சனி, 1 மே, 2021

உடேமியின் பயன்பாட்டு விதிமுறைகள்

 உடேமி பயன்பாட்டு விதிமுறைகளைக் கடைசியாக ஏப்ரல் 1, 2021 அன்று புதுப்பித்தது.

கற்றல் மூலம் வாழ்க்கையை மேம்படுத்துவதே உடேமியின் நோக்கம். கல்வி உள்ளடக்கத்தை (பயிற்றுநர்கள்) உருவாக்கவும் பகிரவும், அந்தக் கல்வி உள்ளடக்கத்தைக் (மாணவர்கள்) கற்றுக் கொள்ளவும் எங்கும் எவருக்கும் உதவுகிறது. இந்நிறுவனம் சந்தை மாதிரியை அதன் பயனர்களுக்கு மதிப்புமிக்க கல்வி உள்ளடக்கத்தை வழங்குவதற்கான சிறந்த வழியாகக் கருதுகிறது. அனைவரும் இந்தத் தளத்தின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் அதனைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் விதிகள் தேவை. ஆகவே, இந்த விதிமுறைகள் உடேமி வலைத்தளம், உடேமி மொபைல் பயன்பாடுகள், தொலைக்காட்சிப் பயன்பாடுகள், ஏபிஐகள், பிற தொடர்புடைய சேவைகள் ஆகியவற்றில் உள்ள உங்கள் எல்லாச் செயல்பாடுகளுக்கும் பொருந்தும்.

உடேமி இயங்குதளத்தில் உள்ளடக்கத்தை வெளியிட்டால், பயிற்றுவிப்பாளர் விதிமுறைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். உடேமியின் தனியுரிமைக் கொள்கையில் மாணவர்கள், பயிற்றுநர்களின் தனிப்பட்ட தரவை செயலாக்குவது பற்றிய விவரங்களையும் வழங்குகி வருகின்றது. 

தனியாக வணிக நோக்கில் செயல்பட வேண்டுமெனில் உடேமி நிறுவனத்தின் வணிக தனியுரிமை அறிக்கைக்காக உடேமியைக் கலந்தாலோசிக்க வேண்டும்.

பயனர் அமெரிக்கா அல்லது கனடாவில் வசிக்கிறீர்களானால், இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், உடேமியுடனான மோதல்களை பிணைப்பு நடுவர் மூலம் தீர்க்க ஒப்புக்கொள்கிறீர்கள் (மிகக் குறைந்த விதிவிலக்குகளுடன், நீதிமன்றத்தில் அல்ல). மேலும் வர்க்க நடவடிக்கைகளில் பங்கேற்க சில உரிமைகளைத் தள்ளுபடி செய்கிறீர்கள்.

இந்தப் பயன்பாட்டு நெறிகளைக் கீழ்வரும் வகைகளின் மூலம் இன்னும் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். அவை வருமாறு,

  1. கணக்குகள்

  2. உள்ளடக்க பதிவு மற்றும் வாழ்நாள் அணுகல்

  3. கொடுப்பனவுகள், வரவுகள் மற்றும் பணத்தைத் திருப்பிச் செலுத்துதல்

  4. உள்ளடக்கம் மற்றும் நடத்தை விதிகள்

  5. நீங்கள் இடுகையிடும் உள்ளடக்கத்திற்கான உடெமியின் உரிமைகள்

  6. உங்கள் சொந்த ஆபத்தில் உடெமியைப் பயன்படுத்துதல்

  7. உடெமியின் உரிமைகள்

  8. சந்தா விதிமுறைகள்

  9. இதர சட்ட விதிமுறைகள்

  10. சர்ச்சைத் தீர்வு

  11. இந்த விதிமுறைகளைப் புதுப்பித்தல்

  12. எங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன