புதன், 12 நவம்பர், 2025

மொழி குறித்த குறிப்புகள்

போட்டித் தேர்வுக்கான மொழி ஆய்வுக் குறிப்புகள்

போட்டித் தேர்வுக்கான மொழி ஆய்வுக் குறிப்புகள் (TRB,UGC,UPSC,TNPSC, TET)

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக, தமிழ் மொழி ஆய்வு, மொழியின் தோற்றம், திராவிட மொழிக் குடும்பம், மற்றும் முச்சங்க வரலாறு பற்றிய முக்கிய குறிப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

இந்தக் குறிப்புகள் உங்கள் தயாரிப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முழுமையான, விரிவான குறிப்புகளையும், ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் உங்களை நீங்களே சோதித்துப் பார்க்க பயிற்சி வினாக்களையும் காண, 'மேலும் வாசிக்க' என்பதைக் கிளிக் செய்யவும்.

மேலும் வாசிக்க...

பகுதி 1: மொழியின் தோற்றம்

குறிப்புகள்:

  • மொழியின் தோற்றம் என்பது ஆய்வுக்கு அப்பாற்பட்டது.
  • தொன்மக் கருத்து: சிவபெருமானின் உடுக்கையிலிருந்து வடமொழியும் (சமஸ்கிருதம்) தென்மொழியும் (தமிழ்) பிறந்தன.
  • வடமொழியைப் பாணிணிக்கும், தென்மொழியை அகத்தியருக்கும் சிவபெருமான் கொடுத்தார்.
  • பிற மொழிகளைத் தந்தவர்கள் (கருதப்படுபவர்கள்):
    • இத்தாலி: தாந்தே
    • ஆங்கிலம்: சாசர்
    • ஜெர்மன்: லூதர்
    • டச்சு: கிறிஸ்டியேர்ன் பெடெர்ஸன்
  • மொழியின் தொடக்கத்தில் நீண்ட ஒலித்தொடர்களே (வாக்கியங்கள்) இருந்தன; அடிச்சொற்கள் (Root Word) பின்னரே மனிதனால் படைக்கப்பட்டன.

பயிற்சி வினாக்கள் (பகுதி 1):

1. சிவபெருமான், தென்மொழியை (தமிழ்) யாருக்குக் கொடுத்ததாகத் தொன்மம் கூறுகிறது?

அ) பாணிணி

ஆ) தாந்தே

இ) அகத்தியர்

ஈ) சாசர்

விடை - இ) அகத்தியர்

2. ஆங்கில மொழியைத் தந்தவராகக் கருதப்படுபவர் யார்?

அ) லூதர்

ஆ) சாசர்

இ) தாந்தே

ஈ) கிறிஸ்டியேர்ன் பெடெர்ஸன்

விடை - ஆ) சாசர்

3. மொழியின் தொடக்கத்தில் இருந்தவை எவை?

அ) அடிச்சொற்கள்

ஆ) நீண்ட ஒலித்தொடர்கள் (வாக்கியங்கள்)

இ) தனிநிலைச் சொற்கள்

ஈ) ஒட்டுநிலைச் சொற்கள்

விடை - ஆ) நீண்ட ஒலித்தொடர்கள் (வாக்கியங்கள்)

▲ மேலே செல்க

பகுதி 2: மொழியின் தோற்றக் கொள்கைகள்

குறிப்புகள்:

  • பவ்-வவ்: இசைமொழி அல்லது போலி மொழிக்கொள்கை.
  • பூப்- பூப்: உணர்ச்சி மொழிக் கொள்கை.
  • டிங்-டாங்: பண்புமொழிக் கொள்கை.
  • யோ-யே: ஏலேலோ அல்லது தொழில் ஒலிக்கொள்கை.
  • தானான: பாட்டு மொழி அல்லது இன்பப் பாட்டுக் கொள்கை.

பயிற்சி வினாக்கள் (பகுதி 2):

1. 'உணர்ச்சி மொழிக் கொள்கை' (Pooh-pooh theory) என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) பவ்-வவ்

ஆ) பூப்- பூப்

இ) டிங்-டாங்

ஈ) யோ-யே

விடை - ஆ) பூப்- பூப்

2. 'ஏலேலோ அல்லது தொழில் ஒலிக்கொள்கை' எனப்படுவது எது?

அ) தானான

ஆ) டிங்-டாங்

இ) பூப்- பூப்

ஈ) யோ-யே

விடை - ஈ) யோ-யே

▲ மேலே செல்க

பகுதி 3: மொழிகளின் நிலை (வகைப்பாடு)

குறிப்புகள்:

  • 1. தனிநிலை மொழி (Isolated):
    • பண்பு: இடைநிலை, விகுதி இல்லாமல், பகுதி மட்டுமே உள்ள சொற்களைக் கொண்டது. (உ-ம்: நீ, வா, போ, பூ).
    • எ.கா: சீனமொழி, சயாம் மொழி, பர்மிய மொழி, திபத்திய மொழிகள்.
  • 2. ஒட்டு நிலைமொழி (Agglutinative):
    • பண்பு: பகுதியுடன் இடைநிலை, விகுதிகளை ஒட்டிக்கொள்ளும். இவற்றைத் தனித்தனியே பிரிக்க முடியும். (உ-ம்: வந்தான் = வா + த்(ந்) + த் + ஆன்).
    • எ.கா: திராவிட மொழிகள், ஜப்பான், கொரியா, பின்னிஷ்.
  • 3. உட்பிணைப்பு நிலைமொழி (Inflectional):
    • பண்பு: அடிச்சொற்கள் இரண்டும் சிதைந்து ஒன்றுபடும். பகுதி, விகுதியை எளிதில் பிரிக்க முடியாது.
    • எ.கா: ஐரோப்பிய மொழிகள், வடமொழி, அரபு மொழிகள்.
  • சிறப்புக்க்குறிப்பு: ஆங்கில மொழி, உட்பிணைப்பு நிலையிலிருந்து தனி நிலைக்கு வந்துவிட்டது.

பயிற்சி வினாக்கள் (பகுதி 3):

1. சீனமொழி, திபத்திய மொழிகள் போன்றவை எவ்வகை மொழிக்கு எடுத்துக்காட்டு?

அ) ஒட்டு நிலைமொழி

ஆ) உட்பிணைப்பு நிலைமொழி

இ) தனிநிலை மொழி

ஈ) தொகுதிநிலை மொழி

விடை - இ) தனிநிலை மொழி

2. திராவிட மொழிகள் எவ்வகை மொழிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்?

அ) தனிநிலை மொழி

ஆ) ஒட்டு நிலைமொழி

இ) உட்பிணைப்பு நிலைமொழி

ஈ) பிரிநிலை மொழி

விடை - ஆ) ஒட்டு நிலைமொழி

3. பகுதியுடன் இடைநிலை, விகுதிகளை ஒட்டிக்கொள்ளும் மொழி எவ்வாறு அழைக்கப்படும்?

அ) ஒட்டு நிலைமொழி

ஆ) தனிநிலை மொழி

இ) உட்பிணைப்பு நிலைமொழி

ஈ) சிதைவு மொழி

விடை - அ) ஒட்டு நிலைமொழி

▲ மேலே செல்க

பகுதி 4: எழுத்துகள்

குறிப்புகள்:

  • எழுத்து வளர்ச்சிப் படிமுறை: ஓவிய எழுத்து -> அசை எழுத்து -> ஒலி எழுத்து.
  • கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்து வகைகள்:
    1. வட்டெழுத்து
    2. தென் பிராமி எழுத்து
    3. கிரந்த எழுத்து
  • முக்கியக் குறிப்புகள்:
    • மிகத் தொன்மையான எழுத்து வட்டெழுத்து.
    • பிராமி எழுத்து பௌத்தர்களால் புகுத்தப்பட்டது.
    • கிரந்த எழுத்து வட மொழியாளர் புகுத்தியது (தமிழ்நாட்டில் வடமொழியை எழுதப் பயன்பட்டது).
    • கிரந்த எழுத்துகள்: ஜ, ஸ, ஷ, ஹ, க்ஷ, ஸ்ரீ.
    • "குகைக் கல்வெட்டுகளின் எழுத்து பிராமி, மொழி தமிழ்" - தெ.பொ. மீனாட்சி சுந்தரம்.

பயிற்சி வினாக்கள் (பகுதி 4):

1. கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்து வகைகளில் மிகவும் தொன்மையானது எது?

அ) தென் பிராமி

ஆ) கிரந்தம்

இ) வட்டெழுத்து

ஈ) தேவநாகரி

விடை - இ) வட்டெழுத்து

2. "குகைக் கல்வெட்டுகளின் எழுத்து பிராமி, மொழி தமிழ்" என்று கூறியவர் யார்?

அ) கால்டுவெல்

ஆ) எல்லீஸ்

இ) தெ.பொ. மீனாட்சி சுந்தரம்

ஈ) தேவநேயப் பாவாணர்

விடை - இ) தெ.பொ. மீனாட்சி சுந்தரம்

3. ஜ, ஸ, ஷ, ஹ போன்ற எழுத்துகள் எவ்வகையைச் சார்ந்தவை?

அ) வட்டெழுத்து

ஆ) கிரந்த எழுத்து

இ) தென் பிராமி

ஈ) ஓவிய எழுத்து

விடை - ஆ) கிரந்த எழுத்து

▲ மேலே செல்க

பகுதி 5: மொழிக் குடும்பங்கள்

குறிப்புகள்:

  • உலக மொழிகளை எட்டு மொழிக் குடும்பங்களாகப் பிரித்துள்ளனர்.
  • இந்தியாவில் வழங்கும் 4 மொழிக் குடும்பங்கள்:
    1. திராவிட மொழிக் குடும்பம்
    2. ஆஸ்ட்ரிக் மொழிக் குடும்பம் (முண்டா)
    3. சீனோ திபத்திய மொழிக்குடும்பம்
    4. இந்தோ - ஆரிய மொழிக் குடும்பம்
  • இந்திய மொழிக் குடும்பங்களில் மிகத் தொன்மையானது திராவிட மொழிக் குடும்பம்.

பயிற்சி வினாக்கள் (பகுதி 5):

1. இந்தியாவில் வழங்கும் மொழிக் குடும்பங்கள் மொத்தம் எத்தனை?

அ) இரண்டு

ஆ) நான்கு

இ) ஆறு

ஈ) எட்டு

விடை - ஆ) நான்கு

2. இந்தியாவில் உள்ள மொழிக் குடும்பங்களில் மிகத் தொன்மையானது எது?

அ) இந்தோ - ஆரிய

ஆ) ஆஸ்ட்ரிக்

இ) சீனோ திபத்திய

ஈ) திராவிட

விடை - ஈ) திராவிட

▲ மேலே செல்க

பகுதி 6: திராவிட மொழிக் குடும்பம்

குறிப்புகள்:

  • ஆய்வு முன்னோடிகள்:
    • வில்லியம் கேரி: தமிழ் முதலியவை வடமொழியிலிருந்து வேறுபட்டவை என்று முதலில் சொன்னவர்.
    • எல்லீஸ்: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஒரு தனிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்று முதலில் கூறியவர்.
    • கால்டுவெல்:
      • 'திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்வின் தந்தை'.
      • 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதினார்.
      • 'திராவிட மொழிக் குடும்பம்' என்று முதன் முதலில் பெயர் சூட்டியவர்.
  • 'திராவிடம்' சொல் தோற்றம் (கருத்துகள்):
    • கால்டுவெல் கருத்து: திராவிடம் -> திரமிடம் -> தமிழ்.
    • சட்டர்ஜி, தீட்சதர் கருத்து: தமிழ் -> ... -> திராவிடம்.
  • திராவிட மொழி வகைப்பாடு (நில அடிப்படையில்):
    • தென்திராவிட மொழிகள்: தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, கோடா, தோடா, படகா, துளு.
    • நடுத்திராவிட மொழிகள்: தெலுங்கு, கோண்டி, கோண்டா, குயி, குவி, பெங்கோ, போன்றவை.
    • வடதிராவிட மொழிகள்: குரூக், மால்டோ, பிராகுயி.
  • திராவிட மொழிகள் - முக்கியத் தகவல்கள்:
    • இந்தியாவிற்கு வெளியே (பாகிஸ்தான்) பேசப்படும் ஒரே திராவிட மொழி: பிராகுயி.
    • திராவிட மொழிகளில் அதிக மக்களால் பேசப்படும் மொழி: தெலுங்கு.
    • திராவிட மொழிகளில் அதிக ஒலிகளைக் கொண்ட மொழி: தோடா.
    • மொகஞ்சதாரோ, ஹரப்பா மொழி திராவிட மொழியே எனக் கூறியவர்: ஹீராஸ் பாதிரியார்.
    • மூலத்திராவிட மொழியிலிருந்து முதலில் பிரிந்த மொழி: துளு.
    • மூலத்திராவிட மொழியிலிருந்து இறுதியாகப் பிரிந்த மொழி: மலையாளம்.

பயிற்சி வினாக்கள் (பகுதி 6):

1. 'திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்வின் தந்தை' என்று அழைக்கப்படுபவர் யார்?

அ) வில்லியம் கேரி

ஆ) எல்லீஸ்

இ) கால்டுவெல்

ஈ) ஹீராஸ் பாதிரியார்

விடை - இ) கால்டுவெல்

2. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியன ஒரு தனிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்று முதலில் கூறியவர்?

அ) எல்லீஸ்

ஆ) கால்டுவெல்

இ) வில்லியம் கேரி

ஈ) குமரிலப்பட்டர்

விடை - அ) எல்லீஸ்

3. இந்தியாவிற்கு வெளியே (பாகிஸ்தானில்) பேசப்படும் ஒரே திராவிட மொழி எது?

அ) துளு

ஆ) குரூக்

இ) மால்டோ

ஈ) பிராகுயி

விடை - ஈ) பிராகுயி

4. பின்வருவனவற்றுள் 'வடதிராவிட மொழி' எது?

அ) தமிழ்

ஆ) தெலுங்கு

இ) கன்னடம்

ஈ) குரூக்

விடை - ஈ) குரூக்

5. மூலத்திராவிட மொழியிலிருந்து இறுதியாகப் பிரிந்த மொழியாகக் கருதப்படுவது எது?

அ) துளு

ஆ) தமிழ்

இ) மலையாளம்

ஈ) தெலுங்கு

விடை - இ) மலையாளம்

▲ மேலே செல்க

பகுதி 7: தமிழ் மொழி - சிறப்புக் குறிப்புகள்

குறிப்புகள்:

  • "வட மொழியின் துணை வேண்டாது தனித்து இயங்கும் ஆற்றல் கொண்ட மொழி" - கால்டுவெல்.
  • திராவிட மொழிகளிலேயே மிகத் தொன்மையான இலக்கண, இலக்கியங்களைக் கொண்ட மொழி.
  • "இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்" - பிங்கல நிகண்டு.
  • "திராவிடர்களின் புனித மொழி தமிழ்" - சி.ஆர்.ரெட்டி.
  • தெலுங்கரும் கன்னடியரும் தமிழை 'அரவம்' என்றும், தமிழரை 'அரவாலு' என்றும் கூறுவர்.
  • தமிழ் வேர்ச்சொல் ஆய்வில் (செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி) புகழ்பெற்றவர்: தேவநேயப் பாவாணர்.
  • ஆட்சி மொழியாக உள்ள நாடுகள்: இலங்கை, சிங்கப்பூர், மலேசியா.
  • முதலில் கணினியுள் சென்ற இந்திய மொழி தமிழ்.
  • உலகத் தாய்மொழி நாள்: பிப்ரவரி 21.

பயிற்சி வினாக்கள் (பகுதி 7):

1. "வட மொழியின் துணை வேண்டாது தனித்து இயங்கும் ஆற்றல் கொண்ட மொழி தமிழ்" என்று கூறியவர் யார்?

அ) எல்லீஸ்

ஆ) கால்டுவெல்

இ) தேவநேயப் பாவாணர்

ஈ) சி.ஆர்.ரெட்டி

விடை - ஆ) கால்டுவெல்

2. "இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்" என்று கூறும் நூல் எது?

அ) தொல்காப்பியம்

ஆ) நன்னூல்

இ) பிங்கல நிகண்டு

ஈ) அகத்தியம்

விடை - இ) பிங்கல நிகண்டு

3. தமிழ் வேர்ச்சொல் ஆய்வில் மிகவும் புகழ்பெற்றவர் யார்?

அ) கால்டுவெல்

ஆ) தெ.பொ. மீனாட்சி சுந்தரம்

இ) சி.ஆர்.ரெட்டி

ஈ) தேவநேயப் பாவாணர்

விடை - ஈ) தேவநேயப் பாவாணர்

4. உலகத் தாய்மொழி நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?

அ) ஜனவரி 21

ஆ) பிப்ரவரி 21

இ) மார்ச் 21

ஈ) அக்டோபர் 2

விடை - ஆ) பிப்ரவரி 21

▲ மேலே செல்க

பகுதி 8: சில திராவிட மொழிகளின் பழமையான இலக்கிய/இலக்கணங்கள்

குறிப்புகள்:

மொழி முதல் இலக்கியம் காலம் (பொ.ஆ.) முதல் இலக்கணம் காலம் (பொ.ஆ.)
தமிழ் சங்க இலக்கியம் பொ.ஆ.மு. 5 தொல்காப்பியம் பொ.ஆ.மு. 3
கன்னடம் கவிராஜ மார்க்கம் 9ஆம் நூற். கவிராஜ மார்க்கம் 9ஆம் நூற்.
தெலுங்கு பாரதம் 11ஆம் நூற். ஆந்திர சப்த பூஷணம் 12ஆம் நூற்.
மலையாளம் ராம சரிதம் 12ஆம் நூற். லீலா திலகம் 15ஆம் நூற்.

பயிற்சி வினாக்கள் (பகுதி 8):

1. கன்னட மொழியின் முதல் இலக்கண நூலாகக் கருதப்படுவது எது?

அ) தொல்காப்பியம்

ஆ) கவிராஜ மார்க்கம்

இ) லீலா திலகம்

ஈ) ஆந்திர சப்த பூஷணம்

விடை - ஆ) கவிராஜ மார்க்கம்

2. மலையாள மொழியின் முதல் இலக்கண நூலான 'லீலா திலகம்' எந்த நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது?

அ) 9ஆம் நூற்றாண்டு

ஆ) 11ஆம் நூற்றாண்டு

இ) 12ஆம் நூற்றாண்டு

ஈ) 15ஆம் நூற்றாண்டு

விடை - ஈ) 15ஆம் நூற்றாண்டு

▲ மேலே செல்க

பகுதி 9: திராவிட மொழிகளில் சொல் ஒற்றுமை

குறிப்புகள்:

தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் துளு
மரம் மரம் மானு மரம் மர
ஒன்று ஒண்ணு ஒகடி ஒந்து ஒஞ்சி
நீ நீ நீவு நீன்
நான்கு நால் நாலுகு நாலு நாலு
ஐந்து அஞ்சு ஐது ஐது ஐனு

பயிற்சி வினாக்கள் (பகுதி 9):

1. 'ஒன்று' என்ற தமிழ்ச் சொல்லுக்கு இணையான தெலுங்குச் சொல் எது?

அ) ஒண்ணு

ஆ) ஒகடி

இ) ஒந்து

ஈ) ஒஞ்சி

விடை - ஆ) ஒகடி

2. 'மரம்' என்ற சொல் தெலுங்கு மொழியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) மரம்

ஆ) மர

இ) மானு

ஈ) மரமு

விடை - இ) மானு

▲ மேலே செல்க

பகுதி 10: முச்சங்க வரலாறு

குறிப்புகள்:

  • முதற்சங்கம்:
    • இடம்: தென்மதுரை (பஃறுளி ஆற்றங்கரை)
    • காலம்: 4440 ஆண்டுகள்
    • இலக்கண நூல்: அகத்தியம்
  • இடைச்சங்கம்:
    • இடம்: கபாடபுரம் (குமரி ஆற்றங்கரை)
    • காலம்: 3700 ஆண்டுகள்
    • இலக்கண நூல்கள்: அகத்தியம், தொல்காப்பியம்
  • கடைச்சங்கம்:
    • இடம்: இன்றைய மதுரை (வைகை ஆற்றங்கரை)
    • காலம்: 1850 ஆண்டுகள்
    • இலக்கண நூல்கள்: அகத்தியம், தொல்காப்பியம்

பயிற்சி வினாக்கள் (பகுதி 10):

1. இடைச்சங்கம் நடைபெற்ற இடம் எது?

அ) தென்மதுரை

ஆ) மதுரை

இ) கபாடபுரம்

ஈ) பூம்புகார்

விடை - இ) கபாடபுரம்

2. மூன்று சங்கங்களிலும் பொதுவாக இருந்த இலக்கண நூல் எது?

அ) தொல்காப்பியம்

ஆ) நன்னூல்

இ) அகத்தியம்

ஈ) வீரசோழியம்

விடை - இ) அகத்தியம்

3. தொல்காப்பியம், எந்தெந்த சங்கங்களில் இலக்கண நூலாக விளங்கியது?

அ) முதற்சங்கம் மற்றும் இடைச்சங்கம்

ஆ) இடைச்சங்கம் மற்றும் கடைச்சங்கம்

இ) முதற்சங்கம் மற்றும் கடைச்சங்கம்

ஈ) முதற்சங்கம் மட்டும்

விடை - ஆ) இடைச்சங்கம் மற்றும் கடைச்சங்கம்

▲ மேலே செல்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

இந்திய அரசியலமைப்பு (Indian Constitution) – இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம்

இந்திய அரசியலமைப்பு(Indian Constitution): இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம் மேற்கத்திய சிந்தனைகள் & திருக்குறள் ...