இலக்கணம் என்றால் என்ன?
இலக்கு + அணம் = இலக்கணம். இலக்கு என்றால் குறிக்கோள். அணம் என்றால் உயர்ந்தது. எனவே, மொழியின் உயர்ந்த குறிக்கோள்களைக் கூறுவது இலக்கணம் ஆகும்.
1. தொல்காப்பியம்
தமிழில் கிடைத்த மிகப் பழமையான மற்றும் முழுமையான இலக்கண நூல் இதுவே. இது இயேசு கிறித்துப் பிறப்பதற்கு முன்பு தோன்றிய நூல்.
நூல் விவரங்கள்:
- ஆசிரியர்: தொல்காப்பியர் (அகத்திய மாணவர் பன்னிருவரில் ஒருவர்).
- சிறப்புப் பெயர்கள்: ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர், ஒல்காப் புலமை தொல்காப்பியன்.
- சிறப்புப்பாயிரம் பாடியவர்: பனம்பாரனார்.
- உரை: நூல் முழுமைக்கும் உரை எழுதியவர் இளம்பூரணர்.
நூல் அமைப்பு:
மொத்தம் 3 அதிகாரங்கள், 27 இயல்கள், 1610 நூற்பாக்கள்.
- எழுத்ததிகாரம்: 9 இயல் (நூன்மரபு முதல் குற்றியலுகரப் புணரியல் வரை) - 483 நூற்பாக்கள்.
- சொல்லதிகாரம்: 9 இயல் (கிளவியாக்கம் முதல் எச்சவியல் வரை) - 463 நூற்பாக்கள்.
- பொருளதிகாரம்: 9 இயல் (அகத்திணையியல் முதல் மரபியல் வரை) - 664 நூற்பாக்கள்.
வாழ்க்கைக்கு இலக்கணம் கூறும் பகுதி பொருளதிகாரம் ஆகும். தமிழுக்கே உரிய சிறப்பிலக்கணம் இதுவே.
முக்கியத் தகவல்கள்:
- எழுத்துகள்: முதல் எழுத்து 30, சார்பெழுத்து 3 (மொத்தம் 33).
- வேற்றுமை: 8 வகைப்படும் (1 மற்றும் 8-க்கு உருபு இல்லை).
- அகம் & புறம் தொடர்பு:
- வெட்சி X குறிஞ்சி
- வஞ்சி X முல்லை
- உழிஞை X மருதம்
- தும்பை X நெய்தல்
- வாகை X பாலை
- காஞ்சி X பெருந்திணை
- பாடாண் X கைக்கிளை
- மெய்ப்பாடு (8): நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை.
- வனப்பு (8): அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு.
2. நன்னூல்
தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்டு 13-ஆம் நூற்றாண்டில் தோன்றிய வழிநூல்.
நூல் விவரங்கள்:
- ஆசிரியர்: பவணந்தி முனிவர் (சமண சமயம்).
- தூண்டியவர்: சீயகங்கன் மன்னன்.
- அமைப்பு: 2 அதிகாரம் (எழுத்து, சொல்), 462 நூற்பாக்கள்.
தொல்காப்பியத்திற்கும் நன்னூலுக்கும் உள்ள வேறுபாடுகள்:
- சார்பெழுத்து: தொல்காப்பியர் 3 வகை என்றார்; நன்னூலார் 10 வகை என்கிறார்.
- பதவியல்: நன்னூலார் புதிதாகக் கண்டறிந்த இலக்கணம். பதம் பகுபதம், பகாபதம் என இருவகைப்படும்.
- பொருள்கோள்: தொல்காப்பியர் 4 என்றார்; நன்னூலார் 8 வகை என்கிறார்.
- விடை: 8 வகைப்படும் (சுட்டு, எதிர்மறை, உடன்படல், ஏவல், எதிர் வினாதல், உற்றது உரைத்தல், உறுவது கூறல், இனமொழி).
தெரிந்து கொள்வோம்
நன்னூலின்படி ஓரெழுத்து ஒருமொழி மொத்தம் 42 உள்ளன. அவற்றில் 'நொ', 'து' ஆகிய இரண்டும் குறில் எழுத்துகள் ஆகும்.
3. யாப்பருங்கலக் காரிகை
செய்யுள் இலக்கணம் கூறும் நூல்.
- ஆசிரியர்: அமிர்த சாகரர் (10-ஆம் நூற்றாண்டு).
- உரையாசிரியர்: குணசாகரர்.
- பெயர்க்காரணம்: கட்டளைக் கலித்துறை (காரிகை) பாவகையால் ஆனது.
யாப்பின் உறுப்புகள் (6):
- எழுத்து: 13 வகை.
- அசை: நேர், நிரை (2 வகை).
- சீர்: 30 வகை (ஈரசை-4, மூவசை-8, நாலசை-16, அசைச்சீர்-2).
- தளை: 7 வகை.
- அடி: 5 வகை (குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி).
- தொடை: 43 வகை (முதன்மைத் தொடை 8 + விகற்பத் தொடை 35).
பாவும் ஓசையும்:
- வெண்பா: செப்பலோசை.
- ஆசிரியப்பா: அகவலோசை.
- கலிப்பா: துள்ளலோசை (கன்று துள்ளுவது போல).
- வஞ்சிப்பா: தூங்கலோசை.
4. தண்டியலங்காரம் (அணி இலக்கணம்)
- ஆசிரியர்: தண்டி (12-ஆம் நூற்றாண்டு).
- முதல் நூல்: வடமொழியில் உள்ள காவிய தரிசனம்.
- சிறப்பு: தமிழில் காப்பிய இலக்கணத்தை முதலில் கூறிய நூல்.
- அணிகள்: பொருளணியியலில் 35 அணிகள் விளக்கப்பட்டுள்ளன.
5. நம்பியகப் பொருள் (அகப்பொருள்)
- ஆசிரியர்: நாற்கவிராச நம்பி (12-ஆம் நூற்றாண்டு).
- முதல்நூல்: தொல்காப்பியம்.
- திணைகள்: கைக்கிளை (ஒருதலைக்காமம்), பெருந்திணை (பொருந்தாக்காமம்), ஐந்திணை (அன்புடைக்காமம்).
6. புறப்பொருள் வெண்பா மாலை
தமிழில் புற இலக்கணம் மட்டும் கூறும் ஒரே முழு நூல்.
- ஆசிரியர்: ஐயனார் இதனார் (9-ஆம் நூற்றாண்டு).
- முதல்நூல்: பன்னிரு படலம்.
12 திணைகள்:
- வெட்சி: நிரை கவர்தல்
- கரந்தை: நிரை மீட்டல்
- வஞ்சி: மண்ணாசை கருதிப் போரிடல்
- காஞ்சி: நிலையாமை / எதிர் ஊன்றல்
- நொச்சி: எயில் (கோட்டை) காத்தல்
- உழிஞை: எயில் வளைத்தல்
- தும்பை: போர்க்களத்தில் பொருவது
- வாகை: வெற்றி
- பாடாண்: ஆண்மகனின் ஒழுகலாறு
- பொதுவியல்: மற்ற திணைகளில் வராதவை (நடுகல் போன்றவை)
- கைக்கிளை & பெருந்திணை: அகப்புறத் திணைகள்
7. பிற முக்கியத் தகவல்கள்
நிகண்டுகள் & அகராதிகள்:
- முதல் நிகண்டு: சேந்தன் திவாகரம் (திவாகரர்).
- 'நிகண்டு' சொல்: முதன்முதலில் பயன்படுத்தியவர் மண்டல புருடர் (சூடாமணி நிகண்டு).
- 'அகராதி' சொல்: முதன்முதலில் பயன்படுத்தியவர் ரேவணசித்தர் (அகராதி நிகண்டு).
- முதல் அகராதி: சதுர் அகராதி (வீரமாமுனிவர்).
எழுத்துச் சீர்திருத்தம்:
- வீரமாமுனிவர் (17-ஆம் நூற்றாண்டு): எ/ஏ, ஒ/ஓ வேறுபாட்டிற்கான வரிவடிவ மாற்றம் (புள்ளி நீக்கம், கொம்புகள்) செய்தார்.
- பெரியார் (20-ஆம் நூற்றாண்டு): 'ஐ' என்பதை 'அய்' எனவும், 'ஒள' என்பதை 'அவ்' எனவும் மாற்றினார்.
- நடைமுறை: 1978-இல் எம்.ஜி.ஆர் அரசால் பெரியாரின் சீர்திருத்தம் சட்டமாக்கப்பட்டது.
8. இலக்கண நூல் பட்டியல் (முக்கியமானவை)
| நூல் | ஆசிரியர் | பொருள் |
|---|---|---|
| அகத்தியம் | அகத்தியர் | முதல்நூல் |
| தொல்காப்பியம் | தொல்காப்பியர் | எழுத்து, சொல், பொருள் |
| புறப்பொருள் வெண்பாமாலை | ஐயனாரிதனார் | புறம் |
| யாப்பருங்கலக் காரிகை | அமிர்தசாகரர் | யாப்பு |
| வீரசோழியம் | புத்தமித்திரர் | ஐந்திலக்கணம் |
| நேமிநாதம் (சின்னூல்) | குணவீர பண்டிதர் | எழுத்து, சொல் |
| தண்டியலங்காரம் | தண்டி | அணி |
| நன்னூல் | பவணந்தி முனிவர் | எழுத்து, சொல் |
| அகப்பொருள் விளக்கம் | நாற்கவிராச நம்பி | அகம் |
| இலக்கண விளக்கம் | வைத்தியநாத தேசிகர் | ஐந்திலக்கணம் (குட்டித் தொல்காப்பியம்) |
| தொன்னூல் விளக்கம் | வீரமாமுனிவர் | ஐந்திலக்கணம் |
| அறுவகை இலக்கணம் | தண்டபாணி அடிகளார் | ஐந்திலக்கணம் + புலமை |
வினாடி வினா
தமிழுக்கே உரிய சிறப்பிலக்கணம் எது?
பொருள் இலக்கணம்.
நன்னூலார் புதிதாகக் கண்டறிந்த இலக்கணம் எது?
பதவியல்.
ஓசைக்கு அடிப்படை 'தளை' என்பது யார் கொள்கை?
அமிர்த சாகரர்.
குட்டித் தொல்காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
இலக்கண விளக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன