இனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் காலாண்டுக்கு ஒருமுறை மே, ஆகட்டு, நவம்பர், பிப்புருவரி ஆகிய திங்கள்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இவ்விதழ் 2015 முதல் இயங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அருமைத் தமிழ் உறவுகளே! ஆய்வு நண்பர்களே! இந்தியாவிலிருந்து வெளிவரும் இனம் தமிழாய்விதழில் கட்டுரைகள் வெளியிடுவதற்குத் தங்களை இனம் குழுமம் அன்புடன் வரவேற்கிறது.இக்குழு கலை, இலக்கியம், இலக்கணம், மானுடம், மொழியியல், சமயம், நாட்டுப்புறவியல், தொல்லியல், கணினித் தமிழ், தமிழ் இயற்கை மொழியாய்வு ஆகிய ஆய்வுகளுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றது. ஒவ்வொரு கட்டுரைகளும் ஆசிரியர் குழுவினரால் துறைசார் வல்லுநர் குழுவால் மதிப்பீடு செய்யப் பெற்ற பின்னரே இதழில் வெளியிடப் பெற்று வருகின்றது.
இவ்வாய்விதழ் 2017-2018ஆம் கல்வியாண்டிற்குரிய பல்கலைக்கழக மானியக்குழுவின் இதழ் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. இத்தகு ஆய்விதழில் தங்களது ஆய்வுச் சிந்தனைகளை வெளியிடுவதற்குப் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுக.
கட்டுரையை நேரடியாகத் தளத்தில் பதிவுசெய்யும் வழிமுறைகள் பின்வருமாறு
படிநிலை - 1
இதழ் பக்கத்தில் தங்களுக்குரிய கணக்கை உருவாக்குதல் வேண்டும்.
படிநிலை - 2
இதன் வலதுபுற மூலையில் உள்ள பதிவுசெய் (Register) பொத்தானை அல்லது ஒப்படைப்பு (Make a Submission) பொத்தானை அழுத்தவும்.
படிநிலை - 3
இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று - ORCID1யைப் பயன்படுத்தி கணக்கை உருவாக்குவது. இரண்டாவது வழிமுறையைப் பின்வரும் படமும் மேலுள்ள படமும் விளக்கிக் காட்டும்.
படிநிலை - 4
இந்த வழிமுறையைப் பின்பற்றியும் கணக்கை உருவாக்கலாம்.
படிநிலை - 5
இது தாங்கள் உள்நுழையும் பக்கம்.
படிநிலை - 6
இது தாங்கள் ஆய்வுக்கட்டுரையை ஒப்புடைப்புச் செய்யும் பக்கம் ஆகும். இதில் புதிய ஒப்படைப்பு (New Submission) எனும் பொத்தானை அழுத்தப் பின்வரும் பக்கம் விரியும்.
இந்த நான்கு நிலைகளையும் முடிக்க கட்டுரை பதிவேற்றம் செய்யப்பெறும்.
படிநிலை - 7
இதிலிருக்கும் பதிவுசெய்து தொடர் (Save and Continue) எனும் பொத்தானை அழுத்தவும். அவ்வாறு அழுத்தப் பினவரும் பக்கம் தோன்றும்.
படிநிலை - 8
இதில் கோப்பு இணைக்க (Add File) என்பதை அழுத்திக் கோப்பைப் பதிவேற்றவும்.
படிநிலை - 9
இதில் வரும் கட்டுரை உரை (Article Text) -யைத் தெரிவுசெய்யவும். அதன்பின்பு பின்வரும் பக்கம் தோன்றும். அதில் கேட்கப்பெற்றுள்ள குறிப்புகளைக் கவனமாக நிரப்பவும்.
படிநிலை - 10
இதிலிருக்கும் சேமித்துச் செல் பொத்தானை அழுத்த இறுதி ஒப்படைப்புப் பக்கம் விரியும்.
படிநிலை - 11
அந்தப் படிநிலையும் முடிந்த பின்பு பின்வரும் பெட்டித் தோன்றும்.
படிநிலை - 12
அதனை முடித்த பின்பு தாங்கள் கட்டுரை ஒப்புடைப்புச் செய்தமைக்கான குறிப்புத் தோன்றும்.
அவ்வளவுதான் நீங்கள் உங்களது கட்டுரையை இதழுக்கு ஒப்புடைப்புச் செய்து விட்டீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன