திங்கள், 30 செப்டம்பர், 2013

முத்துக் குற்றம்

  1. காற்றேறு
  2. மணலேறு
  3. கல்லேறு
  4. நீர்நிலை
ஆகிய நால்வகை முத்துக் குற்றங்கள் காணப்படுகின்றன.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

ஆறுமுக நாவலரும் அவர்தம் தமிழ்ப்பணியும்


உரைநடை வளர்ச்சி 19ஆம் நூற்றாண்டில் தான் வளர்ச்சிப் பாதையே நோக்கிப் பயணமாகியது. இந்நூற்றாண்டில்  அரசியலாரும், கிறித்துவ மதக்குருக்களும் நாடு முழுவதும் பல்கலைக் கழகங்களையும், பாடசாலைகளையும் நிறுவினர். ஐரோப்பிய முறைப்படி மாணவர்களுக்குப் பற்பல பாடங்களைக் கற்பித்தனர். சென்னைக் கல்விச்சங்கம்(Madras College) என்பதை நிறுவிப் பாடப் புத்தகங்களையும், உரைநடைப் புத்தகங்களையும் எழுதி வெளியிட்டனர்.
      இதே காலகட்டத்தில் சென்னைப் பள்ளிப் புத்தகக் கழகம் (The madras school society) என்பதை 1850இல் நிறுவி சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கு இக்கழகத்தார் தகுந்த பரிசுகளை வழங்கி உரைநடை இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் தொண்டாற்றினர்.

சனி, 28 செப்டம்பர், 2013

பயம்

கல்வி பழகிய பந்தம்
அறிந்தேன் அன்று
எவ்வாறு சுவைப்பது என்று
சுவைக்க ஆரம்பிக்கும் முன்
திருமண பந்தம்
குழந்தை பந்தம்
 மீண்டும் கைகூடியது
கல்வி பந்தம்

இப்போது பயம்
கல்வியில் திளைத்து
குடும்பத்தைத் தவறவிடுவேனோ என
                                               -  இரா. நித்யா சத்தியராஜ்


உயர் கல்வியின் நிலைப்பாடுகள்


அண்மையில் ஆங்கில நாளேடு ஒன்று, உலக அளவில் பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்தி ஒன்று முதல் இருநூறு வரையிலான பல்கலைக்கழகங்களின் பெயரை வெளியிட்டிருந்தது. அப்பட்டியலில் இந்தியாவில் உள்ள எந்த ஒரு பல்கலைக்கழகத்தின் பெயரும் இடம்பெறாதது இந்தியக் கல்வியாளர் ஒவ்வொருவரும் வெட்கப்படத்தக்கது. அருகில் உள்ள மிக மிகச் சிறு நாடான சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களின் பெயர்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்திய நாட்டிலேயே உயர்கல்வியை வழங்கி வருவதாக முரசு கொட்டிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் எதுவும் அப்பட்டியலில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

தமிழில் விழிப்பே இல்லை

  சென்ற 50 ஆண்டுகளில் இந்தியா 220 மொழிகளை இழந்து விட்டது! 1961 இல் 110 மொழிகளே இருந்தன. 2011 இல் 780 மொழிகள் இருந்தன. மூன்று அல்லது நான்கு விழுக்காடு மொழிகளைப் பேசும் மக்க்ள் தொகை ஐந்துகோடி இருக்கலாம். இடம் பெறுதல் ஒரு முக்கியக் காரணம். பொருளாதர பலம் இல்லாமை; மொழி அங்கீகாரம் இல்லாமை. பரோடாவில் உள்ள பாசா ஆராய்ச்சி மையம் அளிக்கும் புள்ளி விவரங்கள்.

புதன், 25 செப்டம்பர், 2013

மனித இயல்பு

அனுபவ
வார்த்தைகளை
கேட்க மறுக்கும் மனமே
அனுபவித்து
அறிந்து கொள்வது ஏனோ?
                                                           - இரா. நித்யா சத்தியராஜ்  

ஐவகைக் கூந்தல்


  1. முடி
  2. கொண்டை
  3. சுருள்
  4. குழல்
  5. பனிச்சை

கொடைஞர் 21பேர்

முதல் ஏழு கொடைஞர்
  1. குமணன்
  2. சகரன்
  3. சகாரன்
  4. செம்பியன்
  5. துந்துமாரி
  6. நளன்
  7. நிருதி

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

உடற்குறை எண்வகை


  1. குறள்
  2. செவிடு
  3. மூங்கை
  4. கூன்
  5. மருள்
  6. குருடு
  7. விலங்குறுப்பு விரவுதல்
  8. உறுப்பில் பிண்டம்

திங்கள், 23 செப்டம்பர், 2013

நெல்லையும் முல்லையும்

கூட்டுடன்படிக்கை அல்ல அது
நாட்டை அடக்கும் படையெடுக்கை
கூவி கூவி கூறு போட்டு விற்கும்
அந்நியன்தானே சூதுள்ள சூனியக்காரன்
ரஷ்யா ஒப்பந்தம்
ராட்சத நிர்பந்தம்

மொழிகள்

இளமையில் காதல்
மொழிகள்...
முதுமையில் அனுபவ
மொழிகள்...
                                            - இரா. நித்யா சத்தியராஜ் 

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

முத்துப் பிறக்குமிடங்கள்


  1. நந்து
  2. சங்கு
  3. மீன்தலை
  4. கொக்கு
  5. தாமரை
  6. மகளிர் கழுத்து
  7. செந்நெல்
  8. மூங்கில்
  9. கரும்பு
  10. பசுவின்பால்
  11. பாம்பு
  12. இப்பி
  13. மேகம்
  14. யானைக் கொம்பு
  15. பன்றிகொம்பு
  16. கமுகு
  17. வாழை
  18. சந்திரன்
  19. உடும்பு
  20. முதலை

பெரியோருக்குரிய இயல்பான ஏழு குணங்கள்


  1. அறம்
  2. பொருள்
  3. இன்பம்
  4. அன்பு
  5. புகழ்
  6. மதிப்பு
  7. பொறுமை

சனி, 21 செப்டம்பர், 2013

செத்தும் பிழைத்தும்

உன்னால்
உன் நினைவால்
தினம் தினம்
செத்துக் கொண்டிருக்கிறேன்.
உன்னால்
உன் நினைவால்
தினம் தினம்
என் கவிதை
பிழைத்துக் கொண்டிருக்கிறது.
                                                                  - சே. முனியசாமி

தமிழ் மென்பொருள்(Tamil Software)கள் சில

 இந்திய மொழிகளின் தொழில் நுட்பம் வழங்கும் தமிழ் மென்பொருள் குறித்த சில அடிப்படை வினாக்கள் பயனாளர்களிடம் இருந்து கேட்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான விடைகளும் தரப்பட்டுள்ளன. இந்நிறுவனம் வழங்கும் மென்பொருள்கள் பயனுடயதாகவே அமைவதைக் காணலாம். மேலும் அந்நிறுவனம் இலவயமாக மென்பொருள் அடங்கிய குறுந்தட்டையும் அனுப்பி வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பதிவிறக்கம் செய்யக்கூடிய சில மென்பொருள்கள்

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

மெழுகுவர்த்தியே வெளிச்சம் கொடு (Light a Candle)

நீ எங்களிடம் கடிந்துகொள்
நீ எங்களை நல்நெறியில் செலுத்து
நீ எங்களுக்கு மாறாக செயல்படு
நீ எங்களை எதிர்த்து நில்
இந்த உலகமே உன்னிடம் பைத்தியம்

ஒரு மணி நேரம்

நிர்ணயிக்கப்பட்ட
நேரம் பேச
ஒப்புக்கொண்டாய்.
ஒரு மணி நேரம்
முன்னதாகவே - என்
பணிகளை ஒத்திக்கு விடுகிறேன்
நீ.....  நீ.......
பேசியது
சில நிடங்கள் மட்டும்.
பேசிய பின்பு
அடுத்த ஒருமணி நேரத்தை
பேசப்பட்ட
உம் நினைவால் கழிக்கிறேன்
ஏன்?
                                                                - சே.முனியசாமி(muniyasethu@gmail.com)

வியாழன், 19 செப்டம்பர், 2013

உபரியாய்...

எந்த பணியும்
முழுதாய் செய்யவில்லை
என்ன பணி செய்தாலும்
என் நேரத்தை
நீ முக்கால் வாசி பங்கு போடுகிறாய்
ஆனால்...
உனது பணி பூர்த்தியாய் விடுகிறது
எனது பணி உபரியாகிவிடுகிறது
ஏன்?          
                          - சே. முனியசாமி 

கருத்துப் புலப்பாட்டு நிலையில் கொடிச்சி


-       த.சத்தியராஜ்
 
சங்கப் பாடல்களில் கொடிச்சி, கொடிச்சியர் என்றாயிரு சொல்லாட்சிகள் காணப்பெறுகின்றன.  அவற்றிற்கு உரையாசிரியர்கள் கொடிச்சி, குறப்பெண், குறமகளிர், குறிஞ்சிநிலப் பெண் என்பதாகப் பொருளமைவு கொண்டுள்ளனர்அகர முதலிகளோ குறத்தி, கொடிச்சி, இடைச்சி முதலியப் பல்வேறு பொருள்கள் தந்து விளக்கம் அளித்துள்ளன.  எனவே, ஈண்டு கொடிச்சி என்பதற்கு குறிஞ்சிநிலப் பெண்டிரைக் குறித்து வந்தனவா அல்லது இடைச்சி என்ற அளவில் நின்றனவா என இக்கட்டுரையில் ஆராயப் பெறுகின்றது.

புதன், 18 செப்டம்பர், 2013

மகளிரால் மலரும் பத்து மரங்கள்


  1. மகிழம் (மகளிர் சுவைத்தால் மலர்வது)
  2. ஏழிலைம் பாலை (நட்பாட மலர்வது)
  3. பாதிரி (நிந்திக்க மலர்வது)
  4. முல்லை (நகைக்க மலர்வது)
  5. புன்னை (ஆடுவதால் மலர்வது)
  6. குரா (அணைக்க மலர்வது)
  7. அசோகு (உதைக்க மலர்வது)
  8. குருகத்தி (பாட மலர்வது)
  9. மரா (பார்க்க மலர்வது)
  10. சண்பகம் (நிழல்பட மலர்வது)

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

ஓமாலிகை

  1. இலவங்கம்
  2. பச்சிலை
  3. தக்கோலம்
  4. ஏலம்
  5. நாகணம்
  6. கொட்டம்
  7. நாகம்
  8. மதாவரிசி

திங்கள், 16 செப்டம்பர், 2013

தெலுங்கும் அதன் இலக்கணங்களும்


தென்னிந்திய ஆந்திர பிரதேசத்தில் அரசு ஏற்புபெற்ற மொழியாக விளங்குவது தெலுங்கு. இம்மொழிஇந்திய அரசால் ஏற்கப்பட்ட 22 மொழிகளில் ஒன்று. இது தமிழ்நாடுகர்நாடகம் ஆகிய பிற மாநிலங்களிலும் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. உலகில் அதிக அளவில் பேசும் மொழிகளில் தெலுங்கு 13வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இந்தியை அடுத்து தெலுங்கு மொழி பேசுவோர் அதிகளவில் உள்ளனர் . மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 9,30,00,000 (93மில்லியன்) மக்கள் தெலுங்கு மொழி பேசுகிறார்கள். இம்மொழி 2008ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று இந்திய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.
தெலுங்கிற்கு எழுத்து வடிவிலான இலக்கிய (ஆந்திர மகாபாரதம்) இலக்கண வளங்களின் தொடக்கம் கி.பி.பதினொன்றாம் நூற்றாண்டு என்பது அதன் வரலாறு காட்டும் உண்மை. அதன்பின்பு அதன் வளர்ச்சி அளவிடமுடியாத அளவிற்கு பரந்து விரிந்தது/ விரிந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் அதற்கு முன்பும் இலக்கிய இலக்கண வளங்கள் இருந்தமையையும் சுட்டத் தவறவில்லை. அதன் இலக்கிய வரலாற்றை,
  1. நன்னயருக்கு முற்காலம் - கி.பி 1020 வரை, 2
  2. புராண காலம் - கி.பி 1020 முதல் கி.பி 1400 வரை
  3. ஸ்ரீநாதரின் காலம் - கி.பி 1400 முதல் கி.பி 1510 வரை
  4. பிரபந்த காலம் - கி.பி 1510 முதல் கி.பி 1600 வரை
  5. தெற்கு காலம் - கி.பி 1600 முதல் கி.பி 1820 வரை
  6. நவீன காலம் - கி.பி 1820 முதல் இன்று வரை
எனப் பாகுபடுத்திப் பார்ப்பர்.
 இலக்கண வளத்தின் தொடர்ச்சி ஆந்திரசத்தசிந்தாமணியிலிருந்து தொடங்குகிறது. எவ்விதம் இருப்பினும் அதற்கு முன்பும் ஒரு பரந்துபட்ட இலக்கணமரபு உண்டென்பது அதன் வரலாறு காட்டும் மற்றொரு உண்மை (லலிதா, தெலுகு வியாகரண சரித்திரம், 1996). இக்கட்டுரை தெலுங்கு மொழிக்குரிய இலக்கணங்களை லலிதா அவர்களின் குறிப்புகளைப் பயன்படுத்தித் தமிழில்  பட்டியலிட்டுக்காண்பிக்க முயலுகிறது. 
  இக்கட்டுரை கீற்று இதழில் 9/9/2013(திங்கள்) அன்று வெளியிடப் பட்டுள்ளது. அக்கட்டுரையை மேலும் வாசிக்க:http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=24867:2013-09-09-08-21-30&catid=1:articles&Itemid=264 எனவரும் பக்கதிற்குச் செல்லவும்

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

ஏழாம் இலக்கணம் மரபா? நவீனமா?

1.0 முகப்பு
ஆய்வுக் கட்டுரை: ஏழாம் இலக்கணம் மரபா? நவீனமா?
தமிழில் எழுதப்பட்ட இலக்கணங்களை மரபிலக்கணங்கள், நவீன இலக்கணங்கள் எனப் பாகுபடுத்திப் பார்ப்பது பெரும்பான்மையான ஆய்வறிஞர்களின் துணிபு. அவற்றுள் மரபிலக்கணங்களைப் பட்டியலிட இருபதாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும்(2010:112), நூற்பா வடிவில் அமைந்திருக்க வேண்டும்(2010:299-300) என்பது இலக்கணவியல் அறிஞரின் கருத்து. அதாவது அறுவகை இலக்கணம் வரை எழுதப்பட்ட நூல்களை மரபிலக்கணங்களிலும், பிறவற்றை நவீன இலக்கணங்களிலும் வைக்கலாம் என்பது அவ்வறிஞரின் கருத்தாகப் புலப்படுகிறது. அக்கருத்து மரபிலக்கணக் காலநீட்சியை அறிவதற்கான கருதுகோள்கள் எனில், ஏழாம் இலக்கணத்தையும் மரபிலக்கண வரிசையில் வத்துப் பார்ப்பதே பொருத்தமுடையதாக இருக்கும். ஆக, ஏழாம் இலக்கணம் மரபா? அல்லது நவீனமா? என அறிவதாக இக்கட்டுரை அமைகிறது.

 இக்கட்டுரை 10. 09. 2013 அன்று பதிவுகள் இணைய இதழில் வெளியிடப் பெற்றதாகும். ஆக, அக்கட்டுரையை மேலும் வாசிக்க: http://www.geotamil.com/pathivukalnew/index.php?view=article&catid=2:2011-02-25-12-52-49&id=1708:2013-09-10-03-09-03&tmpl=component&print=1&layout=default&page= என வரும் இணையப் பக்கத்திற்குச் செல்லுங்கள்.




வெள்ளி, 13 செப்டம்பர், 2013

வேமனாவின் பார்வையில் பறையர்

வேமனா தெலுங்கு இலக்கியப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். கி.பி.பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் சாதிமுறையைக் கண்டித்தவர். இவர் ஆந்திர நாட்டில் இருக்கும் அனைத்து ஊர்களுக்கும் சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவரின் கவிகளில் இலக்கணத்தைக் காணவியாலது. இருப்பினும் படிக்கப்படிக்க இன்பம் தருபவை. இவருடைய மணிமொழிள் அவரின் சமகால வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டுவனவாக உள்ளன. அவற்றுள் சில மணிமொழிகள் பறையர் பற்றிக் குறிப்பிடுவனவாக அமைந்துள்ளன. அவை வருமாறு:

பறையன் இறைச்சியைப் புசிக்க
மற்றவர் நெய்(கொழுப்பு) குடிக்கிறாரன்றோ
குலமனைத்தும் ஓர் குலம் என அறிவீர்!
உலகிற்கினியவனே! கேளாய் வேமனே! - பாடல் 49

பறையன் அல்லன் பறையன்
பேச்சு தவறுபவன் பறையன்
அவனைப் பறையன் என்பவன் பறையன்
உலகிற்கினியவனே! கேளாய் வேமனே! - பாடல் 50

பறையனை ஏன் இகழ்வது
உடலிலுள்ள இறைச்சி ஒன்றல்லவோ!
அவனுள் ஒளிக்குமவன் குலம் என்ன?
உலகிற்கினியவனே! கேளாய் வேமனே! - பாடல் 51

வைக்கோலைத் தின்னும் பசுவின் இறைச்சியை உண்ணப்
பறையனவன் என்று கூறுவர் மக்கள்.
பன்றி கோழிகளை உண்ணுபவனை நல்லவனென்பர்
உலகிற்கினியவனே! கேளாய் வேமனே! - பாடல் 102


பார்வை: சர்மா சி.ஆர்., 1992, வேமன்னாவின் மணிமொழிகள், தெலுங்குப் பல்கலைக் கழகம், ஐதராபாத்து.




   

வியாழன், 12 செப்டம்பர், 2013

அகச்சமயங்கள் ஆறு

1. பாடாணவாத சைவம்
2. பேதாவத சைவம்
3. சிவசமவாதி சைவம்
4. சிவ சங்கிராந்தவாத சைவம்
5. ஈசுவர அவிகாத சைவம்
6. சிவாத்துவித சைவம்

புதன், 11 செப்டம்பர், 2013

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

திங்கள், 9 செப்டம்பர், 2013

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

சனி, 7 செப்டம்பர், 2013

அட்டபந்தனம்

  1. கருங்குங்கிலியம்
  2. வெள்ளைக் குங்கிலியம்
  3. சுக்காங்கல்
  4. தேன்மெழுகு
  5. செம்பஞ்சு
  6. கொம்பரக்கு
  7. காவிக்கல்
  8. வெண்ணெய்
இந்த எட்டையும் முறைப்படி சேர்த்து செய்வதே அட்டபந்தனம் எனும் கலவையாகும்.

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

எண்வகைச் செல்வங்கள்


  1. தனலட்சுமி
  2. தானியலட்சுமி
  3. தைரிய லட்சுமி
  4. சௌரிய லட்சுமி
  5. வித்தியா லட்சுமி
  6. விசய லட்சுமி
  7. கீர்த்தி லட்சுமி
  8. இராச்சிய லட்சுமி

வியாழன், 5 செப்டம்பர், 2013

அட்டமா சித்தி


  1. அணிமா(ஆன்மாப் போலாதல்)
  2. மகிமா(பேருக் கொள்ளுதல்)
  3. கரிமா(இரும்பு மலையினும் கனத்தல்)
  4. இலகிமா(பஞ்சினும் இலேசாதல்)
  5. பிராத்தி(வேண்டுவன அடைதல்)
  6. பிராகாமியம்(நினைத்த போகமெல்லாம் பெறுதல்)
  7. ஈசத்துவம்(யாவர்க்கும் தேவனாதல்)
  8. வசித்துவம்(யாவரும் வணங்க நிற்றல்)

புதன், 4 செப்டம்பர், 2013

இந்திய தேசிய உடைமை வங்கிகள்


  1. அலகாபாத்து வங்கி - கல்கத்தா
  2. ஆந்திரா வங்கி - ஐதராபாத்து
  3. இந்தியன் ஓவர்சிசு வங்கி - சென்னை
  4. இந்தியன் வங்கி - சென்னை
  5. ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் - புதுதில்லி
  6. கனரா வங்கி - பெங்களூர்
  7. கார்ப்பரேசன் வங்கி - உடுப்பி
  8. சிண்டிகேட் வங்கி - மணிபால்
  9. செண்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா - பம்பாய்
  10. தேனா பாங்க் - பம்பாய்
  11. நியூ பாங்க் ஆப் இந்தியா - புதுதில்லி
  12. பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி - அமிர்தசரசு
  13. பஞ்சாப் நேசனல் பாங்க் - புதுதில்லி
  14. பேங்க் ஆப் இந்தியா - பம்பாய்
  15. பேங்க் ஆப் பரோடா - பரோடா
  16. பேங்க் ஆப் மகாராட்டிரம் - புனா
  17. யுனைடெட் கர்சியல் பேங்க் - கல்கத்தா
  18. யுனைடெட் கர்சியல் பேங்க் ஆப் இந்தியா - கல்கத்தா
  19. யூனியன் பேங்க் ஆப் இந்தியா - பம்பாய்
  20. விஜயா பேங்க் - பெங்களூர்
இவையாவும் நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கிகள்.

திங்கள், 2 செப்டம்பர், 2013

ஐவகை மெத்தைகள்


  1. அன்னத்தூவி
  2. இலவம்பஞ்சு
  3. செம்பஞ்சு
  4. மயில்தூவி
  5. வெண்பஞ்சு

எவ்வாறு வாசிக்க வேண்டும்?

  பொதுவாக, எப்படிப் படிக்க வேண்டும் என்ற கருத்துக்களை எந்தவொரு தமிழ்த் தொகை நூல்களும் கூறியதாகத் தெரியவில்லை. ஆனால் பிராக்கிருதம் போல்வன மொழிகளில் தொகுக்கப் பெற்ற தொகைநூல்கள் அத்தொகை நூல்களை எவ்வாறு வாசிக்கவேண்டும் என சுட்டத் தவறவில்லை எனலாம். இப்பணியைத் தமிழில் இலக்கணங்கள்தான் செய்து வந்தன. இலக்கியங்களில் திருக்குறள் போல்வன கல்வி என்ற தலைப்பில் பதிவு செய்கின்றமையைக் காணலாம்.
     பிராக்கிருத மொழியில் எழுதப் பெற்ற நூலே வஜ்ஜாலக்கம். இதனைத் தமிழில் வைரப்பேழை எனக் கூறலாம் என்பார் மு. கு.ஜகந்நாதராஜா. இக்கவித் தொகுப்பில் இடப்பெறுவதே எவ்வாறு ஒரு கவிதை நூலை வாசிக்க வேண்டும் எனும் கருத்தியல். அக்கருத்தியல் வருமாறு:
        1. நிறுத்திப் படிக்க இயலாமை, சுவையறியாதிருத்தல், இடமறிந்து படிக்காமை, மூக்கால் வாசித்தல், விரைவாக வாசித்தல், வாய்தவறி வாசித்தல், ஈடுபாடின்மை - இவை படிப்பவரின் குறைபாடுகள் ஆகும்.(28)
    2. இயற்சொல், இன்சொல், சந்தம், நடை, மென்மை, தெளிவு, பொருட்புலப்பாடு இவற்றுடன் கூடியதாக பாகதக் கவிதைகளை படிக்கவேண்டும்.(29)
 இவ்வாறு இவை வரையறுத்துக் கூறவேண்டிய காரணம் ஒன்றே. அது இன்பத்துக் கவிகள் என்பதாலேயாம்.

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

ஆய்வு செய்யப்பெறாத கல்வெட்டு


  இராமநாதபுரம் மாவட்டத்தில் மேலமடை எனும் ஊர் உள்ளது. இவ்வூரின் வயல்பகுதியில் கல்வெட்டு ஒன்று உள்ளது. இக்கல்வெட்டு சிதைந்த நிலையில் உள்ளது. இருப்பினும் சில எழுத்துக்கள் தெளிவாகத் தெரிகின்றது. இவ்வெழுத்துக்கள் முழுமையும் சிதைந்து விடுவதற்குள் அக்கல்வெட்டு தரக்கூடிய செய்தியை வெளிக்கொணர வேண்டும் என்பதே எம் நோக்கம்.
     அக்கல்வெட்டு குறித்த சில தகவலைக் காண்போம். இக்கல்வெட்டில் இடம்பெறும் எழுத்துக்களை வைத்துப் பார்க்கும்பொழுது சேதுபதி மன்னர் காலத்துக்கு முன்போ அல்லது பின்போ எழுதப்பட்டதாக இருக்கலாம். இக்கல்வெட்டு இரண்டரை அடி நீளம் கொண்டதாகவும், சற்று சாய்ந்த நிலையிலும் காணப்படுகிறது. அதனுள் சூலாயுதம் படமும் அதற்குக்கீழூம், அக்கல்லின் பக்கவாட்டிலும் அவ்வெழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இது அவ்வயலின் நடுவில் உள்ளது. அக்கல்வெட்டு இருந்த இடம் முன்பு மேடாகவும், தற்பொழுது அம்மேடுகள் அகற்றப்பட்டு வயலாகவும் காட்சித் தருகிறது. எனவே கல்வெட்டு ஆராய்ச்சியில் நாட்டமுடையவர்கள் அக்கல்வெட்டுத் தரும் தகவலை வெளிக்கொணர்வார்களாக! இக்கல்வெட்டுக்கு அருகில் பானை ஓடுகள் சிதறிக்கிடப்பதும் கவனத்திற்குரியது.

தகவலாளர்: திருமதி. த. சத்தியராணி நம்பிராஜன்

     இங்கு இடம்பெறும் ஒளிப்படங்கள் நேரில் சென்று கைப்பேசியில் பதிவு செய்யப் பெற்றதாகும்.

சிந்துப்பாவியல்

சிந்துப்பாவியல் - தேர்வுக் குறிப்புகள் இரா. திருமுருகன் அருளிய சிந்துப்பாவியல்: முழுமையான தேர்வுக் குறிப்புகள் ...