ஒரு மொழி பன்னெடுங்காலமாகப் பலரால் பேசப்படும் நிலையில் வட்டாரம், சமூகம் சார்ந்து மொழிக்குள் வேறுபாடுகள் சில அமைவதுண்டு. ஒரு மொழியில் ஏற்படும் இத்தகைய வழக்கு வேறுபாடுகள் கிளைமொழிகள் எனப்படுகின்றன. வட்டாரம், சமூகம், இனம், பால், வயது முதலியவற்றின் அடிப்படையில் ஒரு மொழியில் கிளைமொழிகள் அமைவதை மொழியியல் அறிஞர்கள் விளக்கியுள்ளனர். தமிழ்ச்சூழலில் வட்டாரம், சமூகம் சார்ந்த கிளைமொழிகள் தெளிவாக அமைந்துள்ளன. அதாவது, சென்னையில் பேசப்படும் தமிழுக்கும் நாஞ்சில் நாட்டில் பேசப்படும் தமிழுக்கும் காவிரி டெல்டா பகுதியில் பேசப்படும் தமிழுக்கும் கொங்கு தமிழுக்கும் வேறுபாடுகள் உள்ளன. இத்தகைய வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு கிளைமொழி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தொடக்கத்தில் கிளைமொழி ஆய்வு வட்டார வழக்கு ஆய்வையே குறிப்பதாக விளங்கியது. பின்பு மொழியியலில் ஏற்பட்ட வளர்ச்சியில் வட்டாரக் கிளைமொழி ஆய்வு கிளைமொழியின் ஒரு பகுதியானது. அவ்வாறு வட்டாரக் கிளைமொழி ஆய்வின் மூலம் அவ்வட்டாரத்திற்கே உரிய வழக்குச் சொற்கள் சேகரிக்கப்பட்டு வட்டார வழக்குச் சொல்லகராதிகள் உருவக்கப்பட்டன. அவ்வாறு தமிழ்ப் புலமை மரபில் உருவாக்கப்பட்ட வட்டார வழக்குச் சொல்லகராதிகளைப் பற்றி இக்கட்டுரை ஆய்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன