மீட்டெடுப்பது எப்படி?
பாரம்பரிய உணவுகளில் ஆரோக்கியமும், சுவையும், ஊட்டச்சத்தும் நிரைந்துள்ளது. அப்படிப்பட்ட உணவுகளை நாம் மறந்துவிட்டோம். எப்படி நம் தமிழ் பாரம்பரிய உணவுகளை மீட்டெடுப்பது? எப்படி என்று பார்ப்போம்.
சத்து நிறைந்தது தமிழ் பாரம்பரிய உணவுகள்!
நம் தமிழ் பாரம்பரிய உணவுகளில் நிறைய சத்து உள்ளது. எடுத்துக்காட்டு:
ராகி அடை:
புரதம் நிறைந்தது
கால்சியம் நிறைந்தது
முடிவிற்கு நல்லது
உளுந்து கஞ்சி:
புரதம் நிறைந்தது
இடுப்பு மற்றும் முதுகை பலப்படுத்துகிறது
3. நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது
இவையெல்லாம் சத்து நிறைந்த தமிழ் பாரம்பரிய உணவுகள். ஏன் நம் மீட்டெடுக்காமல் இருக்கிறோம்?
நோயற்ற வாழ்க்கை!
'நோயற்ற வாழவே குறைவற்ற செல்வம்', என்பார்கள். இது உண்மைதான். நோயில்லாமல் வாழ்ந்தால் எப்படி இருக்கும்! கவலையே இல்லாமல் இருப்போம்!
இப்படி தான் பழைய காலத்தில் இருந்தார்கள் நம் முன்னோர்கள். எப்படி குறைந்த நோய்களுடன் தப்பித்துக்கொண்டார்கள். விடை நம் உணவிலேயே இருக்கிறது. ஆம், நம் தமிழ் பாரம்பரிய உணவுகளை உண்டுதான். சத்து நிறைந்த பாரம்பரிய உணவுகள்.
புதுமை புகுத்தல்!
சிலப்பெயர்களுக்கு பாரம்பரிய உணவுகள் பிடிக்கவில்லை. நாக்கிற்கு ஏற்றதுபோல் நம் தமிழ் பாரம்பரிய உணவுகளை எப்படி மாற்றுவது என்று பார்ப்போம்:
1. பருப்பு குழம்பு சமைக்கும்போது பயறுகளை சேர்த்துக்கொள்ளலாம்
2. குழம்புகள் சமைக்கும்போது கொத்தமல்லி சேர்த்துக்கொள்ளலாம்
3. வாழை இலையில் சாப்பிட்டால் நல்லது
விழிப்புணர்வு செய்வதற்கு வழிகள்!
சிலபெயர்களுக்கு என்னதான் தமிழ் பாரம்பரிய உணவுகளைப் பற்றிச் சொன்னாலும் விழிப்புணர்வு ஏற்படாது. எப்படி விழிப்புணருவு செய்வது?
தெருவில் நாடகம் நடித்துக் காட்டி நம் கருத்தைக் கூறலாம்.
விளம்பர காகிதங்கள் செய்து மக்களிடம் கொடுக்கலாம். சமூக ஊடகத்தில் காட்டி விழிப்புணர்வு செய்யலாம். ஆனால் அது மக்கள் கைகளில் தான் உள்ளது.
பழைமையை நோக்கிச் செல்லுதல்
நம் பெற்றோர்கள், அடிக்கடி பேசுவார்கள், 'நாங்கள் பழைய காலத்தில் எப்படி இருந்தோம் என்று தெரியுமா?', என்று. ஆனால் அந்தப் பழைமையை நோக்கிச் சென்றால் என்ன?
பழைய காலத்தில் இருக்கும் தமிழ் பாரம்பரிய உணவுகள் இன்று மக்கள் மறந்துகொண்டார்கள். பழைய காலத்தில் நோய்களின் அளவும் குறைவாக இருந்தது, ஆனால் தற்போது காலத்தில் ஏறியது.
மக்கள் கைகள்! :கடைசியில் ஆரோக்கியமும், சத்தும் உள்ள நம் தமிழ் பாரம்பரிய உணவுகளை மீட்டெடுக்க நிறைய வழிகள் உள்ளன. ஆனால் எல்லாம் மக்கள் கைகளில் தான் உள்ளது!
சிந்தித்து பாருங்கள்!: தமிழ் பாரம்பரிய உணவுகளை வேறு எப்படி மீட்டெடுப்பது?
Aadhavan Sriram
Grade 7
Budding Minds International School,
Sri annamachari street,
Manimangalam, Chennai 600301.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன