விழாவா? உடல் நலமா?
சில்லரை மனிதனடா
எனக்குத் தீபஒளி
ஈழத்தில் வசிக்கும் எம் சொந்தத்திற்கோ
தீராவலி
நான்வேறு அவன்வேறு பிரிக்கவில்லை
மனித உயிர்களை மதிக்கத் தெரியாத பாவிகளே
தமிழனின் ராட்சத உயிர்களை
இரத்தம் உறிஞ்சும் கொடும்பாவிகளே
நீவிர் சில்லரை மனிதர்களடா
எத்தனை எத்தனை இன்னலடா
எத்தனை எத்தனை துயரமடா
எம்மினச் சொந்தங்களுக்கு
எமக்கு வேட்டுச் சத்தம் இன்ப ஒலியோ
இல்லை இல்லை துன்ப ஒலியடா
தேவை இல்லை புத்தாடை
மானத்தை மறைக்க இல்லையடா
ஒரு கிழிந்த ஆடை - எம் சொந்தங்களுக்கு
எண்ணெய் பலகாரம் என்னத்திற்கு
தலையில் தேய்க்க எண்ணெஉ கூட இல்லையடா எம் சொந்தங்களுக்கு
பிச்சைக் காரனுக்குக் கிடைக்கும் சுதந்திரம் கூட இல்லையடா
தமிழன் தானடா வந்தோரை வாழவைக்கும் மாண்புடையவன்
எம் சொந்த தமிழனை வாழ வைக்க யாருமில்லை
எண்ணவைத்து விட்டதடா
இனவேறுபாடு எனும் உம் கொடூர கொலைச் செயல்
இற்றை நாளில் எனக்குத் தீபஒளி அல்ல - அது தீராவலி
- சே. முனியசாமி
ஈழத்தில் வசிக்கும் எம் சொந்தத்திற்கோ
தீராவலி
நான்வேறு அவன்வேறு பிரிக்கவில்லை
மனித உயிர்களை மதிக்கத் தெரியாத பாவிகளே
தமிழனின் ராட்சத உயிர்களை
இரத்தம் உறிஞ்சும் கொடும்பாவிகளே
நீவிர் சில்லரை மனிதர்களடா
எத்தனை எத்தனை இன்னலடா
எத்தனை எத்தனை துயரமடா
எம்மினச் சொந்தங்களுக்கு
எமக்கு வேட்டுச் சத்தம் இன்ப ஒலியோ
இல்லை இல்லை துன்ப ஒலியடா
தேவை இல்லை புத்தாடை
மானத்தை மறைக்க இல்லையடா
ஒரு கிழிந்த ஆடை - எம் சொந்தங்களுக்கு
எண்ணெய் பலகாரம் என்னத்திற்கு
தலையில் தேய்க்க எண்ணெஉ கூட இல்லையடா எம் சொந்தங்களுக்கு
பிச்சைக் காரனுக்குக் கிடைக்கும் சுதந்திரம் கூட இல்லையடா
தமிழன் தானடா வந்தோரை வாழவைக்கும் மாண்புடையவன்
எம் சொந்த தமிழனை வாழ வைக்க யாருமில்லை
எண்ணவைத்து விட்டதடா
இனவேறுபாடு எனும் உம் கொடூர கொலைச் செயல்
இற்றை நாளில் எனக்குத் தீபஒளி அல்ல - அது தீராவலி
- சே. முனியசாமி
உருவம்
மனித உருவிற்கு
துணைநிற்பது
பல உறுப்புகள்...
வாழ்க்கைக்குத் துணைநிற்பது
பல உறவுகள்...
பல இணைப்புகளின்றி
ஏதுமில்லை உலகிலே!
- இரா. நித்யா சத்தியராஜ்
துணைநிற்பது
பல உறுப்புகள்...
வாழ்க்கைக்குத் துணைநிற்பது
பல உறவுகள்...
பல இணைப்புகளின்றி
ஏதுமில்லை உலகிலே!
- இரா. நித்யா சத்தியராஜ்
தாய்மை
தாயின்
சுமைகளையும் வேதனைகளையும்
யானறியேன்
மகளாய்
அறிந்தேன்
யான் தாயான போது.
- இரா. நித்யா சத்தியராஜ்
சுமைகளையும் வேதனைகளையும்
யானறியேன்
மகளாய்
அறிந்தேன்
யான் தாயான போது.
- இரா. நித்யா சத்தியராஜ்
கணவன் மனைவி உறவு
சிறு சிறு அறிவுரை
சிறு சிறு பரிவு
சிறு சிறு சங்கடம்
சிறு சிறு துயரம்
சிறு சிறு பந்தம்
சிறு சிறு பாசம்
சிறு சிறு சண்டைகள்
சிறு சிறு சமாதனம்
சிறு சிறு உதவி
சிறு சிறு ஊடல்
சிறு சிறு இன்பம்
சிறு சிறு துன்பம்
அனைத்தும் சேர்ந்த பிணைப்புகளின்
இணைப்பே கணவன் மனைவியின் உறவு
- இரா. நித்யா சத்தியராஜ்
காதற்கிழவன்
என்னால் முடியாது
உங்கள் உதவியில்லையேல்
என் காதற்கிழவனே
எனது முன்னேற்றத்தில்
உங்கள் பாங்கு முக்கியப் பங்கு
- இரா.நித்யா சத்தியராஜ்
Truth
Nothing is valuable,
Precious and Golden thing
Unless came across hurdles,
Struggles and obstacles.
- R. Nithya Sathiyaraj
Precious and Golden thing
Unless came across hurdles,
Struggles and obstacles.
- R. Nithya Sathiyaraj
மழலைச் செல்வம்
என் குழந்தாய்
என் துயர்
நீக்க வந்த புதல்வியே!
சிரிக்க வைத்தாய்
என்னை
சில பாவணைகள்
செய்து.
- இரா. நித்யா சத்தியராஜ்
செல்லரித்த அட்டையாய்.....
மனித உயிர்களின் நேசம்
மயிர் போன்றது
நினைத்தால் முளைக்க வைக்கலாம்
வெறுத்தால் இழக்க வைக்கலாம் - இதில்
வாய் பேசா குழந்தை
தலையும், தடுமாறும்
மனமும் தான்.
ஆசை ஆசையாய் வைக்கும்
பாசம் சில தருணங்களில்
முள்ளில் சிக்கிய ஆடைதான்
நினைத்தால் ஆள்வது நீயாயிருப்பாய்
இல்லாவிடில் முள்ளே ஆண்டு விடும்.
பனித்துளிகள் என்மீது பட்டும்
சிலிர்த்துப் போகாத நான்
உன் மூச்சுக் காற்றினை
நினைத்து நினைத்து தினமும்
உருகி விடுகிறேன்.
மறக்க முடியுமா
என்ற உன் கேள்விக்கு
மறக்க முடியுமென நினைத்தேன்
நீயாய் வந்து
என்னைத் தொடாதபோது
என்னிடம் பேசாத போது
என்னை நினைக்காத போது
உன்னை மறந்திருப்பேன்.
ஆனால்.......
உன் உருவம் இல்லா
நினைவுகள் + நீ அனுப்பிய குறுஞ்செய்திகள்
உன்னையே நினைவாக்கிய இடபுலங்கள்
இவைகளெல்லாம் ஒன்று சேர்ந்த நிலையாய்
செல்லரித்த அட்டையாய்
சிறிது சிறிதாய்
சிதலமடைகின்றனே!
- சே. முனியசாமி
மனித இயல்பு
அனுபவ
வார்த்தைகளை
கேட்க மறுக்கும் மனமே
அனுபவித்து
அறிந்து கொள்வது ஏனோ?
- இரா. நித்யா சத்தியராஜ்
மொழிகள்
இளமையில் காதல்
மொழிகள்...
முதுமையில் அனுபவ
மொழிகள்...
- இரா. நித்யா சத்தியராஜ்
நெல்லையும் முல்லையும்
கூட்டு டன்படிக்கை அல்ல அது
நாட்டை அடக்கு படையெடுக்கை
கூவி கூவி கூறு போட்டு விற்கும்
அந்நியன்தானே சூதுள்ள சூனியக்காரன்
ரஷ்யா ஒப்பந்தம்
ராட்சத நிர்பந்தம்
தலையாட்டிக் கண்ணடித்து சரியென்றான் - அன்று
தலைமுறை உருவெடுக்க வேண்டாமென்று
பாலும் தேனும் ஓடுதே இப்பவும்
பாலாய் போகுமென்று காத்திருக்கிறான் எப்பவும்
அணுசக்தியை நுழைத்தான் மெதுவாய்
மனித சக்தியை அழிக்க வந்தான் ஏதுவாய்
கூடிக் கிடக்கும் நம் கூட்டுக் குடும்பத்தில்
தூண்டி திரியைத் தூண்டுகிறான் கூடங்குளத்தில்
கவனக் குறியெல்லாம் தமிழகம்தான்
நிதானமாய் முழுங்கப் போகிறான் திமிங்கலமாய்
நெல்லை மக்களைத் திசை திருப்ப
முல்லைப் பெரியாராய்ப் பாய்ந்தான்
அகோர சூழ்ச்சி செய்ய நினைத்தாலும்
அனுமதிக்க மாட்டோம் அணுவலைச் சுடர்விட
விடி வெள்ளியாய் இருப்போம்
இடி முழக்க ஒலியாய் இசைப்போம்
என்றும் எம் இளைஞர்களின் சக்தியால் ....
- சே. முனியசாமி
செத்தும் பிழைத்தும்
உன்னால்
உன் நினைவால்
தினம் தினம்
செத்துக் கொண்டிருக்கிறேன்.
உன்னால்
உன் நினைவால்
தினம் தினம்
என் கவிதை
பிழைத்துக் கொண்டிருக்கிறது.
- சே. முனியசாமி
ஒரு மணி நேரம்
நிணயிக்கப்பட்ட
நேரம் பேச
ஒப்புக்கொண்டாய்.
ஒரு மணி நேரம்
முன்னதாகவே - என்
பணிகளை ஒத்திக்கு விடுகிறேன்
நீ..... நீ.......
பேசியது
சில நிடங்கள் மட்டும்.
பேசிய பின்பு
அடுத்த ஒருமணி நேரத்தை
பேசப்பட்ட
உம் நினைவால் கழிக்கிறேன்
ஏன்?
- சே.முனியசாமி
உபரியாய்....
எந்த பணியும்
முழுதாய் செய்யவில்லை
என்ன பணி செய்தாலும்
என் நேரத்தை
நீ முக்கால் வாசி பங்கு போடுகிறாய்
ஆனால்...
உனது பணி பூர்த்தியாய் விடுகிறது
எனது பணி உபரியாகிவிடுகிறது
ஏன்?
- சே. முனியசாமி
வதுவைச் சடங்கு
மடங்கள் இருபத்தேழாம் நாளில்
மயங்கியவை நினைவுக்கு
வந்தன....
இஃது முற்கனவு.
அன்றிரா முதலே
அன்பின் ஈருயிர்
ஓருயிர் ஆனவோ?
ஆம்.... ஆம்......
காமத்தில் மட்டுமன்று
காம அன்பிலும்...
- த. சத்தியராஜ்
வெண்பா
கன்னிக் கனிமொழியில் கண்ணுற்றேன் அன்பை
கனிந்தன என்னுள்ளம் அன்பே! - கனியா
கார்கூந் தலழகே! கண்ணிமைப் போர்விற்
கருமுகிலாய் துன்புறுத் தாதே
- த. சத்தியராஜ்
காதல்
கண்களால் களவு செய்து
களவிலே இன்பந் துவித்து
கை கழுவுவதா காதல்
அல்ல... அல்ல...
கற்புத் தளத்தில்
கைகள் நான்கும்
இணைவதல்லவோ
காதல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன