சனி, 10 ஆகஸ்ட், 2013

இலக்கணவியல்: நூலறிமுகம்


இலக்கணவியல் எனும் நூல் பேரா. சு. இராசாராம் என்பவரால் எழுதப்பட்டது. இந்நூல் உலக இலக்கணங்களை மீள்வசிப்பிற்கு உட்படுத்த வழிவகுத்துத் தருகிறது. இது தமிழ் இலக்கணங்களை மீள்வசாசிப்பு செய்து பொதுக்கோட்பாடுகளை உருவாக்கித் தந்துள்ளது. இந்நூல் தமிழ் இலக்கணங்களில் ஆய்வு செய்து வருபவர்களுக்கு ஒரு மூலநூல் எனலாம்.    இதில் தரப்பெற்ற கருத்தியல் வாய்பாடுகளை இலக்கண ஆய்வுகளில் பொருத்திப் பார்க்கும்பொழுது அவ்விலக்கணத்தின் பொதுத்தன்மைகளையும் சிறப்புத்தன்மைகளையும் இனங்கண்டறிய முடியும். அவ்வாறு ஒவ்வொரு மொழி இலக்கணங்களின் பொது, சிறப்புத் தன்மைகளை இனங்கண்டறிந்து விட்டால் மூலத்தை எளிதில் ஊகித்துவிடலாம். இங்கு இலக்கணம் குறித்து அவர் தரும் குறிப்பு நோக்கத்தக்கது,

இலக்கண உருவாக்கம் சூனியத்தில் நிகழ்வதன்று. இலக்கண உருவாக்கம் ஒவ்வொரு காலகட்டதில் சமூகம்,அரசியல், கல்வி மற்றும் மொழி மாற்றங்கள் சார்ந்த அழுத்தங்களின் வெளிப்பாடு.இலக்கணத்தை எழுதுவதற்க்கு ஒவ்வொரு இலக்கணக் கலைஞனுக்கும் வலுவான காரணங்களும் சமூகப்பொறுப்பும் உள்ளன. இவ்விலக்கண அரசியல் பின்னணியில் இலக்கணத்தில் பல்வேறு பரிமாணங்களின் பிற சமூக விஞ்ஞானங்களோடுள்ள தொடர்பு பன்முக நோக்கில் அணுகப்பட வேண்டும். இலக்கணம் புனிதமானது: மாறாதது என்னும் பழைமையற்றைக் கைவிட்டு யதார்த்த மொழி நிலையைப் பூதக்கண்ணாடிக்கொண்டு பார்க்கும் மனபாங்கு வளர வேண்டும்.



பொதுவாக இக்கருத்தியல் தமிழ் மொழிக்கு மட்டுமின்றி அனைத்து மொழி இலக்கணக் கலைஞர்களுக்கும் பொருந்துவதே. மேலும், ஒரு மொழிக்குரிய இலக்கணங்களைத் தனிநிலை இலக்கணங்கள் இவை, பயனாக்க இலக்கணங்கல் இவை என வேறுபடுத்திப் பார்க்கக் கூடிய வழித்தடத்தையும் அமைத்துத் தருகிறது. ஆக, ஒப்பிலக்கணம் செய்து வரும் ஆராய்ச்சியாளர்கள் தாம் மேற்கொள்ளும் ஆய்வில் இது தொடர்பான சிந்தனையையும் கருத்தில் கொண்டு ஆராய்து பார்ப்பீர்களாக!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன