அழுக்கற்ற அந்தணாளன்' எனப் புகழப்படுபவர்.
- ஒளவையார்: அதியமானுக்காகத் தொண்டைமானிடம் தூது சென்றவர். இவருக்கு அதியமான் 'அரிய நெல்லிக்கனி'யை வழங்கினார்.
- பரணர்: சங்க இலக்கியத்தில் வரலாற்றுச் செய்திகளை மிக அதிகமாகப் பாடிய புலவர் இவராவார்.
துணைநூற்பட்டியல்
இந்தக் கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் கீழ்க்கண்ட நூலினை ஆதாரமாகக் கொண்டவை:
- முனைவர் தேவிரா, தமிழ் இலக்கியத் தகவல் களஞ்சியம், (பகுதி: சங்க இலக்கியத் தகவல்கள்), ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை.