புதன், 28 ஏப்ரல், 2021

உடேமியில் தமிழ் மின்பாடங்கள் உருவாக்கும் முறைகள்

முனைவர் த. சத்தியராஜ்

தமிழ் உதவிப்பேராசிரியர்

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா

கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கோயமுத்தூர் - 641 042

9600370671, sathiyarajt@skacas.ac.in 

உடேமி கற்றல்/ கற்பித்தல் செயல்பாடுகளை வழங்கி வருகின்றது. இச்செயல்பாடு வரவேற்கத்தக்கது. இது போன்ற செயல்பாடுகளால் உலகின் எந்த மூலையிலிருந்தும் கற்றுக் கொள்ளவும் கற்பிக்கவும் எளிதாகின்றது. இந்த அமைப்பு, தமிழில் மின்பாடங்கள் உருவாக்க வழிவகை செய்து தந்துள்ளது. அதனைத் தமிழ் மட்டும் அறிந்தோருக்கு வழிகாட்டுகின்றது இக்கட்டுரை. 

மின்கற்றல் தளங்கள் (E-Learning Portal)

மின்கற்றல் என்பது இணைய வசதியுடன் கற்றுக் கொள்ளும் ஒரு செயல்பாடாகும். இன்றைய சூழலில் இந்தியாவில் கற்றல் நிலையின் போது இனையம் மூலமாகக் கற்கும் ஆவலைத் தூண்டி விடுவதைக் காண முடிகின்றது. அதற்கு ஏற்ப பல்கலைக்கழக மானியக் குழுவும் பல்வேறு மின்கற்றல் தளங்களை ஆசிரியர் சமூகத்திற்கும் மாணவச் சமுதாயத்திற்கும் அறிவுறுத்தி வருகின்றது. அதனை மூக் (MOOC) என வரையறைப்படுத்துகிறது.. Massive open online course - WikipediaThe reasons for the growing popularity of the MOOC courses | College

இந்த MOOC என்பதை Massive Open online Course என விரிவாக்கிப் பார்க்கலாம். அதாவது பெரிய திறந்தவெளி இணையப் பாடங்கள் எனத் தமிழாக்கம் செய்து பார்க்கலாம்.

A Comparison of Five Free MOOC Platforms for Educators | EdTech ...

இந்தப் பெரும் பகுப்பிற்குள் வரும் கற்றல் தளங்களாக கோர்செரா, உடேமி, இடி எக்சு, மூடுல், கோர்சுைசைட், கான் வாசு, எலக்டா, என்.பி.டி.எல், சுவயம் போல்வன அமைகின்றன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கட்டமைப்புடன் கற்பித்தல் செயல்பாடுகளை நிகழ்த்தி வருகின்றன.

scienece-excellence

உடேமி அறிமுகம் (Udemy)

உடேமி அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.  இந்நிறுவனம் மே 2010இல் எரன் பாலி, ககன் பியானி, ஒக்டே காக்லர் ஆகியோரால் நிறுவப்பட்டது.

பிப்ரவரி 2021 நிலவரப்படி, இந்த இணையக் கற்பித்தல் தளத்தில் 40 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள், 1,55,000 படிப்புகள், 70,000 பயிற்றுநர்கள், 65-க்கும் மேற்பட்ட மொழிகளில் கற்பிக்கும் படிப்புகள் உள்ளன. 480 மில்லியனுக்கும் அதிகமான பாடநெறி சேர்க்கைகள் உள்ளன. மாணவர்கள், பயிற்றுநர்கள் 180+ நாடுகளிலிருந்து வருகிறார்கள். மேலும் 2/3 மாணவர்கள் அமெரிக்காவிற்கு வெளியே இருந்து கற்று வருகின்றனர்.

இதன் மூலம் உடேமியின் கற்றல் தளம் எந்தளவிற்குத் தமிழ்ச் சமூகத்திற்கு உதவும் எனப் புரிந்து கொள்ளலாம். இது ஒரு தனியார் நிறுவனமாக இருந்தாலும் தமிழ் மொழியின் தரவுத்தளமாகக் கொள்ளும் பொழுது, அதன் முக்கியத்துவத்தை உணரலாம்.

பயன்பாட்டு நெறிகள்

இந்தத் தளத்தைப் பயன்படுத்திப் பயன்பெறும் நெறிகளை இந்நிறுவனம் வகுத்துள்ளது. அது பல்வகையில் அமைந்துள்ளது. அதனை இவ்வாறு வகைப்படுத்திக் காட்டுகின்றது. அவை வருமாறு

  1. பயன்பாட்டு விதிமுறைகளை

  2. தனியுரிமைக் கொள்கை

  3. அறிவுசார் சொத்து கொள்கை

  4. உடெமி ஏபிஐ ஒப்பந்தம்

  5. முதன்மை சேவைகள் ஒப்பந்தம்

  6. வணிக தனியுரிமை அறிக்கைக்கான உதெமி

  7. பயிற்றுவிப்பாளர் விதிமுறைகள்

  8. இணைப்பு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

  9. வரவு திட்டம்

  10. விலை மற்றும் விளம்பரக் கொள்கை

இவை குறித்து விரிவாக அத்தளம் சென்று அறிந்துகொள்ளவும். இந்த வகைப்பாட்டுக்குள்ளும் பல்வகை பிரிவுகளை வைத்து விளக்கியுள்ளனர். சான்றாக, தனியுரிமை கொள்கை குறித்த பிரிவுகள் வருமாறு

  1. நமக்கு என்ன தரவு கிடைக்கும்

  2. உங்களைப் பற்றிய தரவை நாங்கள் எவ்வாறு பெறுகிறோம்

  3. உங்கள் தரவை நாங்கள் எதற்காகப் பயன்படுத்துகிறோம்

  4. உங்கள் தரவை நாங்கள் யாருடன் பகிர்ந்து கொள்கிறோம்

  5. பாதுகாப்பு

  6. உங்கள் உரிமைகள்

  7. அதிகார வரம்பு-குறிப்பிட்ட விதிகள்

  8. புதுப்பிப்புகள் மற்றும் தொடர்பு தகவல்

பயிற்றுநருக்குரிய நெறிகள்

இந்த நிறுவனம் பயிற்றுவிப்பாளருக்குரிய விதிமுறைகளைக் கடைசியாகச் செப்டம்பர் 24, 2020 அன்று புதுப்பித்தது. அதில் ”உடேமி இயங்குதளத்தில் பயிற்றுவிப்பாளராக நீங்கள் பதிவுபெறும் போது, பயிற்றுவிப்பாளர் விதிமுறைகளைப் பின்பற்ற ஒப்புக்கொள்கிறீர்கள் எனவும், இந்த விதிமுறைகள் பயிற்றுவிப்பாளர்களுக்குப் பொருத்தமான உடேமி தளத்தின் அம்சங்களைப் பற்றிய விவரங்களை உள்ளடக்கியது என்றும், எங்கள் சேவைகளின் உங்கள் பயன்பாட்டை நிர்வகிக்கும் பொதுவான சொற்களான எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளில் குறிப்புடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும், இந்த விதிமுறைகளில் வரையறுக்கப்படாத எந்த மூலதன சொற்களும் பயன்பாட்டு விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி வரையறுக்கப்படுகின்றன என்றும், ஒரு பயிற்றுவிப்பாளராக, நீங்கள் உடேமி இன்க் (அமெரிக்காவில் ஒரு டெலாவேர் கார்ப்பரேஷன்) உடன் மற்றொரு உடேமி துணை நிறுவனம் உங்களுக்குப் பணம் செலுத்துவதற்கு வசதி செய்கிறதா என்பதைப் பொருட்படுத்தாமல் நேரடியாக ஒப்பந்தம் செய்கிறீர்கள் என்றும்’ கூறுகின்றன.

கணக்கை உருவாக்குதல்

இந்தத் தளத்தில் இணைந்து கற்பதாக இருந்தாலும் கற்பிப்பதாக இருந்தாலும் முதலில் அதில் ஒரு கணக்கு ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு ஏதாவது ஒரு மின்னஞ்சலில் கணக்கு வைத்திருப்பது போதுமானது.

கணக்கு உருவாக்கு (Sign Up) எனும் பொத்தானை அழுத்தப் பின்வரும் படம் தோன்றும். அதில், பெயர் (Full Name), மின்னஞ்சல் (E-Mail), கடவுச்சொல் (Password) கேட்கப்பட்டிருக்கும். அந்த விவரங்களைப் பூர்த்தி செய்து, கணக்கு உருவாக்குப் பொத்தானை அழுத்த, உடேமியில் ஒரு கணக்கு உருவாக்கப் பெற்றுவிடும்.

கணக்கு உருவாக்காத்திற்கு, பிறிதொரு வழிமுறையும் உள்ளது. அது நேரடியாக மின்னஞ்சல், முகநூல் போன்ற தளங்களோடு இணைக்கும் பொழுதும் கணக்கு உருவாக்கப்படும். அதனை விளக்கும் படங்கள் வருமாறு:

பாடம் உருவாக்கும் பக்கம்…

இந்தப் படத்தில் காட்டியுள்ளபடி புதிய பாடத்தை உருவாக்கு எனும் பகுதியைச் சொடுக்கவும். அதன்பிறகு, பின்வரும் படம் விரியும்.

இதன்படி பாடம் உருவாக்கும் வழிமுறைகள் இரண்டு இருப்பதை உணரலாம்.

பாடம் உருவாக்கும் வழிமுறைகள்

உடேமியில் பாடம் உருவாக்கப் பின்வரும் இரண்டு வழிமுறைகள் செய்து தரப்பெற்றுள்ளன. அவை,

  1. பயிற்சி பாடம்

  2. பாடம் உருவாக்கம்

பயிற்சி பாடம்

இதன் மூலம் ஒரு பயிற்சி பாடத்தை உருவாக்கிப் பார்க்கலாம். இது ஒரு எளிமையான செயல்பாடாகும். பாடங்களுக்காக உருவாக்கிய காணொலிகளை ஒரே நேரத்தில் பதிவேற்றலாம். அதனைக் காட்டும் படங்கள் வருமாறு


பாடம் உருவாக்கம்

பாடம் உருவாக்கம் எனும் பகுதிக்குள் திட்டமிடப்பெற்ற பாடக்குறிப்புகளைப் பதிவேற்றம் செய்யலாம். அதற்குரிய வடிவமைப்புடன் இப்பகுதி அமைந்துள்ளது.

இப்படத்தில் காட்டியுள்ளபடி பாடம் எனும் பகுதியைச் சொடுக்கி நகரவும். அதன்பிறகு பின்வரும் பகுப்புத் தோன்றும். அதில் பாடத்தின் தலைப்பைத் தருதல் வேண்டும்.

அதனைத் தந்து நகர, பாடம் அமையும் வகைப்பாடு குறித்த தகவல் கேட்கப்படும். அதனையும் நிரப்பி நகரவும்.

அதன்பிறகு வாரம் எவ்வளவு நாழிகை செலவு செய்வீர்கள் என்ற வினா எழும். அதனை அவரவர் சூழலுக்கு ஏற்பப் பூர்த்தி செய்யவும். பின்பு நகரவும்.

அதன் பின்பு பின்வரும் படம் தோன்றும். அது பாடம் உருவாக்கும் மையப் பகுதியாகும். அதில் பாடத்திட்டம், பாடக்குறிப்புகள் உருவாக்கும், பாடம் ஒப்படைப்பு ஆகியன அமைந்திருக்கும். அதன்படி உருவாக்கிய பாடத்தைப் பதிவேற்றவும். அதற்குரிய வழிகாட்டுப் படங்கள் வருமாறு...

பாடத்தை உருவாக்கியவுடன் இறுதியாக, உருவாக்கிய பாடத்தை மதிப்பீட்டிற்காக ஒப்படைப்புச் செய்தல் வேண்டும். ஒப்படைப்புச் செய்யும்பொழுது, கீழ்வரும் படம் காட்டும் வழிமுறைகளின் படி ஒப்படைப்புச் செய்தல் நன்று.

உடேமி மதிப்பீட்டுக் குழுவினரின் பணி நிறைவுபெற்றவுடன் பாடம் வெளியீட்டிற்கான பகுதி தோன்றும். அதில் உருவாக்கிய பாடத்தின் உரலி பெயரை உறுதி செய்தல் வேண்டும். அதன்பின்பு பாடம் வெளியிடப்பெற்றதற்கான குறிப்புத் தோன்றும். அப்படங்கள் வருமாறு




பாடத்தைப் படிக்கும் பகுதியைத்தான் பின்வரும் படம் காட்டுகின்றது.


நிறைவாக…

உடேமி ஒரு அயல்நாட்டுத் தனியார் நிறுவனமாக இருந்தாலும் தமிழ் மொழி இணைய உலகில் தரவுகளாக மாறுவதற்கு இத்தளம் உதவும். அதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி தமிழ் சார்ந்த மின்படங்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவிலே உள்ளன. அதனைக் கருத்தில் கொண்டு மின்பாடங்களை இத்தளத்தில் உருவாக்கித் தருவது தமிழ்ச் சான்றோர்களின் கடமையாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன