தமிழும் தெலுங்கும் உறவுடைய மொழிகள். திராவிடத்திலிருந்து இவ்விரண்டும் பிரிந்தது என்பது அறிஞர்கள் கருத்து. திராவிடர் என்றாலே அது தமிழர் எனக் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் அறிஞர்கள் பார்வையில் இருந்து வருகிறது. தமிழர்தம் பார்வையில் திராவிடர் என்றால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை உள்ளடக்கியதாக உள்ளது. அது இருக்கட்டும் ஆய்வாளர் ஆ.ஈஸ்வரன் ஆய்வியல் நிறைஞர் பட்டம், முனைவர் பட்டம் ஆகிய ஆய்வுகளை மேற்கொள்ளும் காலத்தும் அதன் பின்பும் மேற்கொண்ட ஆய்வுகளை ஒரு பொருண்மை கருதி ‘தெலுங்கு - தமிழ் ஒப்பீட்டுக் கட்டுரைகள் (உறவுநிலை - இலக்கியம் – நூலாய்வு) எனும் தலைப்பில் தொகுத்து நூலாக்கியுள்ளார். இம்முயற்சி வரவேற்கத் தக்கதும் பாராட்டுக்குரியதும் ஆகும். அது நிற்க.
மாத இதழ். இதில் கவிதை, கட்டுரை, தமிழியல், சிறுகதை, புதினம், வரலாறு, தொல்லியல் எனப் பல்துறை சார்ந்தும் கருத்துக்கள் இடம்பெறும். Monthly Journal. It features a wide range of concepts including poetry, essay, Tamil, short story, novel, history and etc.
தெலுங்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தெலுங்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 2 ஜூன், 2020
வெள்ளி, 19 டிசம்பர், 2014
தொல்காப்பியம் (தமிழ்) – பாலவியாகரண (தெலுங்கு) ஒட்டுக்களின் உறவு
- முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ)
ஒட்டு என்பது ஓர் அடிச்சொல்லின் பின்னரோ அல்லது ஒரு முழுச் சொல்லின் பின்னரோ இணைந்து புதிய பொருளைத் தோற்றுவிப்பது அல்லது புதிய பொருள் ஏற்படுவதற்கு வித்திடுவது. காட்டாக, கவி+அர்=கவிஞர் என்பதைச் சுட்டலாம். இதனுள் கவி என்பது பாட்டு (Poem), பாவலன் (Poet), ஞானி (Sage), குரங்கு (Monkey) (2005:238) என்ற பொருண்மைகளுடைத்து. அச்சொல் ஓர் அடிச்சொல் வகைத்து. அச்சொல்லுடன் அர் எனும் பலர்பால் ஈறு ஒட்ட இடையில் ஞ் எனும் மெய் தோன்றி கவிஞர் எனும் புதியச் சொல்லையும் பொருளையும் தருகின்றது. அச்சொல் கவிதை எழுதும் ஆடவரையோ அல்லது பெண்டிரையோ குறிக்கும் பொதுச்சொல்லாயிற்று.
பொதுவாக, மொழியியலார் முன், பின், உள், மேல் ஆகிய ஒட்டுக்கள் இவ்வுலகில் வழங்கப்பெறும் மொழிகளில் காணப்படுகின்றன என்பர். இவற்றுள் முன்னொட்டு (Prefix) கொடைமொழிச் சொற்கள் கொள்மொழிக்குக் கடனாளப்படும் போது நிகழும் (காண்க: ராம: - இராமன்) தன்மையது. உள்ளொட்டு (Infix – அடிச்சொல்லின் உள்ளே நிகழும் மாற்றம். எ – டு. Kitāb) எகிப்து, அரபு மொழிகளிலும்; பின்னொட்டுத் (Suffix – வேர்ச்சொல்லுக்குப் பின்னர் வந்தமைவது. எ – டு. தந்த நிலம். இவற்றில் வரும் அம் பின்னொட்டு) தமிழிலும்; மேலொட்டு (Suprafix – முழுமையும் மேல்நிலை ஒலியன்களால் நிகழ்வது. எ – டு. ma – tone) சீனமொழியிலும் காணப்படுகின்றன (2011: 265). இவ்வாறு பல்வகை ஒட்டுக்கள் உலகமொழிகளில் வழங்கினாலும், குறிப்பாகத் திராவிட மொழிகளில் பின்னொட்டே வழங்குகின்றன என்பது அறிஞர்களின் கருத்து. இதனை அவ்வம் மொழி இலக்கணங்கள் விளக்கியுள்ளமையிலிருந்து புரிந்து கொள்ளலாம். அதனைத் தமிழின் தொல்காப்பியத்திலும் தெலுங்கின் பாலவியாகரணத்திலும் காணலாம் என்பதை இக்கட்டுரை விளக்குகின்றது.
வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014
முத்துவீரியம் – பாலவியாகரண எழுத்தறிமுகம்
திராவிடமொழி
இலக்கணக் கலைஞர்களுள் தமிழ், தெலுங்கு ஆயிரு மொழி இலக்கணக் கலைஞர்களே தத்தம்
மொழிக்குரிய எழுத்துக்களை நூலின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தும் பாங்கைக்
கொண்டுள்ளனர். இப்பாங்கைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த முத்துவீரிய
உபாத்தியாயரிடத்தும் (தமிழ் – முத்துவீரியம்),
சின்னயசூரியிடத்தும் (தெலுங்கு – பாலவியாகரணம்)
காணமுடிகின்றது. அவ்விருமொழி இலக்கணக் கலைஞர்களும் எவ்வாறு தத்தம் மொழிக்குரிய
எழுத்துக்களை அறிமுகம் செய்வதில் வேறுபடுகின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது
இக்கட்டுரை.
வெள்ளி, 18 அக்டோபர், 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)