1.0 முகப்புபாலவியாகரணம் தெலுங்கு மொழிக்குரிய முழுமையான இலக்கணநூலாகக் கருதப்படுகிறது. இதனை யாத்தவர் சின்னயசூரி (கி.பி. 1858). இந்நூல் இக்காலம் வரை கற்றலிலும் கற்பித்தலிலும் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து வந்துள்ளது. அதற்குக் காரணம் பழைமையைப் போற்றும் பண்பே. மேலும், இந்நூல் பயனாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனுள், முந்து நூல்களின் கருத்தியல்களின் ஆட்சியே மிகுதி. அவ்வாட்சியின் விழுக்கட்டைப் பி.சா.சுப்பிரமணியனின் குறிப்புகளை முன்வைத்து மதிப்பீடு செய்வது இக்கட்டுரையின் நோக்கம்.
2.0 பாலவியாகரணமும் முந்து நூல்களும் சின்னயசூரி, பாலவியாகரணத்தின் மூலம் தெலுங்கு எழுத்துலகை ஒழுங்கமைவுக்கு உட்படுத்தினார். இதனை அந்நூல் வெளிவந்தபிறகு பழைமையான இலக்கியங்களும் திருத்தம் செய்து மீள்பதிப்பாக வெளிவந்தமையின்வழிக் காணலாம்(ஆனைவாரி ஆனந்தன்:1999). அதன் பின்பு இவர் வகுத்த கோட்பாடுகளே நிலைபேறாக்கம் பெற்றன என்பதே உண்மைநிலை. ... மேலும் வாசிக்க http://www.geotamil.com/pathivukalnew/sathiyaraj_july2013.pdf
Last Updated on Monday, 01 July 20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன