- த.சத்தியராஜ்
சங்கப் பாடல்களில் கொடிச்சி, கொடிச்சியர் என்றாயிரு சொல்லாட்சிகள் காணப்பெறுகின்றன.
அவற்றிற்கு உரையாசிரியர்கள் கொடிச்சி,
குறப்பெண்,
குறமகளிர்,
குறிஞ்சிநிலப் பெண் என்பதாகப் பொருளமைவு கொண்டுள்ளனர். அகர முதலிகளோ குறத்தி,
கொடிச்சி,
இடைச்சி முதலியப் பல்வேறு பொருள்கள் தந்து விளக்கம்
அளித்துள்ளன. எனவே, ஈண்டு
கொடிச்சி என்பதற்கு குறிஞ்சிநிலப் பெண்டிரைக் குறித்து வந்தனவா அல்லது இடைச்சி
என்ற அளவில் நின்றனவா என இக்கட்டுரையில் ஆராயப் பெறுகின்றது.