உரைநடை
வளர்ச்சி 19ஆம் நூற்றாண்டில்
தான்
வளர்ச்சிப்
பாதையே
நோக்கிப்
பயணமாகியது.
இந்நூற்றாண்டில் அரசியலாரும்,
கிறித்துவ
மதக்குருக்களும் நாடு
முழுவதும்
பல்கலைக்
கழகங்களையும்,
பாடசாலைகளையும் நிறுவினர்.
ஐரோப்பிய
முறைப்படி
மாணவர்களுக்குப் பற்பல
பாடங்களைக்
கற்பித்தனர்.
சென்னைக்
கல்விச்சங்கம்(Madras
College) என்பதை
நிறுவிப்
பாடப்
புத்தகங்களையும்,
உரைநடைப்
புத்தகங்களையும் எழுதி
வெளியிட்டனர்.
இதே
காலகட்டத்தில் சென்னைப் பள்ளிப் புத்தகக் கழகம்
(The madras school society) என்பதை
1850இல்
நிறுவி
சிறந்த
மொழிபெயர்ப்பு நூல்களுக்கு
இக்கழகத்தார்
தகுந்த
பரிசுகளை
வழங்கி
உரைநடை
இலக்கிய
வளர்ச்சிக்குப் பெரிதும்
தொண்டாற்றினர்.
இந்திய
நாட்டை
அப்போது
ஆண்ட
கிழக்கிந்தியக் கம்பெனியார்
இலக்கண
நூல்களை,
எளிய
உரைநடையில்
எழுதி
வெளியிடுவோர்க்குப் பரிசளிப்பதாகக் கூறவே
தமிழில்
பல
இலக்கண
நூல்கள்
உரை
நடையில்
வெளிவந்தன.
இந்நூற்றாண்டில் நாடு
முழுவதும்
அச்சுக்கூடங்களை நிறுவி,
எண்ணற்ற
உரைநடை
நூல்களை
இயற்றி
அச்சிட்டனர்.
குறிப்பாக
‘மிஷன்’
என்னும்
கிறித்துவ
சங்கங்கள்
மதசார்பான
உரைநடை
நூல்களை
ஏராளமாக
அச்சிட்டுக்
குறைந்த
விலைக்குக்
கொடுத்தனர்.
இவ்வாறாக
உரைநடை
வளர்ச்சி
மேலோங்கியது. இவ்வளர்சிக்கு வித்திட்டவர்
ஆறுமுகநாவலர்.
அவர்
குறித்த
தகவலைத்
தருவதே
இக்கட்டுரையின் நோக்கம்.
பிறப்பும் கல்வியும்
யாழ்பாணத்து
நல்லூரில்
சைவ
வேளாளர்
குலத்தில்
18.2.1822 அன்று
பிறந்தவர்
ஆறுமுகநாவலர்.
புலவர்
கந்தப்பிள்ளை -
சிவகாமி
அம்மையார்
இவரின்
பெற்றோர்கள்
ஆவர்.
இவருக்கு
ஆங்கில அறிவும்,
தமிழ்ப்புலமையும் இளமையிலே
கைவரப்
பெற்றன.
பள்ளிப்படிப்பினை யாழ்ப்பாணத்தில் கற்றார்.
மெத்தடிஸ்ட்
மிசன்
பள்ளியில்
ஆசிரியராகப்
பணிபுரிந்துள்ளார்.
தமிழ்நாடும் இலங்கையும் அரசியல், மொழி, சமுதாயம், பண்பாட்டுத்தொடர்பு கொண்டு காணப்பட்டிருந்த காலமாகத் திகழ்ந்தது. தமிழ்மொழியின் மீது ஆர்வம் கொண்டிருந்த பெரியோர் பலரை இலங்கை ஈன்றெடுத்திருக்கிறது. பல்வேறு துறைகளில் மனிதர்கள் தமிழ்பற்றுள்ளவராக இருந்துள்ளனர். அதில் குறிப்பிடத்தக்கவர் ஆறுமுகநாவலர் ஆவார்.
தமிழ்நாடும் இலங்கையும் அரசியல், மொழி, சமுதாயம், பண்பாட்டுத்தொடர்பு கொண்டு காணப்பட்டிருந்த காலமாகத் திகழ்ந்தது. தமிழ்மொழியின் மீது ஆர்வம் கொண்டிருந்த பெரியோர் பலரை இலங்கை ஈன்றெடுத்திருக்கிறது. பல்வேறு துறைகளில் மனிதர்கள் தமிழ்பற்றுள்ளவராக இருந்துள்ளனர். அதில் குறிப்பிடத்தக்கவர் ஆறுமுகநாவலர் ஆவார்.
சைவமும்,
தமிழும்
தம்
இரு
கண்களாகக்
கொண்டு
விளங்கினார்.இவ்விரண்டினை
வளர்ப்பதற்கு
யாழ்பாணத்திலும்,
சிதம்பரத்திலும் கல்லூரிகளை
நிறுவினார்.
“அவற்றிக்கு
ஆகும்
பணத்திற்கு
வீடு
வீடாகச்
சென்று
அரிசிப்பிச்சை எடுத்துத்தமிழ்த் தொண்டு
செய்த
சான்றோர்
அவர்”
என்று
டாக்டர்
மு.வ. குறிப்பிடுகிறார்.
கிறித்துவ
சமயம்
வளர்ந்து
பரவி
வந்த
காலத்தில்
பழைய
சமயமான
சைவ
சமயத்திற்கு
புத்துயிர்
அளித்தார்.
தம்
19ஆம்
வயதில்
இருமொழிக்
கற்பிக்கும்
ஆசிரியராகத்
திகழ்ந்தார்.
தூய தமிழில்
பரிசுத்த
வேதகாகம(
Bible) நூலை
மொழிபெயர்க்கத் துணைபுரிந்தார்.
சைவ
சித்தாந்த
நூல்களையும்
திருமுறைகளையும் தெளிவாகக்
கற்க
ஆர்வம்
கொண்டது
மட்டுமின்றி
சமயத்தை
பரப்பவும்
பெரிதும்
முயன்றார்.
அதற்காகவே
பற்பல
நூல்களை
எழுதிவெளியிட்டார்.
ஆறுமுக
நாவலருக்கு
27 வயது
ஆகும்
பொழுது
’ நாவலர்’ என்ற
பட்டத்தைத்
திருவாவடுதுறை ஆதீனத்தார்
வழங்கி
அவரை
சிறப்பித்தனர்.
வள்ளலாரின்
பாடல்களை
‘அருட்பா’
என
வாதிட்டவர்.
சைவ
சமயத்தில்
கொண்ட ஊன்றிய
பற்றே
வள்ளலார்
பாடல்களை
ஏற்கத்
தயங்கியது.
அவரிடம்
கல்வி
கற்ற
மாணவர்களிலே
‘சபாபதி
நாவலர்’
என்பவர்
தலைசிறந்தவர்
ஆவார்.
சமய
நூல்களை
இயற்றுவதோடு
மட்டுமின்றி
சிறுவர்களுக்குப் பாடப்புத்தகங்களையும் எழுதினார்.
சிறப்புப்பெயர்கள்
பல உரைநடை
நூல்களையும்
எழுதியுள்ளதால் இவரை
அறிஞர்
வி.கோ.சூரியநாரயண
சாஸ்திரியார்
‘வசனநடை
கைவந்த வள்ளலார்’ எனப் பாரட்டியுள்ளார்.
‘வைதாலும்
வழுவின்றி
வைவாரே’
என்ற
பாராட்டுரையும் இவர்
குறித்து
எழுந்ததே
ஆகும்.
ஆங்கில
உரைநடைக்கு
டிரைன்( Dryden ) போலத் தமிழுக்கு
ஆறுமுகநாவலர்
எனும்
சிறப்பினைப்
பெற்றவர்.
இவரை,
நல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேற்
சொல்லுதமி
ழங்கே
சுருதி
எங்கே?
என
திரு
சி.வை.தாமோதிரம்பிள்ளை
பாரட்டியுள்ளார்.
தமிழ்
காவலர்,
தமிழ்
உரைநடையின்
தந்தை,
நாவண்மை
படைத்த
பேச்சாளர்,
உரைநடை
வேந்தர்,
பதிப்பாசிரியர்,
சைவ
தந்த
தண்ணளியாளர்
ஐந்தாம்
சமயக்குரவர்
எனப்
பல
சிறப்புப்பெயர்களைக் கொண்டுள்ளார்.
பெர்சிவில்
என்னும்
கிறித்துவ
பாதிரியார்
இவரிடம்
தமிழ்
படித்தார்
என்பது
இவரின்
புலமையின்
சிறப்பாகும்.
இலக்கண
வழுவில்லாத
தூய்மையன
எளிய
நடையே
முதன்முதலில்
கையாண்டவர்
இவரே.
ஆற்றியத்
தொண்டுகள்:
Ø
இயற்றிய
நூல்
- 23
Ø
உரை
நூல்
- 8
Ø
அச்சுப்
பதிப்பு
- 39
Ø
பாடல்
வகைகள்
- 14
v
சென்னையில்
ஓர்
அச்சகத்தை
நிறுவி
சைவ
வினா
விடை
சைவ
சமய
நெறி
உரை,
திருமுருகாற்றுப்படையுரை போன்ற சமய
நூல்களை
வெளியிட்டுள்ளார்.
v
ஆங்காங்கேச
சென்று
சமயச்
சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.
v
பாரதம்,
பெரியபுராணம்,கந்தபுராணம்,சிற்றுரை
போன்ற
இலக்கிய
நூல்களை
பதிப்பித்துள்ளார்.
v
நன்னூல்
காண்டிகையுரை,
இலக்கணக்
கொத்து,
இலக்கணச்சூறாவளி போன்ற
நூல்களைப்
பதிப்பித்துள்ளார்.
v
சைவ
பிரகாச
வித்தியா
சாலை
(ஆறுமுக
நாவலர்
உயர்நிலைப்
பள்ளி
என
செயல்படுகிறது). வண்ணார், பண்ணை,
ஜோப்பாய்,
கொழுப்புத்துறை,
பருத்தித்துறை,
ஏழாலை,
முல்லைத்தீவு, யாழ்ப்பாணம்
எனும்
இடங்களில்
நடத்தினர்.
v
நல்லூரின்
வித்யானு
பாலன
யந்திர
சாலை
1848 தொடங்கப்பட்டது
v
வண்ணாரப்
பண்ணையில்
சைவ
ஆங்கில
வித்யாசாலை
தொடங்கினார்.
v
சிதம்பரம்
- சைவ
பிரகாச
வித்தியா
சாலை
தொடங்கினார்.
v
1,
2, 3, 4, ஆம்
வகுப்புகளுக்குரிய பல
பாடங்களைச்
சிறப்பாக
அச்சாக்கி
வெளியிட்டுள்ளார்.
v
கீர்த்தனைங்கள்,
பாடல்கள்
சிலவற்றை
எழுதியுள்ளார்.
v
கணித
வாய்பாடுகளை
வெளியிட்டுள்ளார்.
v
திருவிளையாடற் புராண
வசனம்,
பெரியபுராண
வசனம்
ஆகியவற்றை
சிறப்பாக
அச்சாக்கி
வெளியிட்டுள்ளார்.
v
யாழ்பாணத்துச் செல்வர்களும்
திருவாடுதுறை
மடம்
தலைவரும்
இராமநாதபுரம்
சேதுபதி
மன்னர்
போன்றோரின்
உதவியால்
39 நூல்களை
பனை
ஏட்டிலிருந்து நூல்வடிவில்
அச்சிட்டுள்ளார்.
v
பாலவந்தம் -
சமீந்தார்
பொன்னுச்சாமித்தேவர் (பாண்டி
துரை
தேவரின்
தந்தை)
உதவியால்
திருக்குறள்
பரிமேலழகர்
உரையே
1861-ல்
அச்சிட்டுள்ளார்.
v
போலிமருட்பா,
மறுப்பு,
கந்தபுராண
வசனம்
போன்ற
உரைநடைகளை
இயற்றியுள்ளார்.
v
சைவ
தூக்ஷ்ண
பரிகாரம்,
வச்சிர
தாண்டம்
போன்ற
நூல்களைப்
படைத்துள்ளார்.
v
தமிழ்
மாணவர்களுக்காக சைவ
படலம்,
இலக்கணச்
சுருக்கம்,
இலக்கண
வினா
விடை,
சைவ
வினா
விடை,
சூசனம்,
சிவாலாய
தரிசன
விதி,
அனுட்டான
விதி,
பெரிய
புராண
வசனம்,
சிதம்பர
மான்மியம்,
இலங்கை பூமி
சரித்தரம்,
சேது
புராணம்
போன்ற
நூல்களை
இயற்றியுள்ளார்.
v
சூடாமணி
உரை(முதன்முதலில்
அச்சிட்டது)
சௌந்தரியலகரி
உரை,
யாழ்ப்பாண
சமய
உரை,
சிவ
தருமோத்திர
உரை,
மருதூர்
அந்தாதி,
சைவ
நெறி
உரை,
திருமுருகாற்றுப்படை உரை,
சிவ ன போதகசிற்றுரை, சிவராத்திரி புராண
உரை
போன்ற
உரை
நூல்களை
எழுதியுள்ளார்.
v
கதிர்மாக
சுவாமி
கீர்த்தனை,
தனிப்
பாடல்கள்,
தேவகோட்டை
தல
புராணம்,
சித்தி
விநாயகர்
விளக்கம்
போன்ற
செய்யுள்
நூல்களைப்
படைத்துள்ளார்.
அளிக்கப்பட்ட
சிறப்புக்கள்:
v
1971-ல்
இலங்கை
அரசு
தேசீய
வீரர்
பட்டமும்,
அஞ்சல்
தலையும்
வெளியிட்டது.
v
நான்காம்
உலகத்
தமிழ் மாநாட்டில் தனிநாயக
அடிகள்
தலைமையில் ஞானியார்
அடிகள்,
விபுலானந்த
அடிகள்,
ஆறுமுக
நாவலர் போல்வர்களுக்கு சிலைகள்
வைக்கப்பட்டன.
அயலக
மண்ணில்
பிறந்து
தமிழ்
மொழி
உரைநடை வளர்ச்சி
பெறக் காரணமாயிருந்தவருள்
இவரும் ஒருவர். பல
நூல்களை
உரை
கண்டும்,
பதிப்பித்தும்,
அச்சிட்டும்
என
பல
பரிணாமங்களில் திகழ்ந்த
இவர்
5.12.1879 அன்றுஇவ்வுலகினை விட்டு
பிரிந்தார்.
அவர்
உயிரோடு
இல்லாவிடினும் அவரால்
படைக்கப்பட்ட,
உருவாக்கப்பட்ட அச்சிடப்பட்ட
நூல்கள்
இன்று
வரையிலும்
இவ்வாய்வுலகத்திற்கு உயிரோடுத்
திகழ்கின்றது.
நோக்கீட்டு
நூல்கள்:
- அடைக்கலசாமி.எம்.ஆர், 1981, தமிழ் இலக்கிய வரலாறு, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், 154. டி. டி. கே. சாலை, சென்னை - 18.
- பாலசுப்பிரமணியன்.சி, 2011, தமிழ் இலக்கிய வரலாறு, பாரி நிலையம் 90, பிராட்வே, சென்னை-8
- தமிழ் ஆசிரியர் தேர்வுக் கையேடு,
சே.
முனியசாமி,
முனைவர்
பட்ட
ஆய்வாளர்,
இந்திய
மொழிகள்
பள்ளி
மற்றும்
ஒப்பிலக்கியப் பள்ளி,
தமிழ்ப்
பல்கலைக்
கழகம்,
தஞ்சாவூர்,
தமிழ்நாடு,
இந்தியா.
9786089440
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன