பொதுவாக, எப்படிப் படிக்க வேண்டும் என்ற கருத்துக்களை எந்தவொரு தமிழ்த் தொகை நூல்களும் கூறியதாகத் தெரியவில்லை. ஆனால் பிராக்கிருதம் போல்வன மொழிகளில் தொகுக்கப் பெற்ற தொகைநூல்கள் அத்தொகை நூல்களை எவ்வாறு வாசிக்கவேண்டும் என சுட்டத் தவறவில்லை எனலாம். இப்பணியைத் தமிழில் இலக்கணங்கள்தான் செய்து வந்தன. இலக்கியங்களில் திருக்குறள் போல்வன கல்வி என்ற தலைப்பில் பதிவு செய்கின்றமையைக் காணலாம்.
பிராக்கிருத மொழியில் எழுதப் பெற்ற நூலே வஜ்ஜாலக்கம். இதனைத் தமிழில் வைரப்பேழை எனக் கூறலாம் என்பார் மு. கு.ஜகந்நாதராஜா. இக்கவித் தொகுப்பில் இடப்பெறுவதே எவ்வாறு ஒரு கவிதை நூலை வாசிக்க வேண்டும் எனும் கருத்தியல். அக்கருத்தியல் வருமாறு:
1. நிறுத்திப் படிக்க இயலாமை, சுவையறியாதிருத்தல், இடமறிந்து படிக்காமை, மூக்கால் வாசித்தல், விரைவாக வாசித்தல், வாய்தவறி வாசித்தல், ஈடுபாடின்மை - இவை படிப்பவரின் குறைபாடுகள் ஆகும்.(28)
2. இயற்சொல், இன்சொல், சந்தம், நடை, மென்மை, தெளிவு, பொருட்புலப்பாடு இவற்றுடன் கூடியதாக பாகதக் கவிதைகளை படிக்கவேண்டும்.(29)
இவ்வாறு இவை வரையறுத்துக் கூறவேண்டிய காரணம் ஒன்றே. அது இன்பத்துக் கவிகள் என்பதாலேயாம்.
நல்ல பதிவு... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு