வெள்ளி, 24 ஜூன், 2022

அறிவுமதி - ஹைக்கூ கவிதைகள்

 

• பள்ளிக்குப் போகாத சிறுமி 
செல்லமாய்க் குட்டும் 
ஆலங்கட்டி மழை

• மரம் வெட்டிய கோடரி 
பார்த்துக் கொள் 
கடைசி மழைத் துளி

• வீட்டிற்குள் குரோட்டன்சுகள் 
தொட்டிக்குள் மீன்கள் 
வானம் தொலைத்த நகரம்

• விடிந்து விடு இரவே 
விழித்திருக்கிறான்
கூர்க்கா

• நொறுக்குவான் பண்ணையாரை 
எல்லாக் கோபங்களோடும் 
சுடுகாட்டில்

• வாழ்த்து அட்டை 
முகவரியில் வருடினேன் 
எழுதிய உன் கையை

• முதியோர் இல்லம் 
யாரோ பாடிக் கொண்டிருந்தார் 
தாலாட்டு

• அகதி முகாம் 
மழையில் வருகிறது 
மண் வாசனை

• மணவறை
மெதுவாகப் பெருக்குகிறாள்
முதிர்கன்னி

• நெருப்பு தான் பெண் 
அம்மாவிற்கு அடிவயிற்றில் 
மாமியார்க்கு அடுப்படியில்

காணொலி
பார்வை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன