வெள்ளி, 8 மார்ச், 2024

பூச்சிக்கொல்லி இல்லா விவசாயம்

முன்னுரை

இந்தியாவில் 130 கோடி மக்கள் வாழ்கின்றனர். மக்கள் வாழ்வதற்கு அடிப்படை தேவை உணவு, உடை, இருப்பிடம். இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயம் இருக்கிறது அழிந்து போகும் விவசாயத்தை காக்க வேண்டும்.

செயற்கை முறை விவசாயம்

செயற்கை விவசாயத்தால் மண்ணின் அமைப்பு பாதிக்கப்பட்டு உற்பத்தி திறன் குறைகிறது. ரசாயன உரங்கள் பயன்படுத்துவதால் மண் புழு மற்றும் உயிரினங்கள் மடிந்து நிலம் கெட்டுப் போகும். ரசாயன உரங்கள் பயன்படுத்துவதால் நிலம் இறுக்கமாகவும்,  கடினமாகவும் மாறிவிடுவதால் காற்றும், நீரும் செல்ல வழி இல்லாமல் போய்விடுகிறது. நிலத்தின் ஈரப்பிடிப்புத் திறன் குறைந்து போய் விடுகிறது. ரசாயன செயற்கை உரத்தால் மண்ணும் நீரும் உணவு பொருட்களும் விஷத்தன்மை கொண்டதாகி விடுகின்றன.


ரசாயன உர உற்பத்தி ஆலைகளின் கழிவு நீர் புகை ஆகியவற்றால் சுற்றுச்சூழல் மாசுபடுகின்றது. கெடுதல் நிறைந்த செயற்கை விவசாயத்தை விட்டு இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும்.


மண்வளத்தை பாதுகாத்தல்

செயற்கை விவசாயத்தில் அதிக விளைச்சல் எடுப்பதற்காகப் பல பூச்சிக்கொல்லிகளை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எனவே இம்முறையில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் விஷத்தன்மை கொண்டதாகவே இருக்கும். இதனைப் புரிந்து விவசாயிகள் மற்றும் மக்கள் செயற்கை விவசாயத்தை எதிர்த்து, இயற்கை விவசாயத்தை ஆதரிக்க வேண்டும். இயற்கை விவசாயத்தால் மண்ணின் அமைப்பு பாதுகாக்கப்பட்டு உற்பத்தி திறன் அதிகரிக்கின்றது. மண்புழு மற்றும் உயிரினங்கள் பல்கி பெருகி மண் செழிப்பாகும்,  பயிரைக் காக்கும்.


பயிரைத் தாக்கும் பூச்சிகளை இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பூச்சி விரட்டிகளை பயன்படுத்தி எளிதில் கட்டுப்படுத்தி விடலாம். இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் ருசியாகவும் சுகாதாரமாகவும் இருக்கும். குப்பை கூலம், சண்டு சருகு, இலை போன்றவை உரமாக மாற்றப்படுவதால் சுற்றுச்சூழல் சுகாதாரம் பாதுகாக்கப்படுகிறது. இயற்கை விவசாயம் மூலம் பூச்சிக்கொல்லி இல்லாமல் நமக்குக் கிடைக்கும் உணவுப் பொருட்கள் ஊட்டச் சத்து மிகுந்ததாக இருக்கிறது.


எதிர்கால சந்ததியினரை காப்பாற்றுவது

நம் எதிர்கால சந்ததியினர் நன்றாக வாழ்வதற்கு ரசாயன பூச்சிகளைப் பயன்படுத்தாமல் இயற்கை விவசாய முறையில் விவசாயம் செய்வது நல்லது. இதனை மனதில் கொண்டு நாம் இப்பொழுது ரசாயன பூச்சிக்கொல்லி இல்லாத இயற்கை விவசாயத்தை செய்ய உறுதி ஏற்போமாக.




Vimal S 

Grade 7 

Budding Minds International School, 

Sri annamachari street, Manimangalam, 

Chennai 600301.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

நாள் 31 - தானியங்கி விடைத்தாள் மதிப்பீடு (Automated Answer Sheet Grading using AI)

நாள் 31: தானியங்கி விடைத்தாள் மதிப்பீடு - AI மூலம் தானியங்கி மதிப்பெண் & பின்னூட்டம் ...