தமிழிலக்கியத்தைப் பொறுத்தவரை இத்தனை வகை எண்ணிக்கைகளான இலக்கியங்கள்தான் உண்டு அல்லது படைக்கப்பட்டுள்ளதென அறுதியிட்டு வரையறுக்க இயலாது. இருப்பினும் பல்லாயிரக்கணக்கான நூல்கள் கிடைத்த போதிலும் அவற்றைக் கையிற்கிடைத்த, அழிந்து போன நூல்களென இருவகையாகப் பிரிக்கலாம். அதிலும் சுவடி வாயிலாகவே பெரும்வாரியான இலக்கியங்கள் உருப்பெற்றன. அவை பாதுகாக்கப்படாததன் நிமித்தம் பல இலக்கியங்கள் மறைவு தினத்தைச் சூட்டிக்கொண்டன. இன்றும் சங்க இலக்கிய நூல்கள் உருப்பெற்று நம் கரங்களில் நிலைப்பதற்கு முழுமுதற்காரணம் உ.வே.சா எனினும் அது மிகையாகா. சி.வை.தா. போன்ற ஆளுமைகளின் தளராது சோர்ந்துபோகாது இடைவிடாது முயன்றதன் விளைவால் சங்க இலக்கியங்கள் தத்தம் பிறந்த தினத்தைத் தக்க வைத்துக் கொண்டன. 1500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இலக்கியங்களைத் தனியொருவனாகத் தேடி அலைந்து சேகரித்த நிலைப்பாடுகளை ‘என் சரித்திரத்தில்’ படிக்கும்போது உ.வே.சா. தமிழ்மீதும் தமிழிலக்கியங்கள் மீதும் கொண்ட உன்னதமான அன்பிற்கு ஈடுயிணை ஏதுமில்லை என்பதை உணர முடிந்தது.
மாத இதழ். இதில் கவிதை, கட்டுரை, தமிழியல், சிறுகதை, புதினம், வரலாறு, தொல்லியல் எனப் பல்துறை சார்ந்தும் கருத்துக்கள் இடம்பெறும். Monthly Journal. It features a wide range of concepts including poetry, essay, Tamil, short story, novel, history and etc.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன