ஞாயிறு, 30 நவம்பர், 2025

தமிழ்நாடு அரசு (TNPSC) குடிமைப் பணித் தேர்வு - IV | பாடத்திட்டம்

தமிழ்நாடு அரசு குடிமைப் பணித் தேர்வு - IV
(பகுதி இ: தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு - பத்தாம் வகுப்புத் தரம்)

அலகு I: இலக்கணம் (25 கேள்விகள்)

எழுத்து:

பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல் - சந்திப்பிழை - குறில், நெடில் வேறுபாடு - லகர, ளகர, ழகர வேறுபாடு - னகர, ணகர வேறுபாடு - ரகர, றகர வேறுபாடு - இனவெழுத்துகள் அறிதல் - சுட்டு எழுத்துகள் - வினா எழுத்துகள் - ஒருமைப் பன்மை அறிதல்.

சொல்:

வேர்ச்சொல் அறிதல் - வேர்ச்சொல்லிலிருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், பெயரெச்சம் வகை அறிதல் - அயற்சொல் - தமிழ்ச்சொல், எதிர்ச்சொல் - வினைச்சொல் - எழுத்துப் பிழை, ஒற்றுப்பிழை அறிதல் - இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு அறிதல்.

அலகு II: சொல்லகராதி (15 கேள்விகள்)

பொதுவானவை & பிழை திருத்தம்

எதிர்ச்சொல், ஓரெழுத்து ஒரு மொழி, உரிய பொருள் அறிதல், பொருந்தா சொல், அகர வரிசைப் படுத்துதல். பேச்சு வழக்கு - எழுத்து வழக்கு. ஊர்ப் பெயர்களின் மரூஉ (எ.கா: புதுவை), பிழை திருத்துக (ஒரு - ஓர்).

எ.கா: வானில் ____ தோன்றினால் மழை பொழியும் (முகில் / நட்சத்திரம்)
ஊடகம் - தகவல் தொடர்புச் சாதனம்

அலகு III: எழுதும் திறன் (15 கேள்விகள்)

சொற்றொடர் & மரபு

சொற்களை ஒழுங்குபடுத்தல், தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை. திணை, பால், எண், இட மரபுகள்.

மரபு வகைஎடுத்துக்காட்டு
இளமைப் பெயர்பசுக் கன்று, ஆட்டுக்குட்டி
ஒலிமரபுநாய் குறைத்தது, காகம் கரையும்
வினைமரபுசோறு உண், கூடை முடை

அலகு IV: கலைச் சொற்கள் (10 கேள்விகள்)

பல்துறை சார்ந்த ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொற்களை அறிதல்.

ஆங்கிலச் சொல்தமிழிச் சொல்
Search Engineதேடு பொறி
Migrationவலசை
Allergyஒவ்வாமை
Geneமரபணு

அலகு V & VI: வாசித்தல் & மொழிபெயர்ப்பு

வாசித்தல் திறன் (15 கேள்விகள்)

கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து வினாக்களுக்கு விடையளித்தல். செய்தித்தாள், தலையங்கம், கட்டுரைகளை வாசித்துப் புரிந்துகொள்ளுதல்.

மொழிபெயர்ப்பு (5 கேள்விகள்)

ஆங்கிலம், பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (எ.கா: Pendrive, Printer, Keyboard).

அலகு VII: இலக்கியம் & தமிழ் அறிஞர்கள் (15 கேள்விகள்)

திருக்குறள் (20 அதிகாரங்கள்)
ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, ஊக்கமுடைமை, விருந்தோம்பல், அறன் வலியுறுத்தல், ஈகை, பெரியாரைத் துணைக்கோடல், வினை செயல்வகை, அவையஞ்சாமை, கண்ணோட்டம், அன்புடைமை, கல்வி, நடுநிலைமை, கூடா ஒழுக்கம், கல்லாமை, செங்கோன்மை, பண்புடைமை, நட்பாராய்தல், புறங்கூறாமை, அருளுடைமை.
அறநூல்கள் & சான்றோர்கள்

நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு... உ.வே.சா, பாவாணர், பெருஞ்சித்திரனார், பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் மற்றும் பல சான்றோர்கள் பற்றிய செய்திகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிந்துப்பாவியல்

சிந்துப்பாவியல் - தேர்வுக் குறிப்புகள் இரா. திருமுருகன் அருளிய சிந்துப்பாவியல்: முழுமையான தேர்வுக் குறிப்புகள் ...