தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஆம் நாளை நினைவுகூரும் வகையில் நிகழாண்டில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் ஒருவார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படவேண்டுமென ஆணையிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ் வளர்ச்சி இயக்குநரின் ஆணைக்கிணங்க திருப்பூர் மாவட்டத்தில் 18.12.2023 முதல் 27.122023 வரையிலான ஒருவாரக் காலத்திற்கு ஆட்சிமொழிச் சட்ட வார விழா கொண்டாடப்படவுள்ளது.
தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரத்தின் ஒரு பகுதியாக 19:122023 (செவ்வாய்க் கிழமை) அன்று முற்பகல் 10.00 மணி முதல் 12:30 மணி வரை அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனம் போன்ற துறைகளில் பணிபுரியும் தட்டச்சர் / இளநிலை உதவியாளர் /உதவியாளர் ஆகியோர்களுக்குக் கணினித் தமிழ் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் கணினித் தமிழ் ஒருங்குறி பயன்பாடு குறித்துப் பயிற்சி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அரசுப் பணியாளர்களுக்குக் கணினித் தமிழ் பயிற்சி, கணினித் தமிழ் விழிப்புணர்வு, கணினித் தமிழ் ஒருங்குறி பயன்பாடு குறித்தும் பயிற்சியளித்தேன்.