இனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 பிப்ரவரி, 2024

இனம் ஒன்பதாம் ஆண்டு நிறைவு

இனம் ஆய்விதழ் ஒன்பதாம் ஆண்டினை மலர் 9 இதழ் 37-வுடன் நிறைவுசெய்கின்றது.
.............

INAM: Multi –Disciplinary International E-Journal for Tamil Studies | மலர் 9 இதழ் 37 | Vol 9 Issue 37

Inam Pathippagam

இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் காலாண்டுக்கு ஒருமுறை மே, ஆகட்டு, நவம்பர், பிப்புருவரி ஆகிய திங்கள்களில் வெளிவரும். இவ்விதழ் 2015 முதல் இயங்கிவருகிறது. இந்தியாவிலிருந்து வெளிவரும் இனம் தமிழாய்விதழில் கட்டுரைகள் வெளியிடுவதற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம். எங்கள் குழு கலை, இலக்கியம், இலக்கணம், மானுடம், மொழியியல், சமயம், நாட்டுப்பு...

கவிஞர் வெள்ளியங்காட்டான் கவிதைகளில் மனிதம் Kaviñar veḷḷiyaṅkāṭṭāṉ kavitaikaḷil maṉitam

முனைவர் ந.இராஜேந்திரன்

ஆய்வுச் சுருக்கம்:  மனித வாழ்வில் அடிப்படை வாழ்வியல் முறைகளான, பிறருக்குத் தீங்கு செய்யாமல் வாழ்வது, நல்ல சிந்தனை ஊட்டுவது, பிறர் உழைப்பைத் திருடாமல் வாழ்வது, சமத்துவ வாழ்வை ஏற்றுக்கொள்வது, ஆசையின்றி வாழ்வது, அடிமைத்தனம் இல்லாமல் வாழ்வது, தீண்டாமையின்றி வாழ்வது போன்ற கருத்துகளைக் கவிஞர் வெள்ளியங்காட்டான் தன் கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ள பாங்கின...

கவிஞர் வெள்ளியங்காட்டானின் கடிதங்கள் (ஒரு கவிஞனின் இதயம் எனும் நூலை முன்வைத்து) KAVINGAR VELLIYANKATTANIN KADITHANGAL (ORU KAVINGANIN ITHAYAM ENUM NUULAI MUNVAITHTHU)

முனைவர் சே.முனியசாமி

ஆய்வுச்சுருக்கம்: எழுத்தாளன் மறைந்தாலும் எழுத்துக்கள் மறைவதில்லை என்பதற்கு வெள்ளியங்காட்டான் ஆகச் சிறந்த சான்று. இராமசாமி எனும் இயற்பெயர் கொண்ட இவர் தாம் பிறந்த ஊரான வெள்ளியங்காடு எனும் பெயரை வெள்ளியங்காட்டான் என மாற்றித் தம் பெயராக ஆக்கிக் கொண்டர். தனது வாழ்வின் இறுதிக்காலம் வரையிலும் ஒரு எழுத்தாளனாய் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துத் தடம் புர...

வெள்ளியங்காட்டான் படைப்புகளில் திராவிடக் கருத்தியல் Dravidian Ideology in Veliangatan Works

முனைவர் இரா. இராஜா

ஆய்வுச்சுருக்கம்: வெள்ளியங்காட்டான் (1904 – 1991) கொங்கு வட்டாரத்தில் வாழ்ந்த கவிஞர். இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் (1942) எழுதத் தொடங்கிய அவர், தமிழுக்குப் பல படைப்புகளைக் கொடுத்துள்ளார். அவற்றின் உள்ளடக்கம் சார்ந்த ஆய்வுகள் மிகுதியாக வெளிவரவில்லை. குறிப்பாக, அவர் படைப்புகளில் காணப்படும் செய்திகளைக் கருத்தியல் அடிப்படையில் பகுத்து ஆராயும...

பத்தாம் ஆண்டில் புதுப்பொலிவுடன் வெளிவரும். ஆதரவு நல்கும் அனைவருக்கும் இனம் குழுமத்தின் சார்பாக நன்றி....

வியாழன், 30 நவம்பர், 2023

இனம் _ ஒன்பதாம் ஆண்டின் இறுதிப் பதிப்பு - பிப்ரவரி 2024இல் வெளிவரும்

இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் காலாண்டுக்கு ஒருமுறை மே, ஆகட்டு, நவம்பர், பிப்புருவரி ஆகிய திங்கள்களில் வெளிவரும். இவ்விதழ் 2015 முதல் இயங்கி வருகிறது.

இந்தியாவிலிருந்து வெளிவரும் இனம் தமிழாய்விதழில் கட்டுரைகள் வெளியிடுவதற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம். எங்கள் குழு கலை, இலக்கியம், இலக்கணம், மானுடம், மொழியியல், சமயம், நாட்டுப்புறவியல், தொல்லியல், கணினித் தமிழ், தமிழ் இயற்கை மொழி, ஊடகம் போன்ற ஆய்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கும். ஒவ்வொரு கட்டுரைகளும் ஆசிரியர் குழுவினரால் துறைசார் வல்லுநர் குழுவால் மதிப்பீடு செய்யப் பெற்ற பின்னரே இதழில் வெளியிடப் பெறும்.

இவ்விதழ் ஒரு பன்னாட்டு ஆராய்ச்சி இதழ் ஆகும். இவ்விதழின் மூலம் தமிழாய்வுகளை உலகளாவிய வாசிப்புக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பது நோக்கம். எனவே, தங்களின் ஆய்வுச் சிந்தனைகளை அனைவரும் வாசிக்கவும் மேற்கோள் காட்டவும் இவ்விதழ் உறுதுணை நல்கும் என உறுதியளிக்கின்றோம்.

Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies that publishes articles in Tamil and English (bi-lingual) and it comes quarterly (February, May, August, and November) since 2015. We publish research and review articles, book reviews, editorials. 

Dear researcher, we welcome original articles from all over the world who willing to support the Tamil research journal from Tamil Nadu, India. The articles from Arts, Literature, Grammar, Philosophy, Linguistics, Folklore, Archeology, Religion, Science, Tamil NLP and Computing Tamil Related Researches are most preferable. Your article will be published in the journal “Inam” if your manuscript qualified the editorial review process. 

The aim of the journal is to extend the readability of the Tamil research article among interested readers around the world. We hope, this journal exposes your research to a vast audience and aids to cite your research.

CURRENT ISSUE
..................
Vol. 9 No. 36 (2023): மலர் : 9, இதழ் : 36 நவம்பர் (November) 2023
 View Vol. 9 No. 36 (2023): மலர் : 9, இதழ் : 36 நவம்பர் (November) 2023
..................
PUBLISHED: 30.11.2023
Full Issue
 FULL ISSUE DOWNLOAD
..................
Articles
..................
அற இலக்கியப் பதிவுகளில் காமன் என்னும் தொன்மம் Khaman Myth in Moral Literature
முனைவர் மூ. பாலசுப்பிரமணியன் | Dr. M. Balasubramanian
1 - 10
 பதிவிறக்கம் (DOWNLOAD)
...............
மெல்லக் கற்கும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதில் பெற்றோரின் பங்களிப்பு The involvement of parents in enhancing the knowledge of students who excel in learning
பட்டிருப்பு வலய, மண்முனை தென் எருவில் பற்றுக் கோட்ட 1 AB, 1C, வகை - 2 பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் அளவை நிலை ஆய்வு
ஒய். அகல்யா | Y.Ahalya, பி.சோபா | B.Soba
11 - 22
 பதிவிறக்கம் (DOWNLOAD)
..................
வள்ளலார் திருவருட்பா தெலுங்கு மொழிபெயர்ப்பு - பன்முகப்பார்வை Vallalar Thiruvarutpa Telugu Translation - Multiview
சத்தியராஜ் தங்கச்சாமி | Sathiyaraj Thangasamy
23 - 30
 பதிவிறக்கம் (DOWNLOAD)
......................
க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான தொழில்சார் வழிகாட்டலின் வினைத்திறனின்மையானது அவர்களின் எதிர்காலச் செயல்பாடுகளில் ஏற்படுத்தும் தாக்கம் The Impact on the G.C.E A/L students due to lack of guidance on professional skills
இராசையா தேவேந்திரன் | Rassaiah Devendran
31 - 40
 பதிவிறக்கம் (DOWNLOAD)

புதன், 26 ஜூலை, 2023

தமிழில் வடிவமைப்புப் பயிற்சி (திறன் மேம்பாட்டுப் பயிற்சி)

தமிழில் வடிவமைப்புப் பயிற்சி (திறன் மேம்பாட்டுப் பயிற்சி)

நண்பர்களுக்கு,

தமிழ் வணக்கம். 

ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விப்புலச் சார்பு பணிகளில் இருப்பவர்கள், நிறுவனங்கள் வைத்து நடத்துபவர்கள், இலக்கிய அமைப்பாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் சார்ந்து இணையத்தில் தொடர்ந்து இயங்குபவர்கள், சமூக ஊடகங்களில் இயங்குபவர்கள், இணையக் கல்வி பயிற்சியாளர்கள் போன்றோர்கள் தங்கள் பணித்தேவைக்காகவும் மேம்பாட்டிற்காகவும் தற்போதைய கணினி யுகத்தில் வடிவமைப்புப் பற்றிய புரிதல் பெற்றிருத்தல் மிகவும் அவசியமானதாகும். 

வடிவமைப்பு என்றால் கணினியின் மென்பொருள் அறிவு பெற்றிருப்பது என்று பொருள் அல்ல. மாறாக அடிப்படையாக ஒரு மனிதர் தெரிந்து வைத்திருக்க வேண்டிய வடிவமைப்புப் பற்றிய விழிப்புணர்வும் வடிவமைப்பிற்கான அடிப்படை உறுப்புகளை பற்றிய அறிதலும் ஆகும்.

இவ்வடிப்படை விழிப்புணர்விலிருந்தே, கணினித் தொழில்நுட்ப அறிவு ஓரளவு இருந்தாலே நம்மால் தரமான, நேர்த்தியான, பொருள்பொதிந்த, அழகியலுடன் கூடிய வடிவமைப்புகளை  உருவாக்க இயலும். 

அத்தகையப் பயிற்சியாகத்தான் இப்பயிற்சியை அனலியும் இனமும் இணைந்து மிகக்குறைந்த கட்டணத்தில் அதே வேளையில் தரத்திலும் அடர்விலும் குறைவுபடாது நடத்தயிருக்கிறோம். 

எப்போதும்போல் உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்.
 
கீழே தரப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி இப்பயிற்சிக்கான பெயர் பதிவில் இணைந்து கொள்க. 

https://forms.gle/Xmkx1XWWEjWEM3d89

தோழமையுடன்
அனலியும் இனமும்

புதன், 15 செப்டம்பர், 2021

இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழுக்குக் (ISSN:2455-0531) கட்டுரை வழங்குவது எப்படி?

இனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் காலாண்டுக்கு ஒருமுறை மே, ஆகட்டு, நவம்பர், பிப்புருவரி ஆகிய திங்கள்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இவ்விதழ் 2015 முதல் இயங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 13 மே, 2021

மலர் 7 இதழ் 27 கட்டுரை வரவேற்றல்


இனம் ஏழாம் ஆண்டில் காலடி வைத்துள்ளது
................................
இனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (ISSN:2455-0531)

ஆகஸ்ட் 2021 மலர் :7 இதழ் : 26 
Auguest  2021  | Volume VII Issue 27
பதிப்பிற்குக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. 
இறுதி நாள் : 20 சூன் 2021

அடிப்படைக் கட்டமைப்புநெறிகள்
....................

தமிழில் /ஆங்கிலத்தில் கட்டுரைத் தலைப்பு
 
தமிழ் / ஆங்கிலம் பெயர்

ஆங்கிலம் / தமிழ் - ஆய்வுச் சுருக்கம்

திறவுச் சொற்கள்

Citation: கென்னடி ஜீ., (May 2021), “டோனி மொரிசனின் நாவல்களில் தலைமுறையினருக்கு இடையேயான முரண்பாடு (Generational Conflict in Toni Morrison’s Novels)”, IIETS (Inam: International E-Journal of Tamil Studies) (ISSN:2455-0531), Vol.7, Issue 27, pp.. (என அமைதல் வேண்டும்)

இதன் பின்பு கட்டுரை தொடங்கலாம்....

மதிப்பீட்டு முறையும் வெளியீடும்
..............................
இதுதான் முதல் மதிப்பீடாக இருக்கும்

அடுத்த மதிப்பீடு புதியவற்றை முன்வைக்கிறதா என்பது

இறுதி மதிப்பீடு துறைசார் வல்லுநரிடம்

பின்பு கட்டுரை மெய்ப்பாக்கம்

இறுதியில் இணையத்தில் வெளிவரும்.

திங்கள், 10 பிப்ரவரி, 2020

இனம், மலர் : 5 இதழ் : 20

இனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் - நாளை முதல் வாசிக்கலாம்.

பிப்ரவரி 2020 மலர் : 5    இதழ் : 20

February 2020 Volume V Issue 20
......................

உள்ளே ...
.......................

தமிழ்ச் செவ்வியல்

சங்க இலக்கியப் பதிவுகளில்

மருத நில விளையாட்டுகள்

Marutham Land games in Sangam literature

முனைவர் மூ.பாலசுப்பிரமணியன்/Dr.M.Balasubramanian I 4

https://inamtamil.com/%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2/

திருக்குறளில் நிலவு மறைப்பு (சந்திர கிரகணம்)

Thirukuralil nilavu maraippu (sandirakiraganam)

முனைவர் இரா.இந்து/Dr.R.Indhu I 17

https://inamtamil.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa/

பக்தி இலக்கியம்

திருமூலர் பற்றிய கதைகள் உணர்த்தும் உண்மைகள்

The Facts in behind of stories about Thirumular

முனைவர் ஆ.மணி/Dr.A.Mani I 24

https://inamtamil.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

தற்கால இலக்கியம்

தூப்புக்காரி புதினத்தில் பண்பாடு - ஓர் ஆய்வு

    CULTURE OF THUPUKKARI  NOVEL

ரா.வனிதா /R.VANITHA I 30

https://inamtamil.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2/

வாஸந்தியின் நாவலில்

மரபு உடைத்தலும் உரிமை பேணலும்

Vasnthi Navalil marapu udaithalum urimai penalum

பி.அனுராதா/P.Anurathan I 37

https://inamtamil.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b8%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%aa/

வரலாறு - சமூகவியல் - புவியியல் - கல்வியியல்

சோழர்கால வடமொழிக் கல்லூரிகள்

SANSKRIT COLLEGES IN CHOLA PERIOD

மு.கயல்விழி/M.kayalvizhy I 48

https://inamtamil.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0/

தமிழ், தெலுங்கு நுட்பவியல் கலைச்சொற்களின் அமைப்பும் மொழித்தூய்மையும்

Structure and Language Purity of Technical Terminology in Tamil and Telugu

முனைவர் சி.சாவித்ரி/Dr.Ch.Savithri I 55

https://inamtamil.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b2%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af/

சர்வக்ஞர் பார்வையில் கடன் கொடுத்தலும் வாங்கலும்

(SARAVAJANAR PARVAIEL KADAN KODUTHTHALUM  VANGALUM)

முனைவர் சே.முனியசாமி/Dr S.MUNIYASAMY I 66

https://inamtamil.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%95%e0%af%8d%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f/

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

இனம் ஆய்விதழுக்குக் கட்டுரை வழங்குவோர் கவனத்திற்கு

இனம் ஆய்வுநெறியை அறிந்து முறைப்படி கட்டுரையைப் பதிவேற்றம் செய்யுங்கள். அதற்கான காணொளிகளும் நெறிகளும் வருமாறு;
  1. உறுப்பினர் புகுபதிவு;https://www.youtube.com/watch?v=Mto19BmCseo
  2. கட்டுரையாளர்கள் குறிப்பு; https://www.youtube.com/watch?v=TIfUgV1_z_A
  3. கட்டுரை வழங்கும் முறை; https://www.youtube.com/watch?v=j1CIDqqcZmM&t=27s
  4. கட்டுரை வடிவமைப்பு முறை; https://www.youtube.com/watch?v=AK9xESiU5os
  5. இனம் நெறி;  https://inamtamil.com/instructions/
  6. இனம் பதிப்புக்குழுவினரால் தெரிவுசெய்யப் பெற்ற கட்டுரைகள் மட்டுமே இடம்பெறும்.
  7. ஆய்வுக்கட்டுரை ஆய்வுநெறியைப் பின்பற்றியதாக அமைதல் வேண்டும்.

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

இனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (மலர் - 5, இதழ் - 17)

இனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் ஐந்தாம் ஆண்டில் தடம் பதிக்கிறது.
பல்வேறு மாற்றங்களுடன் பதினேழாம் பதிப்பை வெளிக்கொணர்ந்துள்ளது. இப்பதிப்பில் இடம்பெறும் கட்டுரைகளின் பட்டியல் வருமாறு:

வெள்ளி, 29 ஜூன், 2018

Life is a Game


Life is a Game,
                ……… Enjoy it!
                ……… Play it!
                ……… Win it!

“Love yourself,
   All the great things Love you”

“Delete your enemy list,
By adding friendship with them”

“Think all of them are your BROTHERS and SISTERS,
Then it will be very easy to lead a LIFE”

திங்கள், 25 ஜூன், 2018

யாப்பியலும் கணக்கியலும்

இலக்கணச் செம்மை மிக்க மொழியாகத் தமிழ் விளங்குகின்றது. இதன் மரபிலக்கணங்கள் செய்யுளாக்கம் குறித்துத் தனிச்சிறப்பாகப் பேசியுள்ளன. குறிப்பாகத் தொல்காப்பியத்தில் செய்யுளியல் என்பதே அளவில் பெரிய பிரிவாகும். இவ்வியலுள் பாடுபொருளும் யாப்பும் இயைபுடன் விளக்கப்பட்டுள்ளன. இதற்குப் பின்னர்  எழுந்த இலக்கண நூல்கள், பாடுபொருளிலிருந்து யாப்பிலக்கணத்தை மட்டும் பிரித்துத் தனியாக இலக்கணம் வகுத்துள்ளன. இவ்விரு நிலைகளிலும் யாப்புறுப்புகளைத் தொகைவகை செய்தும் உறழ்ந்தும் காட்டும் முறைமைகள் கையாளப்பட்டுள்ளன. இவற்றுள் கணக்கியல் எவ்வாறு பயன்பட்டுள்ளது என்பதை விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.
பொதுவாக, மொழியை (அ) செய்யுளை ஆராயப் புகும் இலக்கணம் என்பது ஓர் அறிவியல் துறையாகும். அதன் அடிப்படையில் பிற அறிவியல் துறைகளைப் போல யாப்பியலிலும் கணக்கியல் பயன்படுத்தப்பட்டிருப்பது தவிர்க்க இயலாதது.
தமிழில் நவீன உரைநடை பத்தொன்பதாம் நூற்றாண்டிற்குப் பின்னரே வளரத் தொடங்கியது. அதுவரை அனைத்துத் துறைசார்ந்த கருத்துகளும் செய்யுள் வடிவத்தில் தாம் எழுதப்பட்டு வந்தன. அப்பொழுது தமிழர்கள் உரைநடையைவிடச் செய்யுட்களைக் குறுகிய நேரத்திற்குள் பாடி முடித்துவிடும் பழக்கத்தில் இருந்துள்ளனர். தமிழில் கணக்கினை அடிப்படையாகக் கொண்டு கணக்கதிகாரம், வானியல் நூல்கள் முதலானவை எழுதப்பட்டுள்ளன. இங்கு அவை குறித்துப் பேசாமல் யாப்பிலக்கணத்தில் கணக்கியலின் பயன்பாடு குறித்து மட்டும் சுருக்கமாகச் சுட்டப்படுகின்றது.
https://www.inamtamil.com/yappiyalum-ka%E1%B9%87akkiyalum/

சொல் நிலம்: வெளிப்பாட்டுத் திறனுரை

எந்த ஒரு படைப்பாளியும்ஒரு படைப்பில் அடைய வேண்டிய உச்ச நிலையை நோக்கியதேடலில் ஈடுபடாமல் இருக்க இயலாதுஅத்தகைய அவர்களின் தேடல்கள்பிற படைப்பாளியைப்பற்றிக் கூறுகிற கூற்றுக்கள்இலக்கியம் பற்றிய ஆழமான கணிப்புக்களாக அமைந்துகிடக்கின்றன என்று .பஞ்சாங்கம் (2011:43) படைப்பாளனையும் படைப்பையும் நிறுத்துப் பார்க்கிறார்அவ்வகையான படைப்பாகச் சொல் நிலம் அமைந்திருக்கிறதுஇருப்பினும் சிற்சில முரண்களும்பிழைகளும் இல்லாமல் இல்லைஇது எந்தவொரு படைப்பும் முழுமையாகவோ பிழையற்ற தன்மையுடையதாகவோ அமைந்துவிடாது என்பதைக் காட்டுகிறதுதொடக்கக்கால இலக்கியங்களையும் இலக்கணங்களையும் இவ்வரிசையில் நிறுத்திப் பார்க்கமுடியும்அதனைக் கருத்தில் கொண்டு சொல் நிலம் எனும் கவிதைத் தொகுப்பின் வெளிப்பாட்டுத் திறனைப் பார்க்க முயலுகிறது இவ்வெழுத்துரை.

சீனாவின் முத்துமாலைத் திட்டத்தினால் (ONE BELT ONE ROAD) இலங்கையில் ஏற்படும் விளைவுகள் – பொருளியல் நோக்கு

இந்துமகாசமுத்திரத் தீவில் தன்னிறைவு கொண்ட அரசாட்சியின்வழி நடைபோட்டுக் கொண்டிருக்கும் இலங்கை அரசின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? சிறந்த திட்டமிடல்களுடன் கூடிய செயற்றிட்டங்களை நாட்டு மக்களுக்கும் எதிர்கால சந்ததிக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பேண்தகு அபிவிருத்தியினை இலக்காகக் கொண்டு பயணிக்க வேண்டும் என்பதேயாகும். இலங்கை நாடானது 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் அந்நிய நாட்டவரின் கைக்குள் சொல்பேச்சுக் குழந்தையாகிச் சிக்கித் தவித்தது. அத்தகைய அடிமைத்தனத்தில் இருந்து பல போராட்டங்களுக்கு மத்தியில் மீண்டும் என்ன பயன்? இன்று சர்வதேச வர்த்தகம், அபிவிருத்தி என்னும் பெயரில் உலக நாடுகளின் சதிவலைகளில் இலங்கையும் வீழ்ந்திருக்கிறது.

வாழ்வியலறம் + பாலியலறிவு = பண்டைத்தமிழர்

இன்றைய தமிழ்ச் சமூகத்தளத்தில் ‘பாலியல்’ என்பது ஒரு தீண்டத்தகாத சொல். அதனால்தான் சில முக்கியமான தமிழ் அகராதிகளில் கூட (அபிதான சிந்தாமணி, நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி, கழகத் தமிழ்க் கையகராதி) இச்சொல் காணப்பெறவில்லை. ஆனால், இச்சொல் ஒரு தெளிவான பொருளுடையது. இருப்பினும், இது தீண்டத்தகாத, கெட்ட வார்த்தையாக மாறியது எப்போது? என்ற வினா ஆய்ந்து சிந்தித்தற்குரியது.
பாலியல் = பால் + இயல். இச்சொல் ஒவ்வொரு பாலுக்குமான (ஆண்பால், பெண்பால்) இயல்பைக் குறிக்கக்  கூடியது என்று இதற்குப் பொருள் குறிக்கலாம். உயிரினங்களின் இயல்புகள் குறித்து நோக்கினால், அவற்றின் முக்கிய இயல்பாகக் கருதப்பெறுவது இனப்பெருக்கமாகும். இந்த இனப்பெருகத்திற்குப் பாலியலறிவு கட்டாயம் தேவை. இந்த அளவிற்கு முக்கியமான சொல்லைத் தீண்டத்தகாத சொல்லாக மாற்றியது நம் அறியாமையன்றி வேறென்ன?

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

மலைபடுகடாம் சுட்டும் நன்னன்சேய் நன்னனின் நாட்டுவளம்

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான மலைபடுகடாம் 583 பாடலடிகள் கொண்டதொரு நூல். இந்நூலின் மற்றொரு பெயர் கூத்தராற்றுப்படை. இந்நூலைப் பாடியவர் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார். இந்நூலின் பாட்டுடைத்தலைவன் செங்கண் மாத்துவேள் நன்னன்சேய் நன்னன் ஆவான். இந்நூலில் செங்கண்மா, பல்குன்றக் கோட்டம், நவிரமலை, சேயாறு ஆகிய வாழிடங்கள் முதன்மையாகச் சுட்டப்பெற்றுள்ளன. இந்நிலப்பரப்புகள் தொண்டைநாட்டு நிலப்பரப்புகளாகும். இந்நாட்டின் வளங்களை மலைபடுகடாத்தின்வழி அறிமுகநிலையில் அடையாளப்படுத்துவனை நோக்கமாகக் கொண்டது இக்கட்டுரை.

சங்ககால மக்களின் வாழ்வியலில் மனிதம்

மனிதம் மண்ணுலத்தில் இருப்பதால் இன்னும் உலகம் எழிலாகவும் வளமாகவும் இருக்கிறது. மனித செயல்பாடுகளில் ஒரு மனிதன் மற்றொரு மனிதன் மேல் காட்டும் அன்பு தான் மனிதம் எனலாம். ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்று வள்ளுவர் மிகச் சரியாகக் கணிக்கிறார். சங்ககால இலக்கியமான பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் வெளிப்படுத்தும் மனிதப்பண்புகளை இனங்கண்டு வெளிப்படுத்துகின்றது இக்கட்டுரை.

தமிழில் வட்டார வழக்குச் சொல்லகராதிகள் உருவாக்கம்

ஒரு மொழி பன்னெடுங்காலமாகப் பலரால் பேசப்படும் நிலையில் வட்டாரம், சமூகம் சார்ந்து மொழிக்குள் வேறுபாடுகள் சில அமைவதுண்டு. ஒரு மொழியில் ஏற்படும்  இத்தகைய வழக்கு வேறுபாடுகள் கிளைமொழிகள் எனப்படுகின்றன. வட்டாரம், சமூகம், இனம், பால், வயது முதலியவற்றின் அடிப்படையில் ஒரு மொழியில் கிளைமொழிகள் அமைவதை மொழியியல் அறிஞர்கள் விளக்கியுள்ளனர். தமிழ்ச்சூழலில் வட்டாரம், சமூகம் சார்ந்த கிளைமொழிகள் தெளிவாக அமைந்துள்ளன. அதாவது, சென்னையில் பேசப்படும் தமிழுக்கும் நாஞ்சில் நாட்டில் பேசப்படும் தமிழுக்கும் காவிரி டெல்டா பகுதியில் பேசப்படும் தமிழுக்கும் கொங்கு தமிழுக்கும் வேறுபாடுகள் உள்ளன. இத்தகைய வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு கிளைமொழி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறுந்தொகைத் திறனுரைகள் – நூல் மதிப்பீடு

செவ்விலக்கிய நூல்களுள் ஒன்றாகிய குறுந்தொகைக்குப் பல பதிப்புக்களும் உரைகளும் வெளிவந்துள்ளன. அதேபோல் பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கி இருப்பத்தோராம் நூற்றாண்டு வரையிலும் அந்நூல் குறித்துக் கட்டுரைகளும், நூல்களும் பல எழுதப்பட்டுள்ளன. நூல்களின் அமைப்பு நிலைகளுக்கேற்ப அவற்றினை அறிமுக நூல்களாகவும், விளக்கவியல் நூல்களாகவும், இரசனைசார் நூல்களாகவும், திறனாய்வு நூல்களாகவும் வகைப்படுத்தலாம். அவ்வகையில்  ஆ.மணி என்பவர் ‘குறுந்தொகைத் திறனுரைகள்’ எனும் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். அது எவ்வகை நூல் என்பதனை அறிமுகப்படுத்தி, மதிப்பீடு செய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழ்க் காப்பு இயத்தின் புதிய வினைக் கோட்பாடு உருவாக்கமும் கட்டமைப்பும்

தொல்காப்பியம்வீரசோழியம்நேமிநாதம்நன்னூல்இலக்கண விளக்கம்தொன்னூல் விளக்கம்முத்துவீரியம்சுவாமிநாதம்அறுவகை இலக்கணம்தமிழ்நூல்தென்னூல் ஆகிய இலக்கண நூல்கள் எல்லாம் தத்தமது இலக்கணக் கோட்பாடுகளைக் காலமாற்றம்வளர்ச்சி என்பவற்றின் அடிப்படையில் கட்டமைத்துச் செல்வதோடுதொல்காப்பியத்தையோநன்னூலையோ பின்பற்றி இலக்கணம் வகுத்துள்ளனமார்த்தாண்டம்நந்தன்காடு என்ற பகுதியிலுள்ள மீ.காசுமான் என்பவர் எழுதிய தற்கால இலக்கண நூலான தமிழ்க் காப்பு இயத்தின் வினைக் கோட்பாட்டு உருவாக்கத்தினையும் கட்டமைப்பினையும் எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

மலைபடுகடாம் சுட்டும் நன்னன்சேய் நன்னனின் நாட்டுவளம்

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான மலைபடுகடாம் 583 பாடலடிகள் கொண்டதொரு நூல். இந்நூலின் மற்றொரு பெயர் கூத்தராற்றுப்படை. இந்நூலைப் பாடியவர் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார். இந்நூலின் பாட்டுடைத்தலைவன் செங்கண் மாத்துவேள் நன்னன்சேய் நன்னன் ஆவான். இந்நூலில் செங்கண்மா, பல்குன்றக் கோட்டம், நவிரமலை, சேயாறு ஆகிய வாழிடங்கள் முதன்மையாகச் சுட்டப்பெற்றுள்ளன. இந்நிலப்பரப்புகள் தொண்டைநாட்டு நிலப்பரப்புகளாகும். இந்நாட்டின் வளங்களை மலைபடுகடாத்தின்வழி அறிமுகநிலையில் அடையாளப்படுத்துவனை நோக்கமாகக் கொண்டது இக்கட்டுரை.

சசூரின் மொழியியல் ரீதியான அமைப்பியலும் பின்அமைப்பியலும்

ஆய்வு அறிமுகம்
மெய்யியலில் முக்கிய எண்ணக்கருவாக ஆராயப்படுவது அமைப்பியல்வாதம். இது சமூகத்தில் காணப்படக்கூடிய பல விடயங்களை ஒன்றாக இணைத்து ஒரு சிக்கலான அமைப்பை விளங்கிக் கொள்வதற்கு முயலும் ஒரு அறிவியல் சார்ந்த அணுகுமுறையாகும். இவ் அணுகுமுறையின் முன்னோடியாக சுவிட்ஸ்சர்லாந்து மொழியியலாளர் சசூர் (Ferdinand.De.Saussure) விளங்குகின்றார். இவரே மொழிக் கட்டமைப்பு ரீதியான ஆய்வினை முதன்முதலில் நிகழ்த்தியவராவார்.
அமைப்பியல்வாத சிந்தனையாளர்களாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் ரோலன் பாத் (Roland Barthes), லூயிஸ் அல்தூசர் (Louis Althusser), பூக்கோ (Faucault), லகான் (Lacan), லெவிஸ்ட்ராஸ் Levi strauss போன்றோர் சசூரின் மொழிக் கட்டமைப்புக்கள் கருத்துருவ மாதிரிகளைக் கொண்டு மொழியின் மேலோட்டமான நிகழ்வுகளை (Parole), அதற்கு அடிப்படையாகவுள்ள முறைமையினை(Langue) குறியீடுகளைக் கொண்டு ஆராய்கின்ற விஞ்ஞானத்தை (Semiology) முழு வளர்ச்சியடையச் செய்தனர்.