College TRB - தமிழ் பாடத்திட்டம்
விரிவான பாடத்திட்டத் தொகுப்பு
அலகு 1: பழந்தமிழ் இலக்கியங்கள்
- நூல்கள்: எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்.
- தரவுகள்: இவை குறித்துப் பொதுநிலை இலக்கிய வரலாற்றுத் தரவுகளாக:
- காலம், தொகுப்புமுறை, ஆசிரியர் வரலாறு.
- முதன்மையான பாடுபொருள்.
- அவற்றிற்கு உரையெழுதியோர் மற்றும் அவர்கள் முன்வைத்துள்ள பொதுக் குறிப்புகள் போன்றவை கவனம்பெறும்.
மேலும் வாசிக்க...
அலகு 2: காப்பியங்கள்
- பெருங்காப்பியங்கள், சிறுகாப்பியங்கள்.
- திருவிளையாடற்புராணம்.
- பிற்காலக்காப்பியங்கள்: கம்பராமாயணம், பெரியபுராணம், வில்லிபாரதம், பெருங்கதை, நளவெண்பா, தேம்பாவணி, இரட்சணியயாத்திரிகம், சீறாப்புராணம்.
- நவீன காப்பியங்கள்: இயேசுகாவியம், நாயகம் ஒரு காவியம், இராவணகாவியம்.
அலகு 3: பக்தி & சிற்றிலக்கியங்கள், உரையாசிரியர்கள்
- பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்வியபிரபந்தம்.
- சித்தர் பாடல்கள், அருணகிரிநாதர், தாயுமானவர், வள்ளலார், குணங்குடி மஸ்தான் சாகிபு.
- சிற்றிலக்கிய வகைகள், தனிப்பாடல் திரட்டு.
உரையாசிரியர்கள்
- இலக்கிய பழைய உரையாசிரியர்கள்: அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர்.
- திருக்குறள் உரையாசிரியர்கள், நாதமுனி, சிவஞானமுனிவர்.
- பண்டிதமுனி மு. கதிரேசனார், ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை, பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனார், பின்னத்தூர் நாராயணசாமி அய்யங்கார்.
- வை.மு.கோபாலகிருஷ்ணாமாச்சார்யார், உ.வே.சாமிநாதய்யர், சி.வை. தாமோதரம்பிள்ளை, புலவர் குழந்தை, சிவக்கவிமணி சுப்ரமணிய முதலியார், கவி.கா.மு.ஷெரீப்.
அலகு 4: இக்கால இலக்கியங்கள்
கவிதை மரபுகள்
- தேசிய இயக்கம்: பாரதியார், கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்பிள்ளை, சுத்தானந்த பாரதியார்.
- திராவிட இயக்கம்: பாரதிதாசன், முடியரசன், சுரதா.
- பொதுவுடைமை நோக்கு: தமிழ் ஒளி, தணிகைச் செல்வன், பரிணாமன்.
- திரைப்படப் பாடலாசிரியர்கள்: பாபநாசம் சிவம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், உடுமலை நாராயணகவி, கவி. கா. மு. ஷெரிப், கண்ணதாசன், மருதகாசி, வாலி, வைரமுத்து, அறிவுமதி, நா. முத்துக்குமார், பா. விஜய், தாமரை.
புதுக்கவிதை போக்குகள்
- அகவயத் தேடல்: ந. பிச்சமூர்த்தி, மயன், பசுவய்யா, அபி, அப்துல் ரகுமான், ஞானக்கூத்தன், பிரமிள், ஆத்மநாம், சுகுமாரன், தேவதேவன், தேவதச்சன், மனுஷ்யபுத்திரன், யவனிகா ஸ்ரீ ராம், என்.டி. ராஜ்குமார்.
- புறநிலை விமர்சனம்: நா. காமராசன், மு.மேத்தா, சிற்பி, மீரா, புவியரசு, தமிழன்பன், தமிழ்நாடன், இன்குலாப், ஹெச்.ஜி. ரசூல்.
- மண்சார் கவிதைகள்: பழமலய், காலாப்ரியா, கல்யாண்ஜி, தமிழச்சி தங்கபாண்டியன்.
- பெண்ணிய கவிதைகள்: இரா. மீனாட்சி, வைகைச்செல்வி, சல்மா, கனிமொழி, உமா மஹேஸ்வரி, சுகிர்தராணி, சக்திஜோதி, இளம்பிறை, புதிய மாதவி.
- வடிவங்கள்: ஹைகூ, சென்ட்ரியூ, லிமரிக், லிமரைக்கூ, கஜல், போன்சாய் கவிதைகள்.
சிறுகதை & புதினம்
- சிறுகதைகள்: வ.வே.சு. அய்யர், புதுமைப்பித்தன், மௌனி, லா.ச. ராமாமிர்தம், பி.எஸ். ராமையா, கு.அழகிரிசாமி, வல்லிக்கண்ணன், கு.பி.ராஜகோபாலன், விந்தன், அகிலன், வண்ணதாசன், ஆஸ்வகோஷ், ஜெயந்தன், மா. அரங்கநாதன், அம்பை, ஆர். சூடாமணி, கந்தர்வன், தமிழ்ச்செல்வன், பா.செயப்ரகாசம், பாவண்ணன், கோணங்கி ஆகியோர் படைப்புகள்.
- புதினங்கள்: மாயூரம் வேதநாயகம்பிள்ளை, இராஜம் அய்யர், அ.மாதவையா, கல்கி, மு.வரதராசன், க.நா.சுப்பிரமண்யன், ஆர்.சண்முகசுந்தரம், ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன், சா.கந்தசாமி, சுந்தரராமசாமி, அசோகமித்திரன், ராஜம் கிருஷ்ணன், இந்திராபார்த்தசாரதி, ஆதவன், நீல. பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், நாஞ்சில் நாடன், தோப்பில் முகம்மது மீரான், திலகவதி, பிரபஞ்சன், பூமணி, பொன்னீலன், சு.சமுத்திரம், டி செல்வராஜ், வண்ணநிலவன், மேலாண்மை பொன்னுசாமி, சிவகாமி, இமையம், தஞ்சை ப்பிரகாஷ், கீரனூர் ஜாகீர்ராஜா, ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, பாமா, சோ.தர்மன், ஜோ.டி குரூஸ் ஆகியோர் படைப்புகள்.
- சாகித்திய அகாடெமி, யுவபுரஸ்கார் விருதுகள் பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள்.
அலகு 5: நாடகங்கள், உரைநடை & மொழிபெயர்ப்பு
- நாடகங்கள்: மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், சி.என். அண்ணாதுரை, கலைஞர் மு.கருணாநிதி, பி.எஸ்.ராமையா, ஆர்.எஸ்.மனோகர், சோ.ராமசாமி, கோமல் சுவாமிநாதன், மெரினா, அறந்தை நாராயணன், சுஜாதா.
- நவீன நாடகம்: இந்திரா பார்த்தசாரதி, ஜெயந்தன். நவீன நாடக இயக்கங்கள்: கூத்துப்பட்டறை ந.முத்துசாமி, நிஜநாடக இயக்கம் மு.ராமசுவாமி, பரிக்ஷா ஞாநி, சபாநாடகங்கள். நாட்டார் கலைகளும் நவீன நாடக உருவாக்கமும் (சேராமானுஜம், இரா.இராசு, கே.ஏ.குணசேகரன், கருஞ்சுழி ஆறுமுகம், வேலு. சரவணன், ச. முருகபூபதி).
- பிற இலக்கியங்கள்: அயலகத் தமிழ் இலக்கியங்கள் (இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்), புலம்பெயர்வு படைப்புகள்.
- உரைநடை ஆளுமைகள்: மறைமலைஅடிகள், திரு.வி.க., மயிலைசீனி வேங்கடசாமி, ரா.பி. சேதுப்பிள்ளை, வெ.சாமிநாதசர்மா, ஈ.வெ.ரா.
- தன் வரலாறுகள்: வ.உ.சி, உவே.சா, திரு.வி.க, நாமக்கல் கவிஞர், நெ.து.சுந்தரவடிவேலு, கலைஞர் மு.கருணாநிதி, அப்துல் கலாம்.
- பயண இலக்கியங்கள்: ஏ.கே. செட்டியார், சோமலெ, மீ.ப.சோமு, சி.சுப்பிரமணியம், மணியன்.
- வாழ்க்கை வரலாறுகள்: வ.ரா. எழுதிய பாரதியார், தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தன் வரலாறு, சுந்தா எழுதிய பொன்னியின் செல்வன், சிற்பியெழுதிய இராமானுசர் வரலாறு, பொன்னீலன் எழுதிய குன்றக்குடி அடிகளார்.
- கடித இலக்கியங்கள்: மறைமலை அடிகள், வ.சுப.மாணிக்கம், சி.என். அண்ணாதுரை.
மொழிபெயர்ப்புகள்
- தமிழுக்கு மொழி பெயர்த்தவர்கள்: ஆண்ட்ரிக் ஆண்ட்ரிஸ், சுத்தானந்தபாரதி, கா.ஸ்ரீ.ஸ்ரீ, த.நா குமாரசாமி, த.நா.சேனாதிபதி, சி.ஏ. பாலன், சரஸ்வதி ராம்நாத், தி.ப.சித்திலங்கையா, அ.அ.மணவாளன், பி.எஸ்.எஸ். சாஸ்திரி, மு.கு.ஜகந்நாதராஜா, நா.தர்மராஜ், நெல்லை வேலாயுதம், எத்திராஜலு, வெ.ஸ்ரீராம், மணவை முஸ்தபா, தியாகு, பாவண்ணன், இந்திரன், ஆனந்தகுமார், சிற்பி, சுகுமாரன், புவியரசு, ரவிக்குமார், குளச்சல் யூசுப், சா. தேவதாஸ், எம்.எ. சுசிலா, ஜி.குப்புசாமி, அகிலன் எத்திராஜ்.
- தமிழிலிருந்து பிறமொழிகளுக்கு: ஏ.கே.ராமானுஜன், கா.செல்லப்பன், கபில் சுவலபில், ம.லெ.தங்கப்பா, அ.தட்சிணாமூர்த்தி, ஜார்ஜ் எல் ஹார்ட், லட்சுமிஹோம்ஸ்ட்ராம், ப.மருதநாயகம், வைதேகிஹெர்பர்ட், கே.எஸ். சுப்பிரமணியன், சரஸ்வதிராம்நாத், நாகரத்தினம் கிருஷ்ணா, க.வாசுதேவன்.
அலகு 6: இலக்கணங்கள்
- எழுத்து & சொல்: தொல்காப்பியம், நன்னூல்.
- பொருள் இலக்கணம்:
- அகம்: (தொல்காப்பியம், இறையனார் களவியல், நம்பியகப்பொருள்)
- புறம்: (தொல்காப்பியம் புறத்திணையியல், புறப்பொருள் வெண்பாமாலை)
- யாப்பு: தொல்காப்பியச் செய்யுளியல், யாப்பருங்கலக்காரிகை.
- அணி: உவமையியல், தண்டியலங்காரம்.
- பாட்டியல்: பன்னிருபாட்டியல், சிதம்பரப்பாட்டியல், வெண்பாப்பாட்டியல், பிரபந்த தீபிகை, பிரபந்தமரபியல்.
அலகு 7: இலக்கண உரையாசிரியர்கள்
- தொல்காப்பிய இலக்கண உரையாசிரியர்கள்: இளம்பூரணர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், பேராசிரியர், தெய்வச்சிலையார், கல்லாடர், மயிலைநாதர், சிவஞான முனிவர்.
- ஆறுமுகநாவலர், சங்கரநமச்சிவாயர், விசாகப்பெருமாள் அய்யர், க.வெள்ளைவாரணர், ஆ.சிவலிங்கனார், பாவலரேறு ச.பாலசுந்தரனார்.
அலகு 8: மொழியியல் & திறனாய்வு
- மொழி வரலாறு நூல்கள்: ராபர்ட் கால்டுவெல், தெ.பொ.மீனாட்சிசுந்தரன், வ.அய்.சுப்பிரமணியன், ச.அகத்தியலிங்கம், கு.பரமசிவம், முத்துச்சண்முகன், எம்.ஏ.நுஃமான், செ.வை.சண்முகம், பொற்கோ.
- கருவி நூல்கள்: நிகண்டுகள், அகராதிகள், சொற்களஞ்சியங்கள், பொருட்களஞ்சியங்கள், அடைவுகள் (சொல், பொருள், தொடர்).
- இலக்கியத் திறனாய்வு: இலக்கியக்கலை, இலக்கியத்திறன், இலக்கியமரபு, இலக்கியத்திறனாய்வியல், திறனாய்வுக்கலை, இலக்கியக்கொள்கைகள், ஒப்பிலக்கியக்கொள்கைகள் அறிமுக நூல்கள்.
- திறனாய்வு முறைகள்: ரசனை முறை, மதிப்பீட்டுமுறை, அழகியல் முறை, விளக்க முறை, பகுப்புமுறை, வரலாற்றுமுறை, உருவவியல், மனப்பதிவு முறை.
- இலக்கிய இயக்கங்கள்: செவ்வியல்வாதம், புனைவியல்வாதம், இயற்பண்பியல்வாதம், நடப்பியல் வாதம். நடப்பியல் அல்லாதவை: இருத்தலியல், குறியீட்டியல், மிகைதார்த்தவியல், படிமவியல், வெளிப்பாட்டியல், மனப்பதிவியல், குரூரவியல்.
- திறனாய்வு அணுகுமுறைகள்: சமுதாயவியல், மார்க்சியவியல், உளவியல், தொல்படிமவியல், மானிடவியல், உருவவியல், இனவரைவியல், அமைப்பியல், தலித்தியம், பெண்ணியம்.
அலகு 9: திறனாய்வாளர்கள் & தமிழக வரலாறு
- கல்விப்புல ஆய்வாளர்கள்: ஆ முத்துசிவன், எஸ். வையாபுரி பிள்ளை, தெ.பொ.மீனாட்சி சுந்தரன், அ.ச.ஞானசம்பந்தன், மு.வரதராசன், வ.சுப. மாணிக்கம், க.ப.அறவாணன், தா.வே.வீராசாமி, ச.வேசுப்ரமணியன், எழில் முதல்வன், தமிழிண்ணல், பெ.மாதையன், குளோரியா சுந்தரமதி.
- கல்விப்புல ஆய்வு முறையியல்சாரா திறனாய்வாளர்கள்: வ.வே.சு.அய்யர், டி.கே.சி., க.நா.சுப்ரமணியன், தொ.மு.சி.ரகுநாதன், சி.சு.செல்லப்பா, வெங்கட்சாமினாதன், நா.வானமாமலை, கோவைஞானி, அ.மார்கஸ், தமிழவன், கோ.கேசவன், ராஜ்கௌதமன், ரவிக்குமார், தி.சு. நடராசன், க. கைலாசபதி, கா.சிவத்தம்பி, எம்.எ.நுஃமான், சி.கனகசாபாதி, க.பஞ்சாங்கம்.
- தமிழக வரலாறு: கே.கே பிள்ளை (தமிழக வரலாறும் பண்பாடும்), க. சுப்பிரமணியன், ந. சுப்பிரமணியன் (சங்ககால வரலாறுகள்), மா.இராசமாணிக்கனார் (பல்லவர் வரலாறு), தி.வை. சதாசிவபண்டாரத்தார், பி.நீலகண்டசாஸ்திரி (சோழர்கால வரலாறு). சங்ககாலம் தொடங்கிச் சமகாலம் வரையிலான வரலாறு.
அலகு 10: தமிழக பண்பாடு & ஊடகங்கள்
- பண்பாட்டு ஆய்வுகள்: தொல்லியல், நாணயவியல், கல்வெட்டியல், தமிழர் இசை, கட்டடக்கலை, சுவடியியல்.
- நாட்டுப்புறவியல்: பாடல்கள், கதைகள், கதைபாடல்கள், சடங்குகள், நாட்டார் நடனங்கள், நாடகங்கள், வழிபாடுகள், திருவிழாக்கள்.
- பெருங்கோயில் பண்பாடு, நகச்சார் பண்பாடு, உள்ளுர்ப்பண்பாடு, பண்டைய மற்றும் நவீன நகரங்கள்.
- முக்கிய நூல்கள்: மயிலை சீனி வேங்கடசாமியின் 'தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்', செ.வைத்திலிங்கம் 'தமிழர் பண்பாட்டு வரலாறு'. அயல்நாட்டார் குறிப்புகள்.
- தமிழும் பிறதுறைகளும்: அச்சு ஊடகங்கள் (நாளிதழ், பருவ இதழ்), மின் ஊடகங்கள் (வானொலி, தொலைக்காட்சி, கணினித்தமிழ்).
- இணையத்தமிழ்: வலைத்தளங்கள், வலைப்பூக்கள், சமூக வலைத்தளங்கள் (முகநூல், கட்செவி). பேச்சுத்தமிழ் இலக்கணம், மேடைத் தமிழ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன