ஒப்பிலக்கணம்


தெலுங்கு மரபிலக்கணங்களில் இலக்கணக்கலைச் சொற்கள்

            தெலுங்கு இலக்கணங்கள் கலைச் சொற்களுக்குப் பருந்துப் பார்வை பாரிபாஷிக பதாலு, சஞ்ஞாலுஎன இரு சொற்களைப் பயன்படுத்தியுள்ளனஅவ்விலக்கணங்களில் காணப்படும் கலைச் சொற்களை மூன்றுவகையாகப் பிரித்துக் கூறலாம்அவை : -
1.    சமற்கிருத பிராகிருத மொழிக்குரியன
2.    தூய தெலுங்கு மொழிக்குரியன
3.    மணிப்பிரவாள நடை
1.    சமற்கிருதத்தில் தோன்றிய தெலுங்கு இலக்கணங்கள்
            சமற்கிருதத்தில் எழுதப்பட்ட தெலுங்கு மொழிக்கான இலக்கணங்களின் அமைப்பு முறை சுலோகவடிவில் காணப்படுகிறது. இவ்வமைப்பு முறையில் வரும் முதல் இலக்கணம் ஆந்திர சப்த சிந்தாமணி.
            அவ்விலக்கணம் (11ஆம் நூற்றாண்டு) சூத்திர எளிமைக்காகப் பாணினீயத்தைப் பின்பற்றிக் கலைச்சொற்களை அறிமுகப்படுத்தியுள்ளதுஅத்துடன் தெலுங்கு மொழிக்கேற்ப மற்ற கலைச் சொற்களையும்உருவாக்கியுள்ளது.
            வக்ரமு (கோணல்), வக்ரதமமு (மிகவும் கோணல்), பருஷமு (கடினம்), ஸரளமு (எளிமை), ஸ்தி2ரமு(நிலையான), களா (நகர ஈறு அற்றவை), த்3ருத ப்ரக்ருதி (நகர ஈறுடையவை), விக்ருதி (திரிபு), தத்ஸம(சமற்கிருதபிராகிருத நிகர்), தத்34 (சமற்கிருதபிராகிருதத்தில் இருந்து பிறத்தல்), தே3ஸ்2 (தேசியம்),சந்தி3 (புணர்ச்சி), வர்ணகமு (உருபு), ஸமாஸகமு (தொகை), ஔப (துணை), விப4க்தி (வேற்றுமை), மஹத்(உயர்திணை), அமஹத் (உயர்திணை அற்ற), மஹதீ (உயர்திணைப் பெண்பால்), ஸ்த்ரீஸம (பெண்பால்நிகர்), க்லீப3ஸம (விலங்குகளும் பறவைகளும்), யஸ்2ருதி (யகரம்), ப்ராணமு (உயிர்), ப்ராணி (மெய்),தத்33ர்மாதி3 (நிகழ்காலத் தொடர்வினை).
            இவை அனைத்தும் ஆந்திர சப்த சிந்தாமணியில் நன்னய்யவால் உருவாக்கப் பெற்ற கலைச்சொற்கள்.  
            திரிலிங்க சப்தானு சாஸனம் பெரும்பாலும் ஆந்திர சப்த சிந்தாமணியைப் பின்பற்றியுள்ளதுஎன்பதற்கு இந்நூலில் இடம்பெற்றுள்ள தந்த்யம் (பல்லொலி), தாலவ்யம் (தாடை ஒலி), களாத்ருதப்ரக்ருதிகமுலுதத்ஸமதத்ப4தே3ஸ்2க்3ராம்ய போன்ற சொற்களே சான்று.
            புதிய சொல்வகையை அறிமுகப்படுத்தியதும் இந்நூலேஇதில் தெலுங்கு மொழிக்குத் ‘த்ரிலிங்கம்என்பதைச் சுட்டிக்காட்டி இச்சொல்லை நிறுவிக் காட்டியுள்ளார்இந்நூல் வேற்றுமை உருபுகளைக்குறிப்பிடும் பொருட்டு மூன்றாம் வேற்றுமை உருபான ‘சேத’ என்பதற்கு ‘மை’ (அவ்யயச் சொல்என்றுகுறிப்பிட்டுள்ளது நோக்கத்தக்கதுஇது மற்ற எந்த இலக்கணங்களிலும் காண முடியாது (4 : 1 – 2)
            நிவ்ருத்தி ஸேஷாசல [ஆந்திர வியாகரணத்தில் (1683 – 1712)] விஸர்க (:) என்பதற்குப்பிந்து3த்3வயம்’ (இரட்டைப் புள்ளிகள்என்று குறிப்பிட்டுள்ளார்.
            “அசப்பரம் பி3ந்து3 த்3வய முக்த ஸஞ்ஜ்நு : ஸ்யாத்” என்று சூத்திரம் அமைத்து இதற்குச் சான்றாகத்தேஜ : காந்துடு3 (ஒளிமயமானவன்என்று குறிப்பிட்டுள்ளார்அப்பகவி விஸர்க (:) என்பதைப்பொ3ட்டுக3” (அப்ப. 2 : 10 – 11) என்று பெயரிட்டுள்ளார்.
            திரிலிங்க சப்தாநு சாஸநம் II (18) தத்சமம் என்ற சொல்லைத் ‘தத்ஸ’ என்று பயன்படுத்தியுள்ளது.அதர்வணனின் திரிலிங்க சப்தாநு சாஸனத்திலும் இவ்விதி பயன்படுத்தப் பட்டுள்ளது.
            சூத்திரம் :        “த்ரிலிங்க3 ஸா2ஸ்ரம் தத்ஸ தே3ஸ்2 க்3ராம்யாச்ச
                                     பே4தை3 : பஞ்ச வித4ம் ஸ்யாத் ǁ அத4 தத்ஸ பத3ம் கிம்
இந்நூலில் ‘தத்பவ’ இயலில் ‘த்ரிலிங்க3’ சொல்லில் இருந்து ‘தெலு(கு3தெலுங்கு3’ என்ற சொற்கள்பிறந்ததாக நிறுவிக்  காட்டப்பட்டன.
            இந்நூல் சிந்தாமணி உருவாக்கிய தெலுங்கு இலக்கணக் கலைச் சொற்கள் மட்டுமல்லாமல்அவற்றோடு வால்மீகி பிராகிருத இலக்கணத்தில் இருந்தும் சொற்களைப் பயன்படுத்தியுள்ளது. “ஸஞ்ஜ்ஞாப்ராக்ருத வச்ச” என்று சூத்திரம் படைத்து “இஹஸா2ஸ்த்ரே வால்மீகீ யாதி3வத்பாணினீ யாதி3 வச்சஸஞ்ஜ்ஞாவேதி3 தவ்யா” என்று விளக்கம் தந்துள்ளார் (சஞ்ஜ்ஞா – சூ – 3). பிராகிருத இலக்கணச்சொற்களைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெளிவாக எடுத்துக் கூறிய முதல் இலக்கண நூல் இதுவேயாகும்.
            பாணினீய மாஹேஸ்வர சூத்திரங்களான அண் (  ), ஏங் ( ), யண் (   ), ஜஸ்2 ( 33 3 3போன்ற குறியீட்டுச் சொற்களை அவ்வாறே பயன்படுத்தியுள்ளதுசமற்கிருத இலக்கணத்தில்இருந்து கையாளப்பட்ட ‘அச்’ என்ற குறியீட்டுச் சொல்லை ‘அச் ப்ராண :’ (உயிர் பிராணம்என்றுபயன்படுத்தியுள்ளது.
            சமற்கிருத சூத்திராந்திர வியாகரணத்தில் (1842) புதிய கலைச் சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
1.    உந்நாத3யஸ்2சிஉந்ந (இருக்கிறபோன்ற சொற்களுக்குச் ‘சி’ என்ற குறியீடாகச் சுட்டுவது.
2.    அந்த்யாக்ஷரண்டி:” ஈற்றெழுத்திற்கு ‘டி’ குறியீட்டைப் பயன்படுத்துவதுஇது பாணினீயத்தின்டி’ குறியீட்டைக் காட்டிலும் மாறானது.
3.    சிதோஹலோத்3வே” சகரம் இகரமாக உள்ள மெய்க்கு இரட்டிப்பாக வரும்.
            இக்கலைச்சொற்களும் குறியீடுகளும் பயனுள்ளதாகவும் பொருளற்ற நிலையிலும் உள்ளதால் இவைபாலவியாகரணத்தில் பயன்படுத்தவில்லை.
            மேற்கூறப்பட்ட இலக்கணங்கள் அனைத்திலும் பாணினீயச் சொற்கள் அப்படியேபயன்படுத்தப்பட்டுள்ளனஸுப3ந்தம்திஙந்தம்ணிஜர்த2ம்க்த்வார்த2ம்ஸமாஸம்காரகம்க்ருதந்தம்,தத்திதம் போன்ற சொற்கள் முன்னால் இலக்கணங்களில் இருந்து கையாளப்பட்டுள்ளன.
            சமற்கிருத மொழியில் உள்ள இந்தத் தெலுங்கு இலக்கணங்களில் சூரி பாலவியாகரணத்தில்பயன்படுத்திய இத்3வர்ணம்அதி4காரம்அதிதே32ம்த்ருவர்ணகார்த2கம்பர்யுதா3ஸம்க்ருதாக்ருதப்ரஸங்கி34வத்யர்த2ம் போன்ற மிகவும் கடினமான குறியீட்டுச் சொற்களைப் பயன்படுத்தாமல் இருப்பதுகவனிக்கத் தக்கது.    
            சமற்கிருத முக்தபோத இலக்கண அமைப்பில் பயன்படுத்திய ஏகாக்ஷர (ஓரெழுத்து), த்3வ்யக்ஷர(இரண்டெழுத்துபோன்ற சொற்களைத் திரிலிங்க சப்தானு சாஸனம் -IIவைக்ருத சந்திரிகசமற்கிருதசூத்திராந்திர வியாகரணங்கள் உருவாக்கின.
செய்யுள் அமைப்பு இலக்கணங்கள்
            செய்யுள் அமைப்பு இலக்கணங்கள் பெரும்பாலும் சமற்கிருதப் பெயர்களைத் தவிர்க்க முயன்றுள்ளன.இவ்விலக்கணங்கள் தெலுங்குமொழிக் கேற்றவாறு இலக்கணச் சொற்களை உருவாக்கிக் கொண்டன.
            ஆந்திர பாஷா பூஷணத்தில் ங்இத்துகித்துடித்துகணமு போன்று சூத்திரச் சுருக்கத்திற்காகப்பயன்படுத்தும் சொற்களையோ பருஷஸரளஸ்தி2ரம் என்ற எழுத்து வகைப்பாட்டுக்கான சொற்களையோகளாத்ருத பிரகிருதிகம் போன்ற கலைச் சொற்கள் லோபம்ஆகமம்ஆதேசம்நித்யம் போன்ற விகாரத்தொடர்புச் சொற்களையோ காண முடியாது.
            இந்நூல் உயிரீற்றுச் சொற்களை அகாரேகாரோகாராந்தமுலு (அகர இகர உகர ஈற்றுச் சொற்கள்)என்று குறிப்பிடாமல் அதற்கு மாறாகக்
            கந்தம் :            “புற்றகு3 நுற்றந்தமுபை
                         முற்றகு3 நற்றந்த 2ப்33முலபை : ரெண்டந்
                         டு3ற்றகு3பு3ருஷாக்2யலபை
                         நற்றுற்றகு3 நட்டியெட3 நபி4நவத3ண்டீ3” (செய்யுள் : 35)
எனவரும் விதியில் அற்றுஇற்றுஉற்று என்று குறிப்பிட்டுள்ளது. ‘அத்’ என்பதில் உள்ள ‘கரம் பொருள்உடையதுஇதில் வரும் ‘ற்று’ என்பது பொருளற்றது (ஜிலலிதா. 113) ஆகும்.
            சமற்கிருதத்தில் இணைப்புச் சொல்லைச் ‘சார்த2ம்’ என்பர்காவ்யாலங்கார சூடாமணி (1400) யில்இச்சொல்லைச் சகாரம் (9 – 56) என்று குறிப்பிட்டுள்ளதுமுழுவட்டத்தை (0) ‘ஊது3’ என்றுபயன்படுத்தியுள்ளது.
            கவி சிந்தாமணியில் (கி.பி. 15) தத்பவ மொழியை ‘அபப்4ரம்ஸ2 மொழி’ என்று குறிப்பிடுகின்றது.மேலும் விஷேஷ்யத்தைத் ‘த்3ரவ்யம்’ என்றும் விஷேஷணத்தை (பண்புச் சொற்களை) ‘கு3ணபத3ம்’ என்றும்குறிப்பிடுகிறது.
            லக்ஷணஸார சங்கிரஹத்தில் (கி.பி. 16) தெலுங்கு எழுத்துகள் 52 என்று குறிப்பிட்டுஅவ்வெழுத்துகள் நக்ஷத்ரப் பெயர்களைக் கொண்டு வகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளனஇதில் நக்ஷத்ரம்என்ற சொல்லுக்கு ‘ருக்ஷம்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதுஇத்தன்மை மற்ற தெலுங்குஇலக்கணங்களில் காணப்படாத சிறப்பாகும்.
            சான்று :          
                        “ள க்ஷ றல் ரேவதி யநெடி3 ருக்ஷமகு3நு” (1 – 23)
( க்ஷ  – இவ்வெழுத்துகள் ரேவதி என்ற நக்ஷத்திரமாகும்)
            கவிஜன சஞ்ஜீவநி (கி.பி. 16) இயல் என்பதற்குத் ‘தரங்கமு’ என்று பயன்படுத்தியுள்ளது.
            லக்ஷண சிரோமணி (கி.பி. 18) எழுத்திற்கு வர்ணம் (எழுத்துஎன்றால் அக்ஷரம் என்றும் அர்ணம்என்றும் மாத்ருக என்று கூறியுள்ளது.
            கவி சம்ஸய விச்சேதமும் (கி.பி. 1720 – 1785) இயல் என்பதற்குத் ‘தரங்கம்’ என்றுபயன்படுத்தியுள்ளது.
            லக்ஷணமஞ்ஜரி (கி.பி. 18) றகரத்தைப் ‘3ண்டி3ரா’ (மஞ். 13. 25 யதிஎன்றுகுறிப்பிட்டுள்ளதுவின்னகோடஸத்தனஅப்பகவி ‘ஏகதரயதி’ (ஒரேவகை யதிஎன்று குறிப்பிட மற்ற யாப்புஇலக்கணிகள் இதை “எக்கடியதி’ என்று குறிப்பிட்டனர்ஆனால் பீமன போன்றோர் ‘எக்கடிவடி3’ என்றுகுறிப்பிட்டனர்இந்நூலாசிரியர் அப்பகவியையே பின்பற்றினார்.
            வேற்றுமைகளைச் சமற்கிருத இலக்கண மரபைப் பின்பற்றிப் ப்ரத2த்3விதீய என்றும் வேற்றுமைஉருபுகளை ‘வர்ணகமு’ என்று கூறுவது மரபுஆனால் பட்டாபிராம பண்டிதீயத்தில் (1816) மொத3டி வந்நிய(முதல் வேற்றுமை உருபுஎன்று உருபுக்கு ‘வந்நிய’ என்ற பெயரை இட்டுள்ளது.
            ஸீஸம் :
                        டு3முவுலு நாவர்ணகமுலு மொதடி வந்நி
                        யலு கூர்சில நிநு வந்நெலு 3(பக3
                        ரெண்ட3 யவி மரி யுண்டசே சேததோ
                        தோட3 நா வந்நெலு மூ(3 யவி
                        கொறகை யநுநநி வருஸ நாலவயவி (பட்டசப்த – 107) சூரி பாலவியாகரணத்திலும்த்ருவர்ணகார்த2ம்புநந்தெ3டி3 யெரு3 வந்நியலகு3 என்ற சூத்திரம் அமைந்துள்ளதுஅதில் ‘வந்நிய’ என்றசொல்லை சூரி இந்நூலிலிருந்து கையாண்டு இருக்கலாம்.
            பத்யாந்திர வியாகரணத்தில் (1897) மல்லம் பல்லி மல்லிகார்ஜுன சாஸ்திரி எழுத்துகளைப் பற்றிவிளக்கும் நிலையில்   – க்கள் த்3விஸ்வரைக்யமுலு (  +  =  :  +  = ),   – க்கள்த்ரிஸ்வரைக்யமுலு ( +  =  ;  +  + என்றும் விளக்கிய இவரே ‘அச்சு’, ‘ஹல்லு’ என்ற சொற்கள்பாணினீயச் சொற்கள் என்று குறிப்பிடுகிறார்.
            சிந்தாமணி வக்ரமுவக்ரதமமு என்ற சொற்களைக் குறிப்பிட இவர் “அகாராதி3  (லுகாராந்தமுபரிஸே2ஷந்யாயமுந வக்ரதரம்பு3லகு3” (சங்ஞா – 23) என்று (ரு லுஎழுத்துகளுக்கு ‘வக்ர தரமு’ என்ற புதியபெயரைச் சுட்டியுள்ளார்.
            செய்யுள் அமைப்பு இலக்கணங்களில் கலைச் சொற்களைப் பயன்படுத்துவதில் சுதந்திரமாகச்செயல்பட்டனர் தெலுங்கு இலக்கணிகள்கேதனவின்னகோட பெத்தன சிந்தாமணியை அறியாமல்இருக்கலாம்பின் வந்தவர் சிந்தாமணியைப் பார்த்தும் அதில் உள்ள கலைச் சொற்களைப்பயன்படுத்தவில்லைஇவர்களில் கணபவரபு வேங்கடகவி மட்டும் சமற்கிருத இலக்கணக் கலைச் சொற்களைமுழுமையாகப் பயன்படுத்தினார்.
            சிந்தாமணி உருவாக்கிய வக்ரவக்ரதமபருஷஸரளஸ்தி2களாதிருத ப்ரக்ருதிகதத்33கமாதி3 –சொற்களைச் செய்யுள் வகை இலக்கணிகள் ஏற்றுக் கொள்ளவில்லைகூசிமஞ்சி திம்மகவி மட்டும் ஓர்இடத்தில் ‘த்ருதப்ருக்ருதிகம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் (1 : 107).
            செய்யுள் அமைப்பு இலக்கணங்கள் ‘த்ருதம்’ என்பதை நாந்தம் என்றும் பருஷங்களைக்     என்றும் சரளங்களைக் 3  3 3  என்றும் ‘க்த்வார்த2ம் என்பதை ‘ல்யப3ந்தம்’ என்றும்ப்ரேரணார்த2கம்’ என்பதை ‘ணிஜந்தம்’ என்றும் கூறிச் சென்றன.
            செய்யுள் அமைப்பு இலக்கணங்கள் துருத பிரகிருதிகத்தை ‘நாந்தம்’ என்றும் நெடிலைச் ‘சாவு’ என்றும்பிந்துவைப் ‘பொட்டு’ என்றும் கூறிச் சென்றன.
சூத்திராந்திர வியாகரணங்கள்
            சூத்திராந்திர வியாகரணங்கள் புதிய கலைச் சொற்கள் சிலவற்றை அறிமுகப் படுத்தியுள்ளன.
            லகு வியாகரணம் (1856) சிந்தாமணியில் குறிப்பிடாத ‘ஸத்யர்த2கம்’ என்ற வினை தொடர்பான ஒருசொல்லை அறிமுகப் படுத்தியுள்ளது. “ஸத்யர்த2ம்ப3 நொக க்ரிய மறியொக க்ரியநு ஸுசிஞ்சுட” (வினை சூ– 41) என்று ஒரு வினை மற்றொரு வினையைக் குறிப்பிடுவது ‘சத்பர்தம்’ என்று விளக்கத்தையும் தந்துள்ளது.
            பாலவியாகரணம் (1858) சமற்கிருத இலக்கணங்களில் இருந்து கலைச் சொற்களைக்கையாண்டுள்ளதுசிலவற்றைச் சிந்தாமணியில் இருந்து எடுத்துள்ளதுலாட்டுலூட்டுலஙி என்றலகாரங்களும் (காலக் குறியீடுகள்), முத்துகுஞ்ஞ, ஙித்து போன்ற ப்ரத்யாஹாரக் குறியீடுகளையும் புதிதாகஉருவாக்கியது.

            மற்ற இலக்கணங்கள் பெரும்பாலான சொற்களைச் சமற்கிருத இலக்கணங்களில் இருந்துகையாளப்பட்டுள்ளன. தெலுங்கு இலக்கண வரலாற்றில் பெரும்பாலான செய்யுள்வகை இலக்கணங்கள்மட்டும் இலக்கணக் கலைச்சொற் பயன்பாட்டில் மாற்றுப் பெயர்களை இட்டுச் சென்றன. பெரும்பாலானதெலுங்கு இலக்கணங்கள் சமற்கிருதச் சொற்களையே பயன்படுத்தியுள்ளன.

 முனைவர் சி.சாவித்ரி
            உதவிப் பேராசிரியர்
            இந்திய மொழிகள் பள்ளி மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி
            தமிழ்ப் பல்கலைக் கழகம்
           தஞ்சாவூர்.

சுவாமிநாதம் – பாலவியாகரணம் புறக்கட்டமைப்பு நிலை ஒப்பீடு 
-       சத்தியராஜ்


கி.பி.19ஆம் நூற்றாண்டில் சுவாமிநாதமும்(தமிழ்பாலவியாகரணமும்(தெலுங்குஎழுதப்பெற்றனஇவ்விரு நூலாசிரியர்கள் முறையே சாமிகவிராயரும் சின்னயசூரியும் ஆவர். சாமிகவிராயர் தமிழ் இலக்கணக் கூறுகளை விளக்கியுள்ளார். சின்னயசூரி, தெலுங்கு இலக்கணக் கூறுகளுடன் சமசுகிருதம், பிராகிருதம் ஆகிய மொழிக்குரிய இலக்கணக் கூறுகளையும் விளக்கியுள்ளார். இதனைச் சஞ்ஞா பரிச்சேதம் முதற்கொண்டே காணலாம். பெரும்பான்மையான  இடங்களில், தெலுங்கு சமசுகிருத இலக்கணக் கூறுகளை ஒப்பிட்டு விளக்கியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் தெலுங்கு இலக்கணக் கூறுகளை விளக்குவதுதான் சின்னயசூரியின் நோக்கமாக உள்ளது. இத்தன்மைமிகு இவ்விரு நூல்களை புறக்கட்டமைப்புச் சிந்தனைகளை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சுவாமிநாதம் அதிகாரம், மரபு என்னும் புறக்கட்டமைப்பில் உள்ளது. பாலவியாகரணம் பரிச்சேதம் எனும் புறக்கட்டமைப்பில் உள்ளது. சுவாமிநாதம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என அதிகாரப் பகுப்புடைத்து. இதன்கண் உள்ள ஒவ்வொரு அதிகாரமும் மும்மூன்று இயல்களாகக் கொண்டமைந்துள்ளது. பாலவியாகரணம் அதிகாரப்பகுப்பு முறையைப் பின்பற்றவில்லை. ஆனால் பத்து பரிச்சேதங்களைக் கொண்டமைந்துள்ளது. சுவாமிநாதத்தில்,
      .... .... ... ...
      செப்பெ ழுத்துச் சொற்பொருள்யாப்பு அலங்காரம் எனுமைந்
தமிழ்தின் இலக் கணவிரிவை ஒவ்வொருமூன்று இயலாய்
அடக்கிமொழி குவன்; சுவாமி நாதம் இந்நூற் பெயரே                      – சுவாமி.1
என்னும் மூன்றடிகளில் புறக்கட்டமைப்புச் சிந்தனையையும் நூலின் பெயரையும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளத் தன்மை புதுமையாக்கத்தில் (இப்புதுமையாக்கம் சாமிகவிராயர் காலத்தில் தோன்றியதன்று. இதனை வீரசோழியர் காலந்தொட்டே காணலாம். இருப்பினும் வீரசோழியத்தின் (கி.பி.11, நூ.3) பின்பு தோன்றின மரபிலக்கணங்களில் இலக்கணக்கொத்தும் (கி.பி.17, நூ.6) சுவாமிநாதமும் (கி.பி.19) பின்பற்றியுள்ளமைக்  குறிப்பிடத் தக்கனவாகும்) ஒன்றாக அமைந்துள்ளதெனலாம். மேலும், நூலின் பெயர், ஆசிரியரின் பெயர், மரபு, ஊர், நூல் தோன்றியதின் காரணம் ஆகியனவும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. அதனைப் பின்வரும் நூற்பாச் சுட்டிநிற்கும்.
            பூமிசைக்கீழ்க் கடல்குமரி குடகம்வேங் கடத்துட்
                        புகுந்ததமிழி ழியலைந்தும் அகவல்வி ருத்தமதால்
            ஆ(ம்)முன்னூல் வழியாய்மெய் யநித்தநூல்விரி வென்று
                        அஞ்சும் அவர் உணர்ந்துபய நூலுணரே துவினான்
            ஏம்மெனுஞ் சுவாமிநாதம் பகர்ந்தான்பொ திகைநிகண்டு
                        உரைத்தோன்சில் சுப்பிரமணி யனெனும் என்னை
            மாமகனென் றருளும் எந்தை நதிகுலன்கல் லிடையூர்
                        வாழ்சுவாமி கவிராசன் எனநூல்வல் லோனே                                   – சுவாமி.1
இத்தன்மைகளைப் பாலவியாகரணத்தில் காண இயலவில்லை.
            இரு நூலாரும் எழுத்துகளின் அறிமுகம், சொல்வகை, புணர்ச்சி (சந்தி), வேற்றுமை (விபத்தி), பெயர் (நாமம்), வினை (கிரியா), எச்சம் ஆகியனவற்றை முன்வைத்துள்ளனர். சாமிகவிராயர் நூல்வழி அறிதலையும் (பாயிரம்), சின்னயசூரி மொழித்தூய்மைநிலை, முதல், இரண்டாம் நிலைத் திரிசொற்கள் ஆகியனவற்றையும் கூடுதலாக எண்ணியுள்ளனர்.
            பொருள், யாப்பு, அணி இலக்கணக் கூறுகள் சுவாமிநாதத்தில் விளக்கப்பட்டுள்ளன; இவைகளுள் யாப்பியல் (சந்தசு) கூறுமட்டும் பாலவியாகரணத்தில் (பிர. 23 - 25) சிந்திக்கப்பட்டுள்ளது. அச்சிந்தனை நன்னயாவைப் பின்பற்றி எழுந்ததென்பது குறிப்பிடத்தக்கது. அச்சிந்தனையாவது யாதெனில் வளி/யதி (எதுகை), பிராசம் (மோனை) என்பனவாகும். இவ்விரு நூல்களின் புறக்கட்டமைப்பு நிலை ஒப்பீட்டு அட்டவணை வருமாறு:
சுவாமிநாதம்                         பாலவியாகரணம்
நூல்வழி                                    சஞ்ஞா பரிச்சேதம்
எழுத்ததிகாரம்                            சந்தி பரிச்சேதம்
சொல்லதிகாரம்                          தத்சம பரிச்சேதம்
பொருளதிகாரம்                         ஆச்சிக பரிச்சேதம்
யாப்பதிகாரம்                             காரக பரிச்சேதம்
அணியதிகாரம்                           சமாச பரிச்சேதம்
                                                தத்தித பரிச்சேதம்
                                                கிரியா பரிச்சேதம்
                                                கிருதந்த பரிச்சேதம்
                                                பிரகீர்ணக பரிச்சேதம்
            எழுத்துக்களின் அறிமுகத்திற்கும் சொற்களின் அறிமுகத்திற்கும் தனித்தனி அதிகாரப் பகுப்புமுறையைச் சாமிகவிராயர் பின்பற்றியுள்ளார். சின்னயசூரி, ஒரே இயலில்(சஞ்ஞா பரிச்சேதம்) எழுத்தையும் சொல்லின் வகைப்பாடுகளையும் அறிமுகம் செய்துவிட்டுப் பின்பு சொற்களைத் தூய தெலுங்கு மொழிச்சொற்கள், பிறமொழிச் சொற்கள் எனத் தனித்தனியாக அடையாளம் காணுமாறு படைத்துள்ளார். இது வேறுபாடும் புதுமையாக்கமுமாக உள்ளதெனலாம். ஏனெனில், சுவாமிநாதத்தில் வடசொற்கள் கையாளப்பட்டுள்ளன; ஆனால் அவற்றுக்கான இலக்கணம் உரைக்கவில்லை.
            சுவாமிநாதம் பொது, சிறப்புப் பாயிரங்களை விளக்கிப் பின்பு 15, 16, 17 ஆகிய மூன்று நூற்பாக்களில் தமிழ் எழுத்துகளின் அறிமுகத்தையும் அவற்றின் பிறப்புக்குறித்தக் கருத்தியலையும் விளக்கியுள்ளது. பாலவியாகரணம் இம்முறையைப் பின்பற்றவில்லை. நேரிடையாக எழுத்துகளின் அறிமுகத்துடன் தொடங்கியுள்ளது. அம்மாறுபாடு யாதெனில், தெலுங்கு மொழிக்கு எழுதப்பட்ட இலக்கணம் அம்மொழிக்குரிய எழுத்துகளை அறிமுகம் செய்யாமல் சமசுகிருத, பிராகிருத மொழிகளின் எழுத்துகளை முதலில் அறிமுகம் செய்தமையாகும். அதனைப் பின்வரும் விதிகள் புலப்படுத்டும்.
            ஸம்ஸ்க்ரு1தநகு வர்ணமு லேப3தி3                  – பா.வி.சஞ்.1
            ப்ராக்ரு1தநகு வர்ணமுலு நலுவதி                – பா.வி.சஞ். 2
            தெலுகு3நகு வர்ணமுலு முப்பதி3யாறு           – பா.வி.சஞ். 3
சொல் குறித்த கருத்தியலைச் சுவாமிநாதம் பெயர், வினை, எச்சம் என்பனவாக முன்வைத்துள்ளது. தமிழிலக்கணச் சொல்வகைப்பாட்டுள் வரும் இடையும் உரியும் எச்ச மரபிற்குள் வைத்து விளக்கப்பட்டுள்ளன. பாலவியாகரணத்தில் தத்சமம், ஆச்சிகம், வினை ஆகியன மட்டும் தனித்தனி இயலாக விளக்கப்பட, தத்பவம், தேசியம், கிராமியம் ஆகியன ஆங்காங்கு விளக்கப்பட்டுள்ளன. அவை தவித்த பிறவும் இடையிடையே கோடிட்டுக் காண்பித்துச் செல்லப்பட்டுள்ளன.
பெயர்ச்சொல் குறித்த சிந்தனையைச் சுவாமிநாதம் பெயர்மரபு எனும் இயலில் விளக்கியுள்ளது. அவ்விளக்கம், சொல்லின் பொது இலக்கணம், சொல்வகைப்பாடு, வழக்குச் சொற்கள், செய்யுளீட்டற்குரியச் சொற்கள், வேற்றுமை என்பனவாக உள்ளன. இக்கருத்தியலைப் பாலவியாகரணம் ஆறு இயல்களில்( சந்தி, தத்சம்ம், ஆச்சிகம், காரகம், தத்திதம், சமாசம்) முன்வைத்துள்ளது.
வினைச்சொல் குறித்த சிந்தனையை இரு நூலாரும் பேசியுள்ளனர். சாமிகவிராயர் வினைச்சொற்களை ஏழு நூற்பாக்களில் விளக்கியுள்ளனர். அவ்விளக்கம், பொது, தனி, தொடர், முற்று, விகுதி, பிறவினை, தொழிற்பெயர், இருதிணை, எச்சம் (பெயர், வினை) என்பனவாக அமைந்துள்ளன. சின்னயசூரி, வினையியல் (கிரியா), வினையொடு இயல் (கிருதந்தம்) ஆயிரு இயல்களில் (146 விதிகள்) விரிவாக விளக்கியுள்ளார். இத்தன்மை மொழியியல் நோக்கில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எஞ்சிய சிந்தனைகளை விளக்குமுறையில் இரு நூலாரின் கருத்துகளும் வேறுபட்டே காணப்படுகின்றது. இதனைச் சாமிகவிராயர் இடைச்சொல்(பொது, சிறப்பு, ஏ, உம், மற்று), உரிச்சொல், வழு, பொதுமை நீங்கு நெறி(திணை, பால், இடம்), தொகை, தொகாநிலைத் தொடர், எச்சம், பொருள்கோள் என விளக்கிச் செல்ல, சின்னயசூரி எழுத்தியல் (பிறப்பு, புணர்ப்பு), சொல்லியல் (திட்டுதல், ஒருசொல்லடுக்கு), யாப்பியல் (சந்தசு) என விளக்கிச் சென்றமையிலிருந்து அறியலாம்.
மேற்குறித்த சிந்தனைகள் அனைத்தையும் விளக்குவதற்குச் சாமிகவிராயர் தமிழ், சமசுகிருதச் சொற்களையும் சின்னயசூரி தெலுங்கு, சமசுகிருதம், பிராகிருதச் சொற்களையும் கலைச்சொற்களாக எடுத்தாண்டுள்ளனர்.
இதுவரை விளக்கப்பட்ட கருத்தியல்களின்வழி அறிய வருவன: 1. இருநூல்களும் ஒரே காலக்கட்டத்தில் எழுதப்பட்டுள்ளவை, 2. இருவரும் தத்தம் மொழிக்குரிய இலக்கணக் கூறுகளை விளக்குவதையே கருத்தில் கொண்டமை, 3. அவ்விருவரும் சமசுகிருதச் சொற்களைக் கலைச்சொற்களாக எடுத்தாண்டமை. இத்தன்மைகளின் வாயில் அவ்விருவிருக்கும் வடமொழிப் புலமை மிகுந்தே காணப்பட்டுள்ளமை அறியப் பெறுகின்றதெனலாம்.
துணைநூற்பட்டியல்
தமிழ்
1.    அகத்தியலிங்கம் ச., திராவிட மொழிகள் -1, ம்ணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்.
2.    அறவேந்தன் இரா., 2006, “வீரசோழியம் ஆந்திர சப்த சிந்தமணி புறக்கட்டமைப்பு நிலையில் ஒபாய்வு”, ஒப்பு நோக்கில்  இலக்கிய இலக்கணங்கள், நியூவிசன் வெளியீட்டகம், தஞ்சாவூர்.
3.    சண்முகம் செ.வை.(உரை.), 1975, சுவமிநாதம் மூலமும் உரையும், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலைநகர்.
4.    சாவித்ரி சி.(மொ.ஆ.), ஆந்திர சப்த சிந்தாமணி, அச்சில்.
5.    தமிழண்ணல், 2008, தொல்காப்பிய மூலமும் குறிப்புரையும், மீனாட்சி புத்தக நிலையம்மதுரை.
ஆங்கிலம்
6.    Subrahmanyam P.S., 2002, Ba:lavya:karaNamu of Paravastu Cinnayasu:ri, Dravidian Linguistics Association, Thiruvananthapuram.
தெலுங்கு
7.    பரவத்து சின்னயசூரி, 1994, பாலவியாகரணம், பாலசரசுவதி புத்தகாலயம், சென்னை.

(இக்கட்டுரை திசம்பர் 2012 அன்று கற்பகம் பல்கலைக் கழகமும்(கோயம்பத்தூர்) ஆர் அனைத்திந்திய கழகத்தாராலும் நிகழ்த்தப் பெற்ற கருத்தரங்கில் வாசிக்கப்பெற்ற கட்டுரையாகும். இது தமிழ் ஆறு எனும் தொகுப்பு நூலில் 222 - 225 பக்கங்களில் இடம்பெற்றுள்ளது)

                                                                                                      - த. சத்தியராஜ்

1.0 முகப்பு
ஆய்வுக் கட்டுரை: ஏழாம் இலக்கணம் மரபா? நவீனமா?
தமிழில் எழுதப்பட்ட இலக்கணங்களை மரபிலக்கணங்கள், நவீன இலக்கணங்கள் எனப் பாகுபடுத்திப் பார்ப்பது பெரும்பான்மையான ஆய்வறிஞர்களின் துணிபு. அவற்றுள் மரபிலக்கணங்களைப் பட்டியலிட இருபதாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும்(2010:112), நூற்பா வடிவில் அமைந்திருக்க வேண்டும்(2010:299-300) என்பது இலக்கணவியல் அறிஞரின் கருத்து. அதாவது அறுவகை இலக்கணம் வரை எழுதப்பட்ட நூல்களை மரபிலக்கணங்களிலும், பிறவற்றை நவீன இலக்கணங்களிலும் வைக்கலாம் என்பது அவ்வறிஞரின் கருத்தாகப் புலப்படுகிறது. அக்கருத்து மரபிலக்கணக் காலநீட்சியை அறிவதற்கான கருதுகோள்கள் எனில், ஏழாம் இலக்கணத்தையும் மரபிலக்கண வரிசையில் வத்துப் பார்ப்பதே பொருத்தமுடையதாக இருக்கும். ஆக, ஏழாம் இலக்கணம் மரபா? அல்லது நவீனமா? என அறிவதாக இக்கட்டுரை அமைகிறது.

1.0. ஏழாம் இலக்கணமும் அதன் பகுப்பும்
தவத்திரு தண்டபாணி சுவாமிகளால் எழுதப்பட்ட இலக்கண நூல்கள் இரண்டு. ஒன்று: அறுவகையிலக்கணம். இது புலமையிலக்கணக்கத்தை ஆறாம் இலக்கணமாகக் கற்பிக்கிறது. மற்றொன்று: ஏழாம் இலக்கணம். இது தவத்தை ஏழாம் இலக்கணமாக கற்பிக்கிறது. இவ்விரு நூல்களும் கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல்களாகும். இவை சமகாலத் தரவுகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தருபவை.
இவற்றுள் ஏழாம் இலக்கணம் புணர்ப்பு இயல்பு, சொல்நிலை இயல்பு, பொருள் இயல்பு, யாப்பு இயல்பு, அணி இயல்பு, புலமை இயல்பு, தவ இயல்பு எனும் பகுப்புகளை உள்ளடக்கிய ஒரு நூல்.
2.0. ஏழாம் இலக்கணம் ஒரு மரபிலக்கணமே
மரபு என்பதற்கு ஒரு கருத்து நிலைபெற, அக்கருத்து பலரால் எடுத்தாளப்பெறுவது என மிகுதியான அறிஞர்கள் கருதுகின்றனர். அதனடிப்படையிலே தொல்காப்பியத்தைத் தொல்மரபின் காலநீட்சியில் வைத்துப் பார்க்கப்படுகிறது. அதன் கருத்தியல் பின்பு வந்த இலக்கணக் கலைஞர்களால் எடுத்தாளப் பெற்றது. இத்தன்மை மரபிலக்கணங்களாக கருதக்கூடிய ஒவ்வொரு இலக்கண நூல்களிலும் இழையோடுவதைக் காணலாம்.
மரபு சார்ந்த இலக்கணங்களை மிகுதியான ஆய்வறிஞர்கள் சுவாமிநாதம் வரை விளக்க முற்படுகின்றனர். சிலர் அறுவகை இலக்கணம் வரை அல்லது இருபதாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்ட இலக்கணங்கள் என் வரையறை செய்கின்றனர். அவ்வரையறைகளிலிருந்து மரபிலக்கணத்திற்குரியத் தகுதிகளாக அவ்வாய்வறிஞர்கள் கருதும் கருதுகோள்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
• தொல்மரபைத் தொகுத்தும் சுருக்கியும் விரித்தும் புதுக்கியும் பார்ப்பது.
• சமசுக்கிருதக் கோட்பாட்டைத் தொல்மரபுக் கோட்பாட்டிற்குப் புடைமாற்றித் தருவது.
• சமசுகிருதக் கோட்பாட்டைத் தமிழுக்கு மொழிபெயர்த்துத் தருவது.
• தொல்மரபையும் சமசுக்கிருத மரபையும் ஒப்பிடுவது.
• நூற்பா(விதி) வடிவில் விளக்குவது.
• இருபதாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்டது.

இக்கருதுகோள்கள் அனைத்தும் ஒரே இலக்கணத்துள் அமைந்து விடுவதும் இல்லை. அவற்றில் சில ஓரிலக்கணத்தில் அமைவதைக் காணலாம். அக்கருதுகோள்கள் அனைத்தும் மரபிலக்கணங்களாகக் கருதக்கூடிய இலக்கணங்களுக்குப் பொருந்தும் எனில், அவை ஏழாம் இலக்கணத்திற்கும் பொருந்திவரும் என்பதே உணமை. இருப்பினும் ஏழாம் இலக்கணத்தை மரபிலக்கணக் காலநீட்சியில் வைத்துப் பார்ப்பதில்லையே ஏன்? அதற்கான விடையை  அறுவகை இலக்கணத்துடன் ஒப்ப வைத்துப் பார்ப்பது, மரபிலக்கணக் கருத்தியலுடன் ஒப்பவைத்துப் பார்ப்பது என்ற இருவழிகளில் அறிய முயல்வோம்.
3.1. அறுவகையிலக்கணமும் ஏழாம் இலக்கணமும்: புறக்கட்டமைப்பு நிலை
 இங்கு அறுவகையிலக்கணத்தையும் ஏழாம் இலக்கணத்தையும்  புறக்கட்டமைப்புநிலையில் ஒப்பவைத்துப் பார்ப்பதின் நோக்கம் என்னவெனின்? அறுவகையிலக்கணம் மரபிலக்கணமாக எண்ணப்பட்ட நூல். ஏழாம் இலக்கணம் அவ்வாறு கருதப்பெறாத நூல். அவ்விரு நூல்களும் சமகாலத்தவை. எனவே புறக்கட்டமைப்பு நிலையில் ஒப்பவைத்துப் பார்க்கப்படுகிறது.
அறுவகையிலக்கணம் புலமையிலக்கணத்தைப் புத்திலக்கணமாகத் தர, ஏழாம் இலக்கணம் தவத்தைப் புத்திலக்கணமாகத் தருகிறது. இவ்வாறு புதுமைகளைப் புகுத்துவதே தத்தம் இலக்காகக் கொண்டுள்ளன அவ்விரு நூல்களும். அறுவகை இலக்கணம் குறித்து ச.வே.சுப்பிரமணியன் தரும் கருத்து இங்குச் சுட்டிகாட்டத்தகுந்தது.
 புலமை இலக்கணம் என்ற ஒரு புத்திலக்கணத்தையே படைத்துக்கொள்ளல், எழுத்திலக்கணத்தில் வரிவடிவை நுழைத்தல், பொருள் இலக்கணத்தின் புதுமை ஆகிய பெரு மாற்றங்களாலும் சொல், யாப்பு, அணி இலக்கணங்களிலும் புதுவழி கண்டுள்ளதாலும், இது பழைய நூல்களில் பயின்று உள்ள நூற்பாக்களையே மாற்றியமைத்தும் அல்லது அப்படியே எடுத்தாண்டும் சிற்சில வேறுபாடுகளை மாத்திரம் பெற்று விளங்கும் ஒரு வழி நூலாகாமை தெளிவு. வேறு இலக்கண நூல்களிலிருந்து ஒரே ஒரு நூற்பாக்கூட எடுத்து இவரால் தம் நூலுள் இணைத்துக் கொள்ளப்படவில்லை என்பது கருதத்தக்கது(2009:724).
இக்கருத்து ஏழாம் இலக்கணத்தை மரபிலக்கணமாகக் கருதக்கூடிய வழியை அமைத்துத் தருகிறது. ஏனெனில் ஏழாம் இலக்கணத்தின் சிலவிதிகள் முந்து நூல்களிலிருந்து அப்படியே எடுத்தாண்டுள்ளமையைக் காணலாம். காட்டாக,
 தன்மை முன்னிலை படர்க்கை மூன்றுஇடம் ஆம்;
 நான்எனல் தன்மை, நீஎனல் முன்னிலை;
 அவன் அவள் அவர் அஃது அவை எனல் படர்க்கையே  – ஏ.இ.14

எனும் ஏழாம் இலக்கண விதியைக் குறிப்பிடலாம். இவ்விதி முந்து நூல்களாகிய தொன்னூல் விளக்கத்தைத் தழுவி எழுதப்பட்டுள்ளது என்பதை,
 மூவிடம் தன்மை முன்னிலை படர்க்கை
 தன்மை ஆகும் நான் யான் நாம் யாம்
 முன்னிலை நீநீயிர் நீவிர் நீர் எல்லீர்
 ஏனைய படர்க்கை எல்லாம் பொதுவே   – தொ.வி.51

எனவரும் இவ்விதி புலப்படுத்தும். இவ்விதியின் முதலடியில் முதல் சீரானது ஏழாம் இலக்கணத்தில் நான்காம் சீராகவும், தன்மைக்குரியச் சொல்லில் நான் என்பதும், முன்னிலைக்குரியச் சொல்லில் நீ என்பதும் இடம்பெறுகின்றமையைச் சுட்டலாம். ஆக, ஏழாம் இலக்கணம் முன்னோர்க் கருத்தியலை அப்படியே எடுத்தாண்டாலும் கூடுதலாக அதற்குரிய சான்றுகளைத் தருவது முதனூலாக்க முயற்சியேயாம். ஏனெனின் அதன் முந்து நூல்கள் யாவும் விதிகளில் சான்றுகளைத் தரவில்லை என்பது கருதத்தக்கது. இருப்பினும் அறுவகையிலக்கணம் சில விதிகளில் சான்றுகளை இணைத்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
அறுவகையிலக்கணம்         ஏழாம் இலக்கணம்
பாயிரம்                                     பாயிரம்

1.எழுத்திலக்கணம்                    1.புணர்ப்பு இயல்பு
2.சொல்லிலக்கணம்                2.சொல்நிலை இயல்பு
3.பொருளிலக்கணம்                3.பொருள் இயல்பு
4.யாப்பிலக்கணம்                    4.யாப்பு இயல்பு
5.அணியிலக்கணம்                 5.அணி இயல்பு
6.புலமையிலக்கணம்             6.புலமை இயல்பு
                                                    7.தவ இயல்பு

என்பது அவ்விரு நூல்களின் பகுப்புமுறைகள். இவற்றுள் அறுவகையிலக்கணம் எழுத்திலக்கணத்தை உருவோசை இயல்பு, நிலை இயல்பு, புணர்ச்சி இயல்பு எனவும், சொல்லிலக்கணத்தை பொதுவியல்பு, பிரிவியல்பு, சார்பியல்பு, திரிவியல்பு எனவும், பொருளிலக்கணத்தை அகப்பொருள்நிலை(உறுப்பியல்பு, குறிப்பியல்பு,  பழமையியல்பு, துறையியல்பு), புறப்பொருள்நிலை(நிலத்தியல்பு, உழியியல்பு, வேற்றுயிர் இயல்பு, கருவி இயல்பு), அகப்புறப்பொருள்நிலை எனவும், யாப்பிலக்கணத்தை இயலிசைத் தமிழியல்பு, வண்ணவியல்பு, மோனை இயல்பு, எதுகை இயல்பு, நாற்கவி இயல்பு, பனுவல் இயல்பு எனவும், அணியிலக்கணத்தை உவமையியல்பு, உடைமை இயல்பு, மாந்தர் உடைமை இயல்பு, கற்பனை இயல்பு, நிகழ்ச்சி இயல்பு, ஆக்க இயல்பு எனவும், புலமையிலக்கணத்தைத் தோற்ற இயல்பு, தவறு இயல்பு, மரபியல்பு, செயல்வகை இயல்பு எனவும் எனப் பாகுபடுத்துகிறது. ஆனால் ஏழாம் இலக்கணம் சொல்லிலக்கணத்தை மட்டும் சொல்நிலை இயல்பு, பெயர்ச்சொல் இயல்பு, ஒற்றுமை இயல்பு, வினைச்சொல் இயல்பு, இடைச்சொல் இயல்பு, உரிச்சொல் இயல்பு எனப் பாகுபடுத்திப் பார்க்கிறது. இங்குச் சொல்லிலக்கணத்தைப் பாகுபாடு செய்வதில் முந்து நூல்களை நாடுகிறது ஏழாம் இலக்கணம் எனலாம். இருப்பினும் இவ்விரு நூல்களும் முந்து நூல்களின் தன்மைகளிலிருந்து சற்று விலகிக் காணப்படுவதற்குச் சமயப்பற்று மிகுதியாகக் காணப்படுவதே என்பார் செல்வராசு. அக்கருத்து இங்குச் சுட்டிக்காட்டத்தக்கது.
19- ஆம் நூற்றாண்டில் இலக்கணம் படைத்த தண்டபாணி சுவாமிகள் சமணர்களுக்கு எதிராகத்தான் இலக்கணம் படைக்க வந்தேன் என்று கூறிக்கொண்டு சமண சமய இலக்கண நூல்களின் கட்டமைப்பிலிருந்து விலகி, தம் நூலைப் புதிய முறையில் கட்டமைத்துள்ளார். நூலின் அகம், புறம் என்று இரு நிலைகளிலுமே இம்மாற்றம் மேற்கொள்ளப் பெற்றுள்ளது. ஐந்திலக்கண மரபு என்பதையே மாற்றி அவற்றை அறுவகையாகக் கூறியதும் இதனாலேயே ஆகும்(2008:78).
3.2. ஏழாம் இலக்கணமும் முந்துநூல்களும்
 ஏழாம் இலக்கணம் முந்து மரபு நூல்களின் கருத்துக்களைத் தாங்கி நிற்கும் பெட்டகமாகவும் விளங்கியது என்பதை முன்புக் காட்டிய சான்று நிறுவி நின்றாலும். இங்கு மேலும் சில சான்றுகளைச் சுட்டிக்காட்டினால் தெளிவான புரிதலை ஏற்படுத்தும்.
இறந்தது நிகழ்வது வருவது என்ன
மூன்று காலம் மொழிவார்; உதாரணம் 
முன்பு செய்தான், இப்போது செய்கிறான்
இனிச் செய்வான் என இயல்பாம் முறையே   – ஏ.இ.150

எனவரும் விதி வினைக்குரிய காலத்தை வரையறை செய்கிறது. அவ்விதி தமிழ் மொழிக்குரிய வினைச் சொற்கள் இறப்பு, நிகழ்வு, எதிர்வு எனும் மூன்று காலத்தை ஏற்கும் என விளக்கி நிற்கிறது. இக்கருத்துத் தொல்காலம் முதல் தாங்கி வந்த கருத்து என்பதை அதன் முந்து நூல்கள் காட்டும் உண்மை. அம்முந்து நூல்களின் கருத்துக்கள் வருமாறு:
இறப்பு, நிகழ்வு, எதிர்வில் எதிர்வுமுக் காலமே   – சுவாமி.59
இறப்பு நிகழ்வு மெதிர்வு மென்று
சொலப்படு மூன்று காலமுங் …      – மு.வீ.595
இறந்த காலத்து இடைநிலை தறட ஒற்று
இன்னே மூவிடத்து ஐம்பாற்கு ஏற்பன    – தொ.வி.108
நிகழ் பொழுது ஆநின்று இன்று கிறு என
ஐம்பால் மூவிடத்தும் ஆம் இடைநிலையே    – தொ.வி.109
எதிர்வரும் காலத்து இடைநிலைப் பவ் வ
ஐம்பால் மூவிடத்து ஆம் இவை சில இல    – தொ.வி.110
இறப்பு, எதிர்வு, நிகழ்வு எனக் காலம் மூன்றே   – நன்.382
இறப்பு நிகழ்வெதிர்வுவாங் காலங்கள்    – நேமி.63
இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா
அம்முக் காலமும்     – தொல்.685

இங்குக் குறிக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் பார்க்கும்பொழுது தொல்காப்பியம் தொட்டு சுவாமிநாதம் வரையிலான இலக்கணங்கள் காலத்துக்குரிய வகைகளை மட்டும் குறிப்பிட்டு நிற்க, ஏழாம் இலக்கணம் அதற்குரிய சான்றுகளையும் தந்து விதி அமைத்திருப்பது புதுமைப்போக்காக இருந்தாலும், முந்துநூல்களின் தழுவல் என்பதே உண்மை. அடுத்து,
ஏகாரத்தால் ஈற்றாசை, எதிர்மறை,
தேற்றம், எண், வினா, பிரிநிலை என்னும்
ஆறு பொருள் தரும்; அவற்றுள் ஈற்றசைக்கு
இச் சூத்திரமும் இலங்கு உதாரணமே    – ஏ.இ.240

எனவரும் விதியை நோக்குவோம். இவ்விதி ஏகார இடைச்சொல்லுக்கான பொருளை விளக்கி நிற்கும் விதியாகும். இவ்விதியில் ஏகாரம் ஈற்றசை, எதிர்மறை, தேற்றம், எண், வினா, பிரிநிலை ஆகிய ஆறு பொருள்களில் வரும் எனப்பட்டுள்ளது. இக்கருத்து இதன் முந்து நூல்களாகிய முத்துவீரியத்தில் எண், பிரிநிலை, ஈற்றசை, தேற்றம், வினா(650) எனவும், தொன்னூல் விளக்கத்தில் ஈற்றசை, தேற்றம், எண், வினா, பிரிநிலை, இசைநிலை(131) எனவும், இலக்கண விளக்கத்தில் தேற்றம், வினா, எண், பிரிநிலை, எதிர்மறை, ஈற்றசை(252) எனவும், நன்னூலில் பிரிநிலை, வினா, எண், ஈற்றசை, தேற்றம், இசைநிறை(422) எனவும், நேமிநாதத்தில் தேற்றம், வினா, எண், எதிர்மறை, ஈற்றசை(76) எனவும், தொல்காப்பியத்தில் தேற்றம், வினா, எதிர்மறை, எண், ஈற்றசை(742) எனவும் குறிக்கப்பட்டுள்ளமைக் கவனிக்கத்தக்கது. இம்முந்து நூல்களின் விளக்குமுறைகளில் ஏழாம் இலக்கணம் பெரிதும் தழுவியுள்ளது இலக்கண விளக்கத்தையே என்பதை,
தேற்றம் வினாவெண் பிரிநிலை யெதிர்மறை
யீற்றசை யெனவா றேகா ரம்மே    – இ.வி.252

எனவரும் விதியின்மூலம் அறியலாம்.
 இதுகாறும் விளக்கப்பட்ட கருத்தியல்களின் அடிப்படையில் நோக்கும்பொழுது முந்துநூல்களின் சாயல் ஏழாம் இலக்கணத்தில் காணப்படுகின்றமையை அறிய முடிகின்றது. இருப்பினும் அவ்விலக்கணப் பதிப்பாசிரியர்கள் மரபு சார்ந்த நிலையை சுவாமிநாதம் வரைக் குறித்துள்ளமைக் கவனிக்கத்தக்கது.
மரபுசார்ந்த நிலை என்பது தொல்காப்பியத்தை அடியொட்டி எழுந்த ஐந்திலக்கண நூல்களான, முத்துவீரியம், சுவாமிநாதம் முதலிய நூல்களைக் குறிப்பிடலாம்(2008:7).
இருப்பினும் அவர்கள் ஒருவாறு அறுவகை இலக்கணத்தையும் ஏழாம் இலக்கணத்தையும் மறைமுகமாக மரபிலக்கணங்களே என்பதை, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அறுவகை இலக்கணம், ஏழாம் இலக்கணம் ஆகிய நூல்களில் ‘புலமையை’ ஆறாம் இலக்கணமாகவும், ‘தவத்தை’ ஏழாம் இலக்கணமாகவும் வரையறுக்கிறார். இந்நூல்களும் ஐந்திலக்க்கண நூல்களின் நீட்சியாக எழுந்தவையாகும்(2008:7).
...இலக்கணச் சுருக்கம், பாலபோத இலக்கணம், இலக்கண வினாவிடை, இலக்கண நூலாதாரம், இலக்கண விளையாட்டு போன்ற நூல்கள் இயற்றப்பட்டன. இம்மரபு மாற்றாத்தினால், தமிழ்ச் சமூகத்தில் அனைவருக்கும் கல்வி எனும் பெரும் திருப்புமுனை ஏற்பட்டது(2008:7 – 8).
எனவரும் கருத்தியல்கள்வழிப் புலப்படுத்தி விடுகின்றனர். இவர்களின் கருத்துப்படி நூற்பா வடிவை விடுத்து, உரை வடிவ மாற்றமே மரபிலிருந்து விலகிய நவீனநிலை என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே, ஏழாம் இலக்கணத்தை மரபு சார்ந்த ஒரு இலக்கணமே எனத் துணிந்து கூறலாம். ஆக, இந்நூலை மரபுசார்ந்தது என ஏற்றுக் கொண்டால் பின்வரும் கருதுகோள்களுடன் மேற்கூறிய கருதுகோள்களையும் இணைத்துப் பார்க்கவேண்டும்.
• முந்து நூல்களின் சாயல் ஓரளவு புலப்படுவது.
• முந்து நூல்களின் கருத்துக்களை உள்வாங்கிப் புதிய விகளைத் தோற்றுவிப்பது.
• வழிநூல் தன்மையிலிருந்து முதனூல் தன்மையைப்பெற முயற்சிப்பது.
• சான்றுகளையும் இணைத்து விதிகளாக்கித் தருவது.

இதனடிப்படையில் நவீன இலக்கணத்துக்குரியத் தன்மையை ஒரே வரியில் சுட்டிவிடலாம். அது உரைநடை வடிவத்தில் மொழியை விளக்குதேயாம்.
துணைநின்றவை
1. அருள் வி., இளமாறன் பா.(பதிப்.), வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய ஏழாம் இலக்கணம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
2.  இராசாராம் சு., 2010, இலக்கணவியல் மீக்கோட்பாடும் கோட்பாடுகளும், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
3. சுப்பிரமணியன் ச.வே., 2009, தமிழ் இலக்கண நூல்கள், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம்.
4. செல்வராசு அ., 2008, இலக்கிய இலக்கணப் புரிதல், எழில், திருச்சி.
நன்றி: பதிவுகள் இணைய இதழ்


தெலுங்கு இலக்கணங்களில் பிந்து(வட்டம்)

-       சத்தியராஜ்
தமிழிலும் சமசுக்கிருதத்திலும் சொற்களுக்கிடையே மெல்லினங்கள் இடம்பெறும் இடங்களில் மெல்லின மெய்களே காணப்படுகின்றன என்பர்.  ஆனால் தெலுங்கும் கன்னடமும் வட்டம்(0) எனும் வடிவத்தினைப் பயன்படுத்துகின்றன. இவ்வடிவத்தினைச் சமசுக்கிருதம் அநுஸ்வாரக:, பி3ந்து3வு எனவும், தெலுங்கு சுந்நமு, பி3ந்து3வு, அநுஸ்வாரமு எனவும், கன்னடம் சொந்நெ(பிந்து) எனவும் குறிக்கின்றன. இதனைத் தமிழில் வட்டம் எனக் குறிப்பிடலாம்.
            தெலுங்கு இலக்கணங்களில் ஆந்திரசப்தசிந்தாமணி, அப்பகவீயம், பாலவியாகரணம் ஆகிய நூல்கள் வட்டம் குறித்து விளக்குகின்றன. இவற்றுள் அப்பகவீயம்(கி.பி.17) ஆந்திரசப்தசிந்தாமணியின் உரை நூலாகக் கருதப்படுகின்றது(லலிதா, 1996:27). இதன்கண் கூறப்பட்டுள்ள வட்டம் எனும் கருத்தியல் எதுகையை விளக்குமிடத்து(அப்பகவீயம், 1985:40) விளக்கப்பட்டுள்ளது. ஆதலின் அந்நூலை விடுத்து ஆந்திரசப்தசிந்தாமணியிலும் பாலவியாகரணத்திலும் இடம்பெறும் பிந்து குறித்து விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.
பிந்துவின் செயல்பாடு
            பிந்து சொற்களின் இடையில் மெல்லினங்களுக்குப் பதிலாக வருவதாகும். அது குறில், நெடில் ஆகியனவற்றைத் தொடர்ந்தும், வல்லின மெல்லினங்களுக்கு முன்பாகவும் வரும் என்பது நன்னயா, சின்னயசூரி ஆகிக்யோரின் ஒருமித்த துணிபு.
ஆந்திரசப்தசிந்தாமணி
            ஆந்திரசப்தசிந்தாமணி கி.பி.11ஆம் நூற்றாண்டில் நன்னயாவால் எழுதப்பட்ட்தாகும். இது சமசுக்கிருத மரபைப் பின்பற்றிச் சமசுக்கிருத மொழியில் எழுதப்பட்டுள்லது. இந்நூல் தெலுங்கு மொழிக்குரிய முதல் இலக்கண நூலாகும். இதன்கண் சஞ்ஞா, சந்தி, அசந்தா, அலந்தா, கிரியா எனும் படலப் பகுப்புகல் காணப்படுகின்றன. இப்பகுப்புகளுள் சஞ்ஞாவில் வட்டம் குறித்து விளக்கப்பட்டுள்ளது. இவ்வட்டம் அநுஸ்வார: என அழைக்கப்படுகிறது. இவ்வநுஸ்வார: பி3ந்து3வு எனவும் கூறப்படுகின்றது (சஞ்.32). இது வகை, பயன்படுத்தப்படும் இடம் என்றாயிரு வகைகளில் விளக்கப்பட்டுள்ளது.
வகை
            அநுஸ்வார: சித்34மு (இயல்பு), ஸாத்3யமு (இலக்கணக் கோட்பாட்டால் உருவாக்கப்பட்ட வடிவம்) என்றாயிரு வகைகளை உடையது என்பதை,
            ஸித்3த்ஸ்ஸாத்யச்சா நுஸ்வார: பூர்ணர்தே4 பே43தோத் விவித்4:   - சஞ்.19
எனும் நூற்பா விளக்கி நிற்கின்றது. மேலும், இந்நூற்பாவில் அநுஸ்வார: இயல்பு நிலையிலும் இலக்கணக் கோட்பாட்டுக்குட்பட்ட நிலையிலும் வருகிறது என்பதையும்,  இயல்பு முழுவட்டம் (பூ3ர்ண பி3ந்து3வு), அரை வட்டம் (க2ண்ட3 பி3ந்து3வு), இலக்கணக் கோட்பாட்டுக்குட்பட்ட முழுவட்டம்; அரைவட்டம் எனப் பிரிந்து நிற்கும் என்பதியும் குறிப்பிடுவதாகச் சாவித்ரி குறிப்பிட்டுள்ளார். அதனைக் குறிப்பிடும் வரைகோடு வருமாறு:
                                            அநுஸ்வார:
              சித்34மு                                                                         ஸாத்4யமு
பூ3ர்ண               க2ண்ட3                              பூ3ர்ண                                          க2ண்ட3
03மு             கல(கி3                          செ0தொ3வ                        வச்செ(3 மலக்ஷிடு3
(அழகு)              (கவலைப்படு)        (சிவப்பு அல்லிமலர்)        (வந்தான் தாமரைக்கண்ணன்)

பயன்படுத்தப்படும் இடம்
            இவ்வநுஸ்வார: குறில் (ஹ்ரஸ்வமு), நெடில் (தீ3ர்க4மு) ஆகியனவற்றைத் தொடர்ந்து வருவதாகும். இவ்விரண்டைத் தொடர்ந்து வருவது அரைவட்டமே (க2ண்ட3 பி3ந்து3வு). இவ்வரைவட்டம் குறிலைத் தொடர்ந்து வரும்போது சிலவிடங்களில் முழுவட்டமாக மாறியும் மாறாமலும் வருவருண்டு என்பதை,
ஹ்ரஸ்வாத் பூர்ணோ அபிப4வேத்             – சஞ்.20
வரும் நூற்பா விளக்கி நிற்கிறது.
            எ – டு.  செல(கி– செல0(ங்)கி3                (மகிழ்ந்து)
                        தொல(கி3 – தொல0(ங்)கி3           (தொலைந்து)
இவ்விரு காட்டுகளும் குறிலைத் தொடர்ந்து நின்ற அரைவட்டம் இலக்கணக் கோட்பாட்டால் முழுவட்டமாக மாறி ங் என்ற ஒலிக்குறிப்பைச் சுட்டி நிற்பதை காட்டுகின்றன.
            நெடிலைத் தொடர்ந்து அரைவட்டம் இருந்தால் அது எவ்வித மாற்றமும் பெறாது என்பதை,
            தீ3ர்காச்சேத்க2ண்டஏ வஸஜ்நேய:              - சஞ். 21
எனவரும் நூற்பா விளக்கி நிற்கிறது.
             – டு.  வா((பக்கம்), வீ((மகிழ்ச்சி)
பாலவியாகரணம்
            சின்னயசூரி சமசுக்கிருத சொல்லாட்சிகளைப் புறந்தள்ளித் தெலுங்கிலே இலக்கணக் கூறுகளை விளக்க முனைந்துள்ளார்இருப்பினும் அவரால் முழுமையாகப் புறந்தள்ள முடியவில்லைஅவரியற்றிய பாலவியாகரணம் சஞ்ஞாசந்திதத்சமஆச்சிககாரக்சமாசதத்திதகிரியாகிருதந்தபிரகீர்ணக எனும் பத்து பகுப்புகளைக் கொண்டுள்ளதுஇப்பகுப்புகளுள் சஞ்ஞாவில் பிந்து குறித்து விளக்கப்பட்டுள்ளது.
            இந்நூல் பிந்துவின் வகைகளைக் கூறாமல் அது பயன்படும் இடங்களை மட்டும் விளக்கிச் செல்கின்றதுமுதலில் குறில் மீதுள்ள அரைவட்டத்துக்கு முழுவட்டம் விரவி வரும் என விளக்கம் காணப்பட்டுள்ளதுஅவ்விளக்கத்தை,
            ஹ்ரஸ்வமு மீ(தி3 2ண்ட3பி3ந்து3வு நகு (பூ3ர்ணபி3ந்து3வு வைகல்ப்கமுகு3 நகு3நு  – சஞ்.14
எனும் நூற்பாவில் காணலாம்.
             – டு.  அட3(குவ – அட30(ங்)குவ
                        அர(டி – அர0(ண்)டி
இவ்விரு காட்டுகளில் 3 எனும் குறில்களை அடுத்து அரைவட்டம் வந்துள்ளதுஇவ்வரைவட்டம் மேற்காட்டிய நூற்பாவின்(14)படி முழுவட்டம் பெற்று வந்துள்ளதுஅவ்வட்டம்ன் ங்ண் என்ற ஒலிக்குறிப்புகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
            அடுத்துநெடில் மீது இலக்கணக் கோட்பாட்டால் விதிக்கப்பட்ட முழுவட்டம் விரவி வராது என்பதை,
            தீ3ர்க4முமீ(த ஸாத்யபூ3ர்ணமு லேது                     – சஞ்.15
எனவரும் நூற்பா விளக்கி நிற்கிறது.
            எ – டு.  வா(டு3(அவன்), வீ(டு3(இவன்), லே(டு3
            அரைவட்டமும் முழுவட்டமும் சமசுக்கிருதச் சொற்களின் வல்லின(ப3ருஷமு), மெல்லின(ஸரளமு)ங்களுக்கு முன்னால் வரும் என்பதை,
ஸம்ஸ்க்ரு1த ச்மேதரமு லயிந தெலு(கு3 ஸ்2ப்33முல யந்து3(3ருஷ ஸரளம்பு3லகு முந்தேபி3ந்து3வு கா3நம்படு3 சுந்நதி                            – சஞ்.16
எனவரும் நூற்பா விளக்கி நிற்கிறது.
            எ – டு. வ0(ங்)கர, கல(குவ, த30(ண்)ட, தா3(டு
இக்காட்டுகளில் அரைவட்டமும் முழுவட்டமும் வந்துள்ளன. இதன்வழி சமசுக்கிருதச் சொற்களுக்கு மட்டுமின்றி தூய தெலுங்குச் சொற்களுக்கும் அவ்வட்டங்கள் வரும் என்பதை அறிய முடிகின்றது.
பயன்
            இப்பிந்து தெலுங்கில் இடம்பெறுவதற்குச் சமசுக்கிருதத் தாக்கமே காரணம் எனலாம். இது மெல்லினங்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் ஒரு குறியீடாகும். இதன் வளர்ச்சி திரவிட மொழிகளுள் தெலுங்கில் மட்டுமே பல நிலைகளைக் கண்டுள்ளதெனலாம். அதனைக் கீழ்வரும் எடுத்துக்காட்டுகள் மெய்ப்பிக்கும்.
            எ – டு.      கொ0(ந்)த, கோ(த – தெலுங்கு
                            எ0(ண்)டு, ஒ0(ந்)து3 – கன்னடம்
இவ்விரு காட்டுகளின் வழி தெலுங்கு அரைவட்டம், முழுவட்டம் என்ற இரண்டையும் பயன்படுத்தியுள்ளது. ஆனால் கன்னடம் முழுவட்ட்த்தை மட்டுமே பயன்படுத்தியுள்ளது.
முடிப்பு
            ஆந்திரசப்தசிந்தாமணி குறில், நெடில் ஆகியவற்றைத் தொடர்ந்தே வட்டமானது வரும் எனக் குறித்துள்ளது. இக்கருத்தியலைப் பாலவியாகரணம் ஒப்புக் கொள்கிறது. மேலும், சமசுக்கிருதத்திற்கு இணையில்லாத தெலுங்குச் சொற்களின் வல்லின மெல்லினங்களுக்கு முன்னும் வட்டம் வரும் எனும் கருத்தியலையும் பாலவியாகரன்ணம் முன்வைத்துள்ளது. இத்தன்மை அவ்விலக்கணக் கூறின்(பிந்து) வளர்ச்சிப் போக்கைக் காட்டுகின்றது எனலாம்.
துணைநின்றவை
தமிழ்
1.     அறவேந்தன் இரா., 2008, சமூக வரலாற்றியல் நோக்கில் தமிழும் தெலுங்கும், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
2.     சத்தியராஜ் த., 2012, ஒப்பீட்டியலில் எழுத்தாக்கமரபும் சஞ்ஞாபரிச்சேதமும், உறவு: பேரா. வே.சா. அருள்ராஜ் மணிவிழா கருத்தரங்க நூல், சைவமணி பதிப்பகம், திருச்சி.
3.     வேங்கடாச்சலம் தண்.கி., 2000, கவிராச மார்க்கம், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
தெலுங்கு
4.     தொரசாமி சர்மா ராவூரி, 1985, அப்பகவீய பாவபிராகசிக, திரிவேணி பப்ளிசர்ஸ், மசீலிபட்டினம்.
5.     பரவஸ்து சின்னயசூரி, 2002, பாலவியாகரணமு, பாலசரசுவதி புத்தகாலயம், சென்னை.
6.     லலிதா ஜி., 1996, தெலுகு வியாகரணமுல சரித்திர, வெலகபூடி பப்ளிசர்ச்ஸ், மதராசு.
கன்னடம்
7.     சூடாமணி, சர்வக்னா வசனகளு, ஜனபத பிரகாசந, பெங்களூரு.

  (இக்கட்டுரை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக இந்திய மொழிகள் பள்ளியின் திராவிட மொழிகளின் வளர்ச்சியும் இன்றைய போக்கும் கருத்தரங்கில் வாசிக்கப் பெற்று, அக்கருத்தரங்க ஏட்டில் இடம்பெற்றுள்ளது. இங்குச் சில திருத்தங்களுடன் தரப்பெறுகிறது)

   
ஒப்பீட்டியலில் எழுத்தாக்கமரபும் சஞ்ஞாபரிச்சேதமும்
                                                                                                                                    - த. சத்தியராஜ்

    கி.பி.19ஆம் நூற்றாண்டில் சுவாமிநாதமும்(தமிழ்) பாலவியாகரணமும்(தெலுங்கு) தோற்றம் பெற்றன. இவ்விரு நூலாசிரியர்கள் முறையே சாமிகவிராயரும் சின்னயசூரியும் ஆவர். இவ்விருவரின் நூல்களில் அமைந்துள்ள முதல் இயல்கள் முறையே எழுத்தாக்கமரபும் சஞ்ஞாபரிச்சேதமும் ஆகும். இவ்விரு இயல்களில் அமைந்துள்ள கருத்தியல்களை ஒப்பிடுவதாக இக்கட்டுரை அமைகிறது.
            சுவாமிநாத எழுத்தாக்கமரபில் 10 நூற்பாக்களும் பாலவியாகரண சஞ்ஞா பரிச்சேத்தில் 23 நூற்பாக்களும் இடம்பெற்றுள்ளன. இவ்விரு இயல்களில் அமையப் பெற்ற கருத்தியல்களை 11 நிலைகளில் விளக்கலாம். அவை:1. புறக்கட்டமைப்புநிலைச் சிந்தனை, 2. எழுத்துக்களின் பொதுமரபு, 3. எழுத்துக்களின் அறிமுகம், 4. பிறப்புமுறை, 5. புணர்ச்சி, 6. சார்பெழுத்து, 7. வரிவடிவமும் மாத்திரையும், 8. மொழிமுதல், இறுதி, இடை நிலைகள், 9. பிந்து, 10. சொல்வகை, 11. வழு – ஏற்றல் என்பன. இவற்றுள் முதலாவது சுவாமிநாதத்தில் உண்டு; பாலவியாகரணத்தில் இல்லை. சுவாமிநாதம் சுட்டும் புறக்கட்டமைப்புநிலைச் சிந்தனையாவது:
            ...
            செப்பெழுத்துச் சொற்பொருள்யாப்பு அலங்காரம் எனும் ஐந்
            தமிழ்தின் இலக் கணவிரிவை ஒவ்வொரு மூன்று இயலாய்
            அடக்கிமொழி குவன்; சுவாமி நாதம் இந்நூற் பெயரே(1)
என்பதாகும். இச்சிந்தனை அந்நூலில் உள்ள அதிகாரம், இயல்கள், நூலின் பெயர் ஆகியவற்றைத் தெளிவாக்குகிறது. இச்சிந்தனை சின்னயசூரியிடம் காணப்பெறாமைக்குக் காரணம் முன் நூலாரிடம் இது குறித்த சிந்தனை காணப்படாமையேயாகும். ஏனெனில், சாமிகவிராயர், வீரசோழியர்(கி.பி.11), ஈசான தேசிகர்(கி.பி.17) ஆகியோரைப் பின்பற்றியே சுட்டியுள்ளார் எனத் தெரிகின்றது.
            இரண்டாவது (எழுத்துக்களின் பொதுமரபு), சுவமிநாதத்தில் உண்டு; பாலவியாகரணத்தில் இல்லை. சுவாமிநாதம் எழுத்துக்களை ஆராயும் முறை, எழுத்தின் பொது விளக்கம், எழுத்துக்களின் பெயர் என்பனவற்றை விளக்குகிறது. இருப்பினும் அப்பொது மரபில் உள்ள இனம் குறித்த சிந்தனை மட்டும் பாலவியாகரணத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. அச்சிந்தையாவது க,ச,ட,த,ப ஆகியன கடினமானவை (பருசம்); க3, ஜ1, ட3, த3, ப3 ஆகியன எளிமையானவை (சரளம்): ஏனையவை இடையினம் (இசுத்திரம்) என்பனவாகும்.
            மூன்றாவது (எழுத்துக்களின் அறிமுகம்), இருநூலாரிடத்தும் காணலாகின்றது. சாமிகவிராயர், இறைவணக்கம், நூலின் பறக்கட்டமைப்புநிலைச் சிந்தனை, நூற்பெயர், எழுத்துக் களை ஆராயும் முறை, எழுத்துக்களின் பொது விளக்கம், எழுத்துக்களின் பெயர் ஆகியனவற்றைத் தொடர்ந்து எழுத்துக்களை அறிமுகம் செய்கின்றார். ஆனால் சின்னயசூரி நேரிடையாக எழுத்துக்களின் அறிமுகத்தை வைத்துவிடுகிறார். அவ்வறிமுகம் வேறுபட்டே நிற்கின்றது. ஏனெனின் சுவாமிநாதம்,
            அகராதி யீராறும் உயிர், ககராதிகள் மூவாறும் உடல்; இம்
            முப்பானு(ம்) முதலெலுத்தாம்...`                                       (3)
எனக் கூறி நிற்க, பாலவியாகரணம்
             ஸம்ஸ்க்ரு1தமுநகு வர்ணமு லேப3தி3                     (1)
            ப்ராக்ரு1தமுநகு வர்ணமுலு நலுவதி3                     (2)
            தெலுகு3நகு வர்ணமுலு முப்பதி3யாறு                    (3)
எனக்கூறி நிற்கின்றது. தெலுங்கு எழுத்துக்களை முதலில் அறிமுகம் செய்யாமல் சமசுக்கிருதபிராக்கிருத எழுத்துக்கள் ஆகியனவற்றை அறிமுகம் செய்துவிட்டுப் பின்பு தெலுங்கு எழுத்துக்களை அறிமுகம் செய்கின்றதுஇது ஒரு சிறந்த முறை எனலாம்ஏனெனின் தெலுங்கு சமசுக்கிருதபிராக்கிருத எழுத்துக்கள்சொற்கள் ஆகியனவற்றைக் கடன் வாங்குவதால் இவ்வித விளக்கமுறை சிறப்பினதே.
            நான்காவது(பிறப்புமுறை), இருநூலாரிடத்தும் காணலாகின்றதுஇச்சிந்தனை ஒருமித்துக் காணப்பட்டாலும்விளக்குமுறையில் வேறுபட்டே நிற்கிறதுசுவாமிநாதம் உயிர்மெய்சார்பு ஆகிய எழுத்துக்கள் எவ்விதம் பிறக்கின்றன என நிரலாக விளக்கிச் செல்கிறதுஆனால்பாலவியாகரணம் ச்ஜ் ஆகிய இரு மெய்யெழுத்துக்களுக்கு மட்டும் பிறப்புமுறையைத் தருகிறதுஅம்முறை மாறுபாட்டுடன் உள்ளது. அம்மாறுபாடாவது ச, ஜ எழுத்துக்கள் சம எழுத்துக்களாக இருக்கும்போது, பல்லொலிகளாகவும் அண்ணவொலிகளாகவும் வரும்; இ, ஈ, எ, ஏ ஆகியவற்றுடன் இணையும்போது அண்ணவொலிகளாகவும் (தாலவியம்); அ, ஆ, உ, ஊ, ஒ, ஓ, ஔ ஆகியவற்றுடன் இணையும்போது பல்லொலிகளாகவும் (தந்தியம்) வரும்; சமசுகிருதத்திற்கு இணையான இகர ஈற்றுச் சொற்களில் ச, ஜ ஆகியன பன்மையாக வரும்போது அண்ணவொலியாக வரும் என்பனவாகும். இத்தன்மை தமிழில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
            ஐந்தாவது(புணர்ச்சி), இருநூலாரிடத்தும் தென்படுகிறது. இதனைச் சாமிகவிராயர் இறுதியாக விளக்குகிறார். அவ்விளக்கம் எழுத்து நிலைக்குரியதென்பது (மெய்ம்மயக்கம், பொலி, சாரியை) குறிப்பிடத்தக்கது.
            ஆறாவது(சார்பெழுத்து) சுவமிநாதத்தில் உண்டு; பாலவியாகரணத்தில் இல்லை. ஏனெனில், சின்னயசூரி எழுத்துக்களை உயிர்(அச்சு), மெய்(அல்லு) என்பதாக மட்டும் வகைப்படுத்திச் செல்வதால் அத்தன்மை ஈண்டு இல்லை எனலாம்.
            ஏழாவது(வரிவடிவமும் மாத்திரையும்), சுவமிநாதத்தில் உண்டு; பாலவியாகரணத்தில் இல்லை. இத்தன்மை சுவாமிநாதத்தில் இடம்பெறுவதற்குக் காரணம் தமிழ் மரபிலக்கணங்கள் எழுத்துக்களைப் பெயர், எண், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல், இடை, இறுதிநிலைகள், போலி, பதம், புணர்ப்பு எனப் பன்னிரு நிலைகளாகப் பாகுபடுத்தி விளக்கக் கூடிய போக்கைக் கொண்டிருப்பதே. தெலுங்கு மரபிலக்கணங்களில் இத்தன்மை இல்லைபோலும்; அதனால் சின்னயசூரி விளக்கவில்லை எனலாம்.
            எட்டாவது(மொழிமுதல், இடை, இறுதிநிலைகள்), சுவாமிநாதத்தில் முழுமையுடனும், பாலவியாகரணத்தில் முதலி வாராச்(ய, வு, வூ, வொ,வோ) சொற்கள் என்பதாகவும் இடம்பெற்றுள்ளது.
            ஒன்பதாவது(பிந்து), தமிழில் இல்லை; தெலுங்கில் உண்டு. ஏனெனின் சமசுக்கிருத, பிராக்கிருத மொழிகளைத் தழுவித் தெலுங்கு இலக்கணங்கள் ஆக்கப்படுவதால் இது குறித்த சிந்தனைப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
            பத்தாவது(சொல்வகை), சுவாமிநாதத்தில் இல்லை. பாலவியாகரணத்தில் உண்டு. சுவாமிநாதம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி எனத் தனித்தனி அதிகாரப் பகுப்புடையது. எனவே, சொற்களின் வகைகளைச் சொல்லதிகாரப் பகுதியில் வைத்து விளக்குகிறது. பாலவியாகரணம் எழுத்து, சொல் என்றாயிரு கருத்தியல்களைப் பொதுமையாக விளக்கிச் செல்ல முற்படுவதால் சொற்களின் வகையினை நான்கு சூத்திரங்களில் விளக்கிச் செல்கிறது. தமிழில் சொற்களின் வகை என்பது பெயர், வினை, இடை, உரி என அமைந்துள்ளது. தெலுங்கில் தற்சமம், தற்பவம், தேசிகம், கிராமியம் என் அமைந்திருக்கிறது.
            பதினோராவது(வழு – ஏற்றல்), சொல் வகையுடன் தொடர்புடையது. இத்தன்மை பாலவியாகரணத்தில் உண்டு; சுவாமிநாதத்தில் (சொல்லதிகாரத்தில் உண்டு) இல்லை.
            மேற்குறித்த கருத்தியல்களின்வழி ஒப்பும் வேறுபாடும் காணப்படுவதைக் கீழ்வரும் வரைகோடு சுட்டிக்காட்டும்.
ஒப்பீட்டுக் கருத்தியல்கள்

            சுவாமிநாதம்                                                        பாலவியாகரணம்

எழுத்தாக்கமரபு                                                                                   சஞ்ஞாபரிச்சேதம்
1.     புறக்கட்டமிப்புநிலைச் சிந்தனை                                               1. எழுத்துக்களின் அறிமுகம்
2.     எழுத்துக்களின் பொதுமரபு                                                         2. எழுத்துக்களின் இனம்
3.     எழுத்துக்களின் அறிமுகம்                                                            3. பிறப்புமுறை
4.     பிறப்புமுறை                                                                                  4. புணர்ச்சி
5.     சார்பெழுத்துக்களின் விளக்கம்                                                   5. பிந்து
6.     வரிவடிவமும் மாத்திரையும்                                                       6. முதலில்வாரா
7.     மொழிமுதல், இடை, இறுதிநிலை                                             7. சொற்களின் வகை
8.     புணர்ச்சி(மெய்ம்மயக்கம், பொலி, சாரியை)                            8. வழு – ஏற்றல்
தெலுங்கில் பிந்து என்பது வட்டத்தைக் குறிக்கும். இவ்வட்டம் அரை, முழு என்ற இரு வடிவங்களில் காணப்பெறுகின்றது. இவ்வட்டங்கள் மெல்லினங்களுக்குப் பதிலாக வருவனவாகும். எ-டு. த3o(ண்)ட.

துணைநின்றவை
தமிழ்
1.     சண்முகம் செ.வை.(பதி), 1995, சுவமிநாதம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலைநகர்.
2.     சாவித்ரி சி.(மொ.ஆ.), பாலவியாகரணம்(பதிப்பிக்கப் பெறாத ஏடு).
தெலுங்கு
3.     உமா பி., பாலவியாகரணமு, பரவசத்து சின்னய்சூரி பிரணிதமு தீபிக வியாக்கிய சகிதமு, புல்லூரி உமே ராசதானி களாசல, மதராசு.
4.     பரவத்து சின்னயசூரி, 1994, பலவியாகரணமு, பாலசரசுவதி புத்தகாலயம், மதராசு.
(இக்கட்டுரை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக இந்திய மொழிகள் பள்ளியின் மேனாள் துறைத்தலைவரின் (முனைவர் வே.சா. அருள்ராஜ்) மணிவிழாக் கருத்தரங்கில் வாசிக்கப் பெற்று, அக்கருத்தரங்க ஏட்டில் இடம்பெற்றுள்ளது. இங்குச் சில திருத்தங்களுடன் தரப்பெறுகிறது)


பதிவுகள் இணைய இதழில் வெளியிடப் பெற்றவை
1. பாலவியாகரணத்தில் முந்துநூல் தரவுகள்: மதிப்பீடு


பாலவியாகரணத்தில் முந்துநூல் தரவுகள்: மதிப்பீடு
1.0 முகப்புபாலவியாகரணம் தெலுங்கு மொழிக்குரிய முழுமையான இலக்கணநூலாகக் கருதப்படுகிறது. இதனை யாத்தவர் சின்னயசூரி (கி.பி. 1858). இந்நூல் இக்காலம் வரை கற்றலிலும் கற்பித்தலிலும் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து வந்துள்ளது. அதற்குக் காரணம் பழைமையைப் போற்றும் பண்பே. மேலும், இந்நூல் பயனாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனுள், முந்து நூல்களின் கருத்தியல்களின் ஆட்சியே மிகுதி. அவ்வாட்சியின் விழுக்கட்டைப் பி.சா.சுப்பிரமணியனின் குறிப்புகளை முன்வைத்து மதிப்பீடு செய்வது இக்கட்டுரையின் நோக்கம்.
2.0 பாலவியாகரணமும் முந்து நூல்களும் சின்னயசூரி, பாலவியாகரணத்தின் மூலம் தெலுங்கு எழுத்துலகை  ஒழுங்கமைவுக்கு உட்படுத்தினார். இதனை  அந்நூல் வெளிவந்தபிறகு பழைமையான இலக்கியங்களும் திருத்தம் செய்து மீள்பதிப்பாக வெளிவந்தமையின்வழிக் காணலாம்(ஆனைவாரி ஆனந்தன்:1999). அதன் பின்பு இவர் வகுத்த கோட்பாடுகளே நிலைபேறாக்கம் பெற்றன என்பதே உண்மைநிலை. ... மேலும் வாசிக்க  http://www.geotamil.com/pathivukalnew/sathiyaraj_july2013.pdf
Last Updated on Monday, 01 July 20






தொல்காப்பியர்1. திராவிடமொழிக் குடும்பத்தில் தொன்மையானது தமிழ்.  தமிழை விடத் தெலுங்கு மொழிப் பேசுவோரின் எண்ணிக்கை அதிகம். தமிழ் தனித்தன்மை வாய்ந்தது.  இம்மொழிக்குரிய இலக்கண நூலாகிய தொல்காப்பியமும் அத்தன்மை பெற்று விளங்குகிறது. தெலுங்குமொழி சமசுக்கிருத, பிராக்கிருத மொழிகளைச் சார்ந்தது.  தெலுங்கின் முதல் இலக்கண நூல் ஆந்திர சப்த சிந்தாமணி (நன்னயப்பட்டு, கி;.பி.11). இந்நூலின் பெரும்பகுதி சமசுக்கிருத மரபைப் பின்பற்றி எழுதப்பட்டுள்ளது. அதன்பின், பன்னூறாண்டுகள் கழித்து மாணவர்களுக்காக தெலுங்கில் பாலவியாகரணம் (சின்னயசூரி, 1858) இயற்றப்பட்டது. தொல்காப்பியத்திலும் பாலவியாகரணத்திலும் எச்சவியல் இடம்பெற்றுள்ளது.  அவ்வியல்களின் கருத்தியல்களை ஒப்பீடு செய்வதாக இக்கட்டுரை அமைகிறது. [மின்னஞ்சல் முகவரி: neyakkoo27@gmail.com ] .....முழுவதும் வாசிக்க  http://www.geotamil.com/pathivukalnew/sathiyaraj.pdf
Last Updated on Tuesday, 09 April 2013 18:40

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1327:2013-02-10-03-26-47&catid=2:2011-02-

தொல்காப்பியர்1.0. முகப்பு
தமிழ் மொழிக்குக் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கணநூல் தொல்காப்பியம். தெலுங்கு மொழிக்காக எழுதப்பட்ட முதல் இலக்கணநூல் அந்திர சப்த சிந்தாமணி(நன்னயா, கி.பி.11). இந்நூல் சமசுக்கிருத மரபைப் பின்பற்றி சமசுக்கிருதத்தில் யாக்கப்பட்டதாகும். அதன் பின்பு கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டில் தூயதெலுங்கில் இலக்கணம் எழுத முனைந்த நூல் ஆந்திர பாஷா பூஷணம்(மூலகடிக கேதனா). இந்நூலுக்குப் பிறகு கி.பி.பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒரு நூல் எழுதப்பட்டது. அந்நூல் பாலவியாகரணம். இஃது தெலுங்கு மொழியைக் கற்கும் மாணவருக்காக எழுதப்பட்டது. இந்நூலிலும் தொல்காப்பியத்திலும் அமைந்துள்ள சொற்பாகுபாடு குறித்து விளக்குவது இக்கட்டுரையின் நோக்கம்.
2.0. தொல்காப்பியமும் சொற்பாகுபாடும்
 தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் எனும் முப்பகுப்புடைத்து. இதனை யாத்தவர் தொல்காப்பியர். இவரின் காலம் குறித்த கருத்து வேறுபாடுகள் உண்டு. இருப்பினும் கி.மு.5 என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.
தொல்காப்பியர் சொல்லதிகாரத்தில் மட்டுமின்றி எழுத்ததிகாரத்திலும் பொருளதிகாரத்திலும் சொல் குறித்த விளக்கங்களை முன்வைத்துள்ளார். இருப்பினும் சொல்லதிகாரத்தில்தாம் விரிவாக பேசியுள்ளார். அஃது தொடரியல், சொல்லியல்  என்றாயிரு வகைகளில் அமைந்துள்ளது.

 இனித் தொல்கப்பியர் வகுத்த சொற்பாகுபாடு குறித்துக் காண்போம். இவர் சொல்லுக்கான விளக்கத்தை ஒன்பது இயல்களில் விளக்கியுள்ளார். அவ்வொன்பது இயல்களுள் கிளவியாக்கம் வேற்றுமையியல் வேற்றுமைமயங்கியல் விளிமரபு ஆகியன தொடரியல் குறித்தும், பெயரியல் வினையியல் இடையியல் உரியியல் ஆகியன சொல்லியல் குறித்தும், எச்சவியல் எஞ்சியவற்றையும் விளக்குகின்றன(தெய்வச்சிலையார் 2003:58).

 விளிமரபு தனிச்சொல் பகுதியுடன் வைத்து எண்ணத்தக்கது எனவும், எச்சவியலைத் தொடரியலுடன் வைத்து எண்ணத்தக்கது எனவும் கருத்து நிலவுகிறது(செ.வைசண்முகம் 2004:1). இவ்வாறு சொல்லுவது ஒருபுறத்தார் கருத்து. மற்றொருபுறத்தார் தொல்காப்பியர் தனிசொற்களாக எண்ணியவை பெயர், வினை, இடை, உரி என்பவைகளையே எனக் கருதுகின்றனர்(தூ.சேதுபாண்டியன்,2013, அண்ணாமலைப் பல்கலைக் கழக மொழியியல் உயராய்வுப் பயிலரங்கின்போது கருத்துரைத்தக் கருத்து). இவ்வாறு கருத்து முரண்பாடுகள் இருப்பினும் தொல்காப்பியர் தொடரியல், சொல்லியல் குறித்த கருத்துக்களையே முன்வைத்துள்ளார் என்பது வெள்ளிடைமலை.
2.1. தனிச்சொற்பாகுபாட்டில் வைத்து எண்ணப்பட்டவை
 தொல்காப்பியர் தனிச்சொற்களாக எண்ணியவை நான்கு. அவை: பெயர், வினை, இடை, உரி என்பன. இவற்றுள் இடையும் உரியும் தனிச்சொற்களாக எண்ணப்பட்டாலும் பெயரையும் வினையையும் சார்ந்தே வரும் என்பது தொல்காப்பியர் கருத்து(சொல்.155).
2.1.1. பெயர்ச்சொல்
பெயர்ச்சொல் வேற்றுமை ஏற்கும்; காலம் ஏற்காது என்பது விதி. இதனைப் பின்வருமாறு குறிப்பிடலாம்.
 பெயர் < + வேற்றுமை >  < - காலம் >
இவ்வாறு வேற்றுமை ஏற்று வரக்கூடிய பெயர்களை உயர்திணை, அஃறிணை, இருதிணைப்பொது(விரவுத்திணை) எனப்பகுத்து விளக்கியுள்ளார்.
2.1.2. வினைச்சொல்
 பெயர்ச்சொல் போன்றே வினைச்சொல்லும் உயர்திணை, அஃறிணை, இருதிணைப்பொது(விரவுத்திணை) என வரையறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வரையறுக்கப்பட்ட சொற்கள் காலத்தை மட்டுமே ஏற்கும் என விதி கூறப்பட்டுள்ளது. இதனைத் தொல்காப்பியர்,
  வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
  நினையுங் காலைக் காலமோடு தோன்றும்  (சொல்.192)
எனவரும் நூற்பாவில் தெளிவுபடுத்துகிறார். இவ்விதி முறையைப் பின்வருமாறு குறிப்பிடலாம்.   
வினை < - வேற்றுமை >  < + காலம் >
2.1.3. இடைச்சொல்
மன், தில், கொன், உம், ஓ, ஏ, என, என்று, மற்று, எற்று, மன்ற, தஞ்சம் போல்வன வரும் சொற்கள் இடைச்சொற்கள் வகைத்து என்பார் தொல்காப்பியர். இவர் இடையியலில் நாற்பத்து மூன்று சொற்கள் குறித்து விளக்கியுள்ளார். இச்சொற்கள் சொற்களின் முன்னும் பின்னும் மொழியடுத்தும் தம்மீறு திரிந்தும் பிறிதோர் இடைச்சொல்லையடுத்தும் வருதல் உண்டு(சொல்.248).
எழுத்ததிகாரத்தில் சொல்லப்பட்ட புணரியல் நிலையிடைப் பொருள்நிலைக்கு உதவும் சொற்களும், வேற்றுமையியலில் சொல்லப்பட்ட வினைசெயல் மருங்கின் காலமொடு தோன்றும் சொற்களும், இடையியலில் விளக்கப்பட்டுள்ள அசைநிலைக்கிளவி, இசைநிறைக்கிளவி, தத்தம் குறிப்பில் பொருள் செய்குபவை ஆகிய சொற்களும் இடைச்சொற்கள் என்பது தொல்காப்பியர் கருத்து(சொல்.247).
2.1.4. உரிச்சொல்
 உறு, தவ, நனி, உரு, புரை, குரு, கெழு, செல்லல், இன்னல், ஏ, உகப்பு, உவப்பு, பயப்பு போல்வன உரிச்சொற்கள் என்பார் தொல்காப்பியர். இவர் உரியியலில் நூற்றிரண்டு சொற்களுக்கு விளக்கம் தந்துள்ளார்.
 இவ் உரிச்சொற்கள் இசை, குறிப்பு, பண்பு, வினை, ஒருசொல் பல்பொருள், பலசொல் ஒருபொருள், பயிலாத சொற்களைப் பயின்ற சொற்களுடன் சொல்லல், தத்தம் மரபில் வருபவை, பொருள் வேறுபாடு தரும் சொற்கள் என்பனவாக அமையும் என்பது தொல்காப்பியர் கருத்து(சொல்.293).
2.2. தனிச்சொற்பாகுபாட்டில் வைத்து எண்ணப்படாதவை
 செய்யுள் ஈட்டச்சொல், தொகைச்சொல், ஒருசொல்லடுக்கு, எச்சச்சொல் போல்வன தனிச்சொற்பாகுபாட்டில் வைத்து எண்ணப்படாத வகைப்பாட்டைச் சார்ந்தவை எனலாம்.
2.2.1. செய்யுள் ஈட்டச்சொல்
 இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்பன செய்யுள் ஈட்டுவதற்குரிய சொற்கள்(சொல்.393). இவற்றுள் இயற்சொல்லாவது செந்தமிழ் நாட்டு வழக்கோடு பொருந்தி தம்பொருள் வழாமல் இசைக்கும் சொல்லாகும்(சொல்.394). திரிசொல்லாவது ஒரு பொருள்குறித்த வேறுசொல், வேறுபொருள் குறித்த ஒருசொல் என அமைந்து வருவதாகும்(சொ.395). திசைச்சொல்லாவது செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிரு நிலத்துமுள்ளார் தத்தம் குறிப்பால் வெளிப்படுத்தும் சொல்லாகும்(சொல்.396). வடசொல்லாவது வடக்கேயிருந்து கடன் வாங்கப்பட்ட சொல்லாகும்(சொல்.397). இஃது வடமொழி மரபைப் பின்பற்றுபவர்களின் தத்சமக் கொள்கைக்கு ஒப்பானது(பிரயோகவிவேகம் 1973:77).
  எ – டு. சோறு, கூழ், பால், மரம்     - இயற்சொல்
   கிள்ளை(கிளி), மஞ்ஞை(மயில்) - திரிசொல்
   ஆ, எருமை – பெற்றம்                  - திசைச்சொல்
   வாரி, மேரு, குங்குமம்                  - வடசொல்.
2.2.2. தொகைச்சொல் 
 தொகைச் சொல்லாவது :- பொருளுணர்த்துஞ் சொல்லாயினும், தொழிலுணர்த்துஞ் சொல்லாயினும் இரண்டு சொல் விட்டிசைத்து நில்லாது ஒட்டி நிற்பது. இஃது ஒட்டுப்பெயர் என்னுங் குறியும் பெறும் என்பார் தெய்வச்சிலையார்(2003:255). இத்தொகைச்சொற்கள் ஆறு வகைப்படும். அவை: வேற்றுமை, உவமை, வினை, பண்பு, உம்மை, அன்மொழி என்பன(தொல்.407).
 எ –டு. ஒருகுழை ஒருவன் போல் (கலி.26:1) - வேற்றுமைத்தொகை
  புலிப்பாய்த்துள்                                                    - உவமத்தொகை
  ஆடரங்கு, செய்குன்று                                        - வினைத்தொகை
  கரும்பார்ப்பன், கரும்பார்ப்பினி                         - பண்புத்தொகை
  தூணிபதக்கு, தொடியரை                                   - உம்மைத்தொகை
  வெள்ளாடை, பொற்றொடி                                 - அன்மொழித்தொகை.
2.2.3. ஒருசொல்லடுக்கு
 ஒரு சொல் இரண்டு முறைக்குமேல் வந்து அடுக்கி நிற்பதை ஒரு சொல்லடுக்கு அல்லது அடுக்குத்தொடர் என்பர். இச்சொற்கள் இசைநிறை, அசைநிலை, பொருளொடு புணர்தல் என மூவகைப்படும்(சொல்.418).
  எ – டு. ஏஏ ஏஏ அம்பல் மொழிந்தனள் - இசைநிறை
   மற்றோ மற்றோ                                    - அசைநிலை
   போம் போம், அவன் அவன்                - பொருளொடு புணர்தல்.
2.2.4. எச்சச்சொல்
 எஞ்சி நின்ற பொருள் உணர்த்துபவை எச்சச்சொற்களாகும். இவை பத்து வகைப்படும். அவை: பிரிநிலை, வினை, பெயர், ஒழியிசை, எதிர்மறை, உம்மை, என, சொல், குறிப்பு, இசை என்பன(சொல்.423).
  எ – டு. அவனே கொண்டான்  - பிரிநிலை
   உழுது வந்தான்                         - வினை
   உண்ணும் சாத்தன்                   - பெயர்
   கூரியதொரு வாள்மன்            - ஒழியிசை
   யானே கொள்வேன்                 - எதிர்மறை
   சாத்தனும் வந்தான்                  - உம்மை
   ஒல்லென ஒலித்தது                - என
   தீங்கு அட்டான்                         - குறிப்பு
   வயிறு மொடுமொடுத்தது       - இசை
   தேனென் கிளவி(எ.340)            - சொல்.
3.0. பாலவியாகரணமும் சொற்பாகுபாடும்
 சின்னயசூரி என்பார் ஆந்திர நாட்டைச் சார்ந்தவரும் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவருமாவார். இருப்பினும் அவரின் பிறப்பும் பணிச்சூழலும் தமிழகமாக அமைந்துவிட்டது(சத்தியராஜ், பதிவுகள் இதழில் குறிப்பிட்ட கருத்து). அவ்வாறு அமைந்திடினும் ”...தமிழ், பிராகிருதம் ஆகிய மொழிகளையும், இலக்கணங்களையும் குருவழிக் கல்வி மூலம் தொடர்ந்து பயின்றார்...”(இராதாகிருஷ்ணா 1999:9) எனும் கருத்து இங்கு சுட்டிக்காட்டத்தகுந்தது.
 அவர் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட மாணவர்கள் தெலுங்கைக் கற்பதற்காக இலக்கணநூலொன்று எழுத எண்ணம் கொண்டார். அவ்வெண்ணத்தின் வெளிப்பாடே பாலவியாகரணம்(கி.பி.1858) ஆகும். இஃது சமசுக்கிருத மரபைப் பின்பற்றி எழுந்த நூலாகும்.

 இப்பாலவியாகரணம் பத்துப் படலங்களால்(பரிச்சேதங்களால்) ஆனது. அவை: சஞ்ஞா, சந்தி, தத்சமம், ஆச்சிகம், காரகம், சமாசம், தத்திதம், கிரியா, கிருதந்தம், பிரகீர்ணகம் என்பன. இனி, சின்னயசூரியின் சொற்பாகுபாடு குறித்துக் காண்போம். இவரின் சொற்பாகுபாட்டில் தத்சமம், தத்பவம், தேசியம், கிராமியம், ஆச்சிகம், நாமம், தத்திதம், கிரியா, கிருதந்தம், ஆம்ரேடிதம் ஆகியனவற்றைக் காணமுடிகின்றது.
3.1. தனித்து எண்ணப்பட்டவை
 தத்சமம், ஆச்சிகம், சமாசம், தத்திதம், கிரியா, கிருதந்தம் ஆகியன மட்டுமே தனித்து எண்ணப்பட்டவையாகத் தெரிகின்றது.
3.1.1. தத்சமம்
 தத்சமம் என்பது சமசுக்கிருத பிராக்கிருத சொற்களுக்கு நிகரன(ஒப்பான) சொற்கள் என்பது பொருள்(சஞ்19). இதன் விரிந்த சிந்தனையே தத்சம பரிச்சேதம் எனும் படலமாகும்.
சமசு. சமசு.சமம்     பிராக்.      பிராக்.சமம்
ராம: ராமுఁடு3         -               -
ஹரி: ஹரி               -               -
கடு: -                       காரோ      காரமு
ஜடா -                      ஜடா3        ஜட3
3.1.2. ஆச்சிகம்
 ஆச்சிகம் என்பதற்குத் தூய தெலுங்குச் சொல் என்பது பொருள். இச்சொற்கள் சமசுக்கிருத பிராக்கிருதங்களுடன் எவ்வித தொடர்புமின்றி வழங்குவதாகும். அதனை,
 த்ரிலிங்க3 தே3ஸ2வ்ய வஹார ஸித்3த4ம் ப3கு3 பா4ஷ தே3ஸ்2யம்பு3   (சஞ்.20)
எனவரும் உரைநூற்பா விளக்குகிறது. இவ்விலக்கணம் ஆச்சிகத்திற்குரியதாக எவ்வாறு கருதப்பெறும் என எண்ணத்தோன்றும். இதன்கண் சொல்லப்பட்ட திரிலிங்கம் என்பது மூன்று எல்லைகளைக் குறிக்கும் சொல்லாகும். அவ் எல்லைகளுக்குள் வழங்கப்படும் சொற்களே தேசியச் சொற்கள். இச்சொற்கள் யாவும் தூய தெலுங்குச் சொற்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதலின் சஞ்ஞாவில் அதன் இலக்கணம் கூறி, பின்பு ஆச்சிகப்பரிச்சேதத்துக்கண் விவாகப் பேசியுள்ளார்.
  எ – டு.  ஊரு, பேரு, முல்லு, இல்லு, கோட.
3.1.3. சமாசம்
 சமாசம் என்பது தொகைச்சொல் ஆகும். இச்சொற்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் இணைந்து வருவதாகும். இச்சொற்களுக்கான விளக்குமுறை தனித்தப் படலத்துக்கண் பேசப்பட்டாலும் பிற படலங்களிலும் இடம்பெறுகின்றன. அவர்தரும் சமசங்களாவன: கருமதாரயம்(பண்புத்தொகை), பஹூப்ரீஹி(அன்மொழித்தொகை), துவந்தம்(உம்மைத்தொகை), துவிகு(எண்தொகை), தத்புருஷம்(வேற்றுமைத்தொகை) எனபன.
எ –டு
ஆசந்த3மு            - கருமதாரயம்
அந்நத3ம்முலு     - துவந்தம்
முக்கண்டி            - பஹூப்ரீஹி
முச்சிச்சு               - துவிகு
நெலதால்பு           - தத்புருஷம்.
3.1. 4. தத்திதம்
 தத்திதம் என்பது பெயரொட்டு ஆகும். அஃதாவது பெயர்ச்சொற்களை அடுத்து வரும் ஒட்டுக்களைச் சார்ந்தது. இதனைத் தத்திதப்படலத்துக்கண் விளக்கியுள்ளார். இப்படலத்துக்கண் அமையப்பெற்ற ஒட்டுக்கள் பின்னொட்டுக்களே.
  எ – டு. நல்ல + ந = நல்லந, தெல்ல + ந =தெல்லந.
3.1.5. கிரியா
 கிரியா என்பது வினைச்சொல் ஆகும். சின்னயசூரி தெலுங்குக்குரிய வினைச்சொற்களை காரகம்(பெயர்ச்சொற்கள் வேற்றுமையை ஏற்ற பின்பு சேரும் வினைகள் பற்றி விளக்கும் பகுதி), கிரியா, கிருதந்தம் ஆகிய படலத்துக்கண் விளக்கியுள்ளார். கிரியா படலத்துக்கண் விளக்கப்பெற்றவை வினையின் அடிச்சொற்கள்(தாது) உருபுகள் ஏற்கும் தன்மையையாகும்.
  கிரியா < + உருபு > < + காலம் >
இங்கு உருபு எனப்பட்டது வேற்றுமை உருபுகள் அல்ல ; இடையொட்டுக்கள் எனலாம்.
  எ – டு. வண்ட3க3லடு3 – வண்ட3ఁக3லரு, படி3ந – படி3ந்நு.
3.1.6. கிருதந்தம்
 கிருதந்தம் என்பது வினையொட்டு ஆகும். அஃதாவது வினைச்சொற்கள் ஒட்டுக்களை ஏற்கும் தன்மைக் குறிப்பதாகும். இதனைக் கிருதந்தபடலத்துக்கண் காணலாம். அங்கு விளக்கப்பட்டவை பின்னொட்டுக்களே.
  எ – டு. அலுகு3 – அலுக, ஆఁகு3 – ஆఁக, கொலுசு – கொலுபு, காசு – காபு.
3.2. தனித்து எண்ணப்படாதவை
 துருதம், கிராமியம், ஆம்ரேடிதம், பிராக்ருதுலு, தத்பவம், நாமம் ஆகியன தனித்தப்படலத்துக்கண் வைத்து எண்ணப்படாதவை.
3.2.1. துருதம்
 துருதம் என்பது நகர ஈறு ஆகும்(சஞ்.11). இத்துருதம் இருவகைத்து. ஒன்று துருதப்ரக்ருதுலு. அஃதாவது நகர ஈறுகளை இறுதியாகக் கொண்ட சொற்கள்(சஞ்12). மற்றொன்று களாலு. இஃதாவது நகரம் இற்தியாக வராத சொற்கள்(சஞ்.13). இச்சொற்கள் குறித்த விளக்கங்களைச் சஞ்ஞாபடலம் முதற்கொண்டே காணலம்.
 எ-டு.  நந்நுந்,   நாசேதந்,  நாகுந்               – துருதப்ரக்ருதுலு
            அய்ய,  அம்ம,      ராமுఁடு3          – களாலு.
இத்துருத சொற்பகுப்புமுறை தெலுங்கு மொழிக்கே உரிய தனிச்சிறப்பு எனலாம். ஏனெனின் பிற திராவிட மொழி இலக்கணநூலில் இது குறித்த கருத்துக்கள் பதிவு செய்யப்பெறவில்லை என்பதே.
3.2.2. தத்பவம்
 தத்பவம் என்பது சமசுக்கிருத பிராக்கிருதங்களிலிருந்து பிறந்த சொற்கள் ஆகும்(சஞ்.20).
சமசு.         சமசு.பவம்            பிராக்.         பிராக்.பவம்
வக்ர:         வங்கர                    -                   -
வேஸர:    வேஸட2மு          -                   -
ஸமுத்ர:   ஸமுத்ரமு           -                   -
மத்ஸர:       -                           மச்சரோ       மச்சரமு
யஜ்ஞ:         -                           ஜண்ணோ    ஜந்நமு
லக்ஷ்மீ:      -                            லச்சி2           லச்சி
விஷ்ணு:    -                            விண்ணூ      வெந்நுఁடு3
3.2.3. கிராமியம்  
 கிராமியம் என்பது கல்வியறிவு இல்லாதவர்கள் பயன்படுத்தும் சொற்களைக் குறிப்பதாகும்(சஞ்.22). இச்சொற்கள் இலக்கணக் கோட்பாட்டிற்கு உட்பட்டு வராது என்பது கருத்து.
  எ –டு . வஸ்தாఁடு3, தெஸ்தாடு3, வச்செநி.
3.2.4. ஆம்ரேடிதம்
 ஆம்ரேடிதம் என்பது ஒருசொல்லடுக்கு/அடுக்குத்தொடர் ஆகும். இச்சொல் குறித்த விளக்கங்களும் புணர்ப்பு(சந்தி) மாற்றங்களும் சந்திபடலம் முதற்கொண்டே காணப்படுகின்றன.
  எ –டு. ஔர + ஔர =ஔரௌர, ஆஹா + அஹா = ஆஹாஹா
3.2.5. நாமம்
  நாமம் என்பது பெயர்ச்சொல் ஆகும். தொல்காப்பியத்தில் பெயர்ச்சொல்லுக்கான இலக்கண வரையறை தனித்த இயலமைப்பில் உள்ளது. பாலவியாகரணத்தில் அவ்வாறு அமையவில்லை. இருப்பினும் நாமம் சஞ்ஞாபடலம் முதற்கொண்டே காணப்படினும், தத்சமபடலம் முதலே விரிவாக எண்ணப்பட்டுள்ளது.
3.2.6. பிராக்ருதுலு
  பிராக்ருதுலு என்பது வாய்பாடாகும். இதனைக் குறிக்க ஆது3லு, ஆதி3, மொத3லு போன்ற சொற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இஃது தனித்து விளக்கப் படவில்லை. இருப்பினும் பெயர்(நாமம்), வினை(கிரியா) தொடர்பான சொற்களை விளக்குமிடத்து விளக்கப்பட்டுள்ளது. ஒரு குடம்பத்தில் ஆண்/பெண் தலைமைப் பண்பை ஏற்பதுண்டு. அதனைப் போன்றே ஒரே தன்மையுடய குழுச்சொற்களுக்கு ஒரு சொல் தலைமைப் பண்பை ஏற்கும். அவ்வொரு சொல்லுக்குப் பின்பு பிராக்ருதுலு, ஆது3லு, ஆதி3, மொத3லு என்ற ஒட்டுச் சொற்களைப் பயன்படுத்துவதைக் காணமுடிகின்றது.
 நல்லாது3லு: நல்ல, தெல்ல, பச்ச, எர்(ற்)ற், சாம, அல்ல, திய்ய, கம்ம, புல்ல, சப்ப, விந்ந,
 திந்ந, ஒய்ய, திம்ம, சக்க, ப்ரேக.
சிறுதா3து3லு: சிறுத, நதி, நெலத, மெலத, பட3தி, மட்தி3, பொலதி, வெலதி3, நிப்பு, எம்மு.
இவ்விரு வாய்பாடுகளுள் நல்ல, சிறுத என்பவை தலைமைப் பண்பை ஏற்பதால் அதன் பெயராலே அழைக்கும் தன்மையைக் காணலாம்.
4.0. முடிப்பு
 இதுவரை விளக்கப்பெற்ற கருத்தியல்களின் அடிப்படையில் பெயர், வினை, இடை, ஒருசொல்லடுக்கு, தொகை, தத்சமம், தத்பவம், தேசியம் ஆகியன இருமொழி நூல்களிலும் பொதுச்சிந்தனையாக அமைந்துள்ளது எனவும், சிறப்புச்சிந்தனையாக தொல்காப்பியத்தில் உரி,எச்சம் ஆகியனவும், பாலவியாகரணத்தில் துருதம், பிராக்ருதுலு, கிராமியம் ஆகியனவும் அமைந்துள்ளது எனவும் கூறலாம்.
துணைநின்றவை
தமிழ்1. இராதாகிருஷ்ணா ப., 1999, பரவஸ்து சின்னையா சூரி, சாகித்திய அக்காதெமி, புதுதில்லி.
2. இளவழகன் கோ.(பதி.), 2003, தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையம், தமிழ்மண் பதிப்பகம், சென்னை.
3. -------------------, 2003, தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியம், தமிழ்மண் பதிப்பகம், சென்னை.
4. இளையபெருமாள்(மொ.ஆ.),1972, லீலாதிலகம், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.
5. கோபாலையர் தி.வே.(பதி.),1990, இலக்கணக்கொத்து, சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
6. ----------------------- , 1973, பிரயோகவிவேகம், சரசுவதிமகால் நூலகம், தஞ்சாவூர்.
7. சத்தியராஜ் த.,2013, சுவமிநாதம் – பாலவியாகரணம் புறக்கட்டமைப்புநிலை ஒப்பீடு, ஆர் அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகம்,         சென்னை.
8. ------------ , 2013, பாலவியாகரணத்தில் தொல்காப்பியத்தாக்கம் (மொழித்தூய்மைக் கொள்கை), பதிவுகள்(இணைய இதழ்).
9. சண்முகம் செ.வை., 2004, தொல்காப்பியத் தொடரியல், உலகத்தமிழாரய்ச்சி நிறுவனம், சென்னை.
10. சாவித்ரி சி., பாலவியாகரணம், அச்சிடப்பெறாத ஏடு.
11. தாமோதரம்பிள்ளை சி.வை.(பதி.), வீரசோழியம், உலகத்தமிழாரய்ச்சி நிறுவனம், சென்னை.
12. வெங்கடாசலம் தண்.கி., (மொ.ஆ.), 2002, கவிராசமார்க்கம், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.       
தெலுங்கு13. பரவஸ்து சின்னயசூரி, 2002, பாலவ்யாகரணமு, பாலசரஸ்வதி புக் டிப்போ, ஹைதராபாத்.
14. புலுசு வேங்கடரமணய்ய காரி(உரை.), 1965, பாலவ்யாகரணமு(லகுடீக சகிதமு), வாவிள்ள ராமசாமி சாஸ்த்ரலு அண்ட் சன்ஸ்,         மதராசு.
http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&amp;view=article&amp;id=1312:2013-02-01-03-15-07&amp;catid=2:2011-02-25-12-52-49&amp;Itemid=19


முகப்புபாலவியாகரணத்தில் தொல்காப்பியத் தாக்கம் (மொழித்தூய்மைக் கொள்கை)ஒரு மொழிக்கு மொழித்தூய்மை குறித்த சிந்தனை எப்போது வரும்? பிறமொழித்தாக்கம் ஏற்படும்போது  தானே! அஃது இராண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பியருக்குத் தோன்றிற்று. தோன்றியதின் காரணம் அவர்கால மொழிச்சூழல் எனலாம்.  அவர் காலத்தில் வடக்கேயிருந்து வந்த சொற்கள் உட்புக முனைந்தன; முனைந்துகொண்டிருந்தன. இதனையறிந்த அவர் அதனை விடுக்க வேண்டும் என எண்ணினார். அது மட்டுமின்றி  தம் காலத்திற்குப் பிறகும் பிறமொழித்தாக்கம் விரிந்து நிற்கும் எனவும் அறிந்திருந்தார் போலும். ஆதலின் மொழிக்கான தூய்மைக்கொள்கையை மொழிந்துள்ளார்.  இக்கொள்கை தமிழ் மொழியை மட்டுமே எண்ணி மொழிந்ததாகத் தெரியவில்லை. திராவிடமொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போல்வனவற்றிற்கும் அந்நிலை ஏற்படும் என்பதையும் அறிந்து வைத்தது போல் தோன்றுகிறது. அச்சிந்தனை அனைத்துத் திராவிட இலக்கண அறிஞர்களிடமும் காண முடிகின்றது
.
தொல்காப்பியர் வித்திட்டது மொழித்தூய்மைக் கொள்கை. இச்சிந்தனை தெலுங்கு மொழிக்குரிய முதல் இலக்கணநூல் (ஆந்திர சப்த சிந்தாமணி) முதற்கொண்டே காணப்படுகின்றது. அச்சிந்தனை கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாலவியாகரணத்தில் விரிந்த நிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைச் சுட்டிக்காட்டுவது இக்கட்டுரையின் தலையாய நோக்கம்.
தொல்காப்பியரின் மொழித்தூய்மைக் கொள்கை

வடசொல் கிளவி வடவெழுத் தொரீஇ  (தொல்.சொல்.எச்.5)
என்பது தொல்காப்பியரின் மொழித்தூய்மைக் கொள்கை. இக்கொள்கை வடசொற்களைக் கடன்வாங்கும்போது வடமொழிக்கே உரிய எழுத்துக்களை நீக்கி விட்டு தத்தம் மொழிக்குரிய எழுத்துக்களை இட்டுப் பயன்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடுகின்றது. இக்கருத்தை உள்வாங்கிய மரபிலக்கணங்கள் தத்தம் காலத்து வழங்கிய வடசொற்களில் உள்ள வட எழுத்தை நீக்கி தமிழ் எழுத்துக்களை இடும் தன்மைகளைப் பதிவு செய்துள்ளன.
பாலவியாகரண மொழித்தூய்மைக் கொள்கையும் தொல்காப்பியத்தாக்கமும்
சின்னயசூரியின் பிறப்பும் பணிச்சூழலும் தமிழகமாக அமைந்தது. இவரின் இலக்கணப் படைப்பு பாலவியாகரணம். அன்று தொல்காப்பியர் வித்திட்ட அவ் விதையைச்(மொழித்தூய்மை) சின்னயசூரி அறிந்திருக்க வேண்டும். அதனாலேயே தம் தாய்மொழியாகிய தெலுங்கையும் தூய தெலுங்காக மீட்டெடுக்க எண்ணினார்போலும். மீட்டெடுக்கக் கூடிய வழிமுறைகளையும் பதிவு செய்துள்ளார். அப்பதிவில் கற்பாருக்குத் தெலுங்கு மொழிக்குரிய சொற்கள் இவை, வடமொழிக்குரிய சொற்கள் இவை என இனங்கண்டறிந்து விளக்கியுள்ளார். இஃது அவரின் முதல்படலம்(பரிச்சேதம்) முதற்கொண்டே காணலாகின்றது.

சின்னயசூரியின் மொழித்தூய்மைச் சிந்தனையை இரு நிலைகளில் காணலாம். ஒன்று: புதைநிலைச் சிந்தனை. மற்றொன்று: புறநிலைச் சிந்தனை. முன்னது இச்சொல் இவ்வாறாகத் திரிந்து வரும் அல்லது இவ்வெழுத்து இவ்வெழுத்தாகத் திரிந்து வரும் என்பது போல்வனவற்றைச் சார்ந்தது. பின்னது இச்சொற்கள் தூய தெலுங்கிற்கு உரியவை, இவ் எழுத்துக்கள் தூய தெலுங்கிற்கு உரியவை என்பனவற்றைச் சார்ந்தது. புறநிலைச் சிந்தனைகளைக் காட்டுவன: சங்ஞாபரிச்சேதம்: 4,9,10,19,20,21,22, சந்திபரிச்சேதம்: 14,  தத்ஸமபரிச்சேதம்: 1-87, ஆச்சிகபரிச்சேதம்: 1-38. இவை தவிர்த்த பிற புறநிலைச் சிந்தனைகளாகக் கொள்ளலாம். இனிப் புறநிலைச் சிந்தனையிலிருந்து சில கருத்துக்கள் வருமாறு:
 1. சமசுக்கிருதத்திலிருந்து தெலுங்கிற்கு வந்த எழுத்தக்கள்(சங்.4)
 2. அ,ஆ,உ,ஊ,ஒ,ஓ,ஔ ஆகிய எழுத்துக்களுடன் ஒன்றிவரும் ச, ஜ ஒலியுடைய
  சொற்கள். (சங்.9).
 எ.டு. சିିିலி, சாିப
3. சமசுக்கிருத பிராக்கிருதச் சொற்களுக்கு நிகரான மொழி தத்சமம் (சங்.19).
  எ.டு. வித்3யா – வித்3ய.
4. சமசுக்கிருத பிராக்கிருதங்களிலிருந்து பிறந்த மொழி தத்பவம்(சங்.20).
 எ.டு. அகாஸ2 – ஆகஸமு
5. திரிலிங்க தேசத்தில் வழங்கக்கூடிய சொற்கள் சமசுக்கிருத பிராக்கிருதத்துடன்    எவ்விதத் தொடர்புடையனவுமல்ல (சங்.21).
 எ.டு. ஊரு,பேரு,முல்லு
இவற்றுள் மூன்றாவதும் நான்காவதுமாகிய கருத்துக்கள் தொல்காப்பிய ‘வடவெழுத் தொரீஇ’ என்பதன் நேரடிச் சார்புடையவை. எவ்வாறு நேரடிச் சார்புடையவை என எண்ணத்தோன்றும்  அதன் காரணத்தைப் பின்வரும் அட்டவணைத் தெளிவுபடுத்தும்.
வடசொல்                           தமிழாக்கம்                             தெலுங்காக்கம்ராம:                                      இராமன்                                    ராமுఁடு3
லக்ஷ்மீ:                                இலட்சுமி                                   லச்சி
விஷ்ணு:                              விட்ணு                                      வெந்நுఁடு3
அக்3நி:                                  அக்னி                                        அகி3
வந:                                       வனம்                                         வநமு
ஸ்2ரீ:                                   திரு                                             ஸிரி
அஃதாவது ராம: என்பது வட சொல், அச்சொல்லைத் தமிழர் ராம: என்பதிலுள்ள விஸர்க(:) எனும் எழுத்தை நீக்கி அச்சொல்லின்முன் இகரத்தையும் பின் –ன் எனும் ஒற்றையும்(ஆண்பால் விகுதி) சேர்த்துப் பயன்படுத்துகின்றமையும், அதே சொல்லைத் தெலுங்கர் விஸர்க(:) என்பதை நீக்கி விட்டு உகரத்தையும் டு3 எனும் முதல் வேற்றுமை உருபையும் சேர்த்துப் பயன்படுத்துகின்றமையையும் கூறலாம்.
முடிப்புஇதுவரை விளக்கப்பெற்றவையின் வழி தொல்காப்பியர் கூறிய பிறமொழிச் சொற்களைக் கடன்வாங்கும்போது தம் மொழிக்குரிய எழுத்துக்களை இடுகச் எனும் சிந்தனை தமிழ் மொழிக்கு மட்டுமின்றி தெலுங்கு மொழிக்கும் பொருந்தி வரும் என்பதையும், தொல்காப்பியத்தாக்கம் சின்னயசூரியிடம் காணப்பட்டதையும் அறிய முடிகின்றது எனலாம்.
துணை நின்றவை
தமிழ்1. தெய்வச்சிலையார்(உரை.),1984, தொல்காப்பியம் சொல்லதிகாரம், தமிழ்ப்     பல்கலைக் க்ழகம், தஞ்சாவூர்.
தெலுங்கு2. பரவஸ்து சின்னயசூரி, 2002, பாலவ்யாகரணமு, பாலசரஸ்வதி புக் டிப்போ, ஹைதராபாத்.
3. புலுசு வேங்கட ரமணய்ய காரி (உரை), 1965, பாலவ்யாகரணமு (லகுடீக ஸஹிதமு), வாவிள்ல ராம்ஸ்வாமி ஸாஸ்த்ரிலு அண்ட் சன்ஸ், மதராசு.


 Language in India இதழில் வெளியிடப் பெற்றது
5.ஆந்திரசப்தசிந்தாமணியும் பாலவியாகரணமும்: ஒப்பியல் பார்வை 

Andhra Shabda Chintamani and Balavyakaranam: A Contrastive Study
 This article in Tamil compares and contrasts two notable grammatical works in
Telugu: Andhra Shabda Chintamani and Balavyakaranam
Focusing on the different styles of grammar proposed in Telugu tradition, this
article presents various aspects of similarities and dissimilarities between the
chosen grammatical works in Telugu.
As this article is primarily intended for a Tamil audience, the article also
presents some salient similarities and differences between these selected Telugu
grammars vis-a-vis some traditional Tamil grammars such as Tolkappiyam and
Nannuul.

T. Sathiya Raj, Ph.D. Candidate
School of Indian Languages and Comparative Literature
Tamil University
Thanjavur 613010
Tamilnadu
India
மேலும் வாசிக்க http://languageinindia.com/july2013/v13i7july2013.pdf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன