வியாழன், 28 மே, 2020

உள்ளடக்கமும் நடத்தை விதிகளும் 1

நீங்கள் சட்டபூர்வமான நோக்கங்களுக்காக மட்டுமே உடேமியைப் பயன்படுத்த முடியும். உடேமி இணைய மேடையில் நீங்கள் இடுகையிடும் அனைத்து உள்ளடக்கங்களுக்கும் தாங்கள்தான் பொறுப்பு. உடேமி நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள், சட்டத்திற்கு ஏற்ப நீங்கள் பதிவேற்றும் மதிப்புரைகள், கேள்விகள், பதிவுகள், படிப்புகள் இன்னும் பிற உள்ளடக்கங்களை நீங்கள் வைத்திருக்க வேண்டும். மற்றவர்களின் அறிவுசார் சொத்துரிமைகளை மதிக்க வேண்டும். பெரிய குற்றங்களுக்காக உங்கள் கணக்கை உடேமி தடை செய்யலாம். உடேமி இணைய மேடையில் உங்கள் பதிப்புரிமையை யாராவது மீறுவதாக நீங்கள் நினைத்தால், எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

நீங்கள் சேவைகளை அணுகவோ பயன்படுத்தவோ கூடாது அல்லது சட்டவிரோத நோக்கங்களுக்காக ஒரு கணக்கை உருவாக்கக் கூடாது. உடேமி தளங்களில் சேவைகள், நடத்தைகளைப் பயன்படுத்துவது உங்கள் நாட்டில் பொருந்தக்கூடிய உள்ளூர், தேசிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும். உங்களுக்குப் பொருந்தக்கூடிய இத்தகைய சட்டங்கள், ஒழுங்குமுறைகளின் அறிவு மற்றும் இணக்கத்திற்கு தாங்கள் மட்டுமே பொறுப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன