41ஆம் பாடம்
திக்கு நான்கு, அவை கிழக்கு, மேற்கு,
தெற்கு, வடக்கு.
சூரியன் உதிக்கின்ற திக்குக்குப்
பெயர் கிழக்கு.
கிழக்கு முகமாக நிற்கிறவருக்கு
வலப் பக்கமாகிய திக்குக்குப் பெயர் தெற்கு.
கிழக்கு முகமாக நிற்கிறவருக்கு
பிற்பக்கமாகிய திக்குக்குப் பெயர் மேற்கு.
கிழக்கு முகமாக நிற்கிறவருக்கு
இடப்பக்கமாகிய திக்குக்குப் பெயர் வடக்கு.
தெற்கும் கிழக்குமாகிய மூலைக்குப்
பெயர் தென்கிழக்கு.
தெற்கும் மேற்குமகிய மூலைக்குப்
பெயர் தென்மேற்கு.
வடக்கும் மேற்குமாகிய மூலைக்குப்
பெயர் வடமேற்கு.
வடக்கும் கிழக்குமாகிய மூலைக்குப்
பெயர் வடகிழக்கு.
-
பாலபாடம், 2003:35
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன