வேமனா தெலுங்கு இலக்கியப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். கி.பி.பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் சாதிமுறையைக் கண்டித்தவர். இவர் ஆந்திர நாட்டில் இருக்கும் அனைத்து ஊர்களுக்கும் சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவரின் கவிகளில் இலக்கணத்தைக் காணவியாலது. இருப்பினும் படிக்கப்படிக்க இன்பம் தருபவை. இவருடைய மணிமொழிள் அவரின் சமகால வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டுவனவாக உள்ளன. அவற்றுள் சில மணிமொழிகள் பறையர் பற்றிக் குறிப்பிடுவனவாக அமைந்துள்ளன. அவை வருமாறு:
பறையன் இறைச்சியைப் புசிக்க
மற்றவர் நெய்(கொழுப்பு) குடிக்கிறாரன்றோ
குலமனைத்தும் ஓர் குலம் என அறிவீர்!
உலகிற்கினியவனே! கேளாய் வேமனே! - பாடல் 49
பறையன் அல்லன் பறையன்
பேச்சு தவறுபவன் பறையன்
அவனைப் பறையன் என்பவன் பறையன்
உலகிற்கினியவனே! கேளாய் வேமனே! - பாடல் 50
பறையனை ஏன் இகழ்வது
உடலிலுள்ள இறைச்சி ஒன்றல்லவோ!
அவனுள் ஒளிக்குமவன் குலம் என்ன?
உலகிற்கினியவனே! கேளாய் வேமனே! - பாடல் 51
வைக்கோலைத் தின்னும் பசுவின் இறைச்சியை உண்ணப்
பறையனவன் என்று கூறுவர் மக்கள்.
பன்றி கோழிகளை உண்ணுபவனை நல்லவனென்பர்
உலகிற்கினியவனே! கேளாய் வேமனே! - பாடல் 102
வைக்கோலைத் தின்னும் பசுவின் இறைச்சியை உண்ணப்
பறையனவன் என்று கூறுவர் மக்கள்.
பன்றி கோழிகளை உண்ணுபவனை நல்லவனென்பர்
உலகிற்கினியவனே! கேளாய் வேமனே! - பாடல் 102
பார்வை: சர்மா சி.ஆர்., 1992, வேமன்னாவின் மணிமொழிகள், தெலுங்குப் பல்கலைக் கழகம், ஐதராபாத்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன