...மொழிக் குடும்பங்களின் அங்கங்களை ஒப்புமைப்படுத்தி மூல மொழியைக் கணுதல்(ப:V, முதல் பதிப்பின் முன்னுரை)
...அந்தக் காலத்தில் ஒலி ஒப்புமை உடைய இரண்டு ஒலிகள், துணை நிலை வழக்கில் இருந்தாலும் புணர்ச்சியில் வேறுபாட்டால், புணர்ச்சி எளிமைக் கருதி தனித்தனி ஒலியன்களாகக் கருதலாம்; தொல்காப்பியர் அப்படித்தான் தமிழ்மொழி அமைப்பில் விளக்கியிருக்கிறார் என்றும், அந்த முறை பிறமொழிக்கும் பொருந்தும் என்றும் கூறுவதோடு, வேறொரு மொழிக்குப் பொருத்திக் காட்டி, இதனால் இலக்கணத்தில் எளிமை ஏற்படுகிறது என்று ஒருவர் கட்டுரை எழுதியிருந்தால், தொல்கப்பியத்துக்கும் உலகப் புகழ் ஏற்பட்டிருக்கும்; அந்தக் கட்டுரையாளரும் நல்ல மொழியியல்வாணர் என்ற புகழ் பெற்றிருக்க முடியும். இன்னும் அப்படிப்பட்ட கருத்துக்கள் - மொழியியலில் உள்ள பிரச்சினைக்குத் தீர்வு தரும் செய்திகள் தமிழ் இலகணத்தில் இருக்கிறது என்று யாராவது மெய்ப்பிப்பார்களானால், தமிழ் இலக்கணங்களைக் கற்க உலக மொழியியலாளர்கள் ஓடிவருவார்கள்; தமிழ் இலக்கணங்களுக்கும் சர்வ தேசப் புகழ் தேடிவரும்(பக்.9-10)
இலக்கணம் ஏன் எழுதப்பட்டது? இலக்கண ஆசிரியனின் மொழி உணர்வு; சமூக உணர்வு என்ன? இலக்கண ஆசிரியன் கையாண்ட தரவுகள் எப்படிப்பட்டவை? அவனுக்குப் பிறமொழித் தெரியுமா? அவன் அந்த மொழியைப் படிக்கவேண்டிய அவசியம் என்ன? என்று சமூகவியல் நோக்கிலும் வரலாற்று நோக்கிலும் விஞ்ஞான ரீதியிலான கேள்விகள் கேட்கப்பட வேண்டும்.
இலக்கணப் பதிப்பு வேலைகள் விஞ்ஞான ரீதியில் இன்னும் தொடங்கவில்லை; உரையாசிரியர்களின் உரை சரியா? தவறா? என்ற கேள்விகளைக்கேட்டுப் பதில் சொல்வதில்தான் பெரும் பகுதி முதலில் செலவழிக்கப்பட்டது. ஒவ்வொரு உரையாசிரியரும் எழுப்பிய புதிய கேள்விகள் என்ன? அவர்கள் கேள்விகளிலும் பதில்களிலும் புதைந்துள்ள உணர்வுகள் என்ன? போன்ற கேள்விகள் கேட்கப்பட வேண்டும். வரலாற்று உணர்வு ஏற்பட்டதும் உரை நூல்கள் மொழி வரலாற்றை அறிந்து கொள்ளவும் உரையாசிரியர்களின் தனி இலக்கணக் கோட்பாடுகளை ஆராயவும் பயன்படுத்தப்பட்டன. உரையாசிரியர்கள் எந்த நோக்கில் ஏன் உரை எழுதியுள்ளார்கள்? அவர்களுடைய சமூக உணர்வு மொழியுணர்வு என்ன? என்றெல்லாம் உரைகள் ஆராயப்படவேண்டும். இதனால் இலக்கண உரைக் கல்வியும் தொடர்ந்து நடைப்பெற்றுக்கொண்டே இருக்கும்; இருக்கவும் வேண்டும்(ப.23).
பார்வை: சண்முகம் செ.வை., 2001, எழுத்திலக்கணக் கோட்பாடு, உலகத் தமிழாரய்ச்சி நிறுவனம், சென்னை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன