புதன், 19 பிப்ரவரி, 2025

குறில், நெடில் வேறுபாடு

இப்பகுதியில் 6 முதல் 7ஆம் வகுப்பு வரையிலான அனைத்துக் குறில், நெடில் வேறுபாடுபற்றிய செய்திகளைத் தொகுத்துக் கொடுத்துள்ளோம்.

  • தமிழ்மொழியை எழுதும் முறையும் மிக எளிதுதான். இதற்கேற்ப, தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன.

    • (எ.கா.) வலஞ்சுழி எழுத்துகள் – அ, எ, ஔ, ண, ஞ
      இடஞ்சுழி எழுத்துகள் – ட, ய, ழ

வல்லின எழுத்துகள் மிகா இடங்கள்

 வல்லின எழுத்துகளாகிய க், ச், த், ப் என்பன மிக்கு வரக்கூடிய இடங்கள் எவையென முன்பகுதியில் படித்தீர்கள். அல்லவா? இனி, இப்பதியில் அவ்வெழுத்துகள் மிகா இடங்கள் எவை என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் காண்போம்.

அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு’ - என்னும் சுட்டு, வினாச் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகாது.
  • அவ்வளவு   +  பெரிது  =  அவ்வளவுபெரிது

  • இவ்வளவு  +  கனிவா  =  இவ்வளவு கனிவா?

  • எவ்வளவு  +  தொலைவு  =  எவ்வளவு தொலைவு?

திங்கள், 17 பிப்ரவரி, 2025

விக்கிமூலத்தில் புறநானூற்றுத் தரவு மேம்பாடு

 அறிமுகம்

புறநானூறு, சங்க இலக்கியத்தின் ஒரு முக்கியமான படைப்பு. இது பழந்தமிழர்களின் வாழ்க்கை, பண்பாடு, கலாச்சாரம், அரசியல், பொருளாதாரம், போர் முறைகள், வீரம், கொடை, அறம் போன்ற பலவற்றைப் பற்றிய விரிவான தகவல்களை வழங்குகிறது. எனவே, இந்த ஆய்வின் முதன்மை நோக்கம், புறநானூற்றின் தரவுகளை விக்கிமூலத்தில் பதிவேற்றவேண்டிய வழிமுறைகளை ஆராய்வது ஆகும். இதற்காக, புறநானூற்றின் இலக்கியக் கூறுகள், வரலாற்றுப் பின்னணி, ஆய்வுகள் போன்றவற்றைப் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம் இங்கே வழங்கப்படுகிறது.

புறநானூற்று இலக்கியத்தைக் காலங்காலமாக எப்படிப் பாதுகாத்து வந்தார்களோ, அப்படி இன்று இணைய வளாகத்தில் பாதுகாக்க வேண்டியது தமிழர்களின் கடமையாகும். அதனை முன்னிறுத்தியும் தமிழ் இலக்கிய வரலாற்றின் அடிப்படையிலும் ஐங்குறுநூற்றின் தரவுகளை விக்கிமூலத்தில் பதிவேற்றவேண்டிய வழிமுறைகளையும் இந்த ஆய்வு முன்வைக்கின்றது.

புதன், 12 பிப்ரவரி, 2025

வல்லினம் மிகும் இடங்கள்

 

க், ச், (ட்), த், ப், (ற்)

க், ச், த், ப்

தமிழில் சொற்களையும் சொற்றொடர்களையும் எழுதும்பொழுது கருத்திற்கொள்ள வேண்டுவனபற்றிச் சிறிது காண்போம்.

எழுதும்பொழுது, சில இடங்களில் வல்லெழுத்துகள் (க், ச், த், ப்) மிக்கு வரும்; சில இடங்களில் மிகாமல் வரும். மிக்கு வர வேண்டிய இடங்களில் அவற்றை எழுதாமலும், மிகா இடங்களில் அவற்றை எழுதியும் விடுவதால் பிழை தோன்றும்; மொழி மரபும் சிதையும்.

திங்கள், 10 பிப்ரவரி, 2025

தமிழ்த் தகுதி, மதிப்பீட்டுத் தேர்வு (SSLC Standard – 100 Questions)

 அலகு I: இலக்கணம் (25 கேள்விகள்)

எழுத்து:

விக்கிமூலத்தில் ஐங்குறுநூற்றுத் தரவு மேம்பாடு

அறிமுகம்

விக்கிமூலத்தில் தமிழ்மொழியின் தரவுகளை மேம்படுத்துவதுதான் தமிழார்வலர்களின் முதன்மையான பணியாகும். ஐங்குறுநூற்று இலக்கியத்தைக் காலங்காலமாக எப்படிப் பாதுகாத்து வந்தார்களோ, அப்படி இன்று இணைய வளாகத்தில் பாதுகாக்க வேண்டியது நம் கடமையாகும். அதனை முன்னிறுத்தியும் தமிழ் இலக்கிய வரலாற்றின் அடிப்படையிலும் ஐங்குறுநூற்றின் தரவுகளை விக்கிமூலத்தில் பதிவேற்றவேண்டிய வழிமுறைகளை இந்த ஆய்வு முதன்மை நோக்கமாகக் கொண்டு ஆராய்கின்றது.

திங்கள், 3 பிப்ரவரி, 2025

விக்கிமூலத்தில் நற்றிணைத் தரவு மேம்பாடு

அறிமுகம்

விக்கிமூலத்தின் வழியாகத் தமிழ்மொழிக்கான இணையவாசல் திறந்துள்ளது. இதில் தமிழ்மொழியின் தரவுகளை மேம்படுத்துவதுதான் தமிழாய்வர்கள், தமிழார்வலர்களின் கடமையும் பணியுமாகும். ஏனெனில் தொல்காப்பியம் தொடங்கி பல்வேறு இலக்கியங்களைக் காலங்காலமாக எப்படிப் பாதுகாத்து வந்தார்களோ, அப்படி இன்று இணைய வளாகத்தில் பாதுகாக்க வேண்டியது நம் கடமையாகும். அதனை முன்னிறுத்தியும் தமிழ் இலக்கிய வரலாற்றின் அடிப்படையிலும் நன்றிணையின் தரவுகளை விக்கிமூலத்தில் பதிவேற்ற வேண்டிய வழிமுறைகளை இந்த ஆய்வு முதன்மை நோக்கமாகக் கொண்டு ஆராய்கின்றது.

புதன், 29 ஜனவரி, 2025

முல்லைப்பாட்டின் சிறப்பு – ஒரு ஆய்வு (சாட்சிபிடி விளக்கம்)

முன்னுரை

முல்லைப்பாட்டு தமிழ்ச் சங்க இலக்கியங்களுள் புகழ்பெற்ற ஒரு சிறப்புமிக்க படைப்பாகும். இது அகத்திணையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதனுள் தற்கால வாழ்வியலையும், போரியலையும் இணைத்துத் தமிழர் சமூகத்தின் முழுமையான வாழ்வியலை வெளிப்படுத்துகிறது. இயற்கையின் அழகு, காதலின் ஆழம், வீரத்தின் மகத்துவம், பாசறையின் அமைப்பு, வெற்றியின் பெருமையெனப் பல்வேறு அம்சங்களைச் சொல்லிக்காட்டும் காப்பியமென இது விளங்குகிறது.

முல்லைப்பாட்டு மூலமும் உரையும்

கார்காலத்தில் மழைபொழியும் மாலை நேரம்

நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு

வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை

நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல,

பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,

கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி        

பெரும் பெயல் பொழிந்த சிறுபுன் மாலை,                 (1 - 6)


அருஞ்சொற்பொருள்: 

1. நனம் = அகற்சி; தலை = இடம்; வளைஇ = வளைத்து; நேமி = சக்கரம்; 2. வலம்புரி = வலமாகச் சுழிந்திருக்கும் சங்கு; பொறித்த = வைத்த;  மா = திருமகள்; தாங்கு = தாங்குகின்ற; தடக்கை = பெரிய கை; 3. நீர் செல = நீரை வார்க்க; நிமிர்ந்த = உயர்ந்து நின்ற; மாஅல் = மால் = திருமால்;  4. பாடு = ஒலி; இமிழ்தல் = ஒலித்தல்; பனிக்கடல் = குளிர்ந்த கடல்; பருகி = குடித்து; வலன் = வலிமை; ஏர்பு = எழுந்து; 5. கோடு = மலை; கொண்டு = குறித்து (நோக்கி); கொடுஞ் செலவு = விரைந்து செல்லல்; எழிலி = மேகம்; 6. பெயல் = மழை; பொழிந்த = பெய்த; சிறு = சிறுபொழுது; புன் = துன்பம்.

மாவலி மாமன்னன் (மாபலிச் சக்கரவர்த்தி)

பல புராணங்களில் மாபலிச் சக்கரவர்த்தியைப் பற்றிய கதை ஒன்று கூறப்பட்டுள்ளது. மாபலி என்பவன் திருமாலின்  அருளைப் பெற்ற பிரகலாதனின் பேரன். அவன் மிகுந்த வலிமையும் ஆற்றலும் உடையவனாக விளங்கினான். தேவருலகத்தையும் மண்ணுலகத்தையும் வென்றான். தான் அடைந்த வெற்றிகளால், அவன் மிகுந்த ஆணவமுடையவனாக இருந்தான். அவன் ஆணவத்தை அடக்கி, தேவருலகத்தை அவனிடமிருந்து மீட்பதற்காகத் திருமால் வாமனனாக அவதரித்தார். வாமனன் இரண்டடி உயரம் மட்டுமே உள்ள ஒரு குள்ளன்.

செவ்வாய், 28 ஜனவரி, 2025

மலாய்மொழி இலக்கணம் (Malay Grammar) - முன்னுரை (PREFACE)

முன்னுரை

இந்த இலக்கண நூல் மலாய் மொழியின் இரண்டாம்நிலை அல்லது உயர்நிலைத் தேர்வுக்கான பாடநூலின் தேவையை நிறைவு செய்வதற்காகத் தொடங்கப்பட்டது.

ஆங்கிலத்தில், மாக்ஸ்வெல்லின் மலாய் கையேடு (இது முழுமையான இலக்கணம் அல்ல), ஷெல்லபியரின் நடைமுறை மலாய் இலக்கணம் (சிங்கப்பூரில் அச்சிடப்பட்டது, இது மிகவும் அடிப்படை நிலையானது) தவிர இந்தத் தகவலைக் கையாளும் நூல்கள் எதுவும் அச்சில் இல்லை. இந்தப் புத்தகம் அவற்றை எவ்விதத்திலும் மாற்றீடு செய்யவோ அல்லது தலையிடவோ செய்யாது. கிராஃபர்டின் இலக்கணம் (அறிஞர்களிடையே பெரிதாக மதிக்கப்படாதது), மார்ஸ்டனின் இலக்கணம் (இது சிறந்ததாக இருந்தாலும், நவீன ஆராய்ச்சியிலிருந்து ஒரு நூற்றாண்டு பின்தங்கியது) ஆகியவை அச்சில் இல்லை.

திங்கள், 27 ஜனவரி, 2025

பைத்தான் தானியக்கம்வழி விக்கிமூல மேலடி - கீழடி மேம்பாடு

அறிமுகம் 

விக்கிமூலம் இன்று ஒரு முக்கியமான திட்டமாக உருமாறிக் கொண்டிருக்கின்றது. அதாவது இப்பொழுதுதான் அந்தத் திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர முனைந்துள்ளனர் எனலாம். இந்தத் திட்டத்தின் ஒரு பயன்பாடு கூகுள் வருடல் என்பதாகும். அதனைத் தொடக்கக் காலம் முதல் பயன்படுத்தி வந்தமையின் வெளிப்பாடு, இன்று அந்த நுட்பம் 98 விழுக்காட்டிற்குமேல் திறன்மிகு நுட்பமாக வந்துள்ளது எனில் மிகையில்லை. இருப்பினும் இந்தத் திட்டத்தையும், இந்தத் திட்டத்தின்வழி கருவி மேம்பாடும் தேவை மிகுதியாக உள்ளன. இது ஒருபுறமிருக்க இந்தத் திட்டத்தில் உள்ள நூற்தரவுகளை மேம்படுத்த தானியக்க நுட்பங்கள் தேவைப்படுகின்றன. அவற்றில் ஒன்றே மேலடி, கீழடி நுட்பமாகும். இந்த நுட்பம் குறித்து விளக்க முனைகின்றது இக்கட்டுரை. 

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

சேர்த்து எழுதுதல்

சேர்த்து எழுதுதல் (Word Combining) ஒரு சொல்லாக்க நடைமுறை ஆகும்:

  1. வரையறை:

  • பல்வேறு சொற்களை ஒன்றாகச் சேர்த்து புதிய சொல் உருவாக்கும் செயல்முறை

  • தனிப்பட்ட சொற்கள் இணைந்து ஒரே சொல்லாக மாறுதல்

  • நோக்கம்:

  • சொற்களின் பொருளை மாற்றியமைத்தல்

  • புதிய சொல்லாக்கம்

  • சொல்லின் அர்த்தத்தை விரிவாக்குதல்

பிரித்து எழுதுதல்

பிரித்து எழுதுதல் (Word Splitting) ஒரு சொல்லாக்க நடைமுறை ஆகும்:

  1. பொருள் (அர்த்தம்):

  • ஒரு சொல்லை அதன் அடிப்படைத் தகுதிகளாகப் பிரிப்பது

  • இரண்டு அல்லது மேற்பட்ட வார்த்தைகள் சேர்ந்து உருவாகும் சொற்றொடரைப் பகுப்பாய்வு செய்தல்

  1. நோக்கம்:

  • சொல்லின் மூல இடம், உள்ளடக்கத்தைப் புரிந்துக்கொள்ளல்

  • சொல்லின் தோற்றத்தை அறிதல்

  • சொல் உருவாக்கத்தின் இயல்பைப் புரிந்துக்கொள்ளல்

  1. முறைகள்:

  1. சொல்லை இரண்டு அல்லது மேற்பட்ட சொற்களாகப் பிரித்தல்

  2. ஒவ்வொரு பகுதியின் அர்த்தத்தையும் தனித்தனியே கண்டறிதல்

  3. அடிப்படைச் சொற்கள், இணைப்புக் கூறுகளைக் கண்டறிதல்

எழுத்துக்கள்

 

அலகு I:  இலக்கணம் (25 கேள்விகள்)

எழுத்து: பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல் - சந்திப்பிழை - குறில், நெடில் வேறுபாடு - லகர, ளகர, ழகர வேறுபாடு - னகர, ணகர வேறுபாடு - ரகர, றகர வேறுபாடு - இனவெழுத்துகள் அறிதல் - சுட்டு எழுத்துகள் -  வினா எழுத்துகள் - ஒருமைப் பன்மை அறிதல்

அலகு I: இலக்கணம் (25 கேள்விகள்)

 

அலகு I:  இலக்கணம் (25 கேள்விகள்)

எழுத்து: பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல் - சந்திப்பிழை - குறில், நெடில் வேறுபாடு - லகர, ளகர, ழகர வேறுபாடு - னகர, ணகர வேறுபாடு - ரகர, றகர வேறுபாடு - இனவெழுத்துகள் அறிதல் - சுட்டு எழுத்துகள் -  வினா எழுத்துகள் - ஒருமைப் பன்மை அறிதல்


குடிமைப் பணித் தேர்வு - IV

 பகுதி இ: தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு (பத்தாம் வகுப்புத் தரம் 100 கேள்விகள்)

 பாடத்திட்டம்

அலகு I:  இலக்கணம் (25 கேள்விகள்)

எழுத்து: பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல் - சந்திப்பிழை - குறில், நெடில் வேறுபாடு - லகர, ளகர, ழகர வேறுபாடு - னகர, ணகர வேறுபாடு - ரகர, றகர வேறுபாடு - இனவெழுத்துகள் அறிதல் - சுட்டு எழுத்துகள் -  வினா எழுத்துகள் - ஒருமைப் பன்மை அறிதல்

திங்கள், 13 ஜனவரி, 2025

தமிழ் விக்கிமூலத்தில் திருக்குறள் இருப்பும் தேவையும்

அறிமுகம்

‘விக்கிமூலம், விக்கிமீடியா அறக்கட்டளையால் இயக்கப்படும் கட்டற்ற மின் உள்ளடக்க நூலகமாகும். இத்திட்டத்தை அக்டோபர் 2022 நிலவரப்படி, 72 மொழிகள் பயன்படுத்தி வருகின்றன. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைத்து வகையான மூலநூல்களையும் ஒருங்கே திரட்டி, தட்டச்சுத் தரவாக்கமாக மாற்றி, பல்வேறு பதிவிறக்க நுட்பங்களுடன் வழங்குவதே ஆகும். முதலில் இத்திட்டம் நூல்களைச் சேமிப்பதற்கான காப்பகமாகக் கருதப்பட்டது. இது பின்பு ஒரு பொது உள்ளடக்க நூலகமாக விரிவடைந்தது. இந்தத் திட்டம் விக்கிமூலம் என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாக 2003ம் ஆண்டின் பிற்பகுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அது பின்பு  களப்பெயராகவும் (Domain name)  உருப்பெற்றது[1]. இத்தகு சிறப்பைக் கொண்ட தமிழ் விக்கிமூலத் திட்டத்தில் உலகத்தார்கள் ஏற்றுக்கொண்ட கட்டற்ற உரிமத்துடன் வெளியிடப்பெற்ற திருக்குறள் சார்ந்த நூல்களைப் பதிவேற்றுவது தேவையான ஒன்றாகும். 

பல்வேறு காலக்கட்டத்தில் திருக்குறள் ஆராய்ச்சித் தொடர்பான பதிப்புகள், உரை நூல்கள், ஆராய்ச்சி நூல்கள், மொழியாக்க நூல்கள், பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ள ஆய்வுக் கட்டுரைகள் முறையாகக் கிடைக்கின்றன. ஆனால் இணைய வளத்தில் முறையாகத் தொகுத்து வழங்கப்பெறவில்லை. எனவே, அவற்றைக் கவனத்தில் கொண்டு இணையத்தில் மின்னூலாகப் பதிவேற்றப்பட வேண்டும்.  அதன் மேம்பாட்டிற்குப் பயன் நல்கும் முறைகளையும் அதனால் ஏற்படும் ஆய்வு முயற்சிகளையும் அறியத் தருவதாய் இக்கட்டுரை முதன்மை நோக்கமாக அமைத்துக் கொள்கின்றது.

திங்கள், 6 ஜனவரி, 2025

தமிழ் விக்கிமூலத்தில் குறுந்தொகைத் தரவு மேம்பாடு

அறிமுகம்

‘’விக்கிமூலம் என்பது விக்கிமீடியா அறக்கட்டளையால் இயக்கப்படும் இலவச மின் உள்ளடக்க நூலகமாகும். விக்கிமூலத்திட்டத்தை அக்டோபர் 2022 நிலவரப்படி, 72 நான்கு மொழிகள் பயன்படுத்திக் கொண்டு வருகின்றன. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைத்து வகையான மூலநூல்களையும், பல மொழிகளிலும், மொழிபெயர்ப் புக்களிலும் வழங்குவதே ஆகும். முதலில் இத்திட்டம் பயனுள்ள அல்லது முக்கியமான வரலாற்று நூல்களைச் சேமிப்பதற்கான காப்பகமாகக் கருதப்பட்டது. இது பின்பு ஒரு பொது உள்ளடக்க நூலகமாக விரிவடைந்தது. இந்தத் திட்டம் அதிகாரப்பூர்வமாக நவம்பர் 24, 2003 அன்று புராஜெக்ட் சோர்ஸ்பெர்க் (Project Sourceberg) என்ற பெயரில் தொடங்கப்பட்டது. விக்கிமூலம் என்ற பெயர் அந்த ஆண்டின் பிற்பகுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அது பின்பு  களப்பெயராகவும் (Domain name)  உருப்பெற்றது.

ஞாயிறு, 5 ஜனவரி, 2025

இணையத்தமிழ் பயிற்சியும் மறக்க முடியாத சந்திப்புகளும்

நேற்று (04.01.2025) மதுரை தியாகராசர் கல்லூரியில் ஒரு மறக்க முடியாத நாள். மாணவர்களுக்கான ஆளுமைத்திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் "இணையலாம் இணையத்தமிழ்" என்ற தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் காந்திதுரை அவர்களின் அன்பான வரவேற்பும், நெகிழ்வான அறிமுகமும் என்னை நெகிழ வைத்தது. அதுமட்டுமின்றி அவர்களுடன் நீண்ட நேர உரையாடல் நிகழ்ந்தது. தமிழ் இலக்கியத்தைப் பற்றிய அவரின் பார்வை, ஆய்வு, கற்பித்தல் அனுபவங்கள், மாணவர்களிடம் கொண்டுள்ள அக்கறை - இவையனைத்தும் என்னை வியக்க வைத்தன. அவர் அன்பளிப்பாக வழங்கிய "சாமி சிறுகதைகள்" நூல் என் அறிவுக் களஞ்சியத்திற்கு ஒரு பெரும் சேர்க்கையாக அமையும் என்பதில் ஐயமில்லை.

புதன், 1 ஜனவரி, 2025

தமிழ் விக்கிமூலத்தில் தொல்காப்பியத் தரவு மேம்பாடு

 

அறிமுகம்

‘விக்கிமூலம் என்பது விக்கிமீடியா அறக்கட்டளையால் இயக்கப்படும் இலவச மின் உள்ளடக்க நூலகமாகும். விக்கிமூலத்திட்டத்தை அக்டோபர் 2022 நிலவரப்படி, 72 மொழிகள் பயன்படுத்திக் கொண்டு வருகின்றன. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைத்து வகையான மூலநூல்களையும், பல மொழிகளிலும், மொழிபெயர்ப்புக்களிலும் வழங்குவதே ஆகும். முதலில் இத்திட்டம் பயனுள்ள அல்லது முக்கியமான வரலாற்று நூல்களைச் சேமிப்பதற்கான காப்பகமாகக் கருதப்பட்டது. இது பின்பு ஒரு பொது உள்ளடக்க நூலகமாக விரிவடைந்தது. இந்தத் திட்டம் அதிகாரப்பூர்வமாக நவம்பர் 24, 2003 அன்று புராஜெக்ட் சோர்ஸ்பெர்க் (Project Source Berg) என்ற பெயரில் தொடங்கப்பட்டது. விக்கிமூலம் என்ற பெயர் அந்த ஆண்டின் பிற்பகுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அது பின்பு  களப்பெயராகவும் (Domain name)  உருப்பெற்றது.