புதன், 26 ஜூலை, 2023

தமிழில் வடிவமைப்புப் பயிற்சி (திறன் மேம்பாட்டுப் பயிற்சி)

தமிழில் வடிவமைப்புப் பயிற்சி (திறன் மேம்பாட்டுப் பயிற்சி)

நண்பர்களுக்கு,

தமிழ் வணக்கம். 

ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விப்புலச் சார்பு பணிகளில் இருப்பவர்கள், நிறுவனங்கள் வைத்து நடத்துபவர்கள், இலக்கிய அமைப்பாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் சார்ந்து இணையத்தில் தொடர்ந்து இயங்குபவர்கள், சமூக ஊடகங்களில் இயங்குபவர்கள், இணையக் கல்வி பயிற்சியாளர்கள் போன்றோர்கள் தங்கள் பணித்தேவைக்காகவும் மேம்பாட்டிற்காகவும் தற்போதைய கணினி யுகத்தில் வடிவமைப்புப் பற்றிய புரிதல் பெற்றிருத்தல் மிகவும் அவசியமானதாகும். 

வடிவமைப்பு என்றால் கணினியின் மென்பொருள் அறிவு பெற்றிருப்பது என்று பொருள் அல்ல. மாறாக அடிப்படையாக ஒரு மனிதர் தெரிந்து வைத்திருக்க வேண்டிய வடிவமைப்புப் பற்றிய விழிப்புணர்வும் வடிவமைப்பிற்கான அடிப்படை உறுப்புகளை பற்றிய அறிதலும் ஆகும்.

இவ்வடிப்படை விழிப்புணர்விலிருந்தே, கணினித் தொழில்நுட்ப அறிவு ஓரளவு இருந்தாலே நம்மால் தரமான, நேர்த்தியான, பொருள்பொதிந்த, அழகியலுடன் கூடிய வடிவமைப்புகளை  உருவாக்க இயலும். 

அத்தகையப் பயிற்சியாகத்தான் இப்பயிற்சியை அனலியும் இனமும் இணைந்து மிகக்குறைந்த கட்டணத்தில் அதே வேளையில் தரத்திலும் அடர்விலும் குறைவுபடாது நடத்தயிருக்கிறோம். 

எப்போதும்போல் உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்.
 
கீழே தரப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி இப்பயிற்சிக்கான பெயர் பதிவில் இணைந்து கொள்க. 

https://forms.gle/Xmkx1XWWEjWEM3d89

தோழமையுடன்
அனலியும் இனமும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன