திங்கள், 23 செப்டம்பர், 2013

நெல்லையும் முல்லையும்

கூட்டுடன்படிக்கை அல்ல அது
நாட்டை அடக்கும் படையெடுக்கை
கூவி கூவி கூறு போட்டு விற்கும்
அந்நியன்தானே சூதுள்ள சூனியக்காரன்
ரஷ்யா ஒப்பந்தம்
ராட்சத நிர்பந்தம்
தலையாட்டிக் கண்ணடித்து சரியென்றான் - அன்று
தலைமுறை உருவெடுக்க வேண்டாமென்று
பாலும் தேனும் ஓடுதே இப்பவும்
பாலாய் போகுமென்று காத்திருக்கிறான் எப்பவும்
அணுசக்தியை நுழைத்தான் மெதுவாய்
மனித சக்தியை அழிக்க வந்தான் ஏதுவாய்
கூடிக் கிடக்கும் நம் கூட்டுக் குடும்பத்தில்
தூண்டி திரியைத் தூண்டுகிறான் கூடங்குளத்தில்
கவனக் குறியெல்லாம் தமிழகம்தான்
நிதானமாய் முழுங்கப் போகிறான் திமிங்கலமாய்
நெல்லை மக்களைத் திசை திருப்ப
முல்லைப் பெரியாராய்ப் பாய்ந்தான்
அகோர சூழ்ச்சி செய்ய நினைத்தாலும்
அனுமதிக்க மாட்டோம் அணுவலைச் சுடர்விட
விடி வெள்ளியாய் இருப்போம்
இடி முழக்க ஒலியாய் இசைப்போம்
என்றும் எம் இளைஞர்களின் சக்தியால் ....
                                                                                       - சே. முனியசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன