திங்கள், 25 ஜூன், 2018

சீனாவின் முத்துமாலைத் திட்டத்தினால் (ONE BELT ONE ROAD) இலங்கையில் ஏற்படும் விளைவுகள் – பொருளியல் நோக்கு

இந்துமகாசமுத்திரத் தீவில் தன்னிறைவு கொண்ட அரசாட்சியின்வழி நடைபோட்டுக் கொண்டிருக்கும் இலங்கை அரசின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? சிறந்த திட்டமிடல்களுடன் கூடிய செயற்றிட்டங்களை நாட்டு மக்களுக்கும் எதிர்கால சந்ததிக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பேண்தகு அபிவிருத்தியினை இலக்காகக் கொண்டு பயணிக்க வேண்டும் என்பதேயாகும். இலங்கை நாடானது 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் அந்நிய நாட்டவரின் கைக்குள் சொல்பேச்சுக் குழந்தையாகிச் சிக்கித் தவித்தது. அத்தகைய அடிமைத்தனத்தில் இருந்து பல போராட்டங்களுக்கு மத்தியில் மீண்டும் என்ன பயன்? இன்று சர்வதேச வர்த்தகம், அபிவிருத்தி என்னும் பெயரில் உலக நாடுகளின் சதிவலைகளில் இலங்கையும் வீழ்ந்திருக்கிறது.

முப்பந்தைந்து ஆண்டு கால இலங்கையின் இனவாதப் போரினை இலங்கை அரசு முடிவுக்குக் கொண்டுவரப் போராடிக் கொண்டிருந்த காலத்தில் இலங்கையின் மீது பல நாடுகளின் பார்வை திரும்பியது. இலங்கை அரசுக்குப் பல நாடுகள் உதவிக்கரம் நீட்டின. அன்று அந்த நாடுகள் கொடுப்பதற்காகத் தனது கரங்களை நீட்டவில்லை. இங்கிருக்கும் வளங்களை எடுத்துக் கொள்ளவே கரங்களை நீட்டின என்பதை யாரும் கண்டு கொள்ளவில்லை. ஏனைய உலக நாடுகள் தத்தமது நாட்டின் நீண்டகால அபிவிருத்தியை மையப்படுத்தி இத்தகைய சதிதிட்டங்களை நகர்த்திச் சென்றிருக்கின்றன. ஆனால் இலங்கை அரசு இனவாதப் போரினை நிறைவுக்குக் கொண்டுவருவதே தமது குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டிருந்தது. அதனைத் தமக்குச் சாதகமாக மாற்றியமைத்துக் கொண்ட உலக நாடுகளில் சீனா ஒரு முக்கிய இடத்தினை வகிக்கின்றது.
அண்மைக்காலத்தில் சீனாவின் மேலாதிக்கம் இலங்கையில் உச்ச அளவில் இடம்பெறுவதனைக் காணலாம். இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் சீனாவின் தந்திரோபாய செயற்றிட்ட உடன்படிக்கைகள் மூலம் கட்டியெழுப்பப்படுகின்றது. இலங்கையில் அதிகளவான முதலீடுகளைச் செய்யும் நாடுகளின் வரிசையில் சீனா முதலிடத்தினைப் பிடித்துள்ளது. இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையில் நீண்ட காலமாகவே அரசியல் ராஜதந்திர உறவுகள் நிலவுகின்றன. துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதை அபிவிருத்திகள் மற்றும் துறைமுக நகரம் போன்ற பலதரப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் சீனாவினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் இன்று அனைவராலும் பேசப்படுகின்ற விடயங்களுள் ஒன்றாக “முத்துமாலைத்திட்டம்”அடையாளம் காணப்பட்டுள்ளது.
https://www.inamtamil.com/ci%E1%B9%89avi%E1%B9%89-muttumalait-ti%E1%B9%AD%E1%B9%ADatti%E1%B9%89al-one-belt-one-road-ila%E1%B9%85kaiyil-e%E1%B9%9Fpa%E1%B9%ADum-vi%E1%B8%B7aivuka%E1%B8%B7-poru%E1%B8%B7iyal-nokku/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன