சனி, 9 மார்ச், 2024

இயந்திர உலகமும் உணவுப் போக்கும்

 முன்னுரை

               Travel - Siliconindia

இன்று, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் நிறைய வந்துவிட்டன. இவையினால் நமது உலகம் அதிவேகமாக வளர்ந்துவிட்டது. வேலை வாய்ப்புகளும் அதிகரித்துவிட்டன. 

ஆனால், கடந்த பத்து வருடங்களாக, சம்பளம் கூடவேயில்லை! இதனால், பணியாளர்களுக்கு அதிக சம்பளம் தேவை. ஏனென்றால், விலைகள் மிக அதிகமாக உயர்ந்தன! அதிக பணி நேரத்திரக்குப் பணியைச் செய்ய வேண்டிய சூழல் வந்துவிட்டது. 

இது இவர்களின் உணவுப் போக்கை எவ்வாறு பாதிக்கின்றது என்று இக்கட்டுரையில் எழுதியுள்ளேன். அது மட்டும் அல்லாமல், சிறுவர்களின் உணவு போக்கைப் பற்றியும் இக்கட்டுரையில் எழுதியுள்ளேன்.

எந்த நிறுவனத்துறையில் அதிக பணி நேரம் உள்ளது?

    

இந்த அட்டவணை நெடுவாரிசையின்படி, ஒரு நாளில் தொழில்நுட்ப அலுவலகத் துறையும் மருத்துவத் துறையும் மிகவும் அதிகமான பணி நேரமுள்ள துறைகள். 

அவர்களின் வாழ்க்கைமுறை

மருத்துவத் துறையில் உயிரைக் காக்க அவசரமாகச் சிகிச்சை செய்ய வேண்டியதால் அவர்களின் உணவைத் தவிர்க்கிறார்கள். நியாயம் தானே? 

ஆனால் மற்ற நிறுவனத்துறைகளில் சம்பலத்தைத் தவிர்த்து, அலுவலகக் கலந்துரையாடல்களின் அட்டவணையில் நெரிசல், இவைகள் எல்லாமே உயர்கிறது! தென்னிந்தியர்களுக்கு மட்டுமே விடுமுறைகள் அல்ல! 

இதனால் மனநல மற்றும் உடல் நலக்குறைவுகள் ஏற்படுகிறது! விரைவாகக் கிளம்ப வேண்டியதால், வீட்டுச் சாப்பாட்டைத் தவிர்த்து, துரித உணவுகளின் உட்கொள்தல் அதிகரிக்கிறது. 

துரித உணவின் விளம்பரங்கள் மற்றும் சந்தைப்படுத்தல் 

துரித உணவுகளின் மேல் மக்களுக்கு ஏன் இவ்வளவு ஆசை? ஒன்று, துரித உணவுகள் விரைவாக உண்ணப்படலாம். மற்றொன்று, அவைகளின் விளம்பரங்கள். 

விளம்பரங்கள் என்ன செய்தது என்று கேட்டால், பார்ப்பதற்க்கு வண்ணாமயமாக இருப்பதை, விளம்பரம் நகைச்சுவையாக இருப்பதை, விளம்பர நடிகர்கள் அவைகளைச் சாப்பிட்டு அருமையாக இருப்பது போல் நடிப்பதை நம்பி, மக்களுக்கு ஆசை தூண்டப் படுகிறது!

எரிகின்ற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது என்ற பழமொழிக்குப் பொருத்தமாக, நண்பர்கள் துரித உணவு சுவையாக இருக்கிறது என்று  கூறி, சாப்பிடவில்லை என்றால் துன்பப்படச் செய்வார்கள். 

இவ்விளம்பரங்களால், சிறுவர்களின் ஆள் மனதில், துரித உணவு தான் உலகமே என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். 

துரித உணவுகளை வருடத்திற்கு பத்து முறை சாப்பிடுவதே அதிகம். இதில் பணியாளர்களும் சிறுவர்களும் இவைகளைத் தினந்தோறும் சாப்பிட்டால் என்ன ஆகும் என்று நினைத்தேப் பார்க்க முடியவில்லை! 

சிறுவர்களின் கவணிப்பில்லாமையால் ஏற்படும் ஊட்டச்சத்து நலக்குறைவுகள்

இன்றய காலத்துப் பெற்றோர் சிறுவர்களின் மேல் சிறிய கவனம் செலுத்தியும், வேலைக்குத் தேவற்ற அளவிற்கு கவனம் செலுத்தியும் இருப்பதால், சிறுவர்கள் பல அறியாமைகள், தெரியாமைகள், நன்மைகள், தீமைகள், இவைகளில் எந்தப் பதிலும் இல்லாமல் வளர்கின்றன. கடந்த ஐந்து வருடங்களாகச் சிறுவர்களின் மற்றும் முக்கியமாக வாலிபர்களின் வாழ்க்கை மற்றும் நற்குணங்கள் ஒரு பெரிய கேள்வி குறியகவே உள்ளது! 

உணவு என்ற கோணத்தில் பார்க்கும்பொழுது, பெற்றோரின் கவணிப்பில்லாமயால் சிறுவர்களின் உணவு போக்கும் முக்கியமாக வாலிபர்களின் உணவு போக்கும் எந்த நிலைமையில் உள்ளது என்று வாசகர்கள் நீங்களேப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

  1. சுவைக்காகப் பல தீங்கானச் சிற்றுண்டிகளை அதிகமாகச் சாப்பிட்டுப் பருமானமாக மாறுகிறார்கள்! இதனால் பல பிரச்சினைகள் உள்ளன!

  2. உடல் நலம் மிக்க இருப்பதன் பெயர்வழியில், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுப் பல நோய்களைச் சந்திக்கின்றார்கள். 

  3. துரித உணவை அதிகமாக உட்கொள்ளும் வாய்ப்பு அதிகமாக மாறிவிடும். இதனால் பல பின்விளைவுகளைச் சந்திக்கின்றார்கள். 

  4. குடும்பமாகச் சாப்பிடாததால் சுய அறிவு மற்றும் பகுத்தறிவு குறைவாக உள்ளதால் பள்ளிக்கூடச் செயற்திறனில் மிகவும் பாதிக்கப் படுகிறார்கள்!

  5. குழந்தைப் பருவத்திலேச் சர்க்கரை நோய் மற்றும் இருதய நோயில் தவிக்கின்ற சூழலில் இருக்கின்றார்கள். 

துரித உணவின் மற்றும் பணியினால் சாப்பிடாமல் இருத்தலின் பின்விளைவுகள்

பணியினால் மக்கள் உணவைச் சாப்பிடாமல் இருப்பதால் ஏற்படும் பின்விளைவுகள்:

இதனால் தலைவலி, தூக்கமில்லாமை, மயக்கம், சர்க்கரையில்லாமை நோய் வந்து இறப்புகள் கூட நடக்கின்றன!

துரித உணவிற்கு ஆசைப்பட்டுத் தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் பின்விளைவுகள்:

இதனால் எலும்பு நொறுங்குதல் (osteoporosis), சர்க்கரை நோய், அதிக கொழுப்பால் ஏற்படும் இருதய நோய் (cholestrol), மன அழுத்தம் (depression), மற்றும் புற்றுநோயால் இறப்புகள் கூட நடக்கின்றன!

முடிவுரை

இவ்வளவு விளைவுகள் மற்றும் பிரச்சினைகளைச் சொன்னேனே, இதற்கெல்லாம் தீர்வு என்ன? 

மருத்துவர்கள் மக்களின் உயிரைக் காப்பதற்க்குத் தனது உயிரைக் காக்க வேண்டும்! அதற்க்கு முதலில் அவர்கள் உயிருடன் வாழ வேண்டும்! மருத்துவர்களின் உயிர் இல்லையேல் எவ்வாறு மக்களின் உயிரைக் காக்க முடியும்? அதனால் அவர்களுக்குச் சிறிய சிறிய சிற்றுண்டிகள் தரப்பட வேண்டும். 

மற்ற வேலைகளுக்குச் சம்பளத்தை அதிகரிப்பதற்க்கு, பணி நேரங்களைக் குறைப்பதற்கு, விடுமுறைகளில் நிறுவனங்கள் விடுமுறைகளை விடுவதற்கு, கலந்துரையாடல் நேரங்களைக் குறைப்பதற்கு, அரசாங்கமிடம் நான் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 

துரித உணவுகள் மற்றும் அதனின் சந்தைப்படுத்துதலும் தடை செய்வதற்கு அரசாங்கமிடம் நான் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 

நாமும் முடிந்த வரைக்கும் துரித உணவைத் தவிர்க்க முயலுவோம்! இக்கருத்துடன் இக்கட்டுரையை முடிவடையச் செய்கிறேன்.


Geerthan K 

Grade 7 

Budding minds international School, 

Sri annamachari street, Manimangalam, 

Chennai 600301

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன